Friday, February 4, 2011

மாணவி தற்கொலை...உலகே உன் செயல்தான் மாறாதா..?


சென்னை பெசண்ட்நகரைச் சேர்ந்த ஆல்காட் குப்பத்தைச் சேர்ந்த மாணவி திவ்யா.இவர் கடந்த மாதம் 31ஆம் தேதி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார்.இவர் டாக்டர் எம்.ஜி.ஆர்., ஜானகி கல்லூரியில் பி.காம்.மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.இவர் மீது திருட்டுப் பட்டம் சூட்டப்பட்டது.அவரை நிர்வாணப்படுத்தி சோதனை செய்தனராம்.அதனால் மனமுடைந்த அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்கினார்.

இது தொடர்பாக அக் கல்லூரியைச் சேர்ந்த நாலு பேராசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நமக்குப் புரியாதது..

அந்த மாணவி மூன்று ஆண்டுகளாக அக்கல்லூரியில் படிக்கிறாள்.அவளைப் பற்றி அந்தப் பேராசிரியைகளுக்குத் தெரிந்திருக்காதா? அப்படிப்பட்டவரை நிர்வாணப்படுத்தி சோதனையிட அவர்களுக்கு எப்படி மனம் வந்தது

அந்த மாணவி மீது அவர்களுக்கு வன்மம் இருக்குமேயாயின்..கடந்த மூன்று ஆண்டுகள் அக்கல்லூரியில் தினம்..தினம்..அந்தப் பெண் எவ்வளவு வேதனைகளை அனுபவித்திருப்பாள்.

ஒரு வாதத்திற்காக..அம்மாணவியே திருடியதாக இருக்கட்டும்...சட்டத்தை தன் கைகள் ஏந்த இந்த ஆசிரியைகள் யார்?'எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்

உலகே உன் செயல்தான் மாறாதா"

என்றான் ஒரு கவி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்இன்னும் உலகின் செயல் மாறவில்லை.இது பற்றி வினவு இடுகைக்கு

15 comments:

MANO நாஞ்சில் மனோ said...

//'எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்

உலகே உன் செயல்தான் மாறாதா"

என்றான் ஒரு கவி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்இன்னும் உலகின் செயல் மாறவில்லை.//

காணாமல் போன அந்த நாசமா போன நாலாயிரம் ரூபாயை நாலத்தனையாய் திருப்பி நான் தாறேம்லே....ஆனா அந்த உயிரை உன்னால திருப்பி தர முடியுமாலே நாதாரிகளா.....

ராமலக்ஷ்மி said...

:((((((!

ராமலக்ஷ்மி said...

பெங்களூரில் இதே போன்றதொரு கொடுமை தண்டனையாகத் தரப்பட்டது மிகச் சமீபத்தில் 4 வயது சிறுமிக்கு அவளது பள்ளியில். குழந்தை மீண்டும் பள்ளிக்கு செல்ல மறுக்க உண்மையைக் கண்டறிந்து பெற்றோர் புகார் செய்யப் போனால் தண்டனையை வழங்கியதே தலைமையாசிரியை:(!

Chitra said...

இந்த அராஜக செயலை சாதாரணமாக எடுக்க மக்கள் பழகி கொண்டது எப்படி?

தங்கராசு நாகேந்திரன் said...

எனக்குத் தெரிஞ்சு ஒரு சம்பவம். என்கூட படிச்சுகிட்டு இருந்த நண்பன் அவனோட தாய்மாமன் வீட்டுல் தங்கி படிச்சுகிட்டு இருந்தான் தாய்மாமன் டாக்டர் பெரிய படிப்பெல்லாம் படிச்சவரு விட்டுல் வெறும் 100 ரூபாய் காணாமப் போக சொந்த மருமகனையே நிர்வானமாக சோதனை செய்தாராம். சந்தேகப் புத்தி பெரும்பாலும் இந்த பெரியபடிப்பு படிச்சவனுகளுக்கு மட்டும்தான் வரும்

அன்புடன் நான் said...

அந்த கற்ற மிருகங்களை கண்டிக்கிறேன்.

goma said...

எத்தனை கனவுகளோடு அந்த மாணவியும் அவரது பெற்றோரும் காத்திருந்திருப்பார்கள்.......தாழி உடைந்தாற்போல் வாழ்க்கை முடிந்தது வேதனை.
அதன் காரணம் கண்டிக்கத்தக்கது

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Mano

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Chitra

ஹேமா said...

இப்படியுமா....
நினைக்கவே கலக்கமா இருக்கு!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி தங்கராசு நாகேந்திரன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சி. கருணாகரசு

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா