Thursday, August 20, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 23

1979ல் வந்த படங்கள்
திரிசூலம்
கவரிமான்
நல்லதொரு குடும்பம்
இமயம்
நான் வாழவைப்பேன்
பட்டாக்கத்தி பைரவன்
வெற்றிக்கு ஒருவன்

இவற்றுள் திரிசூலம் மாபெரும் வெற்றி படமாகும்.வெள்ளிவிழா படம்.சென்னையில் வெளியான சாந்தி ,கிரௌன்,புவனேஸ்வரி திரை அரங்குகளில் தொடர்ச்சியாக முறையே 315,313,318 காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாகும்(100 நாட்களுக்கு மேல் அரங்கு நிறைந்த காட்சிகள்)மதுரை சிந்தாமணியில் 401 அரங்கு நிறைந்த காட்சிகள்.மேலும் 20 அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது.இச்சாதனை முறியடிக்க முடியா சாதனை.இப்படம் சிவாஜியின் 200 ஆவது படம்..அதற்கு அவர் எடுத்துக் கொண்ட ஆண்டுகள் 26 மட்டுமே.8 திரை அரங்குகளில் வெள்ளிவிழா.இலங்கையிலும் இரு திரை அரங்குகளில் வெள்ளிவிழா.அந்த நாட்களிலேயே முதன் முதலாய் இரண்டு கோடிகளுக்கு மேல் வசூல் ஆகி சாதனை புரிந்த படம்.

சிவாஜியுடன் ரஜினி இணைந்த இரண்டாம் படம் நான் வாழவைப்பேன்.அபிதாப் நடித்த மஜ்பூர் என்ற ஹிந்தி படக் கதை இது.சிவாஜியின் அருமையான நடிப்பைக் காணலாம்.நூறு நாள் படம்.

பட்டாக்கத்தி பைரவன்..இலங்கையில் 100 நாள் படம் சென்னையில் அறுபது நாட்கள் ஓடியது.

1980ல் வெளியான படங்கள்

ரிஷிமூலம்
தர்மராஜா
எமனுக்கு எமன்
ரத்தபாசம்
விஸ்வரூபம்

ரிஷிமூலமும்,விஸ்வரூபமும் நூறு நாட்கள் படம்.

தர்மராஜா..முதன் முதலாக ஜப்பானில் எடுக்கப்பட்ட படம்
சிவாஜி, கே ஆர் விஜயா நடிக்க எம் ஏ திருமுகம் இயக்கம்.விஸ்வநாதன் இசை

ரத்தபாசம்..சிவாஜி சொந்த படம்..சிவாஜி புரடக்ஷன்ஸ் முதன் முதலாய் வெளிநாட்டில் படபிடிப்பு நடத்திய படம். கே விஜயன் இயக்கம்.சிவாஜி, ஸ்ரீபிரியா.எம் எஸ் வி இசை

ரிஷிமூலம்..சிவாஜி, கே ஆர் விஜயா.எஸ் பி முத்துராமன் இயக்கம்.இளையராஜா இசை

எமனுக்கு எமன் ..சிவாஜி, ஸ்ரீபிரியா.டி யோகானந்த் இயக்கம்,இசை சக்கரவர்த்தி.எமனாகவும், சாதாரண குடிமகனாகவும் சிவாஜிக்கு இரட்டை வேடங்கள்.(எமலோக் என்ற தெலுங்கு படத்தின் தழுவல்)

விஸ்வரூபம்..ஏ சி திருலோகசந்தர் இயக்கம்.சிவாஜி, சுஜாதா நடிகக் பத்மாலயா பிக்சர்ஸ் தயாரிப்பு.அதாலத் என்ற ஹிந்தி படத்தின் தழுவல்

எமனுக்கு எமன்,ரத்தபாசம்,விஸ்வரூபம்..மூன்று படங்களிலும் சிவாஜி இரட்டை வேடங்கள்.

.

19 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

திரி சூலம் சூப்பர் படம் ....

சிவாஜியின் மணிமகுடம்

Starjan (ஸ்டார்ஜன்) said...

I AM FIRST & SECOND

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஸ்டார்ஜன்

வர்மா said...

திரிசூலமும் ஹிந்திப்பட தழுவல்தானே. சிவாஜியி நடிப்பு சூப்ர்
அன்புடன்
வர்மா

வர்மா said...

திரிசூலமும் ஹிந்திப்பட தழுவல்தானே. சிவாஜியி நடிப்பு சூப்ர்
அன்புடன்
வர்மா

பீர் | Peer said...

:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வர்மா said...
திரிசூலமும் ஹிந்திப்பட தழுவல்தானே. சிவாஜியி நடிப்பு சூப்ர்
அன்புடன்
வர்மா//

அமிதாப் நடித்த மகான் என்ற ஹிந்தி படத்தின் தழுவல் திரிசூலம்.
வருகைக்கு நன்றி வர்மா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி peer

SUREஷ்(பழனியிலிருந்து) said...

திரிசூலம்.,

சாக்லெட் காதல் ஹீரோவாக கமல் மாதிரியான ஒரு சிவாஜி,,

குஞ்சம் வைச்ச சட்ட போட்டுக்கொண்டு ரகளை செய்து கொண்டு சுற்றும் மாதவன் மாதிரி ஒரு சிவாஜி,,

ரங்காராவ் மாதிரி ஒரு சிவாஜி,,

ஜப்பான் ரிட்டன்ஸ் மாதிரி நம்பியார்..,

திரிசூலம் சங்கர் ஏறக்குறைய சிவாஜி ரஜினி மாதிரி படு இளமையான தோற்றத்தில் இருப்பார்.

சுமதீஈஈஈஈஈஈஈஈஈஈ...........

மாடிப்படியில் ஏறிஏறி இறங்குவாரே.., வித்தியாசமான ஆனால் வெகு இயல்பான காட்சி..,

பீரோ பூட்டின் ரகசிய எண் மறந்துபோய் தடுமாறும் காட்சியும் சிவாஜி தன்னைப் பதிவு செய்திருப்பார்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கவரிமான்

மானம் போனா ஒன்னு உயிர எடுக்கனும் இல்ல உயிர விடனும்

வித்தியாசமான பன்ச் டயலாக்

எஸ்.பி.முத்துராமனின் இயக்கம்

ஏசுதாஸின் குரலில் பாட ஆரம்பிக்கும் சிவாஜி, சிறை சென்று வந்தபின் எஸ்.பி.பி குரலில் பாடுவார்

-----------------------------------

திரிசூலத்தில் மூன்று சிவாஜிக்கும் மூன்று பாடகர்கள். தனித் தனியே..

கதாப் பாத்திரங்களின் குரல்களும் வித்தியாசமாக.., சங்கருக்கும் குருவுக்கும் உதட்டசைவிலேயே வித்தியாசப் படுத்தி இருப்பார்.

எம்ஜியாரின் ஆஸ்தான சீனிவாசன் இதில் சிவாஜியின் சக காவலராக வந்து லார்டு வெங்கடேஸ்வரா என்று வசனம் பேசுவார்..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//இமயம்//

தனக்குத் தந்தன்

---------------------

//நான் வாழவைப்பேன்//

இந்தப் படத்தில் ரஜினியின் திறமையை நன்கு வெளிக் கொணர்ந்து அவரை வாழவைத்திருப்பார்.

வழக்கமாக பாலச் சந்தர் படக் கதாநாயகி போல குடும்ப கஷ்டத்தில் சிவாஜி வாழ்ந்து கொண்டிருப்பார். கோட் போட்டுக் கொண்டு சைக்கிளில் சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு (?விமான நிலையம்) செல்வார். இதில்
ஆல்பர்ஸ் டிசௌசா தான் நன்கு தெரிவார்.

கே.ஆர். விஜயா டைட் பேண்ட் சர்ட் போட்டுக் கொண்டு அசத்தோ அசத்து என்று அசத்துவார். அவர்தான் படத்தின் தயாரிப்பாளராம்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//வெற்றிக்கு ஒருவன்//

சிவாஜி இதில் கல்லூரி மாணவன் தானே.., மிகவும் பயந்த சுபாவம் கொண்டவராக வருவார். தந்தையின் மரணத்திற்குப் பிறகு மிகவும் பயங்கரமாக பழிவாங்குவார்.

-------------------------------

//தர்மராஜா//

ஒரு சிவாஜியின் பெயர் பாபா..,

இதிலும் பல சிவாஜிகள் தான்..,

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..விரிவான..பின்னூட்டங்களுக்கும்..கருத்துக்கும் நன்றி சுரேஷ்

இராகவன் நைஜிரியா said...

இந்த லிஸ்டில் எனக்குப் பிடித்தப் படங்கள் என்றால் திரிசூலம், கவரிமான் மற்றும் எமனுக்கு எமன். அதிலும் எமனுக்கு எமன் ரொம்ப ரசிச்சுப் பார்த்த படம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி இராகவன் நைஜிரியா

SANKAR said...

திரிசூலம் மூன்று சிவாஜிகளுக்கும் வெயிட் மாற்றியிருப்பார்.கவரிமான் படத்தில்"பூப்போலே உன் புன்னகையில் பொன் உலகினை கண்டேனம்மா" பாடல்
நல்லதொரு குடும்பம்-"சிந்து நதி ஓரம்"
செவ்வானமே பொன்மெகமே"
இமயம்-கண்ணிலே குடியிருந்து கருணை
தரும் தெய்வம் ஒன்று.
நான் வாழ வைப்பேன்-திருத்தேரில் வரும் சிலையோ பாடலில் கே.ஆர்.விஜயா ஜீன்ஸ் டைட்ஸ் போட்டு கலக்குவார்.
பட்டாக்கத்தி பைரவன்-சிவாஜிக்கு ஜோடி ஜெயசுதா-எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்,தேவதை ஒரு தேவதை இரண்டே பாடல்கள்.இது வரை எந்த டிவியிலும் இந்த பட பாடல்களைபோட்டதே இல்லை.
ஆனால் சென்ற வாரம் ஜெயா மேக்ஸ்
கிராமபோன் நிகழ்ச்சியில் போட்டார்கள்.
தர்மராஜாவில் கராத்தே வீரராக வருவார்.
ரத்தபாசம்-நான் பட்டகடன் எத்தனையோ பூமியில் பி்றந்து என்ற
பாடல்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி SANKAR

SANKAR said...

ரத்தபாசம் பட இயக்குனர் கே.விஜயன்
பாதியிலே இவருக்கும் சிவாஜிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட மீதி படத்தை
சிவாஜியே இயக்கினார்.டைட்டிலில்
இயக்குனர் பேர் போடும் இடத்தில்
சிவாஜியின் படத்தை போட்டிருப்பார்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

சங்கர் நிறைய தகவல்கள் வைத்திருக்கிறீர்கள்...நன்றி