அசோஷியேசன் ஆஃப் டெமாகிரிடிக் ரிஃபார்ம்ஸ் என்னும் அமைப்புக்கு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் படி
2007-08,2008-09 க்கான இரண்டு நிதியாண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் வருமானம் 717 கோடியே 69 லட்சங்கள்.பா.ஜ.க., வின் வருமானம் 251கோடியே 76 லட்சம்.
மார்க்ஸிஸ்ட் 122 கோடியே 53 லட்சம்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் 2 கோடியே 40 லட்சம்தான்.
நம் நாட்டில் ஜனநாயகம் வளர வேண்டும் என தனியார் நிறுவனங்கள் நன்கொடை அளிப்பதை தேர்தல் கமிஷன் அங்கீகாரம் அளித்துள்ளது.
ஆனால், சற்று நினைத்துப் பார்ப்போம்..
கோடிக் கணக்கில் ஆளும் கட்சிக்கு ஆயினும் சரி,எதிர்க்கட்சிக்கு ஆயினும் சரி நன்கொடைகளை தனியார் நிறுவனங்கள் வழங்குமே யாயின்..அதற்கான காரணம் ஜனநாயகம் தழைத்து ஓங்கத்தான் என்றால் மக்கள் வாயால் மட்டும் சிரிக்கமாட்டார்கள்.
இப்படி நன்கொடை அளிக்கும் நிறுவனங்கள் பதிலுக்கு எவ்வளவு சலுகைகள் எதிர்பார்க்கும்.அவற்றை நிறைவேற்றிக் கொள்ள லஞ்சம்,கமிஷன் என எவ்வளவு கோடிகள் பிறகும் தனிப்பட்ட அமைச்சர்கள்,அதிகாரிகளுக்கு வழங்க வேண்டியிருக்கும்..
இப்படி செலவழிக்கும் பணத்தை ஈட்ட..யாரிடம் அந்நிறுவனங்கள் பணத்தைப் பறிப்பர்..
ஊழல்..ஊழல் என ஆளும் கட்சியாயினும் சரி, எதிர்க்கட்சியாயினும் சரி..குரல் கொடுக்குமேயானால்..மக்களுக்குத் தெரியும்..'உனக்குக் கிடைக்க வேண்டிய பங்குக் கிடைக்கவில்லை..அதனால்தான் நீ கூப்பாடு போடுகிறாய் என'
இந்நிலையில் ஒரு வேட்பாளர் தன் தொகுதியில் 16 லட்சம் வறை தேர்தல் செலவு செய்யலாம் என தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்கிறது.தனி வேட்பாளர் 16 லட்சம் செலவு செய்கிறார் என்றால்..மேலும் அத்தொகுதிக்கு கட்சி எவ்வளவு செய்யும்..கணக்கில் வராமல்..
பணக்காரன் மட்டுமே தேர்தலில் நிற்க முடியுமெனில் இதற்குப் பெயர் ஜனநாயகமா?
என்று கட்சியைப் பார்த்து வாக்களிக்காமல்..வேட்பாளரைப் பார்த்து வாக்களிக்கும் காலம் வருமோ அன்றுதான் உண்மையான ஜனநாயகம் நடக்கிறது எனலாம்.அதற்கான வழி வகுக்க தகுந்த சட்ட திட்டங்கள் உருவாக வேண்டும்.
அதுவரை..போக்கிரிகளையும், கிரிமனல் குற்றவாளிகளையும்..தான் நம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக நம்மால் தேர்ந்தெடுக்க முடியும்.ஏனெனில், இந்த விஷயத்தில் தான் அனைத்துக் கட்சி உறுப்பினர் தகுதிகளும் உள்ளது எனலாம்.
16 comments:
பணக்காரன் மட்டுமே தேர்தலில் நிற்க முடியுமெனில் இதற்குப் பெயர் ஜனநாயகமா?//
இப்படித்தான் இந்த ஜனநாயகம் நீர்த்துப் போய் நிற்கிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் இவ்வளவு செலவு செய்து மக்களுக்கு உண்மையிலேயே தொண்டு செய்யத்தான் செய்கிறார்களா?
தீர்க்க முடியாத நோயில் விழுந்துவிட்டாள் பாரதத்தாய்.
....அந்த ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.
பணம் ,மனிதனை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது
ஜனநாயகம் பணநாயகத்தின் முன் மண்டியிட்டு பலகாலம் ஆகிறது அய்யா!... நாமெல்லாம் புலம்ப மட்டுமே செய்யலாம்...
பிரபாகர்...
நம்மால் புலம்ப மட்டும் தான் முடியும்...
//'உனக்குக் கிடைக்க வேண்டிய பங்குக் கிடைக்கவில்லை..அதனால்தான் நீ கூப்பாடு போடுகிறாய் என'//
the very Truth
கோ(கே)டிங்க சார்:)
பணம் பணம் பணம்.....
போங்கடா கொய்யால...
வருகைக்கு நன்றி தெகா
வருகைக்கு நன்றி goma
வருகைக்கு நன்றி பிரபாகர்
வருகைக்கு நன்றி சங்கவி
வருகைக்கு நன்றி D R Ashok
வருகைக்கு நன்றி நிலவு
வருகைக்கு நன்றி Mano
இது ஜனநாயகம் இல்லை பணநாயகம்.
வருகைக்கு நன்றி சிநேகிதன் அக்பர்
Post a Comment