Wednesday, February 9, 2011

தேர்வு வேண்டாம்! ரஜினி மகள் ஓட்டம்!!






தேர்வு எழுத தனக்கு தனி அறை ஒதுக்காததால், அதிருப்தி அடைந்த சவுந்தர்யா, தேர்வை புறக்கணித்து சென்னைக்கு திரும்பிவிட்டார். நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா, சட்டப் படிப்பு படிக்க சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில், நகரி - புத்தூர் இடையே அமைந்துள்ள, ஒரு தனியார் (கே.கே.சி.,) கல்லூரியில் தொலை தூர சட்டப் படிப்பில் சேர்ந்துள்ளார்.இதற்கான தேர்வு கடந்த 1ம்தேதி புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் தொடங்கியது. இக்கல்லூரியில் தேர்வு எழுத வந்த சவுந்தர்யா, தனக்கு தனி அறை ஏற்பாடு செய்யும்படி முதல்வர் சுப்பிரமணிய நாயுடுவை சந்தித்து கேட்டுக் கொண்டார். மாணவர்கள் அனைவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ள வளாகத்தில் தான் தேர்வு எழுத வேண்டும். உங்கள் ஒருவருக்கு மட்டும் தனியாக இடம் ஒதுக்க முடியாது என கல்லூரி முதல்வர் மறுத்துவிட்டார்.

இதனால், மன வருத்தத்துடன் அதிருப்தி அடைந்த சவுந்தர்யா, அன்று தேர்வு எழுதாமல் சென்னைக்கு திரும்பினார்.பின்னர், கடந்த 3ம்தேதி வியாழனன்று அவர் தேர்வுக்கு ஆஜராக வேண்டியிருந்தது. ஆனால், சொந்த வேலை காரணமாக அன்று தேர்வு எழுத வரவில்லை என தெரிய வந்துள்ளது. மீண்டும் மூன்றாவது நாளாக, நேற்று முன்தினம் 5ம்தேதி இதே கல்லூரியில் நடந்த தேர்வுக்கு வந்த சவுந்தர்யா, அனைத்து மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் தேர்வு எழுதினார். புத்தூர் கல்லூரியில், நடிகர் ரஜினிகாந்த் மகள் தேர்வு எழுத வருகிறார் என, தகவல் பரவியதை அடுத்து ஏராளமான ரசிகர்களும், மாணவர்களும் கூடி விட்டு பின்பு கலைந்து சென்றனர்.

அடுத்து ஒரு செய்தி
ரஜினி மனைவி லதாவுக்கு காலையில் பிடிவாரன்ட்: மாலையில் வழக்கு தள்ளுபடி

"செக் மோசடி வழக்கில், காலை நடிகர் ரஜினியின் மனைவி லதா, மகள் சவுந்தர்யா ஆகியோருக்கு, "பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. மாலையில், கடன்தொகை வழங்கியதை அடுத்து, அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் சுமர்சந்த் பாப்னா. இவர், சுவஸ்திக் பைனான்ஸ் கார்ப்பரேஷன் என்ற நிதி நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார். நடிகர் ரஜினியின் மனைவி லதா, மகள் சவுந்தர்யா இருவரும், சுமர்சந்த் பாப்னாவிடம், "ஆக்கர் ஸ்டுடியோ பெயரில் 20 லட்சம் ரூபாய் கடன் பெற்றனர். கடன் பணத்திற்காக, சுமர்சந்த் பாப்னாவிடம் லதா, சவுந்தர்யா சார்பில், "செக் கொடுக்கப்பட்டது. அந்த, "செக் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. பணத்தை திருப்பிக் கொடுப்பதற்கு இருவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து, சைதாப்பேட்டை 23வது கோர்ட்டில் லதா, சவுந்தர்யா இருவர் மீதும் சுமர்சந்த் பாப்னா, "செக் மோசடி வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணைக்கு கடந்த மாதம் 6ம் தேதி இருவரும் ஆஜராக வேண்டும் என அவர்களுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், இருவரும் ஆஜராகவில்லை. இவ்வழக்கு, விசாரணைக்கு வந்தது, அவர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, இருவரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என ஜாமீனில் வெளியே வரக்கூடிய, "பிடிவாரன்ட் காலை பிறப்பிக்கப்பட்டது.இத்தகவல் லதா, சவுந்தர்யாவுக்கு தெரியவந்ததும், கடன் பணத்திற்கான "டிடியை வழங்கினர். இதையடுத்து, வழக்கை வாபஸ் பெறுவதாக சுமர்சந்த் பாப்னா சார்பில், நேற்று மதியம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவை ஏற்றுக் கொண்டு, அவ்வழக்கை டிஸ்மிஸ் செய்து மாஜிஸ்திரேட் ரவி உத்தரவிட்டார்.


முதல் செய்தி ஆணவத்தாலா
இரண்டாவது  செய்தி பப்ளிசிட்டிக்கா

இதைப் படித்த  போது ஒரு கதை ஞாபகம்  வந்தது.
ஏழையாய் இருந்து பணக்காரரான  ஒருவர் அதிக ஆடம்பரத்துடன்  வாழ்ந்த தன்  மகனிடம்
தான் ஆடம்பர மாய்  இல்லாததைச்  சொல்ல  மகன்..'ஆம் ..நீ  ஒரு ஏழைக்கு மகனாய்  பிறந்தே ..ஆனா  நான் ஒரு பணக்காரனுக்கு  மகனாச்சே  ' என்றானாம் .

    



8 comments:

Pranavam Ravikumar said...

I don't know the relevance/genuinity of the article. If its correct, then appreciated the showcase.

Its not surprise to see the fact that celebrities ask for seperate cabin. But this is too much in this case.

Regards

goma said...

எந்திரனுக்கு இருபது லட்சம் ஜுஜூ.....பி
அது ஒரு பிடிவாரண்ட் கேசாயிடுச்சே..சே சே

MANO நாஞ்சில் மனோ said...

//முதல் செய்தி ஆணவத்தாலா
இரண்டாவது செய்தி பப்ளிசிட்டிக்கா//

இது அவரவர் மன நிலையை பொருத்து........

பாட்டு ரசிகன் said...

எலலாம் விளம்பரத்திற்கு தான்..
அப்படி பார்த்தா ரஜினி மகள் என்ற விளம்பரமே போதுமே.. வேறென்ன வேணும்..
இதையும் படிக்கிறது..
http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_10.html

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Ravikumar

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Mano

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பாட்டு ரசிகன்