Sunday, November 9, 2008

இலங்கை பிரச்னை..கலைஞருக்கு வெற்றி...

இலங்கை பிரச்னையில்...அனைத்து கட்சிகள் கூட்டத்தில்..முதலில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறியது..

இதை அடுத்து..பல பிரிவினர்..பல போராட்டங்களை மேற்கொண்டனர்.

நேற்று இதைப்பற்றி கலைஞர் கூறுகையில்..போர் நிறுத்தம் என்பது..இரு சாராருக்கும் பொருந்தும் என்றும்..இலங்கை ராணுவம் மட்டும் ..போரை நிறுத்தினால் என்ன பயன்? என்றும் கேட்டிருந்தார்.

இந்நிலையில்..பல இடங்களில் இலங்கை ராணுவம் முந்தி வருவதாகவும்..போரால் பல அப்பaவி தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுமைகள் பற்றியும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

இன்று..புலிகளின்..அரசியல் பிரிவு தலைவர்பி.நடேசன்..போர் நிறுத்தத்திற்கு புலிகள் தயார்..என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.,

விடிவெள்ளி பிறக்குமா பார்ப்போம்..

ஆனால்..அவரின் அறிவிப்பு கலைஞருக்கு (அவர் அனுபவத்திற்கு)கிடைத்த வெற்றி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

12 comments:

நசரேயன் said...

விடிவெள்ளி பிறக்குமா பார்ப்போம்

Madhu Ramanujam said...

//ஆனால்..அவரின் அறிவிப்பு கலைஞருக்கு (அவர் அனுபவத்திற்கு)கிடைத்த வெற்றி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.//

நீங்க ஒண்ணும் காமெடி கீமெடி பண்ணலையே?!?

Madhu Ramanujam said...

யாரோட வெற்றியா வேணாலும் இருக்கட்டும். போர் நிறுத்தம் வருதான்னு பார்க்கலாம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

// நசரேயன் said...
விடிவெள்ளி பிறக்குமா பார்ப்போம்//

வருகைக்கு நன்றி நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// Madhusudhanan Ramanujam said...
யாரோட வெற்றியா வேணாலும் இருக்கட்டும். போர் நிறுத்தம் வருதான்னு பார்க்கலாம்.///

வருகைக்கு நன்றி Madhusudhanan Ramanujam

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Madhusudhanan Ramanujam said...
//ஆனால்..அவரின் அறிவிப்பு கலைஞருக்கு (அவர் அனுபவத்திற்கு)கிடைத்த வெற்றி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.//

நீங்க ஒண்ணும் காமெடி கீமெடி பண்ணலையே?!?//

:-))))

அத்திரி said...

இலங்கைப்போரில் யாருக்கு அதிக சேதம் வருகிறதோ அவர்கள் போர் நிறுத்த்ம் என்று கூவுவார்கள். அது இலங்கை ராணுவமாக இருந்தாலும் சரி, புலிகளாக இருந்தாலும் சரி இந்த வார்த்தை தான் முதலில் வரும்.

இதில் கலைஞருக்கு வெற்றி எங்கிருந்து வந்தது???.

T.V.ராதாகிருஷ்ணன் said...

என்ன அத்திரி..புரியாமல் பேசுகிறீர்கள்..கலைஞர் போர் நிறுத்தம் இரு பக்கமும் வேண்டும் என்றதும்தானே..அறிவிப்பு வந்தது..அப்பொது இது யார் வெற்றி

:-))))))))))

வாக்காளன் said...

//நீங்க ஒண்ணும் காமெடி கீமெடி பண்ணலையே?!?//

மிஸ்டர் மதுசூதன் , உங்க பதிவுல நடுநிலை அது இது நு பேசிட்டு, இங்கே நீங்க போட்டிருக்கும் இந்த கமென்ட் பார்த்தவுடனே சொல்லிது.. உங்க நடுநிலையை

உங்களுக்கு கலைஞர் எதிர்ப்பு ரத்தத்தில் ஊறிய விஷயம்.. சும்மா எல்லோரையும் தான் எழுதரேன் அது இது நு பூசி மெழுக வேனாமே.. :)

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி
வாக்காளன்

baleno said...

புலிகளுக்கு இப்போ முச்சு திணறுகிறது. அதனால் போர் நிறுத்தம் தேவைபடுகிறது. போர் நிறுத்தம் ஏற்பட்டால் புலிகள் தமிழர்களிடம் பணம் பறித்து தங்களை தயார் படுத்தி கொண்டு மீண்டும் போர் தான். இதில் எங்கே விடிவெள்ளி பிறக்கும் மீண்டும் அழிவு தான்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நீங்கள் சொல்வது சரி...ஆனால் நம்பிக்கைதான் வாழ்க்கை...நம்புவோம்..
வருகைக்கு நன்றி baleno