Friday, November 7, 2008

ஒகேனக்கல் பிரச்னையும்..தமிழனும்...

தர்மபுரி..கிருஷ்ணகிரி மக்களுக்கு குடி தண்ணீர் பிரச்னையை ஒகேனக்கல் குடிநீர் திட்டம் தீர்த்து வைக்கும் என்றிருந்தால்..காவிரி பிரச்னையைப் போல இதுவும் தீராது போலிருக்கிறது...நம் பங்கு நீரை பயன்படுத்தக்கூட கர்நாடகா மாநிலம் ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறது.

மத்திய அரசு தலையிட வேண்டும்..என்ற கோரிக்கை வைக்கும் கர்நாடகா அரசு...இத் திட்டத்திற்கு நமக்கு நிதி வழங்குவதாகக் கூறியுள்ள ஜப்பான் வங்கிக்கு..கடன் வழங்காதீர்கள் என கடிதம் எழுதப்போகிறதாம்..

மஹாராஷ்டிரா ராஜ்தாக்கரே பரவாயில்லை போலிருக்கிறது..

மத்திய அரசு..உடனே தலையிட்டு..வெளிநாட்டு வங்கிக்கு..கடிதம் எழுதக்கூடாது என கர்நாடகாவை வலியுறுத்த வேண்டும்.நம் நாட்டு பங்காளி சண்டை நம்மிடையே இருக்கட்டும்.

ஆமாம்...இலங்கை தமிழர் பற்றி கூவும் நாம்...சிங்கள அரசை கண்டிக்கிறோம்..

நம் தவித்த வாய்க்கு தண்ணீர் கூட தர மறுக்கும் கர்நாடகா அரசு...சிங்கள அரசைவிட கொடூர எண்ணத்தில் சற்றும் குறைந்தது இல்லை.

5 comments:

நசரேயன் said...

/*நம் தவித்த வாய்க்கு தண்ணீர் கூட தர மறுக்கும் கர்நாடகா அரசு...சிங்கள அரசைவிட கொடூர எண்ணத்தில் சற்றும் குறைந்தது இல்லை.
*/
அப்படி அடிச்சு சொல்லுங்க இறையாண்மை பத்தி பேசும் மக்களுக்கு ஒரு நல்ல கேள்வி

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// நசரேயன் said...
/*நம் தவித்த வாய்க்கு தண்ணீர் கூட தர மறுக்கும் கர்நாடகா அரசு...சிங்கள அரசைவிட கொடூர எண்ணத்தில் சற்றும் குறைந்தது இல்லை.
*/
அப்படி அடிச்சு சொல்லுங்க இறையாண்மை பத்தி பேசும் மக்களுக்கு ஒரு நல்ல கேள்வி///

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்

குடுகுடுப்பை said...

என்னோட ஒரு கனனடர் வேல பாத்தாரு, காவிரி கர்நாடாகாவில்தான் உருவாகுது அது தமிழ்நாட்டு மக்கள் கேக்கிறதே தப்பு இல்லையான்னு நியாயம் பேசுவாரு. என்னத்த சொல்ல.
நதி கலக்கும் இடம் வரை நீர் சொந்தம் என்பது தெரியாதவர்களை

T.V.ராதாகிருஷ்ணன் said...

//குடுகுடுப்பை said...
என்னோட ஒரு கனனடர் வேல பாத்தாரு, காவிரி கர்நாடாகாவில்தான் உருவாகுது அது தமிழ்நாட்டு மக்கள் கேக்கிறதே தப்பு இல்லையான்னு நியாயம் பேசுவாரு. என்னத்த சொல்ல.
நதி கலக்கும் இடம் வரை நீர் சொந்தம் என்பது தெரியாதவர்களை//

எல்லாம் ச்சும்மாங்க