செல்ஃபோன் கட்டணங்கள் உயரும்னு சொல்றாங்களே தலைவா
இதற்காக ஏழைகளுக்கு உதவினவரை கைது செய்யும் போதே இப்படி நடக்கும்னு தெரியும்
2)தலைவா..உன்னை..தொகுதி ஆலோசனைக் குழுவில சேர்க்கலைன்னா..நான் தீக்குளிப்பேன்
அவசரப்படாதே..அதைவிட நல்ல காரணமா..எனக்குக் கட்சி போட்டியிட டிக்கட் கொடுக்கலேன்னா அப்போ..தீக்குளி..எனக்குப் பயன்படும்
3)தலைவருக்குத் தரப்பட்ட கிரீடம்,வாள் இவற்றை ஏன் ஏலம் விட்டுட்டார்
தன்னோட சொத்து வீடு ஒன்னுதான்னு சொல்லியிருக்காரே..வாளையும்,கிரீடத்தையும் கையிலே வைச்சுண்டா...நாளைக்கே ஏதாவது சாமி வழக்கு போட்டுடுமேன்னுதான்
4)பூரண ஓய்வு எடுத்து வராறே தலைவர்.
...அவர் தேர்தல்ல தோத்துட்டா..ஓய்வுக்கு ஓய்வு கொடுத்துடுவார்
எப்படி
நிரந்தரமா மலைவாசஸ்தலத்துக்குப் போயிடுவாரே..சட்டசபை பணிலே ஈடுபட வேண்டாமே
5)சிலை திறப்புவிழாவில..தன்னைத்தானே புகழ்ந்துக்கிட்டு இருக்கார் தலைவர்
அவரை பாராட்ட்றவங்க அத்தனைப் பேரும் பாராட்டுவிழா எடுத்துட்டாங்களாம்..இனிமே யாருமில்லையாம்..அதனால தான்.
6)கூட்டணி பற்றி தலைவர் கிட்ட பேச வந்த கூட்டணிக் கட்சி செயலர் இவ்வளவு சீக்கிரம் பேச்சு வார்த்தையை முடிச்சுட்டார்
நீங்க எவ்வளவு தொகுதி ஒதுக்கினாலும் சம்மதம்னு சொல்ல..பேச்சு வார்த்தை எதற்கு
7)வெளிநாடு போன பிரதமர்கிட்ட விமான நிலையத்திலே என்ன கேட்டாங்க
நீங்க இந்திய பிரதமரா ன்னு
இவர் என்ன சொன்னார்
எல்லாரும் அப்படித்தான் சொல்லிக்கிறாங்கன்னார்
8)தலைவர்-(பொதுக் கூட்டத்தில்)ஐ.மு.கூட்டணி ஊழலால் நாட்டுக்கே அவமானம்
தொண்டர்- தலைவா...நாம அந்த கூட்டனிலேதான் இருக்கோம்
9)நமக்கு 50 தொகுதிகள் ஒதுக்கச் சொல்லிக் கேட்போம்..அப்படித் தராவிட்டால்..'0' க்கு மதிப்பில்லை என்பது உணர்ந்து 5 தொகுதிகளில் போட்டியிடவும் தயார்.
10)தலைவர்- (பொதுக்கூட்டத்தில்)நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் மூடப்படும்..சினிமாக்கள் ஒழிக்கப்படும்..
தொண்டர்-தலைவா..மொத்த எண்டெர்டன்மெண்ட்டும் உங்க ஆட்சியே போதும்னு சொல்றீங்களா
10 comments:
இந்த பதிவு மிகவும் அருமை. ஒரு ஆலோசனை .... வசன உரையாடலை இரு வேறு வண்ணங்களில் அமைத்தால் எளிதில் படிக்கவும்,ரசிக்கவும் முடியும் என்ன நம்புகிறேன்....
ஹா ஹா ஹா ஹா டாஸ்மாக்கை மூடிறாதீங்கப்பா.........
last one is chanceless=))
வருகைக்கு நன்றி சதீஷ்குமார்
வருகைக்கு நன்றி Mano
வருகைக்கு நன்றி Bala
ஆகா எல்லா ஜோக்குமெ சூப்ப்பரா இருக்கே - வி.வி,.சி
வருகைக்கு நன்றி Cheenna sir
Post a Comment