இளங்கோ குமணன்
----------------------------------
ஒரு எழுத்தாளர்/இயக்குனர் படைப்புகள் பற்றி, அந்த எழுத்தாளரோ/இயக்குனரோ பேசக்கூடாது.அவர்கள் படைப்புகள் பேச வேண்டும் என்பார் "இளங்கோ" குமணன்
இந்த "இளங்கோ" குமணன் தமிழ் நாடக உலகின் பெருமையை பரப்ப வந்த தாமதமான வரவு என்றாலும், முக்கியமான வரவாகும்
எஸ் .எஸ் ஈன்டெர்னேஷனல் (லைவ்) (S S International (live) என்னும் விளம்பர நிறுவனம் 2014ல் , தங்கள் முதல் படைப்பாக கல்கி அவர்களின் "பொன்னியின் செல்வன்" நாடகத்தை Magic Lantern குழ்வினரை வைத்து அரங்கேற்றினர்.
80க்கும் மேற்படட் கலைஞர்கள், அரங்க அமைப்பு தோட்டா தரணி.பால் ஜேகப் அவர்களின் நேரடி இசை என நான்கு மணி நாடகமாக இருந்தது இது.
மேடையிலேயே உண்மையான வாள் சண்டை காட்டப்பட்டது.
நாடகக் காவலர் மனோகருக்கு இணையான அளவிற்கு பிரம்மாண்டத்தை இவர்கள் மேடையில் காட்டினர் என்றால் மிகையில்லை.
தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும், சிங்கப்பூரிலும் இந்நாடகம் நடத்தப்பட்டது.
திரைப்பட பிரபலங்கள், பசுபதி, குமரவேள் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.
குமரவேல் நாடகமாக்கம் செய்திருந்த இந்நாடகத்தை லாண்டன் ப்ரவீன் இயக்கி இருந்தார்
அடுத்து இவர்களின் அரிய படைப்பாக "பாலக்காடு மணி ஐயரின்" வாழ்க்கை வரலாறு "மணியோசை" என்ற பெயரில் மேடை நாடக மாக அறங்கேறியது.இந்நாடகமும் (இதை நாடகம் என்று சொல்லலாமா? எனத் தெரியவில்லை) ஒரு புதுமைப் படைப்பாக அமைந்தது.
கர்நாடக இசைக் கலைஞர்கள், நித்யஸ்ரீ மகாதேவன்,சுதா ரகுநாதன், சௌம்யா,விஜய் சிவா, குருசரண்,அனந்தகிருஷ்ணன்,தஞ்சாவூர் குமார்,உமாசங்கர் மற்றும் பல கலைஞர்கள் இணைந்து இந்நாடகத்தில் நாடகக்கலைஞர்களாக மாறி இந்நிகழ்ச்சியை வெற்றியடைய வைத்தனர்.
இந்நாடகத்தை, எம்.ஆர்.ராஜாமணியின் எம் ஆர் ஆர் தியேட்டர்ஸிற்காக "கீழ் வானம் சிவக்கும்" என்ற நாடகத்தை எழுதித் தந்தவரும் (இந்நாடகம் பின்னர் சிவாஜி நடிக்க அதேபெயரில் வெள்ளித்திரைக்கு வந்தது), விசு அவர்களின் "அரட்டை அரங்கம்" நிகழ்ச்சியை இயக்கியவருமான "குரியகோஸ்" ரங்கா எழுதி, இயக்கி இருந்தார்.
(இவர்கள் வீட்டு ஜன்னல் பார்வை தொடரும்)

No comments:
Post a Comment