Sunday, August 30, 2009

கோவி கண்ணனுக்கு கண்டனம்..

கோவியார்..ஈழம் குறித்து..நேற்று இணையத்தில் வந்த பலர் பதிவுகளுக்கு பதில் சொல்வதாய் எண்ணிக்கொண்டு..ஒரு பதிவை நேற்று எழுதியிருந்தார்.

அதில்..இதுபற்றி இணையத்தில் எழுதுவதால்..எந்த----- ஆகப் போவதில்லை என்ற தலைப்பு வேறு..

அவரது இந்த எண்ணத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

குறிப்பிட்டுள்ள நிகழ்ச்சி..ஊடகங்களில் வந்ததால்தான் உலகு அறிந்தது.அதற்கு மறுப்பு வந்தது தனிக்கதை.ஊடகங்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாது இணையதளம் வளர்ந்து வருகிறது.

ஆகவேதான்..எல்லாக் கட்சிகளும்..தங்களுக்கான இணையதளத்தை உருவாக்கி இருக்கின்றன.

வெகுஜன பத்திரிகைகளும்..பதிவுகள் பற்றி எழுதத் தொடங்கியுள்ளன.

ஒரு பத்திரிகை போட்டி நடத்தினால் இவ்வளவு கதைகள் வருமா..என ஆச்சர்ய படத்தக்க விதத்தில் உரையாடல் நடத்திய சிறுகதைப் போட்டிக்கு 250 கதைகள் வந்தன.

தமிழ் சினிமா.காம் என்ற வலைத் தளம்..திரைப்படங்களை பதிவர்கள் விமரிசிப்பதைக் கண்டு...தன் விமரிசனத்தை கவலையுடன் வைத்துள்ளது.

செந்தழல் ரவியின் வலைத்தளத்தி..நான் sap படித்துள்ளேன்..எனக்கு ஏதேனும் வேலைக் கிடைக்குமா? என்ற நம்பிக்கை கேள்வியை ஒருவரால் வைக்க முடிந்தது.

சக நண்பர் சிங்கை நாதனுக்கு..எம்.ஜி.ஆர்.,க்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட போது..மக்கள் எப்படி பிரார்த்தித்தார்களோ அந்த அளவு அனைத்து சமயத்தினரலும் பிரார்த்தித்திக்க முடிந்தது.

ஆகவே..வெறும் அரிப்பை தீர்த்துக் கொள்ளும் இடமல்ல இணையத்தளம்.

நடப்பது..நடக்கட்டும்..எனக்கென்ன..என அனைவரும் வாளயிருந்து விட்டால்..எந்தவொரு துறையும் தேவையில்லை.

நம்மால் முடியாவிடினும்..நடப்பதை உலகுக்கு தெரிவிப்பதில் ஊடகங்களுக்கு எவ்வளவு கடமைகள் உள்ளதோ..அந்த அளவிற்கு இணையங்களுக்கும் உள்ளது என்பதே என் எண்ணம்.

பெரிய..பெரிய வல்லரசுகளாலேயே அறிக்கை விடுவதைத் தவிர வேறு ஏதும் உருப்படியாக செய்யமுடியவில்லை..நம்மால் மட்டும் ஒரு ****ம் செய்யமுடியாது என அனைவருக்கும் தெரியும்..இருந்தாலும்.சுகத்தை பங்கிடும் போது இரட்டிப்பாவதும்..துக்கத்தை பகிரும் போது குறைவதும் உண்டு. அதுபோலத்தான்..மனத்துயரை பகிர்ந்துக் கொள்ளவே அப்பதிவுகள் என்பதை கோவி புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஆகவே..கோவியின் பதிவை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

18 comments:

இயற்கை நேசி|Oruni said...

வழிமொழிகிறேன். அத்தனையும் உண்மை!

கோவி, அந்த காணொளி பார்த்துவிட்டு அதனை எப்படி கையாள்வது என்ற நிலையில் அந்தப் பதிவினை இட்டிருக்கக் கூடுமோ என்று எண்ணச் செய்தது...

நிகழ்காலத்தில்... said...

கோவி.கண்ணன் அவர்களின் பதிவை நான் இப்படி பார்க்கவில்லை,

காணொளி பார்த்த விரக்தி, செய்ய இயலுவது எதுவுமில்லை என்கிற நிலையில் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.

வாழ்த்துக்கள் நண்பரே

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி
இயற்கை நேசி|Oruni

T.V.ராதாகிருஷ்ணன் said...

///நிகழ்காலத்தில்... said...
கோவி.கண்ணன் அவர்களின் பதிவை நான் இப்படி பார்க்கவில்லை,

காணொளி பார்த்த விரக்தி, செய்ய இயலுவது எதுவுமில்லை என்கிற நிலையில் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.

வாழ்த்துக்கள் நண்பரே///

:-)))

கே.பாலமுருகன் said...

இணைய வளர்ச்சி தனது எல்லையை இன்று பலமடங்கு விரிவாக்கியுள்ளது. ஊடகத்தின் குரலைவிட இனையத்தின் குரல் பல நாடுகளை எல்லைகளைக் கடந்து பயணிக்கின்றன.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி
கே.பாலமுருகன்

பீர் | Peer said...

கோவியார் அந்த பொருள்பட சொல்லியிருக்க மாட்டார் என நம்புகிறேன். அது விரக்தியின் வெளிப்பாடாகப் படுகிறது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

///பீர் | Peer said...
கோவியார் அந்த பொருள்பட சொல்லியிருக்க மாட்டார் என நம்புகிறேன். அது விரக்தியின் வெளிப்பாடாகப் படுகிறது.///
விரக்தியாய் இருந்தாலும்..சில வார்த்தைகளை அவர் உபயோகித்திருக்க வேண்டாம் என்றே தோன்றுகிறது

கோவி.கண்ணன் said...

//விரக்தியாய் இருந்தாலும்..சில வார்த்தைகளை அவர் உபயோகித்திருக்க வேண்டாம் என்றே தோன்றுகிறது//

திட்டுவதுன்னு முடிவு செய்துவிட்டால் டிசண்ட் இன்டிசண்ட் எல்லாம் பார்க்கக் கூடாது. அதுல பெண்கள் பற்றி ஏதேனும் தவறாக சொல்லாமல் (உதாரணத்திற்கு தே..பையன் போன்ற வசையாடல்களை பயன்படுத்தாமல்) திட்டலாம்.

ஷூ போட்டுக் கொண்டு ஒருவர் காலை எவராச்சும் மிதித்தால், மிதிபட்டவர் 'பகவானே இது என்ன சோதனைன்னு' சொல்லமாட்டர்.

'எருமை மாடா நீ அறிவு இருக்கா...' ன்னு தானே கேட்பாங்க.

வசைச் சொற்கள் ஆற்றாமையின் குறியீடுகள். அதிலும் ஆணியம் புகுந்து பிறப்பை இழிவு செய்வதாகச் சொல்லி (மேலே சொன்ன அதே உதாரணம்) பெண்களைத் தான் வசைகிறார்கள். நான் பயன்படுத்திய 'மயிர்' என்கிற வசைச் சொல், ஒரு அஃறிணை தான் என்றாலும் படு டிசண்ட்.

:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// கோவி.கண்ணன் said...
'மயிர்' என்கிற வசைச் சொல், ஒரு அஃறிணை தான் என்றாலும் படு டிசண்ட்.///

:-(((

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இவ்வளவு தூரம் சிங்கள வெறியர்களுக்கு நம் வரிப்பணத்தில் ஆயுதம் அனுப்பி நம் தமிழர்களை படுகொலை செய்த காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் எம்.பிக்களை அள்ளிக் கொடுத்து அரியனை ஏற்றிய தமிழக மக்களை, ஒரு சாராரை எண்ணி வெளிப்பட்ட சீற்றமாகவே கருதுகிறேன்.

வெளிப்படையான விரக்திதான்!

அது சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தும்,

சிலருக்கு கவலை ஏற்படுத்தும்,

சிலருக்கு சோகத்தை ஏற்படுத்தும்,

சிலருக்கு நகைச்சுவையை ஏற்படுத்தும்,

சிலருக்கு வயித்தெறிச்சலை ஏற்படுத்தும்.

எல்லாம் பார்வையில் தான் இருக்கிறது!

சொல் ஒன்று அர்த்தங்கள் ஆயிரம்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said...
ஒரு சாராரை எண்ணி வெளிப்பட்ட சீற்றமாகவே கருதுகிறேன்.//


அந்த சாரார் மேல் ஏற்பட்டுள்ள வெறுப்பை..பதிவிடுவோர் மேல் காட்டுவது போல சாடி இருப்பது கண்டிக்கதக்கதே.

சி.கருணாகரசு said...

..இருந்தாலும்.சுகத்தை பங்கிடும் போது இரட்டிப்பாவதும்..துக்கத்தை பகிரும் போது குறைவதும் உண்டு. அதுபோலத்தான்..மனத்துயரை பகிர்ந்துக் கொள்ளவே அப்பதிவுகள் என்பதை கோவி புரிந்துக் கொள்ள வேண்டும்.//

கோவி கண்ணன் நண்பராக இருந்தாலும்............

உணர்வுகளுக்கு மதிப்பளித்து அது போன்ற பதிவை தவிர்த்திருக்கலாம்.
அடுத்து...
"வீட்டில் நம் தம்பியின் காலையோ தங்கையின் காலையோ... அப்பா அம்மா காலையோ தெரியாமல் மிதித்து விட்டாலோ...அல்லது அவர்கள் நம் காலை மிதித்து விட்டாலோ, கோவி சொன்னது போல் திட்டமுடியுமா?" என்பதே என் கேள்வி.

கோவி.கண்ணன் said...

//உணர்வுகளுக்கு மதிப்பளித்து அது போன்ற பதிவை தவிர்த்திருக்கலாம்.
அடுத்து...
"வீட்டில் நம் தம்பியின் காலையோ தங்கையின் காலையோ... அப்பா அம்மா காலையோ தெரியாமல் மிதித்து விட்டாலோ...அல்லது அவர்கள் நம் காலை மிதித்து விட்டாலோ, கோவி சொன்னது போல் திட்டமுடியுமா?" என்பதே என் கேள்வி.//

எட்டப்பனும் கட்டபொம்மனுக்கு உறவுக்ககரன் தான், அவனுக்கு (கட்டபொம்மன் சமூகத்தில்)என்ன மரியாதை கொடுக்கப்படுகிறது ?

உறவு, சொந்தம், வாரிசு அவர்களின் வரும் காலமென்று பார்த்துதான் அரசியல்வாதிகள் தன்னல, குடும்ப நல அரசியல் நடத்துகிறார்கள். போலீஸ்காரன் அடிப்பதில், சுட்டுக் கொள்வதில் ரத்தம் சிந்துவதைப் பார்த்து துடிக்கும் ரவுடியின் தாய், அவன் ரவுடியாக மாறும் போதே செருப்பால் அடித்து திருத்தி இருந்துதால் போலிஸ்காரன் ஏன் அடிக்கப் போகிறான்.

தாய்,தந்தை,வாரிசு செண்டிமெண்டில் தான் நம் பொது சமூகத்தை நாசம் செய்கிறோம்/செய்கிறார்கள்

கோவி.கண்ணன் said...

//"வீட்டில் நம் தம்பியின் காலையோ தங்கையின் காலையோ... அப்பா அம்மா காலையோ தெரியாமல் மிதித்து விட்டாலோ...அல்லது அவர்கள் நம் காலை மிதித்து விட்டாலோ, கோவி சொன்னது போல் திட்டமுடியுமா?" என்பதே என் கேள்வி.//

காலை நசுக்குவது ஒரு உதாரணம் தான் சொன்னேன். ஆனால் நசுக்கப்படுவது கால் அல்ல, விதை,உயிர்நிலை அந்த நிலையில் நசுக்குபவர் யார் என்றாலும் பொறுமை காட்டுவிங்களா ?

ஆற்றாமையை வெளிப்படுத்தும் ஒரு சொல்லே சுடுகிறதென்றால், சுடலையில் உயிரோடு கொளுத்தப்படுபவர்களின் நிலை ? அவன் என்ன என்ன வசைச் சொற்களள இந்திய நாட்டுக்கு எதிராக பயன்படுத்தி இருப்பானோ ? சுடப்பட்டவர்களில் போராளிகள் மட்டுமே இல்லை போராளிகள் என்று சந்தேகிப்பட்டர்வளும் இருக்கிறார்கள் என்பதையும் பாருங்கள், ஒரு உயிரைக் காப்பபற்ற நாம் துடிக்கிறோம். அங்கு நிமிட நேரத்தில் 100க் கணக்ககனோர் உடல் நிலை சீராக இருந்தவர்கள் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இழவுவீட்டில் ஒப்பாறி வைக்க யாரிட்ம் அனுமதி பெறவேண்டும், உயிர் கொலையின் கடைசி மூச்சின் ஈன்ஸ்வரத்தில் சப்தஸ்வரம் மட்டும் தான் கேட்கவேண்டும் என்பது என்ன எதிர்பார்ப்பு ?

Jawahar said...

உணர்ச்சி வசப்படும் போது ஆரோக்யமான முடிவுகள் எடுக்க முடியாது. உணர்ச்சிப் பூர்வமாக ஒன்றைப் பார்க்கிறபோது அதிலிருக்கிற உண்மை புரியாது. இதைத்தான் நான் உங்களுக்கும், கண்ணன் அவர்களுக்கும் தெரிவித்துக்கொள்ள விழைகிறேன்.

http://kgjawarlal.wordpress.com

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி
சி.கருணாகரசு
Jawarlal

T.V.ராதாகிருஷ்ணன் said...

கோவி..பிரச்னையை திசை திருப்புகிறார்..நான் சொல்வது நீ பதிவிடுவதால் ஒரு ****ம் ஆகப்போவதில்லை என பதிவர்களைச் சொல்வதுபோல அமைந்த வார்த்தைகளையையே