Thursday, February 3, 2011

மீனவர் பிரச்னையும்..தமிழகத் தேர்தலும்





இதுநாள் வரை கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்கள மீனவர்களால் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஒவ்வொருமுறையும் மாநில அரசு கண்டனம் தெரிவிப்பதும்..இறந்த மீனவரின் குடும்பத்திற்கு ஏதேனும் நஷ்ட ஈடு கொடுப்பதுமாகவே கழிந்துள்ளன.மைய அரசும்..எல்லை தாண்டியதால் இப்பிரச்னை என சொல்லி தட்டிக் கழித்து விடும்.

ஆனால் ஜனவரியில் இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டது ..தேர்தல் வருவதால்..இதுநாள் வரை கொடுக்கப்படாத அளவிற்கு மாநில,மத்ய அரசுகளால் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மைய அரசு இங்கிருந்து ஒரு அதிகாரியை ஸ்ரீலங்காவிற்கு அனுப்புகிறது.வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்ரீலங்கா அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறார்..இதெல்லாம் ஏன்..?

சென்னை,வேலூர்,காஞ்சிபுரம்,விழுப்புரம்,கடலூர்,தஞ்சை,நாகபட்டிணம்,திருவாரூர்,புதுக்கோட்டை,ராமநாதபுரம்,தூத்துக்குடி,ராமநாதபுரம்,கன்யாகுமரி என மாவட்டங்களில் 1125 கிலோ மீட்டர் தூரம் பரப்பளவு கடலால் சூழப்பட்டுள்ள பகுதிகள்.இப்பகுதிகளில் 10 லட்சத்திற்கும் அதிகமான மீனவர்கள் வசிக்கின்றனர்.

வாழ்க்கையில் எந்த இலவசங்கள் வந்தாலும்..இவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்கவில்லையெனில் வாழ்க்கை நடத்தமுடியாது இவர்களால்.இவர்கள் பொருளாதார நிலை மிகவும் கடினமானது.கடலில் மீன் பிடிக்கச் சென்றால் சமயத்தில் இரண்டு, மூன்று நாட்கள் கூட இவர்கள் கடலிலேயே இருக்க வேண்டி இருக்கும்.

சிங்கள கடற்படை எல்லை தாண்டி வருவதாலேயே இவர்கள் சுடப் படுகிறார்கள் என்பது அபத்தம்.ஐ.நா., வின் கடல்சார் சட்டத்தின் படி எல்லை தாண்டிச் செல்லும் மீனவர்கள் பிரச்னை ;சிவில்' பிரச்னையாகவே கருதப் பட வேண்டும்.கிரிமினல் குற்றமாகக் கருதக்கூடாது.

தவிர்த்து..சென்ற மாதத் தாக்குதல்கள் எல்லாம் இந்திய கடல் எல்லையிலேயே நடந்துள்ளது.

இதுவரை 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டும்..தமிழகத்தில் மாறி மாறி தி.மு.க., அ.தி.மு.க., ஆட்சிகளே நடந்துள்ளன.ஆனால் இவர்கள் பிரச்னைகளை சரியான முறையில் இதுவரை கையாண்டதாகத் தெரியவில்லை.இந்த முறை பிரச்னையை எல்லா அரசியல் கட்சிகளும் பெரிதாகக் கருதுகின்றன..

ஏன்..
எல்லாம் பத்து லட்சம் வாக்குகள் பண்ணும் வேலை.