குறிஞ்சி - தோழி தலைவனிடம் கூறுதல்
செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பிற் செங்கோட்டி யானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.
(தோழி கையுறை மறுத்தது. - இதை எழுதியவர் -திப்புத்தோளார்)
குறிஞ்சித் திணை...(மலையும், மலை சார் இடமும்)
(குறிப்பு-
தலைவியை அணுக முதலில் அவளது தோழியை தன் வசம் கொணர்தல் அவசியம் என உணர்ந்த தலைவன், தோழியிடம் செங்காந்தள் பூவைக் கொடுத்து, தலைவியைக் காணமுடியாத தனது மனக்குறையைத் தெரிவிக்கையில், தோழியோ, இங்கு மலையில் மலையைக்காட்டிலும் காந்தள் பூக்கள் அதிகம் உள்ளன என்கிறாளாம்).இதை குறிப்பில் சொன்னாலும்...
செய்யுளின் உரை:-
போர்க்களம் குருதியால் சிவக்கும்படி, பகைவர்களைக் கொன்று ஒழித்த நேரான/ வளைவுகளற்ற அம்பினையும், குருதி படிந்த சிவந்த தந்தங்களை உடைய யானையையும், இடையில் உழலும் வாளையும் கொண்ட முருகனுடைய மலையிலே செக்கச் சிவந்த காந்தள் மலர்கள் கொத்துக் கொத்தாய்ப் பூத்து உள்ளன.
என்பதே ஆகும்.
3 comments:
அருமை...
நன்றி...
நன்றி தனபாலன்
Post a Comment