Thursday, January 6, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (7-1-11)

ஆங்கிலேயர்கள் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் இந்தியாவில் உப்புக்கு வரி விதித்தார்கள்.அதை எதிர்த்து 1930 ஆம் ஆண்டு காந்தி உப்பு சத்தியாகிரகத்தை தண்டி யாத்திரை மூலம் மேற்கொண்டார்.ஆனால்..பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகள்..தங்கள் நாட்டு சாலைகளில், தண்டவாளங்களில் உறைந்து கிடக்கும் ஐஸ் கட்டிகளை உடைக்க இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதிக்கு ஒப்பந்தம் செய்துள்ளன.

2)புத்தாண்டு தினத்தன்று திருப்பதி ஏழுமலியான் கோயிலில் ஒரே நாளில் உண்டியல் வசூல் 3.8 கோடியாம்.பழனியிலோ முதல் இரண்டு நாட்கள் வசூல் ஒரு கோடியாம்.இதென்ன பிரமாதம்..தி.மு.க., தலைவர்கள் கூட்டத்தில் ஒரே நிமிஷத்தில் 44 லட்சம் வசூல் என்கிறார் ஒரு உடன்பிறப்பு.

3)சென்ற ஆண்டு டாஸ்மாக் விற்பனை 16445 கோடி ரூபாய்கள்..வாழ்க தமிழக குடிமகன்கள்.கலைஞர் ஒரு ரூபாய்க்கு அரிசி போட இவங்களும் காரணம் தானே!

4)யுனெஸ்கோ அறிக்கை ஒன்றின்படி 18 வயதிற்கு உட்பட்ட விலைமாதர்கள் இந்தியாவில் 4.5 லட்சம் பேர் உள்ளனராம்.இதே வயதில் அமெரிக்காவில் 3 லட்சம் பேர் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளனராம்.(ஆமாம்..40 கோடி மக்கள் தொகை நாட்டில் 3 லட்சம் 118 கோடி மக்கள் தொகை நாட்டில் 4.5 லட்சம் குறைவுதான் என்கிறார் உல்லாச நபர் ஒருவர்)

5)ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட 163 கோடி செலவில் பல கூடுதல் சலுகைகளை முதல்வர் அறிவித்துள்ளார்.இதனால் 2 லட்சத்து 73 ஆயிரம் பேர் பயன் பெறுவர்..(தேர்தல் அன்று வாக்குச்சாவடியில் ஆசிரியர்கள் உற்சாகமாக வேலை செய்வார்கள் என நம்புவோமாக)

6)சானிட்டரி நாப்கின் பயன்படுத்த முடியாததால் 40 விழுக்காடு கிராமப்புற இளம் பெண்கள் நோய் தொற்றினால் பாதிக்கப் படுகின்றனர்.அவர்களை பாதுகாக்க நாப்கினை தமிழக அரசு கொள்முதல் செய்து இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது.(அதற்காக டெண்டர் விடப்படுமா? அல்லது ஏலமா? அல்லது முதலில் வருபவர்க்கு முன்னுரிமையா எனக் கேட்கிறார் ஒரு அரசியல்வாதி)

7)தமிழ்நாட்டில் கடந்த 2008ஆம் ஆண்டு 512 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.கடந்த ஆண்டு 1174 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.நாடு முழுதும் கடந்த ஆண்டு 17000 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.

8)எம்.பி.க்கள் படியையெல்லாம் உயர்த்திய மத்திய அரசு..வருஷத்தில் 100 நாட்கள் கண்டிப்பாக வேலை தரும் திட்டத்தில்..ஒரு நாள் கூலியாக 100 ரூபாய் கொடுப்பதை உயர்த்தச் சொல்லி சோனியா பிரதமரிடம் கேட்டுக் கொண்டும்..கை விரித்து விட்டாராம் பிரதமர்.(ஏற்கனவே..உணவுப் பொருள் கெட்டாலும் கெடட்டும்..இலவசமாக தரமுடியாது என்ற ஏழைப்பங்காளன் தானே அவர்)

9) 2011ல் நான் தான் முதல்வர் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம்..சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் கதையாக..இப்போது 2016ல் நான் தான் முதல்வர் எனச் சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர்.

10) நாங்கள் தனித்து நின்றால் 50 இடங்களில் வெல்வோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் சின்னக் கட்சிகள்..இரண்டு, மூன்று சேர்ந்து கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிக்கலாமே..அதை விடுத்து ஏன் கோபாலபுரத்திற்கும்..போயஸ் தோட்டத்திற்கும் மாறி மாறி நடக்க வேண்டும். :)))

12 comments:

Chitra said...

இதெல்லாம் trailer ..... மெயின் பிக்சர் , தேர்தல் வரும் போது நடக்கும் பாருங்க.... அவ்வ்வ்.....

Philosophy Prabhakaran said...

// நாங்கள் தனித்து நின்றால் 50 இடங்களில் வெல்வோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் சின்னக் கட்சிகள்..இரண்டு, மூன்று சேர்ந்து கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிக்கலாமே..அதை விடுத்து ஏன் கோபாலபுரத்திற்கும்..போயஸ் தோட்டத்திற்கும் மாறி மாறி நடக்க வேண்டும். //

ஆட்சியைப் பிடிப்பதாவது... அதெல்லாம் சாத்தியமே இல்லை...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சித்ரா

T.V.ராதாகிருஷ்ணன் said...

என்ன பிரபா..நீங்க வேற காமெடி பண்ணிக்கிட்டு..
அப்படிச் சொல்றவங்களுக்கே அது சாத்தியமில்லைன்னு தெரியாதா

Ashok D said...

2. எட்டு அடுக்கு பாதுகாப்பு இருந்தும் திருப்பதி குடைய அபேஸ் பண்ணிட்டாங்கலாம்.. அதன் மதிப்பு கோடிதான்

நாப்கின் விஷயம் மனச பாதிக்குது :(

இராகவன் நைஜிரியா said...

// ஆனால்..பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகள்..தங்கள் நாட்டு சாலைகளில், தண்டவாளங்களில் உறைந்து கிடக்கும் ஐஸ் கட்டிகளை உடைக்க இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதிக்கு ஒப்பந்தம் செய்துள்ளன.//

இதை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு.. தமிழக உப்பளங்களுக்கு கிடைக்குமா? எப்போதும் போல் குஜராத் இதை தட்டி செல்லுமா என பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

// ஒரு நாள் கூலியாக 100 ரூபாய் கொடுப்பதை உயர்த்தச் சொல்லி சோனியா பிரதமரிடம் கேட்டுக் கொண்டும்..கை விரித்து விட்டாராம் முதல்வர் //

கை விரித்து விட்டாராம் பிரதமர் என்று இருக்க வேண்டும் என நினைக்கின்றேன்.

// சென்ற ஆண்டு டாஸ்மாக் விற்பனை 16445 கோடி ரூபாய்கள்..//

வருத்தமான செய்தி ஐயா. அரசாங்கத்துக்கு வருமானம் வருகின்றது, இலவசதிட்டங்கள் நிறைவேற்ற பணம் கிடைக்கின்றது.. ஆனால் பல குடும்பங்கள் அழிகின்றன.

// அதை விடுத்து ஏன் கோபாலபுரத்திற்கும்..போயஸ் தோட்டத்திற்கும் மாறி மாறி நடக்க வேண்டும். :))) //

நடப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதுன்னு அவங்க மருத்துவர் சொல்லியிருப்பாரோ??

vasu balaji said...

//சோனியா பிரதமரிடம் கேட்டுக் கொண்டும்..கை விரித்து விட்டாராம் முதல்வர்.(//

பிரதமர் இல்லையோ:). சுண்டல் காரசாரம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி D.R.Ashok

T.V.ராதாகிருஷ்ணன் said...

//
இராகவன் நைஜிரியா said ஒரு நாள் கூலியாக 100 ரூபாய் கொடுப்பதை உயர்த்தச் சொல்லி சோனியா பிரதமரிடம் கேட்டுக் கொண்டும்..கை விரித்து விட்டாராம் முதல்வர் //

கை விரித்து விட்டாராம் பிரதமர் என்று இருக்க வேண்டும் என நினைக்கின்றேன்//

வருகைக்கும்..தவறை சுட்டிக்காட்டியமைக்கும் நன்றி இராகவன்.
பிழை திருத்தப்பட்டது

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Bala
பிழை திருத்தப்பட்டது

Unknown said...

2011 ல ஆட்சிய பிடிப்போன்னு சவால விட்டவர்களை பற்றிய உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன் ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

எழுதிட்டாப் போச்சு