காதல்...இந்த மூன்று எழுத்துச் சொல்லிற்குத்தான் எவ்வளவு வலிமை..
இந்தச் சொல் கோழையையும் வீரனாக்கியுள்ளது..வீரனையும் கோழை ஆக்கியுள்ளது.
சாம்ராஜ்யத்தையும் உருவாக்கி இருக்கிறது..சாம்ராஜ்யத்தையும் அழித்திருக்கிறது.
காதல்வசப்பட்டவர்கள்..ஓருயிர் ஈருடல் எனச் சொல்லிக் கொள்வர்..அப்படியாயின் இருவரில் ஒருவர் உயிர்விட்டால் மற்ற உடல் உயிரின்றி எப்படியிருக்கும்?
காதலைனையோ..காதலியையோ பறிகொடுத்தபின் மற்றவரால் எப்படி இருக்க முடியும்?இதையே திருவள்ளுவர் சொல்கிறார்
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து (1209)
நாம் ஒருவரே.வேறு வேறு அல்லர் எனக்கூறிய காதலர் இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து வருந்துவதால் என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாய் போய்க்கோண்டிருக்கிறது..எனக் காதலி சொல்வதாகச் சொல்கிறார்.
ஆனால் குறுந்தொகையிலோ, நெய்தல் திணையில் சிறைக்குடி ஆந்தையார் என்னும் புலவர்..தலைவன் பிரிந்ததும் என்னுயிரும் போய்விடுவது மேலானது எனத் தலைவி சொல்வதாகக் கூறுகிறார்.அதற்கு அவர் அன்றில் பறவையைக் கூறுகிறார்.அன்றில் பறவை ஒரு நீர்வாழ்ப் பறவை.ஆணும்,பெண்ணும் ஒன்றையொன்று விட்டுவிடாது இணைந்தே தண்ணீரில் வலம் வரும்.இரண்டுக்கும் இடையில் பூ ஒன்று இடைப்பட்டு தடையை ஏற்படுத்தினாலும்..அதை நீண்ட காலப் பிரிவாய் எண்ணுமாம்.ஆகா..என்னவொரு அழகான சிந்தனை..
பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றில் புணர்ச்சி போலப்
பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு
உடன் உயிர் போகுதில்ல - கடன் அறிந்து
இருவேம் ஆகிய புன்மை நான் உயற்கே
குறுந்தொகை-57
சிறைக்குடி ஆந்தையார்
(காப்புமிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழியிடம் கூறுவது)
நீர்வாழ்ப் பறவை அன்றில் , ஆணும்,பெண்ணுமாக ஒன்றை ஒன்று பிரியாமல் வாழ்வன.தமக்கிடையே பூ ஒன்று இடைபட்டு தடையை ஏற்படுத்தினாலும்..அந்தப் பிரிவை ஓர் ஆண்டு கால அளவிலான பிரிவாக எண்ணி வருந்தும் தன்மையன.அந்தப் பறவைகள் போல ஓருயிர் ஈருடலாக நானும், தலைவனும் வாழ்கிறோம்.தலைவன் பிரிந்த போது ஓருயிர் ஓர் உடலில் வாழும் இழிவு ஏற்படும்.அதற்குத் தலைவன் பிரிந்த உடன் என்னுயிரும் போய்விடுவது மேலானது என்கிறாள் தலைவி.

17 comments:
என்னது? காதல் பாடமா? நடத்துங்க
தமக்கிடையே பூ ஒன்று இடைபட்டு தடையை ஏற்படுத்தினாலும்..அந்தப் பிரிவை ஓர் ஆண்டு கால அளவிலான பிரிவாக எண்ணி வருந்தும் தன்மையன
...How sweet! என்ன அருமையாக - அழகாக சொல்லி இருக்காங்க!
என்ன சுவையான தமிழ் ..உங்கள் மற்ற பகுதிகளையும் வாசிக்க வேண்டும் ..வாழ்த்துக்கள் :)
பூ மட்டுமல்ல காற்று நுழைந்தால்கூட வருந்துவதாக வள்ளுவர் கூறியிருக்கிறார்.
தமிழ் அருமையா விளையாடுது உங்க எழுத்தில்...
இலக்கியச் சுவை திகட்டவே திகட்டாது.ஆனாலும் காதலர் தினத்திலிருந்து நீங்க இன்னும் வெளில வரலைன்னு நினைக்கிறேன்.
காதலில் காற்றுப் புகும் இடைவெளியைக்கூடக் கொடுக்கக்கூடாது என்றும் சொல்லியிருக்கிறார்கள் இலக்கியத்தில !
வருகைக்கு நன்றி சி.பி.செந்தில்குமார்
வருகைக்கு நன்றி chitra
வருகைக்கு நன்றி S.Sudharshan
வருகைக்கு நன்றி..ஹேமா, கோமா
ஆம்..உண்மை ..
வீழும் இருவர்க் கினிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு
(காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவிற்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்..
இதை ஏன் இந்த இடுகையில் சொல்லவில்லையெனில்..இதில் தலைவனைப் பிரிந்தபின் ஓருயிராய் தான் மட்டும் ஏன்? என்பதைக் கூறுவதே முக்கியமாகப் பட்டதால்.
வருகைக்கு நன்றி goma
வருகைக்கு நன்றி Mano
//ஹேமா said...
இலக்கியச் சுவை திகட்டவே திகட்டாது.ஆனாலும் காதலர் தினத்திலிருந்து நீங்க இன்னும் வெளில வரலைன்னு நினைக்கிறேன்.//
:)))
அருமையான விளக்கம். நிகழ்கால நிகழ்வுகளை உதாரணத்தோடு விளக்கினால் இன்னும் நன்றாக இருக்கும்.
வருகைக்கு நன்றி ஜீவன்சிவம்
நல்ல பகிர்வு நண்பரே..
தொடர்புடைய இடுகை..
http://gunathamizh.blogspot.com/2009/11/blog-post_23.html
வருகைக்கு நன்றி முனைவர்.இரா.குணசீலன்
Post a Comment