---------------------------------
எம் ஆர் ராஜாமணி
------------------------------
சிறந்த நாடக நடிகர்..இயக்குநர்.
இவர் , விசு, கிஷ்மூ ஆகியோர் சகோதரர்கள்.
ராஜாமணி, ம.பொ.சி.யின் உறவினரான செல்வராஜ் கிராமணியின் இயக்கத்தில் "தங்கத்தாய் மரகதம்" என்ற நாடகத்தில் நடித்தார்.
பின்னர்..நண்பர்கள் மௌலி, கணேஷ், நான் உடபட ஆகியோருடன் சகோதரர்கள் மூவரும் சேர்ந்து, டி கே எஸ் சகோதரர்களிடமிருந்து ' ரத்தபாசம்" நாடகத்தை அம்பத்தூரில் நடத்திட அனுமதி பெற்று மேடையேற்றினோம்.மூத்த சகோதரரானராஜாமணிக்கு நடிப்பில் அவ்வளவு நாட்டமில்லாததால் அந் நாடகத்தை இயக்கும் பொறுப்பினை ஏற்றார்.
பின்னர், விசுவின் விஸ்வசாந்தி குழுவில் நடிக்கத் தொடங்கினார். ஈஸ்வர அல்லா தேரே நாம், அவர்களுக்கு வயது வந்து விட்டது. மோடி மஸ்தான் ஆகிய நாடகங்களில் இவர் நடிப்பு பாராட்டும்படி இருந்தது.
பின்னர் எம் ஆர் ஆர் தியேட்டர்ஸ் என்னும் குழுவினை ஆரம்பித்தார்.சில நாடகங்களை மேடையேற்றினார்.அதில் குறிப்பிட வேண்டிய நாடகம் குரியகோஸ் ரங்கா எழுதிய "கீழ் வானம் சிவக்கும்" என்ற நாடகம்.இந்நாடகத்தில் இவர் ஏற்ற பாத்திரத்தை வெள்ளித்திரையில் நடிகர் திலகம் ஏற்றார்.
"அவர்களுக்கு வயது வந்துவிட்டது" நாடகத்தைப் பார்த்த இயக்குநர் சிகரம் கே பாலசந்தர், தன் தயாரிப்பான "மூன்று முடிச்சு" படத்தில் நடிக்க இவருக்கு சந்தர்ப்பம் அளித்தார்.
மோடி மஸ்தான் நாடகத்தில் காதுகேளாதவராய் நடித்து ரகளை பண்ணியவருக்கு , அந்நாடகம்"மணல் கயிறு" என்ற பெயரில் படமானபோது அதே பாத்திரத்தில் திரையிலும் நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது
"நாலு பேருக்கு நன்றி" என்ற திரைப்படத்தையும் இவர் இயக்கியுள்ளார்
காலன் இவரது முத்திறமையை வெளியிடுமுன் இவரை தன்னிடம் அழைத்துக் கொண்டான்.

No comments:
Post a Comment