Friday, August 14, 2009

சிவாஜி ஒரு சகாப்தம்-22

1978ல் வந்த படங்கள்

அந்தமான் காதலி
தியாகம்
என்னைப் போல ஒருவன்
புண்ணிய பூமி
ஜெனரல் சக்ரவர்த்தி
பைலட் பிரேம்னாத்
ஜஸ்டிஸ் கோபினாத்

இவற்றில் அந்தமான் காதலி,ஜெனரல் சக்ரவர்த்தி ஆகியவை 100நாள் படங்கள்.

அந்தமான் காதலி..அந்தமானிலேயே எடுக்கப்பட்ட படம்.சுஜாதா நாயகி.

தியாகம் 25 வாரங்கள் ஓடிய படம்.இப்ப்டம் சென்னை கிரௌன் தியேட்டரில் தொடர்ந்து 210 காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகள்.மதுரையில் 207 காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகள்.இந்த சாதனைகளை யாரும் முறியடித்ததாக தெரியவில்லை.

மெழுகு பொம்மைகள் என்ற நாடகம் பைலட் பிரேம்நாத்.இப்படம்..இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் உருவானது.இலங்கையில் ஷிஃப்ட் முறையில் 1080 நாட்கள் இப்படம் ஓடியது.யாழ்ப்பாணத்தில் ஒரு திரையரங்கில் 222 நாட்கள் தொடர்ந்து ஓடியது.கடல் கந்த வேறொரு நாட்டில் முதன் முதலாக திரைப்படங்கள் வர ஆரம்பித்தபின்..இன்று வரை இச்சாதனை முறியடிக்கப்படவில்லை.

இந்த வருடம் வந்த மலையாளப் படமான தச்சோளி அம்பு சிவாஜி நடித்த 3ஆவது சினிமாஸ்கோப் படம்.முன்னதாக 1973ல் ராஜ ராஜ சோழனும்,1977ல் சந்திரகுப்த சாணக்யா தெலுங்கு படமும்(இதிலும் சிவாஜி நடித்திருந்தார்)மற்ற சினிமாஸ்கோப் படங்கள்.

ஜஸ்டிஸ் கோபிநாத்..சிவாஜியுடன்..ரஜினி இணைந்த படம்..ஆனால் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை.

1979 படங்கள் அடுத்த பதிவில்

26 comments:

துபாய் ராஜா said...

நல்லதொரு பதிவு.சிறந்த நடிகரைப் பற்றி சிறப்பான தகவல்கள்.

பீர் | Peer said...

நல்ல பகிர்வு. அடுத்தடுத்த பகுதிகளையும் எதிர்பார்க்கிறேன்.

சிவாஜி ரசிகன் என்று சொன்னால் நவீன இலக்கிய வட்டத்தில் மதிக்க மாட்டார்களாம்,மனுஷ்ய புத்திரன் சொல்கிறார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
துபாய் ராஜா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Peer

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பீர் | Peer said...
சிவாஜி ரசிகன் என்று சொன்னால் நவீன இலக்கிய வட்டத்தில் மதிக்க மாட்டார்களாம்,மனுஷ்ய புத்திரன் சொல்கிறார்.//

மதியாதார் வாசலை நாம் ஏன் மிதிக்க வேண்டும்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//மதியாதார் வாசலை நாம் ஏன் மிதிக்க வேண்டும்//

super

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//தியாகம் //


ரஜினி படங்களின் முன்ன்னோடி..,

முக்கியஸ்தர்..,

ஒதுங்கிப் போய் எளிய வாழ்க்கை..,

மீண்டும் பிரவேசம் ஒரு ஃபிளாஷ் பேக்..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//என்னைப் போல ஒருவன்//

இந்தப் படத்தில் மிக ஒல்லியான நாயகனாக படம் முழுவதும் வருகிறாரே எப்படி தலைவரே..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//சிவாஜி ரசிகன் என்று சொன்னால் நவீன இலக்கிய வட்டத்தில் மதிக்க மாட்டார்களாம்,//

எம்ஜியார் ரசிகன் என்று சொன்னால் இலக்கிய வட்டாரம் மட்டுமல்ல நண்பரே.., ரசிகர்கள் வட்டாரத்திலேயே மதிக்க மாட்டார்கள்..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஜெனரல் சக்ரவர்த்தி
பைலட் பிரேம்னாத்
ஜஸ்டிஸ் கோபினாத்//

வெற்றிப் படங்களாக இருந்தாலும், இந்தப் படங்கள்தான் சிவாஜியை முதியவராக மாற்றி ஓய்வறைக்கு அனுப்பின..,

இந்தப் படங்களை நான் வெறுக்கிறேன்..,

திரிசூலம் பாணிப் படங்களிலும் கூடவே தெய்வ மகன், பார்மகளே பார் பார் மாதிரி படங்களிலும் நின்றிருந்தால் சிவாஜி இன்னும் பல காலம் நடித்திருப்பார்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நான் வாழ வைத்தேன் பற்றி தகவலே வரவில்லையே தல.., இந்தக் கால கட்டப் படங்களிலும் சிவாஜி தனது தன்மையுடன் நடித்த சில படங்களில் அதுவும் ஒன்று..,

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
நான் வாழ வைத்தேன் பற்றி தகவலே வரவில்லையே தல.., இந்தக் கால கட்டப் படங்களிலும் சிவாஜி தனது தன்மையுடன் நடித்த சில படங்களில் அதுவும் ஒன்று..,//

உண்மை..அபிதாப் நடித்த மஜ்பூர் என்னும் ஹிந்தி படத்தின் கதை இது.சிவாஜியின் நிறைய படங்கள் இன்று யார்..யாரிடம் உரிமை இருக்கிறது என்பதே தெரியவில்லை

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
//மதியாதார் வாசலை நாம் ஏன் மிதிக்க வேண்டும்//

super//

நன்றி SUREஷ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
//என்னைப் போல ஒருவன்//

இந்தப் படத்தில் மிக ஒல்லியான நாயகனாக படம் முழுவதும் வருகிறாரே எப்படி தலைவரே..,//

அதுதான் அவர் திறமை.கொஞ்சம் தெய்வமகனை கண்முன் கொண்டுவாருங்கள்..தந்தை,முதல் மகன் இருவரும் சற்றே குண்டாய் இருப்பார்கள்.ஆனால் இரண்டாம் மகன்..நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசும் விடலைப் பையனாய் சிக் என இருப்பார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
//சிவாஜி ரசிகன் என்று சொன்னால் நவீன இலக்கிய வட்டத்தில் மதிக்க மாட்டார்களாம்,//

எம்ஜியார் ரசிகன் என்று சொன்னால் இலக்கிய வட்டாரம் மட்டுமல்ல நண்பரே.., ரசிகர்கள் வட்டாரத்திலேயே மதிக்க மாட்டார்கள்..,//

பீர் சொல்லவந்தது எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற பாகுபாடு பற்ரி இருக்காது என எண்ணுகிறேன்.பீரும் சிவாஜி ரசிகரே

Starjan (ஸ்டார்ஜன்) said...

சுதந்திர தின வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
சுதந்திர தின வாழ்த்துக்கள்//


நன்றி Starjan

T.V.ராதாகிருஷ்ணன் said...

///SUREஷ் (பழனியிலிருந்து)
ரஜினி படங்களின் முன்ன்னோடி..,///

:-)))

பீர் | Peer said...

// T.V.Radhakrishnan said...
..பீர் சொல்லவந்தது எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற பாகுபாடு பற்ரி இருக்காது என எண்ணுகிறேன்.பீரும் சிவாஜி ரசிகரே//

TVR, சரியா புரிஞ்சுக்கிட்டீங்க... நன்றி.

முரளிகண்ணன் said...

அற்புதமான தகவல்கள் டிவிஆர் சார்.
கலக்கல்.

சுரேஷ் அவர்களின் பின்னூட்டங்கள் மேலும் சிறப்பு சேர்க்கின்றன

T.V.ராதாகிருஷ்ணன் said...

///பீர் | Peer said...
// T.V.Radhakrishnan said...
..பீர் சொல்லவந்தது எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற பாகுபாடு பற்ரி இருக்காது என எண்ணுகிறேன்.பீரும் சிவாஜி ரசிகரே//

TVR, சரியா புரிஞ்சுக்கிட்டீங்க... நன்றி.///

வருகைக்கு நன்றி Peer

T.V.ராதாகிருஷ்ணன் said...

//முரளிகண்ணன் said...
அற்புதமான தகவல்கள் டிவிஆர் சார்.
கலக்கல்.

சுரேஷ் அவர்களின் பின்னூட்டங்கள் மேலும் சிறப்பு சேர்க்கின்றன//

வருகைக்கும்..பாராட்டுக்கும்..என் சார்பிலும்..சுரேஷ் சார்பிலும் நன்றி முரளி

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//பீர் சொல்லவந்தது எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற பாகுபாடு பற்ரி இருக்காது என எண்ணுகிறேன்.பீரும் சிவாஜி ரசிகரே//


நானும் அவ்வாறேதான் சொல்கிறேன் தலைவரே..,


இந்த விஷயத்தில் சிவாஜி ரசிகர்களைவிட எம்ஜியார் ரசிகர்கள் நிலை மோசம். சிவாஜி ரசிகர்களாவது எதாவது படவிழா, விருது அப்படி இப்படி என்று பேசுவார்கள். எம்ஜியார் ரசிகர்கள் என்றாலே பாமரர்கள் என்ற எண்ணமே பெரும்பாலானவர்கள் மத்தியில் நிலவுகிறது

T.V.ராதாகிருஷ்ணன் said...

// SUREஷ் (பழனியிலிருந்து) said...
//பீர் சொல்லவந்தது எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற பாகுபாடு பற்ரி இருக்காது என எண்ணுகிறேன்.பீரும் சிவாஜி ரசிகரே//////


நானும் அவ்வாறேதான் சொல்கிறேன் தலைவரே..,///


நன்றி SUREஷ்

SANKAR said...

தியாகம் படத்தில்"நல்லவர்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி" அருமையான் பாடல்.
பைலட் ப்ரேம்னாத் படத்தில் இலங்கை
நடிகை காமினி பொன் சேகா ஜோடி.
இலங்கையின் இளங்குயில் என்னோடு இசைபாடுதோ அருமையான பாடல்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SANKAR said...
தியாகம் படத்தில்"நல்லவர்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி" அருமையான் பாடல்.
பைலட் ப்ரேம்னாத் படத்தில் இலங்கை
நடிகை காமினி பொன் சேகா ஜோடி.
இலங்கையின் இளங்குயில் என்னோடு இசைபாடுதோ அருமையான பாடல்//

வருகைக்கு நன்றி SANKAR