Sunday, March 7, 2010

சட்டம் யார் பக்கம்..

சட்டம் ஒரு இருட்டறை..அதில் வக்கீல்களின் வாதம் விளக்கு ..என்றார் அண்ணா..

உண்மையில்..இந்த சட்டங்களை நினைத்தால் சில சமயம் சிரிப்புத்தான் வருகிறது.

உதாரணமாக..ஒரு கொலை நடக்கிறது..கொலையாளி என காவல்துறை ஒருவரை கைதி செய்கிறது.அவர்மேல் வழக்குப் பதிவு செய்து..நீதிமன்றத்தில் வழக்கு போடப் படுகிறது.குற்றவாளி ஜாமீனில் வெளிவருகிறார்..வழக்கு..குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் வாய்தா..வாய்தா..என வருடக்கணக்கில் நடக்கிறது.இதற்கிடையே..குற்றம் சாட்டப்பட்டவர்..தன் மீதுள்ள குற்றப் பத்திரிகையின் நகல் ஆங்கிலத்தில் உள்ளது..அதை தனக்குத் தெரிந்த தமிழில் தர வேண்டும் என்கிறார்.நீதிமன்றமும் அதற்கான உத்தரவை பிறப்பிக்கிறது. ஆயிரக்கணக்கான பக்கங்களை மொழிபெயர்க்க மொழிபெயர்ப்பாளர்கள் நியமிக்கப் படுகின்றனர்.(இவர்களது வக்கீல்களுக்கும் ஆங்கிலம் தெரியாதா? இது நாம்) அதற்கு ஆறுமாதங்கள் குறைந்தது ஆகிறது.

இதற்கிடையே..இந்த மாநிலத்தில் வழக்கு நடந்தால்..எனக்கு நேர்மையான தீர்ப்பு கிடைக்காது..ஆகவே..வேறு மாநிலத்திற்கு என் வழக்கை மாற்ற வேண்டும் என மனு கொடுக்கப் படுகிறது.(இங்கு எனக்குப் புரியாதது..வேறு மாநிலத்திற்கு மாற்றினாலும்..வாதியின் வக்கீல் வாதிக்காகவும்..பிரதிவாதியின் வக்கீல் பிரதிவாதிக்காகவும் தானே பேசப் போகிறார்கள்.)பின் நியாயம் கிடைக்காது என ஏன் சொல்லப் படுகிறது? இவர்களுக்கு அப்போது சம்பந்தப்பட்ட மாநில நீதிபதியின் மீது நம்பிக்கையில்லையா? அப்படியானால் அது condemn of court இல்லையா?

அதற்கேற்றாற் போல மாற்றப்பட்ட வழக்கு..அந்த மாநில மொழியில் மீண்டும் மொழி பெயர்க்கப் படுகிறது..ஆரம்பித்த இடத்திலேயே மீண்டும்..

இதுதான் இப்படி என்றால்..ஒரு வழக்கு மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப் பட்டதும்..உயர் நீதி மன்றத்தில் மேல் முறையீடு..பின் உயர் நீதி மன்ற பென்ச், பின் உச்ச நீதி மன்றம், பின் உச்ச நீதி மன்ற பென்ச்....தவறு செய்பவரை இதற்குள் இயற்கை அழைத்துக் கொள்கிறது.

மேல்..மேல் நீதிமன்றம் என்றால்..நீதிபதிகள் தீர்ப்புகள் ஒரே மாதிரி இருப்பதில்லையா?

கொலை வழக்குதான் என்றில்லை..அரசியல்வாதிகள் மீது போடப்படும்..சொத்துக் குவிப்பு வழக்குகளும் இப்படியே..

இதையெல்லாம் பார்த்தால்..பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில்லை..அப்படியே கிடைத்தாலும் அது காலம் கடந்த தீர்ப்பாய் தான் இருக்கும்..

ஏன் இப்படி..தவறு எங்கே..

சட்டம் கூட வளையும் தன்மைத்து போலும்..படை பலமும்..பண பலமும் இருந்தால்..என்ன விலை..என்று கூட கேட்கலாம் போல ..

16 comments:

vidivelli said...

நல்லாயிருக்குங்க............

!!என்ன நம்ம பக்கத்துக்கு காண கிடைகேல்ல...........!!

vasu balaji said...

:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி vidivelli

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Bala

மங்குனி அமைச்சர் said...

//சட்டம் கூட வளையும் தன்மைத்து போலும்..படை பலமும்..பண பலமும் இருந்தால்..என்ன விலை..என்று கூட கேட்கலாம் போல ..//

பன்ச் டயலாக் சார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மங்குனி அமைச்சர் said...
பன்ச் டயலாக் சார்//

நன்றி மங்குனி அமைச்சர்

இராகவன் நைஜிரியா said...

சட்டம் பற்றி ஒன்றுமே சொல்லமுடிவதில்லை.

மனிதனால் இயற்றப் பட்டது... அவர்களுக்கு ஏற்ற மாதிரி வளைகின்றது..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி இராகவன் நைஜிரியா

"உழவன்" "Uzhavan" said...

நீதி விற்பனை செய்யப்படுகின்றன.. அவ்வளவுதான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Uzhavan

goma said...

இன்னொரு வசனம்:
ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்.....[ஹி ஹி ஹி ]ஆனால் ஒரு நிரபராதிகூட தண்டிக்கப் பட்டுவிடக் கூடாது...ஆர்டர் ஆர்டர் ஆர்டர்....ஆ...ர்ர்ர்ர்...டர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Goma

நசரேயன் said...

சட்டம் சட்டை பையிலே

கோவி.கண்ணன் said...

:)

சட்டம் ஓட்டையாகவோ சல்லடையாகவோ இருந்துவிட்டால் கூட நான் கவலைப்படுவதில்லை. ஆனால் குற்றமற்றவர்களுக்கும் தண்டனை கிடைப்பது என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கோவி..
கண்ணுக்கு தெரிந்து..குற்றம் புரிந்தவர்கள்..சட்டத்தை வளைத்து தப்பித்துக் கொள்கிறார்களே..அதைக் குறித்தே பதிவு