(தலைவன் அருகில் இல்லை.வேறு மொழி வழங்கும் வடநாட்டில் அ வன் இருப்பினும் அவன் இருக்கும் இடத்திலேயே நான் இருக்க விரும்புகிறேன்....என தன் நெஞ்சினிடத்தில் உரைப்பதுபோல தோழியிடம் தலைவி கூறுகிறாள்)
பாடியவர்: மாமூலனார் (பாலைத் திணை)
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும்
பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி,
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம்; ஆங்கே
எழு, இனி வாழி, என் நெஞ்சே! - முனாது
பாடியவர்: மாமூலனார் (பாலைத் திணை)
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும்
பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி,
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம்; ஆங்கே
எழு, இனி வாழி, என் நெஞ்சே! - முனாது
குல்லைக்கண்ணி வடுகர் முனையது
வல்வேல் கட்டி நல்நாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்,
வழிபடல் சூழ்ந்திசின், அவருடைய நாட்டே!
_மாமூலனார்
செய்யுள் உரை-
முன்கையில் அணிந்துள்ள வளையல்கள் அவிழ்ந்து விழுமாறு ஒவ்வொரு நாளும் உறங்காமல்,அழுத கண்களுடன் புலம்பி,இவ்விடத்திலேயே வாழ்ந்து வருவதில் இருந்து இப்போதே தப்புவோம் .அதற்காக இப்போதே கிளம்பச் சொல்லும் என் நெஞ்சே நீ வாழ்க.குல்லை மலரை தலையில் சூடிய வடுகரின் பகைப்புலதே வலிய வேலினை உடைய கட்டி என்பவனின் நல்ல நாட்டுக்கு அப்பால் வேற்று மொழி புழங்கும் நாட்டில் அவர் இருப்பினும்.
No comments:
Post a Comment