Saturday, February 5, 2011

கலைஞரும்..ஸ்டாலினும்..ஊக்கு கதையும்..முதல்வர் பதவியும்





2008 ஆம் ஆண்டு தி.நகரில்..உஸ்மான் சாலையையும்,துரைசாமி சாலையையும் இணைக்கும் மேம்பாலத்தைத் திறந்து வைத்து கலைஞர் பேசுகையில் ஸ்டாலின் ஊக்கு விழுங்கியக் கதையைக் கூறி..அந்த ஊக்கத்தால் அவர் மேயராகி,அமைச்சராகி..இன்னும் என்னென்னவோ ஆகப் போகிறார் என்றார்.

அந்த என்னென்னவோ என்ன என தெரிந்தாலும்..அதை வெளிப்படையாக அவர் கூறவில்லை.

அதே போன்று, வேலூர் மாநகராட்சி தொடக்க விழாவில், அடுத்த முறை நான் முதல்வராக விரும்பவில்லை, தகுதியும், திறமையும் வாய்ந்தவர்க்கு உறுதுணையாய் இருப்பேன் என்றார்.

பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் மேம்பாலத்தைத் திறந்து வைத்து பேசுகையில்..கலைஞர் மீண்டும் ஊக்கு கதையைக் கூறினார்.மறைமுகமாக அவர் அன்று அவர் பேசியதை மறக்கவில்லை என ஸ்டாலினுக்கு உணர்த்தினாரோ என்னவோ?

கலைஞர் உடல்நில..அவரின் பேச்சுகள் எல்லாம் வைத்துப் பார்க்கும் போது அவர் இம்முறை தேர்தலில் நின்றாலும்..தி.மு.க., அரசு அமைத்தாலும் ஸ்டாலினைத்தான் முதல்வர் ஆக்குவார் என்றே தோன்றுகிறது.

12 comments:

bandhu said...

எப்போதோ பண்ணியிருக்க வேண்டும். He missed the chances!

Anonymous said...

வரும் தேர்தலில் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தி.மு.க. களம் இறங்கினாலே பாதி வெற்றி அடைந்தது போல் தான்.

Unknown said...

ஸ்டாலினை நிறுத்திதான் பார்க்கட்டுமே. அவர் புள்ளி வைக்கும்போதே மக்கள் ரோடு போட்டுவிட்டார்கள். முதலில் உள்குத்தே அதிகமாக இருக்கும் போல் தெரிகிறது.

MANO நாஞ்சில் மனோ said...

என்னமோ போங்க தமிழ்நாடு உருப்டாப்லதான்......

Unknown said...

நெனப்பு தான் பொழப்பை கெடுக்கும்...
ஊக்கு ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Bandhu

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கொக்கரகோ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி விஜயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Mano

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஆகாயமனிதன்..

கோவி.கண்ணன் said...

//கலைஞர் உடல்நில..அவரின் பேச்சுகள் எல்லாம் வைத்துப் பார்க்கும் போது அவர் இம்முறை தேர்தலில் நின்றாலும்..தி.மு.க., அரசு அமைத்தாலும் ஸ்டாலினைத்தான் முதல்வர் ஆக்குவார் என்றே தோன்றுகிறது//


பாவம் தாத்தா வயசானவர் முள் கிரிடத்தை இனி தன் தலை தாங்காது என்று முடிவு செய்துவிட்டார் போல

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கோவி.கண்ணன்