Saturday, August 1, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 20

1974ல் வந்த சிவாஜி படங்கள்..

சிவகாமியின் செல்வன்
தாய்
வாணி-ராணி
தங்கபதக்கம்
என் மகன்
அன்பைத்தேடி

இதி ..தங்கபதக்கம்..வெள்ளிவிழா படம்.உதிரிபூக்கள் மகேந்திரன் கதைவசனம்.இது சிவாஜி நாடகமன்றத்தாரால் நாடகமாக சபா மேடைகளில் நடத்தப்பட்டு பின் திரைப்படமானது.முதன் முதலாக
1.75 கோடி வசூலான தமிழ்ப்படம் இது.மதுரையில் தொடர்ந்து 185 காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக சாதனைப் படைத்தது.பெங்களூரு,இலங்கை ஆகிய இடங்களிலும் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்த படம்.

சிவகாமியின் செல்வன்..மற்றுமொரு 100 நாட்கள்படம்..இனிமையான பாடல்கள் ...கொண்ட படம்.

என்மகன்..பாலாஜி தயாரிப்பு..இப்படப் பாடல்களும் பிரபலம்.இதுவும் 100 நாட்கள் ஓடிய படம்.

வாணி-ராணி..ஹிந்தியில்..ஹேமமாலினி..நடித்து வெளிவந்த சீதா அவுர் கீதா படக் கதை.நாயகனுக்கு அவ்வளவு வேலை இல்லை..ஆகவே படமும் ஓடவில்லை.50 நாட்கள் மட்டுமே ஓடியது.

அன்பைத் தேடி..நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்ததால்...வெற்றியை எட்டவில்லை.

1975ல் படங்கள்

மனிதனும்..தெய்வமாகலாம்
அவன்தான் மனிதன்
மன்னவன் வந்தானடி
அன்பே ஆருயிரே
வைர நெஞ்சம்
டாக்டர் சிவா
பாட்டும் பரதமும்

இதில் அவன்தான் மனிதன்..மற்றும்..மன்னவன் வந்தானடி..ஆகிய இரு படங்கள் 100 நாட்கள் ஓடின.சிவாஜியின் 175ஆவது படம் அவன் தான் மனிதன்.23 ஆண்டுகளில் 175 படம்.

ஸ்ரீதர்..முதலில் ஹீரோ 72 என்ப் பெயரிட்டு, பின்..காலமெல்லாம் காத்திருப்பேன் என பெயர் மாறி..வைர நெஞ்சம் என்ற பெயரில் வந்த படம்.வெற்றி பெறவில்லை

பாட்டும் பரதமும்..சிவாஜியின் அருமையான நடிப்பு இருந்தும்..படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை.

அடுத்த பதிவில் 1976க்கான படங்களைப் பார்ப்போம்.

17 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

சிவாஜியின் சூப்பர் ஹிட் படங்கள் சூப்பர் தொகுப்பு

SANKAR said...

மனிதனும் தெய்வமாகலாம் தானே சரி

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தங்கப் பதக்கம்:

மகனுக்கு தந்தை மேல் அவ்வளவு ஒரு வெறுப்பு வரக் காரணம் என்ன தல..,

எந்தக் குழந்தையாவது பிறவி குற்றவாளியாக பிறக்குமா? ஒரு கடமை தவறாத காவல் அதிகாரி, அன்பும் பாசமும் நிறைந்த குடும்ப தலைவியின் வளர்ப்பில் வளர்ந்த குழந்தை எப்படி குற்றவாளியாக வளரமுடியும்.

தனக்கு ரோல் மாடலாக அந்தக் குழந்தை யாரைப் பார்த்து வளர்ந்திருக்க முடியும்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//சிவகாமியின் செல்வன்//

அது அந்தப் படம்தானே தல..,

//வாணி-ராணி//

இது துர்கா படத்தின் ரீமேக்தானே தல..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//டாக்டர் சிவா//

தொழு நோயாளிகளையும், மருத்துவம் பார்க்கும் மருத்துவரையும் பின்புலமாகக் கொண்டு உருவாக்கப் பட்ட படம் அது.

வாய்பேச இயலாத பெண்ணாக நடித்திருப்பவர் ஜெயமாலினிதானே தல..,

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SANKAR said...
மனிதனும் தெய்வமாகலாம் தானே சரி//

சமயத்தில் என் கையெழுத்தையே என்னால்சரியாக படிக்க முடிவதில்லை..அதானால் உண்டான தவறு..திருத்தப்பட்டுவிட்டது.வருகைக்கு நன்றி ஷங்கர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
சிவாஜியின் சூப்பர் ஹிட் படங்கள் சூப்பர் தொகுப்பு//
நன்றி Starjan

T.V.ராதாகிருஷ்ணன் said...

// SUREஷ் (பழனியிலிருந்து) said...
தங்கப் பதக்கம்:

மகனுக்கு தந்தை மேல் அவ்வளவு ஒரு வெறுப்பு வரக் காரணம் என்ன தல..,

எந்தக் குழந்தையாவது பிறவி குற்றவாளியாக பிறக்குமா? ஒரு கடமை தவறாத காவல் அதிகாரி, அன்பும் பாசமும் நிறைந்த குடும்ப தலைவியின் வளர்ப்பில் வளர்ந்த குழந்தை எப்படி குற்றவாளியாக வளரமுடியும்.

தனக்கு ரோல் மாடலாக அந்தக் குழந்தை யாரைப் பார்த்து வளர்ந்திருக்க முடியும்//


வாத்தியார் மகன் மக்குன்னு சொல்வாங்களே..அப்படித்தான் இதுவும்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
//சிவகாமியின் செல்வன்//

அது அந்தப் படம்தானே தல..,//

படத்தலைப்பு அதுதான்...ஆனால் படம் வேறு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
இது துர்கா படத்தின் ரீமேக்தானே தல..,//

தர்மேந்திரா,ஹேமாமாலினி நடித்த சீதா அவுர் கீதா படம் இது.துர்கா ரீமேக் அல்ல என நினைக்கிறேன்

nagoreismail said...

தங்கப் பதக்கம் படம் பின் நாளில் புகழ் பெற்ற ஜாவித் - சலீம் அவர்களின் திரைக்கதையில் இந்தியில் சக்தி என்ற பெயருடன் வெளி வந்தது. சிவாஜி வேடத்தில் நடித்த திலீப்குமாரின் நடிப்பை ஒரு முறையேனும் பார்த்து விடுங்கள்.

ஆராதானா என்று இந்தியில் வெளியாகி சக்கை போடு போட்ட படத்தின் ரீமேக் தான் சிவகாமியின் செல்வன்

சிநேகிதன் அக்பர் said...

சிவாஜியின் தொகுப்பு அருமை.

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
சிவாஜியின் தொகுப்பு அருமை.

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.//
//
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்//

நன்றி அக்பர்,Starjan

T.V.ராதாகிருஷ்ணன் said...

//nagoreismail said...
தங்கப் பதக்கம் படம் பின் நாளில் புகழ் பெற்ற ஜாவித் - சலீம் அவர்களின் திரைக்கதையில் இந்தியில் சக்தி என்ற பெயருடன் வெளி வந்தது. சிவாஜி வேடத்தில் நடித்த திலீப்குமாரின் நடிப்பை ஒரு முறையேனும் பார்த்து விடுங்கள்.

ஆராதானா என்று இந்தியில் வெளியாகி சக்கை போடு போட்ட படத்தின் ரீமேக் தான் சிவகாமியின் செல்வன்//
வருகைக்கும்..தகவலுக்கும் நன்றி இஸ்மாயில்

Gokul said...

தங்க பதக்கம் ... டாக்டர் சிவா ..

இரண்டு படங்களை கவனியுங்கள் இந்த இரண்டு படங்கள் இடையில்தான் சிவாஜி மாபெரும் தொப்பையை வளர்த்தார் அது அவர் கதாநாயகனாக நடித்த 81-82 வருடம் வரை தொடர்ந்தது , அடுத்த வந்த ஆண்டுகளில் எல்லாம் பெரும் தொப்பையுடன் காட்சி அளித்தார் , அந்த தொப்பையை மறைக்க ஒரு பெரிய கோட்டை வேறு அணிந்து கொள்வார்.

மிகச்சிறந்த முக பாவம் கொண்டு இருந்தும், நடிப்பு திறன் கொண்டு இருந்தும், ஒரு நடிகனாக உடலை பேனாதது அவர் செய்த தவறு , அதனாலேயே சிவாஜியின் பிற்கால படங்களை பார்க்க முடியாமல் போனது

SANKAR said...

டாக்டர் சிவாவில் மஞ்சுளா டூ பீஸ்
நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும் இந்த
நாட்டிலே என்ற பாடலில் சிவாஜி ஒட்டி
வரும் ஜீப்பில் வெள்ளை/சிகப்பு கொடி
கட்டியிருப்பார்.பின்னர் அவர் தமிழக முன்னேற்ற முன்னணி தொடங்கிய போது அது அவரது கட்சி கொடியாக
இருந்தது.