Monday, February 7, 2011

கிரிக்கெட் மைதானம் கட்ட மத்திய அமைச்சர் கண்டனம்





இந்தியன் பிரிமீயர் லீக் அணிகளில் கொச்சி அணியும் இடம்பெற்றுள்ளது.அதனால் கொச்சியில் ஒரு மைதானம் கட்ட இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
அந்த மைதானத்திற்காக பல ஏக்கர் பரப்பில் அடர்ந்து செழித்து வளர்ந்துள்ள மாங்குரோவ் காடுகள் அழிக்கப் பட உள்ளன.கேரளத்தில் கொச்சிக்கு அருகில் உள்ள எடகொச்சி என்ற இடத்தில் அமைந்துள்ளது இந்த இடம்.
ஆனால் இந்த மைதானத்திற்காக அந்த மாநிலத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் உள்பட எந்த கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.ஆனால் அந்த மாநில சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால்,
மாங்குரோவ் காடுகளை அழித்து கிரிக்கெட் மைதானம் நிறுவ உள்ளதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெளிப்படையான எதிர்ப்பையும் ஆட்சேபத்தையும் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை தென்மாநில வன அமைச்சர்களின் 4-வது மாநாட்டை தொடங்கி வைத்து அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

"நாட்டின் மதிப்பிட முடியாத சொத்து மாங்குரோவ் காடுகள். தென் மாநிலங்களில்தான் இந்த காடுகள் அதிகம் உள்ளன. ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக இக்காடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. காரணம் மனிதர்களின் விஷமத்தனமான திட்டங்கள்தான்.

சுனாமி போன்ற இயற்கை பேரிடரின்போது மனித சமுதாயத்துக்கே அரணாகவும் உள்ளவை மாங்குரோவ் காடுகள்தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி தாக்கிய போது இதை அனுபவத்தின் மூலம் உணர்ந்தோம். கடலோரப் பகுதியில் மாங்குரோவ் காடுகள் இருந்த பகுதியில் எல்லாம் பாதிப்பின் தன்மை குறைவாக இருந்ததை நாம் அறிவோம்.

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த மாங்குரோவ் காடுகளை அழித்து எடகொச்சி என்ற இடத்தில் கிரிக்கெட் மைதானம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளனர். இதற்கு கேரளத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே ஒருமித்தமாக ஆதரவு தெரிவித்துள்ளது கவலை அளிக்கும் விஷயம்.

இந்த இடத்தில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாக நமக்கு மாங்குரோவ் காடுகள் முக்கியமா? அல்லது கிரிக்கெட் முக்கியமா? என்ற கேள்வியை நமக்கு நாமே எழுப்பி பதில் தேட முற்பட வேண்டும்.

காடுகள் அழிந்தால் என்ன நடக்கும் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாமலேயே பலர் செயல்படுவதுதான் இன்று மோசமான பருவ கால மாறுதல்களைத் தோற்றுவித்து வருகிறது.

தென் மாநிலங்களில் மாங்குரோவ் காடுகள் அழிந்து வருவது கவலைக்குரிய விஷயம். இக்காடுகளை பாதுகாக்கவும், இக்காடுகளின் பரப்பளவை விஸ்தரிக்கவும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழங்குடியினர் பற்றிய பார்வை மாற வேண்டும்!

பழங்குடியினர் பற்றிய வனத்துறை அதிகாரிகளின் பார்வை நிச்சயம் மாற வேண்டும். காடுகளுக்கு பழங்குடி மக்களே முக்கிய அரண்களாக இருக்கும்படி வனத்துறையினர் பார்த்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் அவர்கள் மீது வன பாதுகாப்புச் சட்டத்தைப் பாய்ச்சக் கூடாது.

பசுமை இந்தியா...
'பசுமை இந்தியா இயக்கம்' திட்டத்தின் மூலம் நாட்டில் தரமான காடுகள் மற்றும் அதன் பரப்பை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் ஒரு பகுதியாக இந்த தேசியத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்துக்கு பிப்ரவரி 22-ல் பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளிக்கவுள்ளார்.
நாடு முழுவதும் இன்னும் 50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் காடுகளை உருவாக்கி பாதுகாப்பதுதான் இத்திட்டத்தின் குறிக்கோள்.

இத்திட்டம் வழக்கம்போல் மாநில வனத்துறைகள் மூலம் செயல்படுத்தப்படாது. கிராமப் பஞ்சாயத்துகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், வன மேலாண்மை குழுக்கள் மூலம் அமல்படுத்தப்படும். காடுகளை மக்களே உருவாக்கி பாதுகாக்க வேண்டும். இதற்கு தொழில்நுட்ப ரீதியான உதவிகள் மட்டும் மாநில வனத்துறையிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படும்," என்றார் ஜெய்ராம் ரமேஷ்.

இதே ஜெய்ராம் ரமேஷ் பொறுப்பிலுள்ள சுற்றுச் சூழல் துறைதான் அடையாறு பூங்காவிற்கு அனுமதி தராமல் காலம் கடத்தியது.

இதே ஜெய்ராம் ரமேஷ்தான் முல்லைபெரியாறு விவகாரத்திலும்..அணைக்கு அருகில் மறு அணைகட்ட ஆய்வு மேற்கொள்ள கேரள அரசுக்கு அனுமதி அளித்தது.

12 comments:

goma said...

காடுகளை அழித்து கோவில் கட்டினால் அந்த சாமிக்கே பொறுக்காது...
கட்டப்போவது,கிரிக்கெட் மைதானம்...
..அரசு யோசிக்க வேண்டும்

Chitra said...

நாடு முழுவதும் இன்னும் 50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் காடுகளை உருவாக்கி பாதுகாப்பதுதான் இத்திட்டத்தின் குறிக்கோள்.

....நல்ல திட்டமாக இருக்கே....

Philosophy Prabhakaran said...

கோவிலும் வேணாம் மைதானமும் வேணாம்... காடு காடாவே இருக்கட்டும்...

ஹேமா said...

இயற்கை அழிவால் எத்தனை அழிவுகள்.
கத்திக்கொண்டேயிருக்கிறார்கள்.
ஏன் கவனிக்கிறார்களில்லை
இந்த மனிதர்கள் !

suneel krishnan said...

சில நேரங்களில் ஜெயராம் ரமேஷ் இந்த மாறி துணிச்சலா ஏதாவது செய்றாரு ,மகிழ்ச்சி தான்,தன அமைச்சரவை சகாக்களின் அழுத்தத்திற்கு அடிபணியாமல் இருக்கிறார் .காட்டை அழித்து ஒன்றும் கேளிக்கை உருவாக வேண்டாம்

சிநேகிதன் அக்பர் said...

சுற்றுசூழலை பாதுகாக்காமல் இருப்பதன் விளைவு இப்போ கொஞ்சம் தெரியுது இனி அதிகமா தெரியும் போல இருக்கு.

கேரள ஆட்களை பொறுத்தவரை அவர்கள் மண்ணுக்கு விசுவாசமாகவே நடக்கிறார்கள். நம்ம ஆட்களை போல மண்ணை விற்காமல்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கோமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி prabhakar

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி dr suneel krishnan

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சிநேகிதன் அக்பர்