Wednesday, November 19, 2008

எப்படி வாழ வேண்டும்..(அரைபக்கக் கதை)

ஒரு சந்நியாசியிடம்..அவர் சிஷ்யன்..ஒருநாள்..'சுவாமி...நான் எப்படி வாழவேண்டும்..என்பதை..தெரிவித்தால்..நலமாயிருக்கும்..'என்றான்.,

குருவும்..தன் ஆயுட்காலம் முடிவதை..அறிந்து..தன் சிஷ்யன் இனி..தனியாக..விவரங்களை தெரிந்துக்கொள்ளட்டும்..என்று...தூரத்தில் நொண்டிக்கொண்டே வரும் நரியைக்காட்டி..'அதனுடன் செல்..அதற்கு உணவு எப்படி கிடைக்கிறது..என்று பார்..அப்போது..நீ எப்படி வாழவேண்டும் என்று தெரியும்..' என்றார்.,

நரியை தொடர்ந்து வந்த சிஷ்யன்..தூரத்தே ஒரு சிங்கம்..இறந்த மானின் உடலை இழுத்து வருவதை பார்த்து ஒளிந்துக் கொண்டான்.அந்த மான் சிங்கத்தால் வேட்டையாடப்பட்டது.அதை சிறிது தின்றுவிட்டு..மீதத்தை..நரியிடம் போட்டு விட்டு சென்றது..சிங்கம்..

உடனே சிஷ்யனுக்கு ..வாழவேண்டிய வழி தெரிந்தது போல இருந்தது..

அடுத்தநாள் முதல்...சிஷ்யன்..உண்ணாமல்...யாரேனும் தனக்கு..உணவு கொண்டுவந்து தருவார்கள் என காத்திருக்க ஆரம்பித்தான்..

நாட்கள் உருண்டன...

ஆனால்..யாரும் உணவை கொண்டுவந்து தரவில்லை..

அவன் உடல் இளைத்து..தெம்பையெல்லாம் இழந்தான்..குருவைத் தேடி வந்தான்..நடந்த விஷயங்களைக் கூறி.'குருவே..அந்த நரிக்கு கொடுத்தாற்போல்..யாரேனும்..எனக்கு ..உணவு கொண்டுவந்து தருவார்கள் என எண்ணினேன்..ஆனால் யாரும் வரவில்லை.'என புலம்பினான்..

பதிலுக்கு..குரு..'அட..மடையா..நீ என்னிடம்..எப்படி வாழவேண்டும் என்று கேட்டாய்...நானும் சொன்னேன்..ஆனால்..நீ..சிங்கம்..நரியைப் பார்த்து..தப்பாய் புரிந்துக் கொண்டாய்..உண்மையில்..நீ என்ன செய்திருக்க வேண்டும்..சிங்கம் போல வாழ நினைத்திருக்க வேண்டும்..மற்றவர்களுக்கு..உதவியாய்...மற்றவர்களுக்கு..உணவளிக்கக் கூடியவனாய் இருக்க எண்ணியிருக்க வேண்டும்'என்றார்..

அப்போதுதான்..சிஷ்யனுக்கு..எப்படி வாழவேண்டும் என்பதற்கான விடை தெரிந்தது.

6 comments:

Anonymous said...

சரிதாங்க. யாரப் போல ஆகனும்னு நினைக்கிறோமோ அப்படியே ஆவோம்கிறதுதான் உண்மை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்...கருத்துக்கும் நன்றி வேலன்

நசரேயன் said...

நல்ல கருத்துள்ள கதை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்

மங்களூர் சிவா said...

/
சிங்கம் போல வாழ நினைத்திருக்க வேண்டும்..மற்றவர்களுக்கு..உதவியாய்...மற்றவர்களுக்கு..உணவளிக்கக் கூடியவனாய் இருக்க எண்ணியிருக்க வேண்டும்'என்றார்..
/

மிக அருமை!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சிவா