Wednesday, February 16, 2011

பிரதமரின் வழவழா பேட்டியும்..நம் கற்பனை கேள்வி பதிலும் ..

அடைப்புக்குள் இருப்பவை பிரதமர்  பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில்
 அவர் சொன்னவை .
பின் வரும் கேள்வி பதில் நம் கற்பனை ..


//பிரதமர் -ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் வெளிப்படையான தன்மை இருக்க வேண்டும் என்று நான் ஆ.ராசாவுக்கு 2007 நவம்பர் மாதமே கடிதம் எழுதினேன்.அந்த கடிதத்துக்கு அன்றே அவர் பதில் கடிதம் எழுதியிருந்தார். அதில், நான் கண்டிப்பாக வெளிப்படையான தன்மையை கடைப்பிடிப்பேன். எதிர்காலத்திலும் இதை செய்வேன் என்று கூறியிருந்தார். அவர் கொடுத்த உறுதிமொழிக்கு மாறாக ஏதும் நடக்காது என்று கருதியிருந்தேன்.//

கேள்வி -அப்போது  உறுதிமொழிக்கு மாறாக ராசா நடந்தார் என்று சொல்கிறிர்களா?
பதில் -நான் அப்படிச் சொல்லவில்லை..கருதியிருந்தேன் ..என்றுதான் சொன்னேன்

//பிரதமர் -2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பொறுத்தவரை அது முழுக்க தொலை தொடர்புத் துறை அமைச்சர் சம்பந்தப்பட்டது. அதில், 'முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு முதலில் ஒதுக்கீடு'என்ற விதிமுறைகள் கொண்டு வந்தது பற்றியோ அல்லது யாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பது பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது. இதுபற்றி என்னிடமோ அல்லது அமைச்சரவையிலோ விவாதிக்கவில்லை. இதில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தான் அனைத்து முடிவுகளையும் எடுத்தார்.//
 
கேள்வி - அப்போது ராசா செய்தது தவறு என்கிறிர்களா?
பதில் -நான் அப்படிச் சொல்லவில்லை..அவரேதான்  அனைத்து முடிவுகளையும் எடுத்தார் என்கிறேன்
 
//அதே போல ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம் மூலம் தான் விற்க வேண்டும் என்று தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமோ (TRAI)அல்லது தொலை தொடர்பு கமிஷனோ சிபாரிசு செய்யவில்லை. இதனால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம் மூலம்தான் செய்யவேண்டும் என்பதை வற்புறுத்த முடியாமல் போய் விட்டது.தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமோ அல்லது தொலை தொடர்பு கமிஷனோ சிபாரிசு செய்யாததால் ஏலம் தேவையில்லை என்ற முடிவை ராசாவே எடுத்துவிட்டார். ஆனால் அந்த ஒதுக்கீட்டின் பின்னணியோ, அதன் பிறகு நடந்த விஷயங்களோ எனக்குத் தெரியாது.//
 

கேள்வி -அப்போது ராசா ஊழல்  செய்துள்ளதை ஒப்புக்கொள்கிறீர்களா?
பதில் -அப்படிச் சொல்லவில்லை ,..எனக்குத் தெரியாது என்றுதான் சொன்னேன்

//2வது முறையாக காங்கிரஸ் கூட்டணி பதவியேற்ற போது ராசா மீண்டும் அதே துறையில் அமைச்சராக நியமிக்கப்பட்டதில் காங்கிரசின் பங்கு எதுவும் இல்லை. கூட்டணி கட்சியான திமுக அவரைத் தேர்வு செய்தது. அதில் நாங்கள் தலையிடவில்லை. அந்த நேரத்தில் ராசா பற்றி தவறான விஷயங்கள் எதுவும் என் மனதில் இல்லை.
கேள்வி -இப்போது தவறான எண்ணங்கள் உள்ளதா //

பதில் -அப்படி நான் சொல்லவில்லை

//ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எவ்வளவு இழப்பீடு ஏற்பட்டது என்பதை கணித்து சொல்வது கடினம். இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு நான் பயப்படவில்லை//.
கேள்வி -அப்போது வேறு யார் பயப்படுகிறார்கள்
பதில் -அது எனக்குத் தெரியாது
 
//காங்கிரஸ்-திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. இந்தக் கூட்டணி தமிழக சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்//
 
கேள்வி -இதை நீங்களே சொல்கிறீர்களா அல்லது வேறு யாராவவது சொல்லச் சொன்னார்களா 
பதில் -அது எனக்குத் தெரியாது
 
//நான் பலவீனமான பிரதமர் என்று சொல்வது சரியல்ல. எனது நடவடிக்கை சரியான திசையிலே செல்கின்றன.//
 
கேள்வி - இதை நீங்களே சொல்கிறீர்களா அல்லது..
பதில்-அது எனக்குத் தெரியாது


10 comments:

goma said...

பிரதமர் பதில்களே போது போலிருக்கிறதே....

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கோமா

Philosophy Prabhakaran said...

செம காமெடி...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Prabhakar

vasu balaji said...

கும்முங்க எசமான் கும்முங்க. அந்த நமுட்டுச் சிரிப்பிலையே அத்தன வலியும் தாங்குவாரு. :))

சக்தி கல்வி மையம் said...

அருமையான கற்பனை...செம காமெடி...

MANO நாஞ்சில் மனோ said...

சிங்கு அண்ணாச்சிக்கு காதும் கேக்'காது'ய்யா.....

MANO நாஞ்சில் மனோ said...

சிங்கு அண்ணாச்சிக்கு காதும் கேக்'காது'ய்யா.....

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றிsakthistudycentre-கருன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Mano