நடராஜன் - (கூத்தபிரான்)
கலாநிலையம் நாடகக் குழுவில் ஆல் இந்தியா ரேடியோவில் வேலை செய்து வந்த நடராஜன் என்ற இயற்பெயர் கொண்டவர் கூத்தபிரான் என்ற பெயரில் நாடகங்களில் நடித்துவந்தார் என்பதை முன்னதாகக் கூறினேன்.
ஆனால்..கூத்தபிரானின் சாதனைகள் பெரியது.அதைத் தனியாகக் கூற வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் வீட்டு ஜன்னலை எட்டிப் பார்த்தேன்,
1952ஆம் ஆண்டிலேயே தான் வசித்துவந்த டையாறில் "அடையாறு நாடக மன்றம்" என்ற குழுவினைத் தொடங்கி நாடகங்களை எழுதி, இயக்கி நடித்து வந்தார் கூத்தபிரான்
வானொலியில் பணியாற்றிய போது அப்போது வானொலி அண்ணா என்று அழைக்கப்பட்ட ரா.அய்யாசாமியுடன் பணியாற்றினார்.முழந்தைகளுக்கான "அன்னைசொல் அமிர்தம்" என்ற நாடகத்தை நடத்தினார்.குழந்தைகளுக்கான இந்நாடகம் நாடகப் போட்டியில் முதல் பரிசினை வென்றது.
சோ, காத்தாடி ராமமூர்த்தி ஆகியோர் மேடையேற்றிய பகீரதனின் "தேன்மொழியாள்" நாடகத்தில் இவர் பெரும் பங்காற்றியதுடன் அந்நாடகத்தை இயக்கவும் செய்தார்
பின்னர், கல்கியின் மீது மிகவும் பற்று கொண்ட இவர் கல்ல்கி ஃபைன் ஆர்ட்ஸ் என்ற குழுவினை ஆரம்பித்து , கல்கியின் "அமரதாரா" வீணை பவானி" "என் தெய்வம்" ஆகிய கதைகளை மேடையேற்றினார்.இந்நாடகங்களில் ஜெயஷங்கர், ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்தனர்
1961ஆம் ஆண்டு தில்லி சென்று நாடகங்களை நடத்தினார். தில்லியில் சென்னையில் இருந்து சென்று நாடகம் நடத்திய முதல் குழு இவருடையது எனலாம்.அப்போது அவருக்கு தில்லி வானொலியில் பணியாற்றிய பூர்ணம் விஸ்வநாதன் நட்பு கிடத்தது.
பூர்ணம் தில்லியிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்ததும் அவருடன் சேர்ந்து, கூத்தபிரானும் கலாநிலையத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
"தனிக்குடித்தனம்" ஊர் வம்பு" கால்கட்டு, "வாஷங்டனில் திருமணம்" ஆகிய நாடகங்களில் இவர் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.
இதற்கிடையே, வானொலியில் அய்யாசாமி ஓய்வு பெற, அவர் வகித்து வந்த பணி இவருக்கு அளிக்கப்பட்டது.ஆம்...இப்போது கூத்தபிரான் வானொலி அண்ணா ஆனார்.நிறைய குழந்தைகள் நிகழ்ச்சி, குழந்தைகளுக்கான கதைகளைக் கூறி சிறுவர்களை மகிழ்வித்தார்.
தவிர்த்து,கிரிக்கட் மேட்ச் களுக்கான தமிழ் வர்ணனி செய்தார்.
ராமமூர்த்தி, ஜப்பார், கூத்தபிரான் இவர்களே தமிழ் வர்ணனை ஆரம்பித்து வைத்த மும்மூர்த்திகள் ஆவர்
(இவர் வீட்டு ஜன்னல் தொடரும்)
No comments:
Post a Comment