Monday, February 21, 2011

வாய் விட்டு சிரிங்க..(அரசியல் ஜோக்ஸ்)





நம்ம தலைவரோட மகன் ஏன்..தன் பெயருக்குப் பின்னால வருங்கால எம்.பி., ன்னு போட்டுக்கறார்

கூட்டணியிலே 2016ல ராஜ்யசபா சீட் ஒதுக்கறேன்னு சொல்லியிருக்காங்களாம்



2)நம்ப தலைவருக்கு 10 தொகுதி கூட்டணியிலே கொடுத்தும் ஏன் வருத்தமா இருக்கார்

10 வேட்பாளரை எங்கே போய்த் தேடரதுன்னு தான்



3)தலைவர் கூட்டணி தொகுதி பங்கீடு முடிஞ்சு சந்தோஷமா வராரே..

ஆமாம் அவர் 80 தொகுதி கேட்டாராம்..60 தொகுதிக்கு நேரடி வேட்பாளராய் இருக்கலாம்னும் 20 தொகுதிக்கு டம்மி வேட்பாளரை நியமிக்கலாம்னு சொல்லியிருக்காங்களாம்



4)தலைவர் வீட்டு வாசலிலே வரிசையா ஏன் இவ்வளவு கூட்டம்..

அவ்வளவும் உதிரிக் கட்சித் தலைவர்களாம்..எல்லாரையும் கூட்டணியிலே தலைவர் சேர்த்துக்கிட்டு இருக்காராம்



5) விஜய்காந்த் கூட்டணி விஷயத்திலே இன்னும் ஏன் மௌனமாய் இருக்காராம்..

கடவுளோட கூட்டணி இன்னும் முறியலையாம்.



6)தலைவர் ரொம்ப வெகுளின்னு எப்படிச் சொல்ற

அலைவரிசை ஊழல்னா கடல் வத்தியிருக்காதான்னு பேசறாரே



7)தலைவர் உன் வீட்டு போர்ஷனுக்கு வாடகைக்கு வராரா..ஏன்?

தனக்கு சொந்த வீடு இல்லை என சொத்துக் கணக்குக் காட்டிவிட்டாராம்.



8)(தலைவர் கூட்டத்தில் பேசுகிறார்) உங்களால்தான் கோடிக்கணக்கில் ஊழல் செய்ய முடியும் என இறுமாப்பில் பேசாதீர்கள்..மக்கள் எங்களிடம் ஆட்சியைக் கொடுத்துப் பார்க்கட்டும்.எங்களாலும் முடியும் என நிரூபித்துக் காட்டுகிறோம்

8 comments:

goma said...

நம்ம நாட்டில் அரசியலே ஜோக்தான்

Vidhya Chandrasekaran said...

:)))

பத்து சீட் பார்ட்டிங்க நிறைய பேர் இருக்காங்களே இங்க:)

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்லா இருந்நதுங்க.. வாழ்த்துக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///////(உதா. பன்னிகுட்டி, கோமாளி, அஞ்சா சிங்கம், ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. சேட்டைக்காரன்.. ஓட்டவடை)///////

என்ன இது தெரிந்து கொள்ள கவி‌தை வீதி வாங்க...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வித்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி # கவிதை வீதி # சௌந்தர்

Unknown said...

நல்ல நகைச்சுவை.