1.பூக்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதில் உனக்காக ஒரு பூ கத்திருக்கிறது.அதை தேர்ந்தெடுக்கிறாயே..அதுதான் காதலின் சக்தி.
2.காதல்..என்பது..ஒன்றை அடைதல் அல்ல..ஒன்றை உணர்தல் என்ற எண்ணம் இருவருக்கும் வேண்டும்.
3.காதல் ஒரு அற்புத உணர்வு..பூத்து..காய்த்து..உதிர்ந்திடும் பூ அல்ல அது.மரணம் வரை தொடரும் விஷயம்..மரணம் வரை தொடரும் வாழ்க்கை.
4.இரவில் கவிதை
கவிதையான இரவு
கனவில் நிலவு
நிலவு பற்றி கனவு
தனிமையில் சிரிப்பு
சிரிப்பில் தனிமை
இதுதானா காதல்?
5.காதலில் ஜெயித்தவர்கள் கதை..ஒவ்வொருவருக்கும் மாறுபடும்..ஆனால்..தோற்றவர்கள் கதை ஒரே மாதிரி இருக்கும். புறக்கணிக்கப்பட்ட தோல்வி..அதனால்தான் தாங்கமுடிவதில்லை.
6.காதல் வயப்படுபவன்(ள்)..இடம்..பொருள்..இரவு..பகல்..பேதமிருக்காது.மனம்..உற்சாகத்திற்கும்..லேசான துக்கத்துக்குமாக மாறி மாறி பயணிக்கும்.மனதில் மழை பெய்யும்..மத்தாப்புக்கள் பூ சொரியும்.
7.அழகு..அறிவு..எல்லாவற்றிலும்..கடந்த மென்மையான உணர்வு காதல்.
8.காதல் என்பது எதுவரை
கல்யாண காலம் வரும்வரை - கண்ணதாசன் வரிகள்
9.பறக்கத் தெரியும்
திசை தெரியாது
காதல் ஓர்
இலவம் பஞ்சு
_ கபிலன்
(மீள்பதிவு)
17 comments:
சரியான நேரத்தில் அருமையான தேர்வு...
ஆமாம் இன்றைய நாளுக்கேற்ற பதிவு...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..
timing post
காதல் ஒரு அற்புத உணர்வு..பூத்து..காய்த்து..உதிர்ந்திடும் பூ அல்ல அது.மரணம் வரை தொடரும் விஷயம்..மரணம் வரை தொடரும் வாழ்க்கை.
காதலுக்கு ஒரு கவிதைப் பூன்கொத்து கட்டிய ரோஜா செண்டு ,அருமை
தற்போது தேவையான பதிவு .. வாழ்த்துக்கள்..
வருகைக்கு நன்றி sakthistudycentre-கருன்
வருகைக்கு நன்றி ம.தி.சுதா
வருகைக்கு நன்றிசி.பி.செந்தில்குமார்
வருகைக்கு நன்றி கே.ஆர்.பி.செந்தில்
அருமை
வருகைக்கு நன்றி Nagasubramanian
வருகைக்கு நன்றி goma
வருகைக்கு நன்றி கவிதை வீதி # சௌந்தர்
வருகைக்கு நன்றி Bala
காதல்பற்றிச் சொல்லியிருக்கும் அத்தனையுமே அழகு !
நன்றி ஹேமா
Post a Comment