Thursday, November 27, 2008

உள்நாட்டு தமிழனும்...வெளிநாட்டு தமிழனும்...

தமிழன்..

அவன்..உள்நாட்டு தமிழனானாலும் சரி..வெளிநாட்டு தமிழனானாலும் சரி...இளிச்சவாயன் தான்...

காவிரியில்...நம் தமிழகப்பகுதிக்குள்..வரும் தண்ணீரில்..தர்மபுரி,கிருஷ்ணகிரி..மக்கள் தாகம் தீர்க்க..ஒகேனக்கல் திட்டம் தீட்டப்பட்டது.அதற்கு கர்நாடகம் எதிர்ப்பு..தெரிவித்து வருகிறது..கர்நாடகா சட்டசபை தேர்தல் நடந்த சமயம்...இந்த பிரச்னையை..தள்ளிவைத்தார்..கலைஞர்.தேர்தல் முடிந்து..வந்த புது அரசும் இத் திட்டத்தை எதிர்த்தது.

சமீபத்தில்..இது பற்றி பேசிய..காங்கிரஸ் மூத்த தலைவருள் ஒருவரான..வீரப்ப மோய்லி பேசும்பொது...இந்த விஷயத்தில்..பிரதமர் தலையிடமுடியாது..என்றும்..இது..இரு மாநில பிரச்னை என்றும்..மாநிலங்கள்..தங்களிடையே பேச்சு வார்த்தை நடத்தித்தான்..தீர்த்துக் கொள்ள வேண்டும்..என்று கூறியுள்ளார்.

கேரளா..முல்லைப்பெரியார் ,ஆந்திரா..பாலாற்றில்..அணைகட்டும் திட்டம்..என எல்லாமே தமிழகத்திற்கு எதிராகவே நடந்து வருகின்றன.

உள்நாட்டு பிரச்னையிலேயே..தமிழனின் உரிமைக்கு..பிரதமர் தலையிட முடியாது..என்னும் போது..வெளிநாட்டு..இலங்கை தமிழர்களுக்காக..பிரதமர் தலையிட முடியுமா..

இது...சிங்களர்களும்...இலங்கை தமிழர்களும்..தங்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்ளவேண்டிய பிரச்னை..என சொன்னாலும் சொல்வார்கள்...

தமிழா...நீ எங்கிருந்தாலும்..ஏமாளிதான்..இளிச்சவாயன்தான்.