Friday, February 4, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(4-2-11)





நாட்டின் தனி நபர் வருமானம் 2010-11 ஆம் நிதியாண்டில் 46492ரூபாயாக உயர்ந்துள்ளது.நாட்டின் ஓராண்டு மொத்த வருமானத்தை மக்கள் தொகையால் வகுத்தால் சமமாக வரும் தொகையை தனி நபர் வருமானம் என்கிறார்கள்.

(இதில் அந்த 1லட்சத்து 76000 சேரலையா என்கிறார் ஒரு காமன்மேன்)

2)வரி செலுத்த தவறுவோரிடம் அதை வசூலிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கான குறைந்தபட்சத் தொகையை ரூபாய் இரண்டு லட்சத்திலிருந்து மூன்று லட்சமாக உயர்த்த வருமானத்துறை பரீசலித்து வருகிறது.இதுவரை இரண்டு லட்சம் வரை வரி வசூலிக்க வருமானவரி தீர்ப்பாயத்திலேயே முடிவெடுப்பது வழக்கம்.

3) தமிழக அரசு தன் வருவாயில் பெரும்பகுதி இலவச திட்டங்களுக்கு செலவிடுவதால்..திட்டங்களுக்கு கடன் பெற்றே செலவிட வேண்டியுள்ளதாம்.இந்த ஆண்டு தமிழக அரசின் கடன்சுமை ஒரு லட்சம் கோடியை தாண்டியுள்ளதாம்.

4)மாநிலங்களில் மொத்த கடன் அளவு அந்த மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 25 சதவிகிதம் குறைவாக இருக்க வேண்டும் என மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

5) பேச்சுரிமையும்,ஜனநாயகமும் கேட்டு போராடும் எந்தக் கிளர்ச்சிக்கும் இதுவரை எந்த நாட்டிலும் ராணுவம் ஆதரவு கொடுத்ததில்லை.ஆனால் எகிப்தில் ஏற்பட்டிருக்கும் மக்கள் புரட்சிக்கு ராணுவம் ஆதரவு அளித்துள்ளது.மக்கள் இயக்கத்தின் மேல் அடக்குமுறையை ஏவிவிட நாங்கள் தயாராக இல்லை என மறுத்துள்ளது.

6)உலக அளவில் தற்போதுள்ள பருவ நிலை தொடர்ந்தால் வரும் 2020ல் இந்தியாவின் உணவுப் பொருள் உற்பத்தி 30 விழுக்காடு வீழ்ச்சி அடையுமாம்

7)விலைவாசியைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்கத் தவறினால் துனீசியாவில் எற்பட்டது போன்ற அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்கும் என இலங்கை எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரசிங்கே கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

8)உலகப் புகழ் பெற்ற மோனலிசா ஓவியத்தின் மாடல் பெண் அல்ல ஒரு ஆண் என இத்தாலிய ஆராய்ச்சியாளர் சில்வானோ வின்செடி என்பவர் தெரிவித்துள்ளார்.கியான் கியாகோமா காப்ரோட்டி என்னும் மாடல் டாவின்ஸியிடம் உதவியாளராக இருந்தாராம்.அவரே மோனலிசாவுக்கு போஸ் கொடுத்தவர் என்கிறார் அவர்.

9)

கதை வைத்திருந்தேன்

விதையை ஊன்றி

கவிதையாக்கியவள்

நீ

8 comments:

Chitra said...

நல்ல தொகுப்பு!

goma said...

அருமையான தொகுப்பு.

goma said...

நான் விட்டுக் கொடுத்த வடை ,நல்லா இருக்கா சித்ரா...

சி.பி.செந்தில்குமார் said...

>>>>கதை வைத்திருந்தேன்

விதையை ஊன்றி

கவிதையாக்கியவள்

நீ

suuppar சூப்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சி.பி.செந்தில்குமார்

ஹேமா said...

மோனலிசா பற்றிய செய்தியும் கவிதையும் பிடிச்சிருக்கு !