Wednesday, January 19, 2011

தமிழ்மணத்திற்கும்..மற்றும் விருது பெறாதவர்களுக்கும்

தமிழ்மணம் 2010க்கான விருது பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்
அதே நேரம் தங்கள் இடுகை..விருது பெற்ற இடுகையை விடச் சிறந்தது என்றோ..தங்களுக்கு விருது கிடைக்க வில்லை என்றோ மனம் தளர வேண்டாம்.
நீங்கள் பதிவுலகில் நுழைகையில் விருதை எதிர்பார்த்தா நுழைந்தீர்கள்?
உங்களது எண்ணங்களுக்கு, கற்பனை வளத்திற்கு வடிகாலாய் இருக்கும் என்றே வலைப்பூ ஆரம்பித்து இடுகை இடத் தொடங்குகிறீர்கள்.நாளாக ஆக ஆக..பிறருக்கு கிடைக்கும் ஹிட்ஸ்,பின்னூட்டங்கள், சூடான இடுகை, வாசகர் பரிந்துரை ..இவற்றில் அதிகமாக நம் இடுகையும் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம்.
தமிழ்மணத்தை பொறுத்து உங்களையும் சேர்த்து ஏழு நபர்கள் ஆதரவாக வாக்களித்தால் இடுகை வாசகர் பரிந்துரையில் வந்துவிடும்.இதற்கு உங்களுக்கு நட்பு வட்டம் பெரியதாய் இருக்க வேண்டும்.என் இடுகைகள் பல 5 அல்லது 6 வாக்குகள் பெற்று பரிந்துரையில் இடம் பெறாமல் பலமுறை போனதுண்டு.அதற்காக நான் வருந்தியதில்லை..அதற்கு பதிலாக பல இடுகைகள் நூற்றுகணக்கானோர் படிக்கின்றனர் என்ற திருப்தி எனக்கு.
நீங்களும் அந்தக் கணக்கைப் பாருங்கள் போதும்.பின் இவற்றுக்கெல்லாம் ஆசைப்பட மாட்டீர்கள்.
சமீபத்தில் தமிழ்மணம் Traffic Rank, 2010 முன்னணி இடுகை இவற்றைப் பற்றி வெளியிடுவதால் பதிவர்களிடையே போட்டி அதிகமாகி, சமீப காலங்களில் தரமான இடுகைகள் பல வர ஆரம்பித்துள்ளது ஒரு ஆரோக்கிய மாற்றம்.
இப்போது தலைப்புக்கு வருவோம்..
போட்டிக்கு கிட்டத்தட்ட 1500க்கும் மேலான இடுகைகள் பரிந்துரைக்கப் பட்டன.இதை அனைத்தையும் படித்துப் பார்த்தா பதிவர்கள் முதல் கட்டத்தில் வாக்களிக்கப் போகிறார்கள்.கண்டிப்பாக இல்லை.அப்படி யாரேனும் சொல்வாரானால் அது ஜமக்காளத்தில் வடி கட்டிய பொய்யாகும்.ஆகவே முதல் சுற்று வாக்கெடுப்பு கண்டிப்பாக நண்பர்களுக்குள் பண்டமாற்ரு வாக்கெடுப்பாய்தான் இருக்கும்.நீ எனக்குப் போடு..நான் உனக்குப் போடுகிறேன்..என்ற ரேஞ்சில் தான்.
இதன் மூலம் அதிக வாக்குகள் பெற்று கிட்டத்தட்ட 200 இடுகைகள் இரண்டாம் சுற்றுக்கு வருகிறது.
இங்கும் பதிவர்களும்..வாசகர்களும் (வாசகர்கள் என எவ்வளவு பேர் இருக்கப் போகிறார்கள்..பதிவர்கள் தவிர்த்து) வாக்களிக்க வேண்டும்.இதிலும் கிட்டத்தட்ட முதல் சுற்றில் வாக்களித்தவர்கள்..தங்களுக்குள் வாக்களிக்கும் சாத்தியக்கூறுகளே அதிகம்.
இதுவரை சென்ற இரண்டு ஆண்டுகளாக சிறந்த இடுகை தேர்ந்தெடுக்கப் பட்டது.
தமிழ்மணத்திற்கும்..இவை எல்லாம் தெரிந்ததால்..இவ்வாண்டு..பதிவர்கள் சிலரை நடுவர்களாக தேர்ந்தெடுத்து..பிரிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடுகைகளை..ஒரு நடுவருக்கு இரண்டு பிரிவு என ஒதுக்கி மதிப்பெண் போடச் சொல்லப் பட்டது.
உண்மையில்..எனக்கு அப்படி வந்த இரு பிரிவுகளை படித்து நான் அதிக மதிப்பெண்கள் போட்ட நான்கு இடுகைகள் தரம் வாய்ந்தவை.இதுநாள் வரை அப்பதிவர்கள் இடுகைகளை நான் தமிழ் மணத்தில் படித்ததில்லை.முதல் இரண்டு சுற்றில் அவ்விடுகைகளுக்கு நான் வாக்களிக்க வில்லை.ஆனால் தரமான அவற்றைத் தேர்ந்தெடுத்தேன்.இந்தப் பிரிவுகளில் எனக்கு வேண்டிய நால்வரின் இடுகைகளும் இருந்தது.என் மனசாட்சிப் படி..நான் தேர்ந்தெடுத்தேன்.நட்புக்கு அந்த இடத்தில் இடம் இல்லை..இருந்திருந்தால் நான் நடுவராய் இருக்கும் அருகதையற்றவன் ஆகி விடுகிறேன்.ஆகவே நான் சொல்ல வருவது இந்த நடுவர் மூவ் தமிழ்மணத்தின் புத்திசாலித்தனமான மூவ்

இனி தமிழ்மணத்திற்கு..
என்னை நடுவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி.
மொத்தமாக வருடம் முழுதுமான இடுகைகளை பரிந்துரைக்கச் செய்து 1500க்கும் மேற்பட்ட இடுகைகளுக்கு படித்து

வாக்களிக்கச்

சொல்வது கண்டிப்பாக இயலாத காரணம்.இனி காலாண்டுக்கு ஒரு முறை இடுகையை பரிந்துரை செய்யச் சொல்லி..அவ்விடுகைகளை பதிவர்கள் எப்போது வேண்டுமானாலும் படித்து வாக்களிக்கட்டும் என ஏற்பாடு செய்யலாம்.நான்கு காலாண்டு முடிந்ததும் அதிக வாக்குகள் பெற்ற இடுகையை நடுவர் குழுக்கள் பரிசீலிக்கலாம்.
அல்லது..இப்போது traffic rank இருப்பது போல இடுகையை தமிழ்மணம் நிர்வாகமே தேர்ந்தெடுக்கலாம்.
அப்போது பிரச்னை வராது.
விருது தரும் நிறுவனமே யாருக்கு விருது தருவது எனத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெறுவது சிறந்தது தானே.

டிஸ்கி- என் பதிவு ஒன்றும் ஐந்தில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப் பட்டு நடுவர்களால் தேர்ந்தெடுக்கப் படவில்லை.அதே போல பல மூத்த பதிவர்கள் இடுகைகளும் கடைசி சுற்றில் தேர்ந்தெடுக்கப் படவில்லை.காரணம்..அவற்றைவிட விருது பெற்ற இடுகைகள் சிறந்ததாக நடுவர்கள் பார்வையில் இருந்திருக்கலாம்.அதை நாம் குறைசொல்வதைத் தவிர்த்து ..இனி வரும் நாட்களில் போட்டிகளின் முடிவுகளை சர்ச்சைக்குள்ளாக்க வேண்டாம்.

16 comments:

நசரேயன் said...

// போல பல மூத்த பதிவர்கள் இடுகைகளும் கடைசி சுற்றில் தேர்ந்தெடுக்கப் படவில்லை//

இந்த பட்டியல்ல நீங்க என்னையும் சேத்து இருக்கீங்களா ?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஒரு வாசகர் அல்லது பதிவர் ஒரே ஒரு இடுகைக்கு மட்டுமே ஓட்டுப் போட முடியும். என்பதை விட சில வரையறைகளை வைத்து மதிப்பெண் போடலாமே தல

Philosophy Prabhakaran said...

நானும் இறுதிநிலை வரை சென்று தோல்வியடைந்தேன்... கொஞ்சம் வருத்தம் இருந்தது உங்கள் பதிவை படிக்கும் முன்பு வரை...

Philosophy Prabhakaran said...

நீங்கள் சொன்னது முற்றிலும் சரிதான் முதல் இரண்டு கட்டங்களில் பண்டமாற்று முறையிலேயே தேர்வு நடந்தது... மூன்றாவது கட்டத்தில்தான் திறமை பேசுகிறது...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சிலருக்கு ஒவ்வொரு இடுகைக்கும் வரும் சராசரி ஹிட்ஸ்களின் எண்ணிக்கையை விட அவர்களுக்கு இருக்கும் பிந்தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகம். இது கொஞ்சம் நெருடலாகவே இருக்கிறது.

உங்களைவிட புருனோவைவிட நேற்று வந்த பலருக்கும் பிந்தொடர்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களின் சராசரி ஹிட் குறைவாகவே இருக்கிறது. அந்த அதிகப் படியான பிந்தொடர்பவர்கள் அதாவது படிக்கவே வராமல் பிந்தொடர மட்டும் செய்பவர்கள், அல்ல்து அவர்தம் கணக்குகள் ஓட்டுக்களுக்கு மட்டும் வர வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. எனவே ஓட்டுப்போடுதல் அல்லது வாங்குதல் என்பது அதிக மொபைல் எண் வைத்திருப்பவர்களுக்கு மிக எளிதில் சாத்தியமாகிறது. ஒவ்வொரு எண் மூலமாகவும் இணையத்திற்குள் வந்து ஒவ்வொரு கணக்கின் மூலமாகவும் ஒரு ஓட்டு. தவிரவும் சில தொழிற்நுட்பவாதிகள் தங்கள் திறமைமூலமாகவும் இது சாத்தியமாகிறது.

ஹேமா said...

விளக்கம் தெளிவாயிருக்கு ஐயா.ஆனாலும் சில மனவருத்தங்களைத் தவிர்க்கமுடியாது !

suneel krishnan said...

அன்றாட வேலைகளுக்கு ஊடே தினம் பதிவு இடும் வெகு சிலரில் நீங்களும் ஒருவர் .நடுவர் வாய்ப்பு என்பது நிச்சயம் பெருமைக்குரிய விஷயம் .வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வீராங்கன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Prabakaran

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி dr suneel krishnan

T.V.ராதாகிருஷ்ணன் said...

பின்தொடர்பவர்கள் அனைவரும் நம் அனைத்து இடுகைகளையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை.நாமே அப்படிச் செய்கிறோமா சொல்லுங்கள் வீராங்கன்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//பின்தொடர்பவர்கள் அனைவரும் நம் அனைத்து இடுகைகளையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை.நாமே அப்படிச் செய்கிறோமா சொல்லுங்கள் வீராங்கன் //

அவசியம் இல்லை என்பது உண்மைதான் தல., ஆனால் டாஸ்போர்டில் தெரியும் சிலவரிகளையும் தலைப்புகளையும் வைத்து பெரும்பாலானவர்கள் வலைப்பூக்களை மேய்கிறார்கள். எல்லா இடுகையும் ஒருமுறையேனும் அன்றைய தினம் இணையத்தில் சுற்றுப்பயணம் செய்த அனைவரும் வருவார்கள் என்பது என் எண்ணம்.

ஈரோடு கதிர் said...

முதல் இரண்டு கட்டத்தேர்வு குறித்து நீங்கள் சொன்னதை வழிமொழிகிறேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஈரோடு கதிர்