-------------------------------------
நடராஜன் (கூத்தபிரான்)
------------------------------------------
1985ஆம் ஆண்டு கூத்தபிரான், மீண்டும் தனக்கு சொந்தமாக ஒரு நாடகக் குழுவினைத் தொடங்கினார்.குழுவிற்கு "நவபாரத்" என்று பெயரிட்டார்.
"நாராயண கோபாலா", "காசிக்குப் போன கணபதி" "சுபஸ்ய சீக்கிரம்" போன்ற நாடகங்களை அரங்கேற்றினார்.
பின்னர், அவரது மகன் ரத்னம், அவரது குழுவிற்கு நாடகங்களை எழுத ஆரம்பித்தார்.
"ஜேஷ்ட குமாரா", "ரூபாய் 21","உன்னால் முடியும் தாத்தா""ரோபோவின் டயரி".ஆகிய நாடகங்களை அவர் எழுதினார்.
இந்நிலையில்..தன் கலையுலக சேவையை முடித்துக் கொண்டு கூத்தபிரான் 2014ல் அமரர் ஆனார்.அந்த நாளில் கூட காலைக்காட்சி ஒன்றில் அவர் நடித்துவிட்டு வந்தது பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று.
பின், ரத்னம்..குழுவின் பெயரை , "கூத்தபிரான் நவபாரத் தியேட்டர்ஸ்" (KNT) என மாற்றினார்.தந்தையின் ஆசியுடன் ரத்னம் மேடையேற்றிய நாடகங்கள், "சொப்பனக் குழந்தை"(2015), "காளீஸ்வர பவனம்" (2016) ,சதுரங்கப் பார்வை,கிட்டப்பா கலகிட்டப்பா, ஸ்கந்தா,செல்லப்பா ஆகியவை ஆகும்.
இவற்றில் சொப்பனக் குழந்தையும், காளீஸ்வரபவனமும் 2015, 2016 சிறந்த நாடகங்களாகத் தேர்வு செய்யப்பட்டன.
ரத்னத்துடன் அவரது சகோதரர் கணேசனும், மகன் விக்னேஷ் ரத்னமும் குழுவில் நடித்து வருகின்றனர்.
இச்சமயத்தில்..கூத்தபிரானின் சிறந்த குணம் ஒன்றினை சொல்லாவிடில் இக்கட்டுரை முழுமைப் பெறாது.
விமர்சனங்களை வரவேற்பவர் அவர்.ஏதேனும் குறைகளைச் சொல்லி விமர்சனங்கள் வந்தாலும், அவை பொய்யாக இருந்தாலும் சற்றும் கோபம் அடையாமல் பதில் அளிப்பார்.
ஒருமுறை அவரது நாடகத்திற்கு ஒரு இதழ் மிகவும் சொற்ப மதிப்பெண்களை வழங்கியது.விமர்சனத்திற்கு கூத்தபிரான் நன்றி தெரிவித்ததுடன்.."எங்களது அடுத்த நாடகத்தில் குறைகளை நீக்கிவிடுகிறோம்.அது, உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இருக்கும்" என்று பதிலளித்திருந்தார்.
உபரித் தகவல்
--------------------------------
உன்னால் முடியும் தாத்தா, ரோபோவின் டயரி ஆகிய நாடகங்களில் மூன்று தலைமுறையினர் முறையே கூத்தபிரான்,அவரது மகன்கள் ரத்னம், கணேசன், பேரன் விக்னேஷ் ஆகியோர் நடித்தது எந்த நாடகக்குழுவிலும் நடந்திராத சாதனை என்றே நினைக்கின்றேன்
No comments:
Post a Comment