Tuesday, September 25, 2012

சிரித்துச் சிரித்து... (கவிதை)







நெற்றி சுருக்கி

புருவம் உயர்த்தி

கண்கள் விரித்து

பற்கள் தெரியாது

உதடுகள் மடித்து

சிரிப்பது தெரியாது

சிரிக்கிறாய்

நான் குழந்தையாய்

தவழ்ந்த போது

எடுத்தெதென

புகைப்படம் ஒன்றைக்

காட்டியதும்

Sunday, September 23, 2012

பதிவர்கள் வாழ்க்கை- அறிந்த தகவல்கள்- ஒரு நேர்காணல்




நான் பார்த்த அந்த பதிவர் , மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டார்.அதுவே அவரை நேர்காணல் எடுக்கத்தூண்டியது.

உங்கள் பெயர்..ஊர் பற்றி சொல்ல முடியுமா? எத்தனை வருஷங்களாக பதிவிடுகிறீர்கள்?

என் பெயர் வேண்டாமே! சொன்னால்..நான் பிரபல பதிவரா..இல்லையா..என பல பதிவுகள் வந்து படிப்பவர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும்.நான் கடந்த் சில மாதங்களாக பதிவிடுகிறேன்.சொந்த ஊர் எது எனில் 'யாதும் ஊரே" என்பேன்.நான் ஆணி பிடுங்குவேன்.

எப்படி பதிவுலகில் நுழைந்தீர்..

ஒரு நண்பர் என்னை இழுத்து விட்டு விட்டார்.பழையன பல கழிந்ததால்..புதியன ஆன என்னைப் போன்றோர் ஆர்வமுடன் நுழைந்துள்ளோம்.

ஆணி பிடுங்கி என்கிறீர்கள்..பதிவு இடும் முன் அனுபவம்..

நல்லா மொக்கை போடுவேன்.என் நண்பர்கள் நான் பேசினாலே 'பிளேடு' என்பார்கள்.இந்த் ஒரு தகுதி பதிவராக போதும் என்பதால்..இதுவே என் முன் அனுபவமானது

எப்போ பதிவு போடுவீங்க...என்னிக்கு லீவு

லீவுன்னு கிடையாது.பதிவு போட்டுக் கொண்டே இருப்பேன்.முக்கிய குறிக்கோள்..தமிழ் மணத்தில்..முதல் இருபது பதிவுக்குள் வார வாரம் வரவேண்டும் என்பதுதான்.தவிர்த்து ஏழு பதிவர்களுக்கு தவறாது வாக்களித்து..அதனால் அவர்களையும் என் பதிவிற்கு வாக்களிக்க வைத்து..ஒவ்வொரு பதிவையும் வாசகர் பரிந்துரையில் வரவழைப்பதுதான்.


கரெண்ட் பில்...

அது பற்றி எனக்கென்ன கவலை.ஆஃபீசில் தானே டைப் அடிக்கிறேன்

வாசகர் உங்க வலைப்பூவிற்கு வர ஏதேனும் யுக்தி கையாள்கிறீர்களா/

 ஆம்..பிரபல பதிவர்களைத் திட்டி பதிவிடுவேன்..சினிமா விமரிசனம் செய்வேன்..சில சமயம் படங்களைப் பார்க்காமலேயே!


எதிர்கால திட்டம்..

சில மாதங்கள் பதிவு இட்டுவிட்டு..ஒரு பதிவர் சந்திப்பில் கலந்துக் கொண்டுவிட்டு..பின் ..கூகுள் பிளஸ்சிற்கு தாவி விடுவேன்.

Saturday, September 22, 2012

மரத்தில் காய்க்கிறதா பணம்...




பிரதமர் யாருக்குமே தெரியாத ஒரு உண்மையை மக்களுக்கு சொல்லியுள்ளார்..

'பணம் மரத்திலா காய்க்கிறது" என்று..

சாமான்யனுக்குத் தெரியும்..காலையில் எழுந்து அவசர அவசரமாக கிடைத்ததை அள்ளிப் போட்டுக் கொண்டு..பேருந்தைப் பிடித்து...ஓடி..ஓடி..வேலைக்குப் போய் நாள் முழுதும் பணியாற்றிவிட்டு இல்லம் திரும்பி..அடுத்த நாள் திரும்ப இதையே பின்பற்றி..இப்படி 30 நாட்கள் உழைத்தால்..அந்த மாத சம்பளம் வரும்..பணம் உழைப்பில் காய்க்கிறது என அவனுக்குத் தெரியும்.

தினசரி ஊழியர்கள் கல்லையும், மண்ணையும், சரக்கு மூட்டைகளையும் தூக்கி வேர்த்து பெருக்கெடுக்க நாள் முழுதும் உழைத்தால் தான் அன்றைய கூலி கிடைக்கும்...அவன் சிந்தும் வேர்வையில்தான் பணம் காய்க்கிறது என அவனுக்குத் தெரியும்.

பணம் மரத்தில்தான் ஒரு விதத்தில் காய்க்கிறது..

மரத்திலிருந்து தயாரிக்கப்படும் காகிதம்தான் பணமாகவும் உருவாகிறது..

பணம் மரத்தில் காய்ப்பதில்லை என அவர் யாருக்குச் சொன்னார்...ஒரு வேளை..

..நிலக்கரி, ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் கேம் போன்றவை மட்டுமல்ல..அரசியல்வாதிகளே மரத்திலும் ஊழல் செய்து பணம் சம்பாதிக்கலாம்..கோடிக்கணக்கில்..தேக்கு, செம்மரம் என கண்முன் கொட்டிக் கிடக்கிறது..அதைப்பாருங்கள்..என தன் அமைச்சர்களுக்கு மறைமுகமாக சொல்கிறாரோ என்னவோ பிரதமர்.

Friday, September 21, 2012

இந்துமதத்திற்கு சகிப்புத் தன்மை அதிகமா..?!




நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது..இன்றைய நிகழ்ச்சிகள் குறித்துச் சொல்கையில்..இந்து மதத்தில் சகிப்புத் தன்மை அதிகம் என்றார்.

அவர் சொன்னது உண்மையா? என யோசித்தேன்..

இந்துக்கள் என்பவர்கள் பற்றி நான் ஆழமாக உள்ளே செல்ல விரும்பவில்லை.ஆனால் பெரும்பாலும் அவர்கள் இந்தியாவில்தான் உள்ளனர்.ஆனால் மற்ற இரு பெரு மதங்கள் உலகளவில் பரவியுள்ளன.ஆகவே எந்த நாட்டில் அவர்களுக்கு அநீதியோ, அச்சமோ ஏற்பட்டால் மற்ற நாட்டில் உள்ள அம்மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பை வெளியிடுகின்றனர்.

ஆனால்...இந்துக்களோ..அப்படியில்லை..

இங்கு என்ன பிரச்னை என்றாலும்..அதற்கு அரசியல், ஜாதி, இனம்,பகுத்தறிவு , என வண்ணம் பூசப்படுகிறது.ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களும்..ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒரு நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.

ஆயிரம் உண்டு இங்கு சாதி..இதில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி..என்று பாடினாலும்..நம்மை நாமே ஒருவருக்கு ஒருவர்..அந்நியராய் பார்க்க ஆரம்பித்துவிட்டோம்.என்று சொன்னால் அதில் தப்பில்லை.

மேலும்...

மத்திய பிரதேசத்தில்..ராஜபக்சே வருவதைக் கண்டித்து மறியல் செய்யும் வைகோ விற்கு..நம் நாட்டு கட்சியினர் எத்தனை பேர் உடன் சேர்ந்தார்கள்.வாளாய் இருந்தார்கள்..
இதன் பெயர் சகிப்புத் தன்மையா?

இலங்கை தமிழர், தமிழக மீனவர்கள்..என நம் நாட்டினரைக்கூட பிரித்து சொல்பவர்கள் தானே நாம்.

பெயருக்கும், புகழுக்கும் ,பதவிக்கும் ஆசைப்பட்டு..அதை மற்றவன் அடைந்து விடுவானோ என்ற எண்ணம் நம்மில் இருக்கும் வரை நமக்கு விடிவு ஏது?




Thursday, September 20, 2012

பிரதமர் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த முதல்வர்.




காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்ட வேண்டும்..என்றும் அதில் பேசி முடிவெடுக்க வேண்டும் என்றும் அதுவரை 2டிஎம்சி நீர் தினசரி தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் சொல்லியதால் கூட்டப்பட்டது ஆணைய கூட்டம்.

ஆணைய கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். கேரளா சார்பில், முதல்வர்உம்மன் சாண்டிக்குப் பதில், நீர்ப்பாசன அமைச்சர் கலந்து கொண்டார். இரண்டரை மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, "சம்பா சாகுபடியை காப்பாற்ற, வறட்சி காலத்தில் தண்ணீரை பகிர்ந்து கொள்வது குறித்து, நடுவர் மன்றம் கூறிய முறையை பின்பற்ற கர்நாடகா முன்வர வேண்டும், கர்நாடக அரசின் செயல்களை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. தமிழகத்திற்கு 24 நாட்களுக்கு தினசரி இரண்டு டி.எம்.சி., வீதம் 48 டி.எம்.சி., நீரை கர்நாடகா தரவேண்டும்' என்று வலியுறுத்தினார்.

ஆனால், கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால், தொடர்ந்து வறட்சி நிலவி வருவதாகவும், பெங்களூரு நகரத்தில் குடிநீருக்கே தண்ணீர் வினியோகிக்க முடியாத நிலையில் இருப்பதாக கூறி, தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாது என்று கர்நாடக முதல்வர் மறுத்தார்.தவிர்த்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பும் செய்தார்.

இதில் பிரதமர் குறைந்த பட்ச தண்ணீரை அளிக்கும்படி கூறியும்..கர்நாடகா மறுத்துவிட்டது.இதையடுத்து, இந்த கூட்டம் தோல்வியில் முடிந்தது.தொடர்ந்து, இந்த விஷயத்தில் தமிழகம் இனி சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம் என்று பிரதமர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழகம், சுப்ரீம் கோர்ட்டை அணுகும் என்று கூறப்படுகிறது.

நம் பிரதமரைப் பார்த்தால் யாருக்குத்தான் பயம் வரும்.

Wednesday, September 19, 2012

காங்கிரஸ் ஆளாத மாநில அரசுகளிடம் மத்ய அரசு பாராபட்சம்





காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வருடத்திற்கு 9 சிலிண்டர்களை மானிய விலைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கட்சி பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி கூறியுள்ளார்.
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் புதிய கட்டுப்பாட்டை விதித்தது. அதன்படி வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே இனி மானிய விலைக்கு தரப்படும். அதற்கு மேல் வாங்கும்போது முழு விலையையும் கொடுத்து வாங்க வேண்டும் என்று மக்கள் தலையில் சிலிண்டரைத் தூக்கிப் போட்டது மத்திய அரசு.
நாடு முழுவதும் இந்த அறிவிப்பைக் கேட்டு மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.
ஆனால் மத்திய அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தது. இதையடுத்து திரினமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது. கூட்டணியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், தனது மாநிலத்தில் வருடத்திற்கு 9 சிலிண்டர்கள் மானிய விலைக்குத் தரப்படும் என்று சமீ்பத்தில் அறிவித்தார். தற்போது இந்த திட்டத்தை காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கட்சி பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி கூறுகையில், டெல்லியில் வருடத்திற்கு 9 சிலிண்டர்களை மானிய விலைக்கு வழங்க அந்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதேபோல காங்கிரஸ் ஆளும் பிற மாநிலங்களிலும் வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.
இவ்வளவு நாட்கள் வேறு கட்சிகள் ஆளும் மாநில அரசுகள்..மத்திய அரசு பாராபட்சமாக நடந்துவருகிறது என்று கூறிவருவது..உண்மை என தெரிகிறது.
இப்படி சொல்வதால் அடுத்த தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என கனவு காணுகிறதோ??!!

Tuesday, September 18, 2012

கர்நாடகாவும்..தமிழ்நாடும்




 காவிரி நதிநீர் விவகாரத்தில் எப்பொழுதும் கர்நாடக அரசியல் கட்சிகள், வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடனேயே கைகோர்ப்பது வழக்கம். இந்த முறையும் அப்படித்தான் நிகழ்ந்துள்ளது. காவிரி நதிநீர் ஆணையம் நாளை டெல்லியில் நடைபெற உள்ள நிலையில் மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுடன் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் இன்று ஆலோசனை நடத்தினார்.
மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுடனான ஆலோசனையின் போது ஷெட்டருடன் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையும் உடனிருந்தார். 9 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையம் நாளை கூடுகிறது. இதில் கர்நாடகம் மேற்கொள்ள வேண்டிய வியூகங்களை ஷெட்டரிடம் கிருஷ்ணா கூறியதாகத் தெரிகிறது.
ஏற்கனவே கிருஷ்ணா முதல்வராய் இருந்த போது நீதிமன்ற உத்தரவை புறக்கணித்து தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்தது நினைவிருக்கலாம்.

ஆனால் தமிழகத்திலோ...

20ஆம் தேதி  எதிர்க்கட்சிகள் மத்ய அரசுக்கு எதிராக நடத்தப்படும் பந்த் அன்று பள்ளிகளுக்கு முதலில் விடுமுறை அறிவிக்கப்பட்டது.ஆனால்..பந்திற்கு தி.மு.க. ஆதரவு என்றதும், அறிவிக்கப்பட்ட விடுமுறையை அரசு ரத்து செய்து விட்டது.அந்த அளவு ஒற்றுமை.

Saturday, September 15, 2012

அறிமுகம்..(அரை பக்கக் கதை)


காலை அலுவலகம் கிளம்பும் வரை குழந்தை அனு எழுந்திருக்கவில்லை .
குழந்தைக்குத் தேவையான பால்,டயப்பர்,மாற்று உடை எல்லாம் எடுத்து வைத்தாள் கீதா.
சேகர்..அவளையையும், தூங்கும் அனுவையும் காரில் அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.
கிரச் சில் குழந்தையை விட்டு விட்டு..வந்த கீதாவை அவள் அலுவலகத்தில் இறக்கிவிட்டு தன் அலுவலகம் சென்றான் சேகர்
மாலை தான் அலுவலகத்திலிருந்து திரும்ப நேரம் ஆகும் என்ப
தால்..கீதாவை மாலை ஒரு ஆட்டோ பிடித்து கிரச் சிற்குப் போய் அனுவையும் தூக்கிக் கொண்டு வீடு செல்லச் சொல்லிவிட்டான்.
அனுவும்..மாலை கிரச் சில் ஆட்டோவை நிறுத்திவிட்டு..குழந்தையை அழைத்துவரச் சென்றாள்.
குழந்தை ஆயாவின் மடியில் படுத்து விளையாடிக் கொண்டிருந்தது.இவள் கூப்பிட்ட போது வர மறுத்து அழுதது.
"அனுகுட்டி..இது உன் அம்மாடா..சமர்த்தா அம்மா கிட்ட போ' என கொஞ்சினாள் ஆயா..
கீதாவிற்கு விழியோரம் நீர்..
'அப்பாவையே..அம்மாதான் குழந்தைக்கு அறிமுகம் செய்கிறாள்..என்பார்கள்..ஆனால்..இன்று கிரச் ஆயா குழந்தைக்கு அதன் அம்மாவை அறிமுகப் படுத்துகிறாளே'என்று மனதிற்குள் விம்மினாள்

Friday, September 14, 2012

டீசல் விலை உயர்வு...தலைவர்கள் கருத்து...(நகைச்சுவை)




மன்மோகன் சிங்- இது குறித்து நான் மௌனமாய் இருப்பதற்குக் காரணம்..என் மௌனம் ஆயிரம் பதிலுக்கு சமம் என்பதால் தான்.

சிதம்பரம் - மக்கள் ஐஸ்கிரீம் விலை உயர்ந்தால் மௌனமாய் உள்ளனர்.பிஸ்ஸா விலை உயர்ந்தால் மௌனமாய் ஏற்றுக் கொள்கின்றனர்.டீசல் உயர்ந்தால் ஏன் கத்துகிறார்கள்? என்றே புரியவில்லை.

கலைஞர்- தி.மு.க., இந்த உயர்வை வன்மையாகக் கண்டிக்கிறது.ஆனால் இது விஷயமாக மைய அரசைக் கண்டிக்காது

ஜெயலலிதா- டீசல் விலை உயர்வை நான் முதலிலேயே கண்டித்தேன்.கருணாநிதி இப்போது கண்டிப்பது போல கபட நாடகம் ஆடுகிறார்.

ராமதாஸ்- இந்த விலை உயர்வுக்கு திராவிடக் கட்சிகளே காரணம்.அடுத்தத் தேர்தலில் யாருடனும் கூட்டணியின்றி பா.ம.க., ஆட்சியைப் பிடிக்கும்

விஜய்காந்த்- ஜெ வும் கலைஞரும் தமிழகத்தைக் கெடுத்ததோடு இல்லாமல்..இப்போது பாரதத்தையே கெடுக்க சூழ்ச்சி செய்கிறார்கள்.இதை நான் முறியெடுப்பேன்.திமுக, அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை தேமுதிக புறக்கணிக்கும்

அத்வானி - இந்த விலை உயர்வால் பாராளுமன்றத்திற்கு முன்னதாக தேர்தல் வர வாய்ப்பிருக்கு.

சுப்ரமணியசுவாமி- இந்த உயர்வுக்கு காரணம் சோனியாவும் சிதம்பரமும் தான்.அதற்கான ஆதாரங்களைத் திரட்டிவருகிறேன்.கூடிய விரைவில் இவர்கள் மீது வழக்குத் தொடர்வேன்.

வைகோ- கன்யாகுமரியிலிருந்து..தூத்துக்குடி வரை இந்த உயர்வைக் கண்டித்து மதிமுக போராட்டம் நடத்தும்.

கம்யூனிஸ்ட்கள்- இந்த உயர்வை கண்டிக்கிறோம்.முதல்வரை மரியாதை நிமித்தம் சந்திக்க உள்ளோம்.


Thursday, September 13, 2012

வாக்குகள் என்று வந்தாலே கள்ளம் வந்துவிடுகிறேதே??!!




தேர்தலில் வெற்றி தோல்விகளை வேட்பாளர்கள் பெறும்வாக்குகளை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.

வேட்பாளர்களின் திறமையையோ..தகுதியையோ யாரும் கணக்கெடுத்து வாக்களிப்பதில்லை.அப்படி அளித்தாலும் அந்த வேட்பாளர் டிபாசிட் இழக்கும் அளவே வாக்குகள் பெற முடியும்.

பல தேர்தல்கள் முடிவகளை கள்ள ஓட்டுகளும்..ஏற்கனவே அடக்கமானவர்கள் மீண்டு வந்து போடும் வாக்குகளும் தீர்மானித்துவிடும்.

இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்..வாக்குகள்...என்ற பெயர் எங்கு வந்தாலும்..அங்கு ஊழல், கள்ள வாக்கு  ஆகியவற்றை தவிர்க்க முடியாது.

அதே தான் தமிழ்மணத்திலும் நடைபெறுகிறது..

இங்கு தரமான பதிவுகள் ..குறைந்த பட்ச வாக்குகளைக் கூட பெறாது..பரிந்துரையில் வரமுடியாது டிபாசிட் இழக்கின்றன.

சில பதிவுகள் குறைந்த பட்ச வாக்குகளை..நண்பர்கள் மூலம் பெற்று..பதிவரின்..டிபாசிட்டை தக்க வைத்துக் கொள்கின்றன.

சில கள்ள வாக்குகள் ..இங்கு..ராங்க் ஐடி கள் மூலம் விழுகின்றன.இதற்கு குறிப்பிட்ட பதிவரை குற்றம் சாட்டி பயனில்லை.

முடிந்தால்..குற்றம் சாட்டுபவரும்..தன் பதிவிற்கு இதே போல் வாக்குகள் அளித்து மகுடம் சூட்டிக் கொள்ளட்டும்.

இதற்கு..இம்முறையை ஒழிக்க வழியே இல்லையா??

இருக்கிறது..வாசகர் பரிந்துரையை ஒருமுறை..இதே போன்ற நிலை வந்ததால்..தமிழ்மணம் சில காலம் நிறுத்தி வைத்தது.அது போல மீண்டும் செய்ய வேண்டும்..அல்லது..அதிக வாக்குகள் பெறும் பதிவுகள் என்பதை மாற்றி வேறு முறை ஏதேனும் கொண்டுவர வேண்டும்..

ஏனெனில்..வாக்குகள் என்றாலே..மக்களுக்கு..கூடவே கள்ளத்தனமும் கூடுவது இந்திய ஜனநாயகத்தின் வாடிக்கைதானே!

Wednesday, September 12, 2012

அப்பா........(சிறுகதை)






'செல்வம்...நீ அலுவலகத்திற்கு கிளம்பறதுக்கு முன்னால ஐநூறு ரூபாய் கொடுத்துட்டுப்போ...மருத்துவர் கிட்டே போகணும்..இராத்திரி ஆரம்பித்த நெஞ்சுவலி இன்னமும் இருக்கு' என்றார் சுந்தரேசன் மகனிடம்.

'மாதக்கடைசி..பணத்துக்கு நான் எங்கப்பா போவேன்?'சட்டைபையைத் தடவிப்பார்த்துக் கொண்டே சொன்னான் செல்வம்.

நாளைக்கு அவனது திருமணநாள்..திருமணமாகி பத்து ஆண்டுகள் முடிந்திருந்தன.

'புடவை ஒன்று வாங்கிக்கொடுத்து மனைவியை நாளைக்கு இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கவேண்டும்'என்று எண்ணி இரண்டாயிரம் ரூபாயை சட்டைப்பையில் பத்திரமாய் வைத்திருந்தான்.

'என்னடா..செல்வம் இப்படிச்சொல்றே..இனிமே நெஞ்சுவலின்னா..தாமதிக்காம உடனே எங்கிட்டே வரணும்னு..மருத்துவர் போன முறையே சொல்லியிருக்காரே..மறந்துட்டியா?'

'மருத்துவருக்கு என்னப்பா..அப்படித்தான் சொல்வார்.இப்ப எல்லாம் தலைவலின்னு போனால் கூட ..எக்ஸ்ரே எடுன்னு..ஸ்கேன் எடுன்னு நம்பகிட்டே இருக்கிற பணத்தையெல்லாம் கறந்துடுவார்..கொஞ்சம்
பெருங்காயத்தூளை வாயில் போட்டு..கொஞ்சம் மோர் குடிங்க சரியாகிவிடும்...'என்று கூறியபடியே அலுவலகம் கிளம்பினான் செல்வம்.

மாலை மணி மூணு இருக்கும்.

அலுவலகத்திற்கு செல்வத்தின் மனைவி தொலைபேசினாள்'அப்பா..மூச்சு பேச்சு இல்லாம கிடக்கிறார்..உடனே வாங்க..'

அவன் வீடு போய் சேர்வதற்குள்..சுந்தரேசன் கதை முடிந்து விட்டது.

இறுதிக் காரியங்கள் எல்லாம் முடிந்ததும்..அப்பாவுடையது என்று சொல்லிக்கொள்ள இருந்த மரப்பெட்டி ஒன்றைத்திறந்தான்.

அதில் சில தேவையில்லாத பழுப்பேறிய காகிதங்கள்..அம்மா போட்டிருந்த சில கண்ணாடி வளையல்கள்..அப்புறம்..அவன் குழந்தையாய் இருந்தபோது போட்டிருந்த சில சட்டைகள்..பிறகு..அது என்ன நீல நிறத்தில் .. சிறு புத்தகம் போல்...

எடுத்தவன் அதிர்ந்தான் ...வீட்டின் அருகாமையில் இருந்த ஒரு வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகம்.

சுந்தரேசன்..சிறிது சிறிதாக அறுபதாயிரம் ரூபாய் வரை..தன் மகனை வாரிசுதாரராகப் போட்டு பணம் சேர்த்திருந்ததை அது காட்டியது.

Tuesday, September 11, 2012

மெகா சீரியல்களும்..பதிவர்களும்..




மெகா சீரியல்கள் ஒரே மாதிரி..பெண்களை அழ வைக்க வேண்டும் என்னும் நோக்கிலேயே எடுக்கப்படுகின்றன என்பது ஒரு பக்கம் இருந்தாலும்..

அந்தத் தொடர்களில்..பெண்ணே பெண்ணுக்கு எதிரியாய் ..கதாநாயகியை கொடுமைப் படுத்துவதும்..அடியாட்களை வைத்து கொலை செய்வதும் போன்ற அநியாயத்திற்கு லாஜிக்குடன் காட்சிகள் அமைந்திருக்கும்.

இதற்கிடையே, தொடர்களை எப்படி வளர்ப்பது எனத் தெரியாமல்...

வேறு ஒரு தொடரில்..யாருக்கேனும் பக்கவாதம் வருவதாய் இருந்தால்..அதேபோன்று அடுத்தவாரம் வேறு ஒரு தொடரில் ஒரு கதாபாத்திரத்திற்கு அந்த நோய் வந்திருக்கும்..

கணவன் மனைவிக்குத் தெரியாமல்..வேறொரு பெண்ணுடன் வாழ்வது போல வந்தால்....வேறு தொடர்களிலும் அதே போன்ற காட்சிகளை எதிர்பார்க்கலாம்..

இதெல்லாம் கற்பனை வளம் குறைவதால் என்று கூற முடியாது..சீரியலை சேனல்கள் வளர்க்கச் சொன்னால் ..கதாசிரியர்தான் என்ன செய்வார்..இயக்குநர்தான் என்ன செய்வார்..தயாரிப்பாளர்தான் என்ன செய்வார்.நடிகர்களும் மீட்டர் விழுந்தால் போதும் என்பவர்கள்..

அது போகட்டும்..பதிவர்களுக்கும்..இதற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா..?

இங்கும் கிட்டத்தட்ட அதுதான் நடைபெறுகிறது..

ஒரு பதிவரின்..பதிவு அதிக கமெண்டுகளையும், ஓட்டுகளையும், வருவோர் எண்ணிக்கையையும் அதிகரித்தால்..

அந்த பதிவை முன்மாதிரியாகக் கொண்டே..பல பதிவர்களின் பதிவுகள்...

உதாரணத்திற்கு..பதிவர் சந்திப்பு பற்றிய அநேக பதிவுகள்..

பிறகு....

இன்னும் சொல்லுவேன்..ஆனால்..

நான் யாரைப்பார்த்தாவது..பொறாமைக் கொண்டு..இப்பதிவை எழுதியுள்ளதாக சிலர் நினைத்துவிடக் கூடும்.ஆகவே இத்துடன் நிறுத்துக் கொள்கிறேன்.


Sunday, September 9, 2012

நான் அறிந்த மணிஜி...





மணிஜி...

அனைத்து பதிவர்களும் அறிந்துள்ள பதிவர்..இல்லை..இல்லை..இனிய நண்பர்..

ஆம்..இவர் பதிவராக நமக்கு அறிமுகமானாலும்...சிறந்த நண்பர் என்பதே சிறந்தது.

இவர் தன்னைத்தானே..ஒரு குடிகாரராய்..சித்தரித்துக் கொண்டாலும்..

மது அருந்துவதால்..அவரது தொழில் பாதிக்கப்படாமல் இருக்கிறது.அவர் வேலையில் ஈடுபடும் போது அவரது உழைப்பையும், திறமையையும் நேரில் பார்த்தவன் என்ற முறையில் இதை சொல்கிறேன்.

நட்பு பெரிதென நினைப்பவர்..எல்லா விஷயங்களையும் ஈசியாக எடுத்துக் கொள்பவர்.ஆகவெதான்..மற்றவர்களும் அப்படியே இருப்பார்கள் என எண்ணி அவர்களை கலாய்ப்பதும்..அவர்களை கிண்டலடிப்பதையும் செய்பவர்.

இவரைப் புரிந்து கொண்டவர்கள் இதை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள்..

புரிந்துக் கொள்ளாதவர்கள்..புரிந்துக் கொண்டதும்தான்..நான் சொன்னதில் உள்ள உண்மை தெரியும்..

மணிஜியும்...தனக்கு அதிகம் பழக்கம் இல்லாதவர்களை கலாய்க்க வேண்டாம் என்றே தோன்றுகிறது.என் கூற்றில் உள்ள உண்மையை மணிஜி புரிந்துக் கொள்வார் என்றே எண்ணுகிறேன்.



Wednesday, September 5, 2012

சாய்பாபாவின் 40,000 கோடி சொத்துக்கள் யாருக்கு?



மறைந்த சத்ய சாய்பாபாவின் உயில் இப்போது வெளியாகியுள்ளது.
ரூ. 40,000 கோடி சொத்துக்கள் கொண்டது சத்ய சாய்பாபாவின் அறக்கட்டளை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் மறைந்ததையடுத்து அவரது சொத்துக்களை யார் பராமரிப்பது என்பது குறித்த பிரச்சனைகள் எழுந்தன.

இந் நிலையில் 1967ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதி சாய் பாபா எழுதி வைத்த உயில் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. சாய் பாபாவின் உதவியாளரான சத்யஜித் சாலியன் அதை நேற்று ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் இயக்குனர் குழுவிடம் சமர்பித்தார்.

எனது பக்தர்களால் தரப்பட்ட எல்லா நன்கொடைகளும் மக்கள் நலப் பணிகளுக்கே செலவிடப்பட வேண்டும். சொத்துக்களில் எந்தப் பகுதியும் வேறு எந்த தனிப்பட்ட நபருக்கும் இல்லை. எனக்கு என்று எந்த தனிப்பட்ட சொத்தும் இல்லை. எனது குடும்பத்தினரின் சொத்துக்களிலும் கூட எனக்கு பங்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்று கூறப்பட்டுள்ளது.

தனது அறக்கட்டளையின் உறுப்பினரும் சார்ட்டர்ட் அக்கெளண்டன்டுமான இந்துலால் ஷா, மும்பை உயர் நீதிமன்ற சொலிசிட்டராக இருந்த டிஐ சுக்லா ஆகியோரை சாட்சிகளாக வைத்துக் கொண்டு இந்த உயிலை எழுதியுள்ளார் பாபா. இதில் இந்துலால் மட்டுமே இப்போது உயிரோடு உள்ளார்.
இந்த உயில் வெளியானதன் மூலம் பாபாவின் அறக்கட்டளையின் சொத்துக்களில் அவரது குடும்பத்தினருக்கு எந்த பங்கும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது.
சாய்பாபாவின் அறக்கட்டளை புட்டபர்த்தியில் பல்கலைக்கழகம், மருத்துவமனை, மியூசியம், கோளரங்கம், ரயில் நிலையம், விமான நிலையம், விளையாட்டு அரங்கம், பெங்களூரில் மருத்துவமனை, ஆசிரமம், தமிழகம் மற்றும் ஆந்திராவில் பல குடிநீர்த் திட்டங்கள், நாடு முழுவதும் பல கல்வி நிலையங்கள், சுகாதார மையங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் 165 நாடுகளில் இந்த அறக்கட்டளைக்கு ஆசிரமங்கள் உள்ளன. இன்னும் அதற்கு உலகம் முழுவதும் இருந்தும் நன்கொடைகள் வங்கிகள் மூலமாக வந்து கொண்டு தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 (தட்ஸ்தமிழ்)

Sunday, September 2, 2012

விகடனும்..ராஜுமுருகனும்...




ஆனந்தவிகடனில்..சுஜாதா (கற்றதும் பெற்றதும்), வண்ணதாசன் (அகமும் புறமும்),நாஞ்சில் நாடன் (தீதும் நன்றும்), எஸ்.ராமகிருஷ்ணன் (துணையெழுத்து) வரிசையில் ராஜூமுருகனின் வட்டியும் முதலும்..பெரும்பான்மையினர் படித்து வருவது தெரியும்.ஆயினும்..ஏதேனும் பரவச நிகழ்ச்சி நடந்தால்..அதை அனைவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என எண்ணுவதில்லையா?  அப்படி ஒரு எண்ணமே..இப்பதிவு..

ஒவ்வொரு வாரமும் அருமையாக எழுதி வரும்..ராஜூமுருகன்..இவ்வாரம் பயணத்தைப் பற்ரி எழுதியுள்ளார்.கரும்பின் சுவை.இருப்பினும் அடிக்கரும்பாய் சுவையைத் தரும் பகுதி கீழே..

"என் வாழ்க்கையில் சரிபாதிப் பொழுதுகள் பயணங்களுடந்தான் கழிந்திருக்கின்றன.வித விதமான பஸ்களும் ரயில்களும் ஒலிகளும், ஒளிகளும் வார்த்தைகளைக் கடந்த காட்சிப் படிமங்களாக மனதில் படிந்துகிடக்கின்றன.மூணாறு மலையில் போய் பஸ் திரும்புகிற நொடியில் ஒரு பெரிய அன்னாசி தோட்டமும் நடுவில் நிற்கிற ஒற்ரை மனுஷியும் பொசுக்கென்று எல்லாவற்றையும் வெளித்தள்ளி மனதில் நிரம்பிவிடுகிறார்கள்.தடதடத்துப் போகும் பெரும் தேயிலைக்காடு, திருச்சியைத் தொடும்போது வரும் ரசாயனத் தொழிற்சாலையின் துர்நாற்றம், வேலூர் மண்ணுக்குள் நுழையும் போது அடிக்கும் தோல் பதனிடும் நாற்றம், நீடாமங்கலத்தைத் தாண்டியதும் ஒரு பாழ் மண்டபச் சுவரில் கடக்கும் 'கோல்ட் ஸ்பாட்" விளம்பரம்,கரிசல் அறுந்து சடாரெனச் செம்மண் விரியும் ஒரு புள்ளி, பளையங்கோட்டையை கடக்கும் போதெல்லாம் பாதி உதிர்ந்த பைபிள் வாசகங்களோடு கடக்கும் மேரி மாதா, கோயம்பத்தூர் எல்லை வந்ததுமே பாஜாஜ் எம் 80யில்  பஞ்சு மூட்டை கட்டிக் கொண்டு கடக்கும் ஒருவர், ராத்திரி எப்போது கடக்கும் போதும் இட்லிப் பானை மூடியைத் தூக்கிக் கொண்டு ஒரு ஆத்தா பேசிக் கொண்டிருக்கிற மதுரை டவுன் ஹால் ரோடு, அதிகாலையில் 'சரவணப் பொய்கையில்' பாடல் ஒலிக்கும் மினி பஸ்சில் பச்சைப் பசேலெனக் கறிவேப்பிலை வாசம் தூக்க வாழை இலைக்கட்டுகளுக்கு நடுவே உட்கார்ந்து இருக்கும் நாஞ்சிக் கோட்டை ரோடு, 'சூடா சமோசே..சூடா சமோசே..' என ஒருவர் ராகம் பாட ஒவ்வொருமுறை மின்சார ரயில் கடக்கும்போதும் புதிதாக வரும் செங்கல்பட்டு ஏரி, மூட்டைப் பூச்சிகள் மண்டிய மரப்படுக்கையும் காரை உதிர்ந்த சுவர்களும்.."ஆந்திரா மால் சார்..நருவுசு சார்..போலீஸ் பிராப்ளம்லாம் இல்ல..வேணுமா?' என்கிற சித்தூர் லாட்ஜ், கொல்லை முற்றத்தில் குளமும் பேரழகு இருளில் பொசுக்கென்று விளக்கெரியும் கோயில் கொண்ட திருச்சூர் என வெயிலும் மழையும் ஒளியும் இருளும் ஒவ்வொரு பயணத்துக்கும் புதிது புதிதாக இருக்கின்றன"

அடடா...என்ன ஒரு ரசனை..

நான் தொடர்ந்து இவரை படித்து வியந்து வருகிறேன்..ஆனால் இந்த வாரம்..என் வியப்பு எல்லை மீறியதால்..உடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

படிக்காதவர்கள் கண்டிப்பாய் படிக்கவும்...

Tuesday, August 28, 2012

வீணாகும் உணவுகள்....




இன்று பல திருமணங்களில் தங்கள் வசதியைக் காட்ட 30 வகை உணவுகள்..40 வகை உணவுகள் என பரிமாறப்படுகின்றன.ஆனால் இவர்கள் மறந்துவிட்டது..உண்பவர்க்கு இருப்பது ஒரு வயிறு என்பதை.

ஆகவே..பலர்..பல உணவுவகைகளை வீணடிக்கின்றனர்.இனிப்பு வகைகள் உண்ணக்கூடாது என்பவர்கள் அவற்றை அப்படியே ஒதுக்கி விடுகின்றனர்.ஆனால் இவற்றையெல்லாம் பார்த்து ரத்தக் கண்ணீர் விடுவது மத்தியத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண்வீட்டார்..போலி  கௌரவம்..பல லட்சக்கணக்கான பணத்தை வீணடிக்கிறது.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நியோ20 என்ற பெயரில் ஜி20 நாடுகளின் மாநாடு நடந்தது.அதில் வெளியிடப்பட்ட ஐ.நா., அறிக்கையில்..

'உலகம் முழுதும் ஆண்டொன்றுக்கு 130 கோடி டன் உணவு வீணாகிறதாம்.உணவுப் பொருட்கள் அவை உற்பத்தியாகும் விளை நிலத்தில் தொடங்கி போக்குவரத்து, சேமிப்புக் கிடங்கு சந்தை எனத் தொடர்ந்து வீட்டின் உணவு மேசைவரை வீணடிக்கப்படுகிறது.

இதில் அமெரிக்கா மட்டும் உணவில் 25 விழுக்காடுகளை குப்பையில் எறிகின்றதாம்.ஐரோப்பாவில் சராசரியாக ஒருவர் ஆண்டுக்கு 300 கிலோ உணவை வீணடிக்கிறார் என்றால்..இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளில் இது 170கிலோவாக உள்ளதாம்.இந்தப் புள்ளி விவரங்கள் ஸ்வீடனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவால் திரட்டப்பட்டவை.

டிஸ்கி - நாட்டில் ஒரு வேளை உணவிற்குக் கூட வழியில்லாமல் வாடும் மக்களும் கோடிக் கணக்கில் உள்ளனர்..
 உணவுப் பொருட்கள் வீணானாலும் பரவாயில்லை மக்களுக்கு இலவசமாகக் கொடுக்கக் கூடாது என்னும் பிரதமர்களும் உள்ளனர்.

Friday, August 24, 2012

பதிவர் சந்திப்பும்..நானும்..




வலைப்பதிவர்களுக்கு ஒரு சங்கம் வேண்டும் என எண்ணிய முதல் பதிவர் கேபிள் ஆவார்.பின்னர் அவர் பல பிரபல பதிவர்களுடன் சேர்ந்து குழுமத்தை ஆரம்பித்தார்.கோவை, ஈரோடு,திருப்பூர் என அனைத்து ஊர்களிலிருந்தும் பல பதிவர்கள் வந்திருந்தனர்., டிஸ்கவரி பேலஸில் கூட்டம் நடந்தது.

ஆர்வமுள்ள பதிவர்கள் அனைவரும்...கலந்து கொண்டு கூட்டம் சிறப்பாய் நடந்தும்..சில பதிவர்களின் ஈகோ வால்...ஆரம்பித்த நிலையிலே சங்கம் நிலைகொண்டு  மேலே நகரவில்லை.

பின்..இப்போதுதான் மீண்டும் புதியதாக பதிவர் சந்திப்பு மாநாடு நடைபெற உள்ளது.

அன்று தொடங்கிய சங்கத்தையும்..அன்றைய நிர்வாகிகளையும் ஆலோசித்து..அதன் தொடர்ச்சியாக இந்த மாநாடு நடத்தப் பட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது.ஏனெனில்..அன்று இச் சங்கத்தை வளர்க்க பல கனவு கண்டவர்கள் அன்று கூட்டத்திற்கு பொறுப்புவகித்த  பல மூத்த பதிவர்கள்.

உடனே..நான் குறை கூறுவதாக எண்ண வேண்டாம்..

மாநாடு சிறப்புற அமைய என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை..

சென்ற ஆண்டு நான் மேடையேற்றிய 'கருப்பு ஆடுகள்' நாடகத்திற்காக எனக்கு சிறந்த ஆல்ரவுண்டர் என்னும் விருதை மைலாப்பூர் அகடெமி நாளை வழங்க இருக்கிறது.

தவிர்த்து மாலை ஏழு மணி அளவில்..எனது புதிய திரில்லர் நாடகம் 'மழையுதிர் காலம்' நாரத கான சபாவில் நடைபெறுகிறது.

இக்காரணங்களால் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள இயலாது என எண்ணுகிறேன்..

மீறி, நேரம் கிடைக்குமாயின்..வந்து தலை காட்டலாம்  என்ற எண்ணமும் உள்ளது.

மீண்டும் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து வரும் அனைத்து பதிவர்களுக்கும்..என் வாழ்த்துகள்.

Thursday, August 23, 2012

தீக்குளித்ததைப் பார்த்து தீக்குளித்த 4ம் வகுப்பு மாணவன்



மேலூர் அருகே டிவியில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தீ்க்குளிப்பதைப் பார்த்த 4ம் வகுப்பு மாணவன் தன் உடலில் மண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கோட்டநத்தம்பட்டியை சேர்ந்த முத்துபோஸ் என்பவரின் மகன் சக்திவேல்(10). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறான். இந்த கால சிறுவர், சிறுமியர் வெளியே சென்று ஓடியாடி விளையாடாமல் டிவி, கம்ப்யூட்டரே கதி என்று இருக்கிறார்கள். அதில் பார்க்கும் பலவற்றை தானும் செய்ய முயற்சிக்கிறார்கள்.
அப்படித் தான் வீட்டில் இருந்த சக்திவேல் டிவி பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகாசியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை எதிர்த்து ஆட்டோ டிரைவர் கணேசன் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து தனது வீட்டின் மொட்டைமாடியில் இருந்து கீழே குதித்த காட்சி வந்தது. அதைப் பார்த்த சக்திவேலுக்கு நாமும் தீக்குளித்துப் பார்த்தால் என்ன என்று தோன்றியது.
நினைத்ததை செயலாக்க நினைத்த அவன் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்தான். உடலில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததும் சிறுவன் அலறத் துவங்கினான். அவனது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவனை சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரது மருத்துவமனைக்கு சிறுவன் அனுப்பி வைக்கப்ப்டடான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளித்துவரும் போதிலும் அவனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

(நன்றி -தட்ஸ்தமிழ்)

Sunday, August 19, 2012

காதலும்..திருமணமும்...




ஓரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும், திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்..

அதற்கு அந்த ஞானி, 'அது இருக்கட்டும்..முதலில் நீ ரோஜா தோட்டத்திற்குப் போ..அங்கு உயரமான ரோஜாச் செடி எது என எண்ணுகிறாயோ, அதை எடுத்துக்கொண்டு வா..ஆனால் இரு நிபந்தனை, நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக்கூடாது' என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான்.

ஞானி, 'எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி?' என்றார்.

சீடான் சொன்னான். 'குருவே..வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னை கவர்ந்தது.அதைவிட உயரமான செடி இருக்கக் கூடும் என தொடர்ந்து நடந்தேன்.ஆனால்..பின் தென்பட்டவை அனைத்தும் குட்டையான செடிகளே..வந்த வழியே திரும்பிவரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியை கொண்டுவர முடியாமல் போய் விட்டது'

இப்போது ஞானி சொன்னார், 'இதுதான் காதல்'..பின்னர் ஞானி சொன்னார், 'சரி போகட்டும்.அதோ அந்த வயலில் சென்று உனக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரியகாந்திச் செடியை பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலான ஒரு நிபந்தனை.ஒரு செடியைப் பிடுங்கிய பின் ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது'

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரியகாந்திச் செடியுடன் வந்தான்.

ஞானி கேட்டார், 'இதுதான் அந்த தோட்டத்தில் அழகான சூரியகாந்திச் செடியா?'

சீடன் சொன்னான், 'இல்லை.இதைவிட அழகான செடிகள் இருக்கின்றன.ஆனால் இம்முறை முதல்முறை கோட்டை விட்டதுபோல இந்த முறையும் விட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியை பிடுங்கி வந்து விட்டேன்.நிபந்தனைப் படி ஒரு செடியை பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன்பிறகு இதைவிட அழகான செடிகளை நான் பார்த்த போதும் பறிக்கவில்லை'

இப்போது ஞானி சொன்னார், 'இதுதான் திருமணம்'

(ஓஷோ)  

Friday, August 17, 2012

ராமனும்..மன்மோகனும்




ராமாயணத்தில் ஒரு கதை உண்டு..
ராமன் ஒரு சமயம் தாகம் எடுக்க தன்னிடம் இருந்த தனுசை கரையில் ஊன்றிவிட்டு சுனையில் தண்ணீர் பருகிவிட்டு..பின் ஊன்றிய தனுசை எடுக்கையில்..அதனடியில் ஒரு தவளை தனுசு தன் மீது ஊன்றியதால் மரணப்போராட்டத்தில் இருந்தது.அதைக்கண்டு வருந்திய ராமன்.."ஏ..தவளையே..நான் தனுசை ஊன்றும் போது நீ குரல் கொடுத்திருக்கலாமே' என்றார்.

அதற்கு..தவளை''ராமா..எனக்கு யாரேனும் தீங்கிழைத்தால்..'ராமா எனைக்காப்பாற்று' எனக் குரல் கொடுக்கலாம்..ஆனால் செய்வது ராமனே என்னும் போது நான் யாருக்கு குரல் கொடுக்கமுடியும்?' என்றதாம்.

காமன்வெல்த் ஊழல், 2ஜி 176000 கோடி ஊழல் என்றெல்லாம் சேதி வந்தபோது சம்பந்தப்பட்ட நபர்/அமைச்சர்களை பதவி விலகச்சொன்ன பிரதமர்..நிலக்கரி சுரங்க உழல் 186000 கோடி என்றபோது அச்சமயம் அத்துறையை தன்னிடம் வைத்திருந்ததால் பதவி விலக வேண்டாமா?

உனக்கொரு நீதி..மற்றவனுக்கு ஒரு நீதியா?


Wednesday, August 15, 2012

தீக்குள் விரல்..



வாழ்த்துச் சொல்லி

பூங்கொத்து கொடுக்கையில்

விரல்கள் தீண்டின

பூவினும் மெல்லிய

மலர் ஒன்றை


2) உனக்கு என்ன வேண்டும்

என்றேன்

கூலிங் கிளாஸ் என்றாய்

ஏறிட்ட என்னிடம்

என்னை நீ பார்க்கையில்

நீ அறியாது

உன்னை நான் பார்க்கலாமே

என்றன உன் கண்கள்


3)பிரியும் நாள்

கண்களின் நீர் துடைத்த

கைக்குட்டையை யாசித்தேன்

வரும் நாட்களில்

என் கண்ணீர் துடைக்க


4)தினமும் ஒருமுறை

உன்னை தழுவிட

அனுமதித்தாய்

அப்போது உணரவில்லை

சாவையும் ஒருநாள்

தழுவிட வேண்டுமென

Tuesday, August 14, 2012

விண்வெளியில் இந்தியாவின் தேசியக் கொடி






 அமெரிக்க விண்வெளி வீராங்கனையும், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவருமான சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றி இந்தியர்களை பெருமைப்படுத்தியுள்ளார்.
இந்தியா முழுவதும் இன்று 66வது சுதந்திர தினம் கோலாகலமாகவும், உற்சாகத்துடனும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி சர்வதேச விண்வெளி நிலையத்தில் தற்போது முகாமிட்டுள்ள இந்திய-அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், தேசியக் கொடியை ஏற்றி இந்தியர்களைப் பெருமைப்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் விண்வெளியில் இந்தியாவின் தேசியக் கொடி பறந்து புதிய வரலாறு படைத்துள்ளது. இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் தனது சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அப்போது சுனிதா குறிப்பிட்டார். சுனிதாவின் தந்தை குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார். அவரது தாயார் ஸ்லோவேனியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு மாத கால ஆய்வுப் பயணமாக தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளார் சுனிதா என்பது நினைவிருக்கலாம். இது அவரது 2வது விண்வெளி பயணமாகும்.
தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின்னர் சுனிதா வில்லியம்ஸ் பேசுகையில், ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்தி தினத்தைக் கொண்டாடும் இந்தியாவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா ஒரு அருமையான நாடு. அந்த நாட்டின் ஒரு அங்கமாக நானும் இருப்பதை பெருமையாக உணர்கிறேன்.
நான் ஒரு அரை இந்தியர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். எனது தந்தை குஜராத்தைச் சேர்ந்தவர். எனவே இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் எனக்குத் தெரியும். இந்த நாட்டின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் நானும் என்னை இணைத்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன் என்றார் சுனிதா.

உபரி தகவல்
இந்திய தேசியக் கொடி 22-7-1947 அன்று. தற்போதைய வடிவில் ஏற்கப்பட்டது.நீள் சதுர அளவில் உள்ள கொடியில் காவி,வெள்ளை,பச்சை ஆகிய மூவண்ணங்கள் உள்ளன.கொடியின் நடுவில் நீல வண்ணத்தில் அசோக சக்கரம் 24 ஆரத்துடன் உள்ளது.இக்கொடியை உருவாக்கியவர் பிங்கிலி வெங்கையா என்பவர் ஆவார்.கொடியை கையால் நெய்த காதி துணியில் செய்ய வேண்டும்

Monday, August 13, 2012

ஊழல் ஒழிப்பு போராட்டங்களால் பயன் ஏதுமில்லை




 ஊழலுக்கு எதிரான ராம்தேவ், அன்னா ஹசாரே போராட்டங்களால் ஒரு பலனும் கிடைக்காது என்று பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தலைவர் மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரே, யோகா குரு ராம்தேவ் ஆகியோரின் உண்ணாவிரதம் உள்ளிட்ட அறவழிப் போராட்டத்தால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. இந்த போராட்டம் காற்று நிரப்பப்படாத ஒன்று. இன்னும் 15 ஆண்டுகளுக்கு நாட்டில் ஊழல் நிறைந்திருக்கும். இந்தக் காலமாற்றத்தில் எந்தவிதமான நன்னெறியையும் எதிர்பார்க்க முடியாது.
இத்தகைய காலமாற்றத்தைக் கடந்து நாடு முன்னேறிச் செல்ல அறிவியல் சார்ந்த, நவீன கருத்துகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும். மேலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை நாட்டின் அனைத்து இடங்களிலும் பரவச் செய்ய வேண்டும். இதில் ஊடகங்கள் ஒன்றுக்கொன்று சமநிலையிலும், நவீனமயத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்றார் கட்ஜு.

டிஸ்கி - இதைத்தான் பட்டுக்கோட்டையார் அன்றே சொல்லிவிட்டார்..'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது' என.

Saturday, August 11, 2012

இ‌ந்‌தியாவு‌க்கு ‌நிதான‌ம் தேவை - அறிவுரை சொல்கிறார் ராஜபக்க்ஷே



''அயல் நாடுகளின் விவகாரங்கள் தொடர்பாக இந்தியா எடுக்கும் தீர்மானங்கள் நிதானத்துடன் எடுக்கப்பட வேண்டும்'' எ‌ன்று இல‌ங்கை அ‌திப‌ர் மஹிந்த ராஜபக்சே கூ‌றியு‌ள்ளா‌ர்.

இந்திய ஊடகமொன்றுக்கு  அளித்த பே‌ட்டி‌‌யி‌ல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது வேறும் அரசியல் கட்சிகளுடன் தனித் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினாலும் இறுதித் தீர்மானம் நாடாளுமன்றின் ஊடாகவே எட்டப்படும். இதன் காரணமாகவே அனைத்து தரப்பினரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.

ஜனநாயக ரீதியில் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை அமுல்படுத்தப்படவில்லை என சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை. ஆணைக்குழுவின் பரிந்துரைகள் உரிய முறையில் ஆராயப்பட்டு அதன் பின்னர் அமுல்படுத்தப்படும்.

70 வீதமான இராணுவத்தினர் வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக விடுதலைப் புலி ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.எனினும், இந்தப் பிரச்சாரத்தில் உண்மையில்லை. 2009ம் ஆண்டு டிசம்பரில் 27000 படையினர் யாழ்ப்பாணத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 15000 மாக குறைக்கப்பட்டுள்ளது. மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் தொடர்ந்தும் வடக்கிலிருந்து மீட்கப்பட்டு வருகின்றன.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நீண்ட காலமாக நெருங்கி உறவு பேணப்பட்டு வருகின்றது. அயல் நாடுகளின் விவகாரங்கள் தொடர்பில் இந்தியா எடுக்கும் தீர்மானங்கள் நிதானத்துடன் எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்தமை தொடர்பில் அவர் இத்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இது செய்தி....

இனி நாம்...

இந்த விஷயத்தில் அறிவுரைக் கூற இவர் யார் என்ற கோபம் நமக்கு எழுந்தாலும்...

அடப்பாவிகளா..ஆமையைவிட நிதானமாய் செயல்படும் மைய அரசைப் பார்த்து..இன்னும் நிதானம் தேவை என்கிறாரே..இதற்குமேல் எப்படி...என்று அதிசயிக்கிறோம்.

இது சம்பந்தமாக மைய அரசு பேச்சுவார்த்தைக்கு ஒரு நாயரையோ..மேனனையோ அனுப்பும் என பட்சி சொல்கிறது.

Tuesday, August 7, 2012

படிக்க வேண்டிய தினமணி தலையங்கம்




ஏனிந்தபோலித்தனம்

லாட்டரிச் சீட்டு வாங்காமலேயே தனக்குக் கோடி ரூபாய் பரிசு விழ வேண்டும் என்று நினைப்பவரை எள்ளிநகையாடும் நாம், விளையாட்டில் எந்தவித ஆர்வமும் காட்டாமல், ஒலிம்பிக் போட்டியில் மட்டும் பதக்கங்களை இந்தியா அள்ளி வர வேண்டும் என்று பேராசைப்பட்டால் எப்படி?
ஒலிம்பிக் தடகளப் போட்டிக்குத் தகுதிபெற்றுப் பங்கேற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 14-ஐத் தாண்டாதபோது, நிறையப் பதக்கங்களைக் கனவுதான் காண முடியுமே தவிர, நடைமுறையில் அது எப்படிச் சாத்தியம்?
இன்றைய தேதிவரை நாம் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் ககன் நரங், விஜயகுமார் இருவரது வெற்றியால் ஒரு வெண்கலம், ஒரு வெள்ளி பெற்றோம். சாய்னா மூலம் ஒரு வெண்கலம் கிடைத்தது. மேரி கோம் அரையிறுதியில் நுழைந்துள்ளதால் வெண்கலம் உறுதி, தங்கம், வெள்ளி கிடைப்பது போட்டியைப் பொறுத்தது. ஆக, 13 விளையாட்டுகளில் பங்கேற்கச் சென்ற 83 பேர் கொண்ட இந்திய அணி இதுவரை பெற்றிருப்பது நான்கே நான்கு பதக்கங்கள்!
பாட்மிண்டன் போட்டியில் சாய்னா தங்கம் வெல்வார் என்று அவரது தரவரிசையைக் கருத்தில்கொண்டு நம்பிக்கை வைத்தோம். அவர் வெண்கலம்தான் பெற முடிந்தது. அடுத்த நம்பிக்கை கிருஷ்ணா பூனியா வட்டெறிந்து சாதனை நிகழ்த்துவார் என்று நம்பினோம். அவரால் ஏழாவது இடத்துக்குத்தான் வர முடிந்தது. இது இவர்களின் தவறு அல்ல. இவர்களது திறமையை மேலும் பட்டைதீட்டத் தவறிய இந்திய அரசின் தவறு. ஒலிம்பிக் நேரத்தில் மட்டும் இவர்களைத் திரும்பிப் பார்ப்பதும் மற்ற நேரங்களில் மறந்துவிடுவதும் இந்திய விளையாட்டுத் துறையின் தவறு.
ஒலிம்பிக்கில் மற்றவர்களோடு போட்டியிட்டு விளையாடி, தகுதித்தேர்வு நிலையிலேயே, அல்லது காலிறுதி, அரையிறுதியில் வெளியேறும் நம் இந்திய வீரர்களை, ஏதோ அவர்கள் தேசத் துரோகம் செய்துவிட்டதைப்போன்று கூனிக் குறுகிப் போகச் செய்கிறது நமது எதிர்பார்ப்புகள்.
அவர்கள் விளையாடத் தேவையான எதையும் செய்து கொடுக்காத இந்திய அரசை நாம் குற்றஉணர்ச்சிக்கு உள்ளாக்காமல், உலகத் தரத்துக்கு இணையாக ஆட இயலாமல் பின்தங்கிப் போன இந்திய வீரர்களின் குற்றஉணர்ச்சியைத் தூண்டி, கண்ணீர் சிந்த வைப்பதால் என்ன பயன்?
ஒலிம்பிக் சென்ற இந்திய வீரர்கள் விருதுகள் பெறாமல் திரும்பினால் அது அவர்கள் குற்றமல்ல. உலகத் தரத்துக்கு இணையான வீரர்களை உருவாக்கத் தவறிய இந்திய அரசின் குற்றம். விளையாட்டுப் போட்டியில் ஆர்வம் செலுத்தாமல், ஆனால், விளையாட்டுக்கான நிதிஒதுக்கீட்டில் முறைகேடு செய்வதில் மட்டும் ஆர்வம் காட்டும் அரசியல்வாதிகளின் குற்றம்.
தற்போது நான்கு விருதுகள் பெற்றவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு ரொக்கப் பரிசை அள்ளி வழங்கும். இதே ஆர்வத்தை விளையாட்டு மேம்பாட்டுக்காக, பயிற்சிக்காக அரசுகள் செலவிடுவதில்லை. இந்த நான்குபேரில் துப்பாக்கி சுடுதல், பாட்மிண்டன் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் சொந்தத் திறமையால் அதைச் சாதித்தனர். அந்த ஏகலைவர்களுக்கு அர்ஜுனா விருது நிச்சயம்.
ஒலிம்பிக் தடகளத்தில் இதுவரை இறுதிச்சுற்றில் பங்கேற்றவர்கள் மில்கா சிங், பி.டி.உஷா, எஸ்.ஸ்ரீராம், குர்பஜன் சிங், அஞ்சு பாபி ஜார்ஜ். இப்போது ஆறாவது நபராக பூனியா. ஆறே ஆறு பேர் மட்டுமே!
இந்த நிலைமைக்காக வருத்தப்படவும், வேதனைப்படவும் செய்யாத இந்தியர்கள், பதக்கங்களை நாம் வென்றெடுக்கவில்லை என்று வருத்தப்படுவதில் அர்த்தம் இல்லை.
ஒவ்வொரு விளையாட்டுக்கும் நல்ல பயிற்சிக்களம், பயிற்சியாளர், விளையாட்டுக் கருவிகள் ஊக்கத்தொகை போன்ற எதையுமே வழங்காமல், அதிலும்கூட ஊழல் செய்தால், நாம் விருதுகளை எப்படிப் பெறமுடியும்? பொறியியல் கல்லூரியிலும் மருத்துவக் கல்லூரியிலும் இடம் பெறுவதற்காக மட்டுமே விளையாட்டைப் பயன்படுத்தும் ஊழல்களால் எப்படி சர்வதேச விருது கிடைக்கும்?
பொருளாதார ரீதியில் 9-வது இடத்திலும் மக்கள் தொகையில் இரண்டாம் இடத்திலும் உள்ள இந்தியாவினால் 4 பதக்கங்கள் மட்டுமே வெல்ல முடிந்ததை எண்ணி வருந்தும் இந்தியர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறார்கள்; இத்தகைய நிலைமைக்கு அரசுக்கு எந்த அளவுக்குப் பொறுப்போ அதே அளவு மக்களுக்கும் உள்ளது.
இந்தியாவில் எந்த நாளிலும் தொலைக்காட்சியில் காண நேர்ந்த விளையாட்டு, இந்தியர்களுக்கு எல்லா வீரர்களின் பெயரும் அத்துப்படியான விளையாட்டு கிரிக்கெட். நம் துரதிருஷ்டம், அந்த விளையாட்டு ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறவில்லை. கிரிக்கெட் ஒன்றைத் தவிர, எந்த விளையாட்டைப் பற்றியும் என்றைக்கும் கவலைப்படாமல், ஒலிம்பிக் நேரத்தில் மட்டும் நமது வீரர்கள் தங்கப் பதக்கமும், வெள்ளிப் பதக்கமும் பெறவில்லையே என்று நாம் ஆதங்கப்படுவது போலித்தனம் அல்லாமல் வேறென்ன?
ஒவ்வொரு விளையாட்டிலும் பயிற்சிபெறத் தேவையான விளையாட்டுக் களம், சூழல், சிறந்த பயிற்சியாளர்கள் போன்ற அனைத்தையும் உறுதி செய்து, அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு இப்போதே வீரர்களைத் தயார்படுத்திட அரசாங்கத்தை வலியுறுத்துவது எப்படி நமது கடமையோ, அதேபோன்று தங்கள் குழந்தைகளை விளையாட அனுப்பி வைப்பதும் மக்களின் கடமை. குழந்தைகளுக்கு பல விளையாட்டுகளைக் காட்டி, அவர்களுக்கான விளையாட்டைத் தேர்வு செய்ய சுதந்திரம் தர வேண்டும். கிரிக்கெட்டும், செஸ்ஸýம் மட்டுமே விளையாட்டு என்கிற மனோபாவம் ஏற்பட்டிருப்பதில் பெற்றோருக்கும் பங்கு இருக்கிறது.
தங்கள் வீட்டுக் குழந்தைகளைப் பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செய்யாத எந்த ஒரு இந்தியனுக்கும், லண்டன் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் விருதுகளை அள்ளி வரவில்லையே எனக் குற்றம் சொல்லும் தார்மிக உரிமை இல்லை!

Monday, August 6, 2012

தொடர்கதை.. (சிறுகதை)


நுனி இலையில் சாதம் மலைபோல வெடித்து கொட்டப்பட்டிருந்தது. அதைச்சுற்றி விதவிதமான பதார்த்தங்கள்.ஆனால் எதிலும் உப்பில்லை.

லேமினேட் செய்யப்பட்டிருந்த..படத்தில்..மாலையுடன்..அந்த இலையையும்,அதனருகே ஏற்றிவைத்திருந்த குத்துவிளக்கையும் பார்த்துக் கொண்டிருந்தார் சபேசன்..

'சபேசனின் ஆவி வந்து..இந்த படையலை சாப்பிட்டுவிட்டு..போங்கடா..நீங்களும்..உங்க சாப்பாடும் என வெறுத்து பூஉலகை விட்டு ஒடிவிடும்..'என்று சாஸ்திரிகள் சொல்லியபடியே..'அம்மா..நீங்கக் கூட வந்து பரிமாறலாம்' என்றார் மதுரத்திடம்.

மாட்டேன்..என்று தலையை ஆட்டி..மறுப்பு சொன்ன மதுரம்..'என்னங்க..நான் எப்படி சமைச்சுப் போட்டாலும்..நல்லாயிருக்குன்னு..நாக்கை சப்புக் கொட்டிக்கொண்டு சாப்பிடுவீங்களே.. ..இப்படிப்பட்ட சாப்பாட்டை நான் போடமாட்டேன்'..ஆறடி சபேசனாக உலா வந்தவரான சபேஸனின்..ஓரடி படத்திடம் புலம்பினாள்.

சபேசனின்..காரியங்கள் நடந்துக் கொண்டிருக்கின்றன.சாஸ்திரிகள் யாருக்கும் புரியாத..சமஸ்கிருதத்தில்..மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருக்க..மகன்கள் இருவரும்..அரைகுறையாக அவற்றை முணுமுணுத்துக் கொண்டிருந்தனர்.அதற்குள்..சபேசன் பற்றி நாமும் சற்று தெரிந்துக் கொள்வோம்.

சபேசன்....ஒரு தனியார் நிறுவனத்தில்..எழுத்தராக வேலை செய்து வந்தார்.ஆண் குழந்தை ஒன்று..பெண் குழந்தை ஒன்று.போனால் போகிறது..வேண்டாம் என நினைத்தும்..கொசுறாக இன்னொரு மகனும் பிறந்தான்.

ஆக..மூன்று குழந்தைகளுடன்..அவருக்கு வரும் சொற்ப சம்பளத்தில்..வாய்க்கும்..வயிற்றுக்குமான சண்டையுடன் அவர்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.ஆனாலும்..தம்மால் குழந்தைகளுக்கு எந்த சொத்தும் வைக்க முடியாது..என்பதால்..கல்வி சொத்தையாவது கொடுக்கலாம்..என தன் தகுதிக்கு மீறி மூத்தவனை..இஞ்சினீரிங்க படிக்க வைத்தார்.

பி.ஈ., மூன்றாம் ஆண்டின் போதே..காம்பஸ் இண்டெர்வியூவில்..பெங்களுருவில் உள்ள மென்பொருள்துறை கம்பெனி ஒன்று..இவனைத் தேர்ந்தெடுத்தது.

கை நிறைய சம்பளம்..இனி வாழ்வில் சற்று வசதியாய் இருக்கலாம்..என அவர் எண்ணியபோது...அவனிடமிருந்து ஒரு பெரிய கடிதம் வந்தது.

அதில்..அவனுடன் வேலை செய்யும்..சுதாவை திருமணம் செய்துக் கொண்டதாகவும்..அவனை மன்னிக்கும் படியும் எழுதி இருந்தான்.மேலும்..இருவருக்கும் கிடைக்கும் சம்பளத்தை கணக்கிட்டு...அலுவலகம் அருகிலேயே..ஒரு ஃப்ளாட் வாங்கிவிட்டதாகவும்..அதன் மாதாந்திர தவணைத்தொகையே 30000க்கு மேல் ஆவதால்..குடும்பம் நடத்தவே சிரமப்படுவதாக எழுதி இருந்தான்.

கடிதம் கண்ட மதுரம்..நிலைகுலைந்து விட்டாள்...சபேசனோ..'மதுரம் கவலைப்படாதே!..ஆண்டவன்..நமக்கு சோதனையைக் கொடுத்தாலும்...இரு கைகளையும் கொடுத்திருக்கிறான்..கடைசிவரை உழைக்க" என்றார்...மேலும்..'நம் கையிலேயே ஐந்து விரல்களும்..ஒன்றாகவா இருக்கின்றன..நம்ம கடமையைச் செய்தோம்..அதற்கு பலனை எதிர்ப்பார்த்தது தவறு'என ஆறுதல் கூறினார்.தன் மனவருத்தத்தை வெளிக்காட்டாது.

இப்போது..அவர் கவனம்..அடுத்த பையன் மீது சென்றது...அவனையும்..நன்கு படிக்கவைத்தார்.அவனும் ஐ.ஏ.எஸ்.,தேறினான்.தில்லியில் வேலை.ஆனால் அவன் நடத்தையும்..முதல் மகனே பரவாயில்லை என்பதாய் இருந்தது.

முதல் மகனாவது..கல்யாணத்திற்கு முன் தந்தைக்கு தெரிவித்தான்.ஆனால்..இவனோ..திடீரென ஒரு நாள்..ஒரு பஞ்சாபி பெண்ணுடன் வந்தான்.அவளைத் திருமணம் செய்துவிட்டதாகக் கூறி..அலுவலக வேலை நிமித்தம் சென்னை வந்துள்ளதாகவும்..உடனே கிளம்ப வேண்டும் என்றும் கூறிவிட்டு , கிளம்பிவிட்டான்.

இந்நிலையில் சபேசன்..வேலையிலிருந்து ஓய்வு பெற்றார்.தனது முடிவுக்கு முன்னால்..தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைக்கவேண்டிய அவசியத்தை உணர்ந்து..தனக்கு வந்த ஓய்வு ஊதியத்தில்..தன் மகளின் திருமணத்தை முடித்தார். 

பின்..தங்களில் எஞ்சிய வாழ்நாளை எப்படித் தள்ளுவது..என்ற கவலை ஏற்பட..ஒரு வக்கீல் இடத்தில் டைபிஸ்ட் வேலை கிடைத்தது.அதில் வரும் வருமானம்...இருவர் வாழ்க்கையை ஓட்டவே சரியாய் இருந்தது.

சிலநாட்களாக..சபேசனுக்கு..கண் மார்வை மங்க ஆரம்பிக்க..கண் மருத்துவர் ஒருவரிடம் சென்றார்.இவர் கண்களை பரிசோதித்துவிட்டு..கேடராட் இருப்பதாகவும்...உட்னே அறுவைசிகிச்சை செய்யவேண்டும் என்றும் கூறினார்..அதற்கு சில ஆயிரங்கள் ஆகும் என்றும் கூறினார்.

கணவருக்குத் தெரியாமல்..இரு மகன்களுக்கும் கடிதம் எழுதினாள் மதுரம்..அதில்..உங்களுக்கு கல்வி ஒளி வழங்கியவருக்கு..கண்ணொளி வழங்குங்கள் என வேண்டினாள்.

வழக்கம் போல..இருவரும் ஏதேதோ சாக்கு கூறி..தங்களால் தற்போது இயலாது..என கூறிவிட்டனர்.

ஒருநாள் கண் சரியே தெரியாது..கத்திரி வெயிலில்..கால்கள் கொப்பளிக்க, வேக வேகமாக சாலையைக் கடக்கும் போது..வேகமாக வந்த பேருந்தில் அடிபட்டார்..மருத்துவ மனைக்கு எடுத்து செல்லும் வழியிலேயே மரணம் அவரைத் தழுவியது.

அப்பா...உயிருடன் இருந்த போது..அவரை நல்லபடியாக..வைத்து காப்பாற்றத் தெரியாத..மக்கள்..அவர் இறந்ததும்..காரியங்களில் எந்த குறையும் வைக்கக் கூடாது என்று தீர்மானித்தனர்.

சபேசன் ஆவி போகும் வழியில்...தாகத்தால் தவிக்கக்கூடாது என கோ தானம் செய்யப்பட்டது..

வெயில் காலங்களிலும் வெறும் கால்களோடு நடந்தவரின் பாதங்களை கற்கள்..முற்களிடம் இருந்து காப்பாற்ற செருப்பு தானம் செய்யப்பட்டது.

உயிருடன் இருந்த போது கண்ணொளிக்கு உதவாதவர்கள்..போகும் வழியில் அவர் ஆவி தடுமாறக் கூடாது என விளக்குகள் தானம் செய்தனர்.

போகும் வழியில்..மழை ,வெயிலிலிருந்து காக்க..குடை தானம் செய்யப்படுகிறது..

போங்கடா..நீங்களும் உங்க தானங்களும்..எனக்கு ஏதும் தேவையில்லை..என படத்திலிருந்த அவர் சொல்வது மதுரத்திற்கு மட்டுமே கேட்டது.

இது போன்ற சபேசன் கதைகள்..என்றுமே தொடர்கதைகள்தான்.

Wednesday, August 1, 2012

மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டுசெல்லுங்கள்: எஸ்.எம்.கிருஷ்ணா





கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க, மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டுசெல்லுங்கள் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, கட்சியினருக்கு அறிவுரை கூறினார்.

 பெங்களூர் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில், தொடர்ந்து 4-வது முறையாக காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட கே.ரகுமான்கான் மற்றும் நேரு யுவகேந்திராவின் இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள சலீம் அஹமது ஆகியோருக்கு பாராட்டு விழா பெங்களூர் டவுன் ஹாலில் புதன்கிழமை நடந்தது. இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கலந்துகொண்டு, இருவரையும் பாராட்டி, கௌரவித்துப் பேசியது: கர்நாடக மக்கள் எதையும் எளிதில் மறக்கும் குணம் கொண்டவர்கள். அதனால் கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க, மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும்.

 காங்கிரஸ் கட்சிக்கு மக்களை ஏமாற்றும் வேலைகளைச் செய்யத் தெரியாது. மத்திய அமைச்சரவையில் 6 முஸ்லிம்களுக்கு அமைச்சர் பதவி வழங்கியிருக்கிறோம். ஆனால் மஜத ஒரு முஸ்லிமுக்கு எம்எல்சி பதவி அளித்துவிட்டு, தங்கள் கட்சி முஸ்லிம் மக்கள் மீது மிகுந்த அக்கறை உள்ள கட்சி என்று பறைசாற்றிக்கொள்கிறது. கர்நாடகத்தில முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 4.4 சவீதம் இடஒதுக்கீடு, நான் முதல்வராக இருந்தபோது தான் அமல்படு்த்தப்பட்டது.

 மஜத, பாஜகவை ஆட்சி அமைக்க அழைக்கும். தொடர்ந்து பாஜகவை குறைகூறும். பின்னர் இவர்களை ஆட்சியில் அமர்த்தியதற்கு எங்களை மன்னித்துவிடுங்கள் என்று மக்களிடம் நாடகமாடுவார்கள். முஸ்லிம் மக்களை யாராலும் ஏமாற்ற முடியாது. அமீது ஹன்சாரி திறமையானவர். அவருக்கு துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு மீண்டும் நிறுத்தியிருக்கிறோம். காங்கிரஸ் என்றும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருக்கும். காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கு பல்வேறு பதவிகளை அளித்து மகிழ்ந்துள்ளது. அதை மற்றக் கட்சிகளைப்போன்று வெளிப்படுத்திக்கொள்வதில்லை என்றார்.

மேலே சொன்னவை அமைச்சர் கிருஷ்ணா சொன்னது..

அவர் சொல்ல மறந்த அவரது சாதனை..

நான் கர்நாடக முதல்வராயிருந்த போது உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காது தமிழகத்திற்கு காவிரி நீர் கொடுக்க மறுத்தவன்.அந்த அளவு இந்திய மக்கள் மீது அக்கறை கொண்டவன்.இதையும் மக்களிடம் எடுத்து செல்லுங்கள்.


Tuesday, July 31, 2012

ரூபாய் பத்தாயிரம் பரிசுக் கதை..




ஒவ்வொரு ஆண்டும் 'அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியை' கல்கி வார இதழ் நடத்தி வருகிறது.பரிசு பெறும் முதல் கதைக்கு ரூ.10000 மும் இரண்டாம், மூன்றாம் பரிசுகளாக தலா 7500, 5000 வழங்கி வருகிறது.தவிர்த்து பிரசுரிக்க தேர்வான கதைகளுக்கும் அதற்கான சன்மானத்தை அளித்து வருகிறது.

இந்த ஆண்டிற்கான நடுவர்களாக வெ.இறையன்பு மற்றும் இயக்குநர்,நடிகை ரோகிணி ஆகியோர் பொறுப்பேற்று ஆசிரியர் குழுவினரோடு இணைந்து பரிசுக் கதைகளைத் தேர்ந்தெடுத்தனர்.

இவ்வாண்டு 10000 ரூ பரிசு பெறும் முதல் பரிசுக்கான  'போன்சாய் நிழல்கள்' தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.இதை எழுதியவர் செம்பை முருகானந்தம்.திருச்சியைச் சேர்ந்தவர்.
கதை இவ்வார கல்கியில் வெளிவந்துள்ளது.

கதை நடை..ஒருவர் கேள்விகளைக் கேட்க மற்றவர் பதில் சொல்வது போல அமைந்துள்ளது.கடைசியில் கேள்வி கேட்பவர் யார், பதில் சொல்பவர் யார் என்று இரண்டுவரிகளை படிக்கையில்...'ஆஹா...முதல் பரிசுக்கான அனைத்து தகுதிகளும் கொண்ட கதை' என்று மனம் துள்ளல் போடுகிறது.

கதையை முழுதுமாக விமரிசப்பதுடன்..அதைப் படித்துப் பார்த்தால்தான் சுவையை அனுபவிக்கமுடியும்.

சிறுகதைகள் இலக்கியத் தரம் வாய்ந்தவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.வாழ்த்துகள் கதாசிரியருக்கு மட்டுமல்ல..இக்கதை பரிசுக்கு தேர்ந்தெடுத்த நடுவர்கள் மற்றும் ஆசிரியர் குழுவினருக்கும்.

இதை சிறந்த கதையாக தேர்ந்தெடுத்த நடுவர்களின் கருத்து...

ரோஹிணி - தி.ஜா.வின் கதைகள் படிக்கும் போது யார், எங்கே, எவருடன் பேசுகிறார் என்பதை புரிந்துகொள்ள சில வரிகள் ஆகும்.அப்படியொரு தன்மை இந்தக் கதையில் பார்க்க நேர்ந்தது.இறையன்பு சுட்டிக்காட்டியிருப்பது போல் இந்தக் கதை இன்றைய காலத்தின் பிரதிபலிப்பாகவும் இருக்கிறது.

இறையன்பு - இன்றைய சூழலில் குழந்தைகளின் மனத்தில் அன்புடன் விதைக்கப்படும் கல்வி எவ்வளவு இனிய அனுபவமாக மாறும் என்பதை உணர்த்தும்  அழகான சிறுகதை.உயரிய உத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்தக்கதை அவாமிகுந்த பெற்றோர்களிடம் மாற்றம் ஏற்படுத்தக்கூடியது.


டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்?




 


தமிழ்நாட்டுக்கு அதிக வருவாயை அள்ளிக் கொடுக்கும் மதுபானக் கடைகளை அடியோடு இழுத்து மூடி முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி மத்திய அரசை தீர்மானிக்கக் கூடிய சக்தியாக உருவாக ஒரே வழி என்ன? என்று ஜெயலலிதா தமது ஆலோசகர்களிடம் விவாதித்திருக்கிறார். அப்போதுதான் தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினால் நிச்சயம் பெண்களின் வாக்குகள் அனைத்துமே அதிமுகவுக்கு கிடைக்கும் என்றும் முன்னுதாரணம் மிக்க அரசாக தமிழக அரசு திகழும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
இதனை முழு அளவில் ஜெயலலிதாவும் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. நிச்சயமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடி மதுவிலக்கை அமல்படுத்துவது என்ற முடிவில் ஜெயலலிதா உறுதியாக இருந்தாலும் டாஸ்மாக் அளவுக்கு வருவாய் தரக் கூடிய வழிகள் என்ன என்பதுதான் அவர் எழுப்பிய கேள்வி. இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தரவும் மூத்த அதிகாரிகளுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் முழுமையான அளவில் மதுவிலக்கு நடைமுறையில் உள்ள போதும் லாபம் ஈட்டக் கூடிய பட்ஜெட்டை வேளாண்துறை மூலம் சாதித்து வருகிறது அம்மாநில அரசு. குஜராத் அரசு எப்படியான வழிகளில் வருவாயைப் பெருக்குகிறது என்று ஆராயவும் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்திருக்கிறாராம்.
அனேகமாக ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்றோ அல்லது அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தியன்றோ இதற்கான அதிரடி அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

(தட்ஸ்தமிழ்)

Monday, July 30, 2012

மீண்டும் பரிதாபம்-சென்னையில் ஸ்கூல் வேனில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி



 பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்த 2ம் வகுப்பு மாணவி ஸ்ருதி பலியானதால் ஏற்பட்ட பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் திருமுல்லைவாயலில் ஒன்றரை வயது ஆண் குழந்தை பள்ளி வேனில் சிக்கி பலியானது.
சென்னையில் உள்ள ஜியோன் பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்த 2ம் வகுப்பு மாணவி ஸ்ருதி பலியானார். இதைத் தொடர்ந்து வேலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளிலும் பள்ளி வாகனத்தில் அடிபட்டு 2 மாணவிகள் பரிதாபமாக இறந்தார்கள். இந்நிலையில் சென்னையை அடுத்த திருமுல்லைவாயலில் ஒன்றரை வயது ஆண் குழந்தை பள்ளி வேனில் சிக்கி பலியானது.
அம்பத்தூர் அருகே உள்ள திருமுல்லைவாயல் அன்னனூர் பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் ஆனந்தன். அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி மீனா. அவர்களின் குழந்தைகள் சந்தோஷ் (6), சுதாகர் (3 1/2), சஞ்சய் (1 1/2). அதில் சந்தோஷும், சுதாகரும் அரும்பாக்கம் லிட்டில் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கின்றனர்.
இத்தனை நாட்களாக அவர்கள் இருவரும் தங்கள் தந்தையுடன் பைக்கில் பள்ளிக்கு சென்று வந்தனர். இந்நிலையில் அவர்களை பள்ளி வேனில் அனுப்ப அவர்களின் பெற்றோர் முடிவு செய்தனர். இன்று முதன் முதலாக பள்ளி வேனில் அவர்களை அனுப்பி வைக்க இருந்தனர். காலை 8 மணிக்கு வேன் வந்தது. அப்போது மீனா சஞ்சயை கீழே இறக்கிவிட்டுவிட்டு மற்ற 2 மகன்களையும் வேனில் ஏற்றினார்.
வேனும் கிளம்பியது. இதற்கிடையே குழந்தை சஞ்சய் தவழ்ந்து வேனுக்கு அடியில் சென்றதை யாரும் கவனிக்கவில்லை. டிரைவர் வேனை எடுத்ததும் குழந்தை பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானான். இதைப் பார்த்த மீனா கதறினார். உடனே வேன் டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து வேனில் இருந்த குழந்தைகளை கீழே இறக்கிவிட்டு வேனை நொறுக்கினர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கூடியிருந்தவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(தகவல் தட்ஸ்தமிழ்)


Sunday, July 29, 2012

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ



டெல்லியிலிருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பயணிகள் கருகி உயிரிழந்தனர். தீ விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு நெல்லூர் ரயில் நிலையத்தை இந்த ரயில் வந்தடைந்தது. நெல்லூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட சில நிமிடங்களிலேயே எஸ் 11 என்ற கோச்சில் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. அப்போது பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கப் போராடினர். அப்போது தீயில் கருகிய நிலையில் 25 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. தீக்காயங்களுடன் 20க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் எஸ் 11 கோச்சில் 72 பயணிகள் வந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று தெரிகிறது.
சம்பவ இடத்தில் நெல்லூர் ஆட்சியர் ஸ்ரீதர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். தெற்கு ரயில்வே அதிகாரிகளும் நெல்லூர் விரைந்துள்ளனர்

கவிஞர் வாலிக்கு இது அழகா....




கவிஞர் வாலியின் பரம ரசிகன் நான்(கலாரசிகன்) என்பது எனது நண்பர்கள் அனைவருக்குமே தெரியும். மெட்டுக்குப் பாட்டுக்கட்டும் வித்தையைக் கர்ப்பத்திலேயே கற்றுத் தேர்ந்த வித்தகர் அவர் என்பதிலும், எதுகையும் மோனையும் அவரது கவிதைகளில் காட்டருவி போலத் துள்ளிக் குதித்து வந்துவிழும் என்பதிலும் யாருக்கும் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.
அகவை எண்பதைக் கடந்துவிட்டவர் கவிஞர் வாலி. "அவதார புருஷன்', "பாண்டவர் பூமி', "ராமானுஜ காவியம்', "கிருஷ்ண விஜயம்' போன்ற படைப்புகள் அவருக்குக் "காவியக் கவிஞர்' என்கிற பெயரை ஈட்டித் தந்திருக்கின்றன. மூன்று தலைமுறை கடந்து நான்காவது தலைமுறைக் கதாநாயகர்களுக்கும் சினிமாவில் மெட்டுக்குப் பாட்டெழுதிக் கொண்டிருக்கிறார்.
"துக்ளக்' வார இதழில் அவர் எழுதி வரும் "எனக்குள் எம்.ஜி.ஆர். ஒரு எக்ஸ்ரே தொடர்' பகுதியில் அவர் எங்கள் ஆசிரியர் சாவி சார் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் அவதூறான செய்திகள், வயதும் அனுபவமும் அவரை ஏன் இன்னும் பக்குவப்படுத்தவில்லை என்கிற வருத்தத்தைத்தான் ஏற்படுத்தியது. கவிஞர் வாலி என்ன குறிப்பிட்டிருந்தார் என்பதைத் தெரிவிக்காமல் நான் மேலே எழுதினால் அதைப் படிப்பவர்களுக்குத் தலையும் புரியாது, வாலும் தெரியாது என்பதால் அதை மறுபதிவு செய்ய வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.
 ""கண்ணதாசன் காலமான பிறகு, தனக்கு அரசவைக் கவிஞர் பதவி கிடைக்க வேண்டும் என்று இரண்டெழுத்துக் கவிஞர் ஒருவர் இரவு பகலாக ராமாவரம் தோட்டத்து வாசலில் தவம் கிடக்கிறார்'' - இப்படி அந்தப் பத்திரிகையில் என்னை மறைமுகமாகக் குறிப்பிட்டுச் செய்தி வந்திருந்தது.
எனக்கு அளவற்ற ஆத்திரம் வந்தது. ஏனெனில், எம்.ஜி.ஆரோடு நான் பழகிய இருபத்தைந்து வருட நட்பில், இருபத்தைந்து தடவை கூட ராமாவரம் தோட்டத்துக்குள் போனது கிடையாது. அப்படியிருக்க, இப்படி "சாவி' எழுதியது அதர்மமல்லவா?
சில நாள்கள் கழித்து, "சாவி'யை மூப்பனார் வீட்டில் சந்திக்க நேர்ந்தது.
""சாவி சார்! வயசில நீங்க என்னைவிட ரொம்பப் பெரியவரு... இப்படி என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் எழுதலாமா? இப்படித்தான் என்னைப் பற்றி நையாண்டி செய்து எழுதிய ஒரு பத்திரிகையாளரைப் பல பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே, பாரதிராஜாவின் சொந்தப் படமான "புதிய வார்ப்புகள்' பூஜையன்னிக்கு, அருணாசலம் ஸ்டூடியோவிலே, ஓங்கி ஒரு அறை அறைஞ்சேன்! உங்க வயது கருதி வாய் வார்த்தையோடு விடறேன்''.
இதுதான் கவிஞர் வாலி பதிவு செய்திருக்கும் சம்பவம். இது உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள ஆசிரியர் சாவி சாரும் உயிரோடு இல்லை. மூப்பனாரும் காலமாகிவிட்டார்.
இப்படிக் கவிஞர் வாலி சொல்லி முடித்ததும் ஆசிரியர் சாவி அவரது கன்னத்தில் "பளார்' என்று ஒரு அறை விட்டார் என்று யாராவது சொன்னால் அதற்கு எப்படி ஆதாரமோ சாட்சியோ இல்லையோ, அதுபோலக் கவிஞர் வாலியின் பதிவுக்கும் சாட்சி கிடையாது. அது போகட்டும்.
சாவி சார் ஆசிரியராக இருந்த பத்திரிகையில் அப்படி என்ன மோசமாக எழுதிவிட்டார்கள் என்று கவிஞர் வாலி கோபப்பட வேண்டும்? பொது வாழ்க்கைக்கு வந்துவிட்ட ஒருவர் சில அவதூறுகளையும், விமர்சனங்களையும் தாங்கிக் கொள்ளத்தானே வேண்டும்? அப்போதே "நான் ஒன்றும் அரசவைக் கவிஞர் பதவிக்காக ராமாவரம் தோட்டத்துக்குப் போகவும் இல்லை, ஆசைப்படவும் இல்லை' என்று கவிஞர் வாலி மறுப்பு எழுதியிருக்கலாமே, அறிக்கை வெளியிட்டிருக்கலாமே, ஏன் செய்யவில்லை?
தன்னை விமர்சனம் செய்த பத்திரிகையாளரைக் கன்னத்தில் அறைந்தேன் என்று அகவை எண்பதில் பெருமை தட்டிக் கொள்ளக் கவிஞர் வாலி நாணிக் கூசியிருக்க வேண்டாமா? அவதார புருஷனையும், பாண்டவர் பூமியையும், கிருஷ்ண விஜயத்தையும் எழுதுவதற்காகப் படித்த ராமாயணத்திலிருந்தும், மகாபாரதத்திலிருந்தும், பாகவதத்திலிருந்தும் கவிஞர் வாலி கற்றுக்கொண்டது அவ்வளவுதானா?
கவிஞர் வாலி விரும்பினாரா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், திரையுலகிலும், பொதுமக்கள் மத்தியிலும் எல்லோருக்குமே தெரிந்த உண்மை, கவியரசு கண்ணதாசனையும், புலவர் புலமைப்பித்தனையும், கவிஞர் முத்துலிங்கத்தையும் அரசவைக் கவிஞராக்கி அழகு பார்த்த எம்.ஜி.ஆர்., கவிஞர் வாலியைப் "பத்மஸ்ரீ' விருதிற்குக்கூடப் பரிந்துரைக்கவில்லை என்பது. கருணாநிதி அரசால் பரிந்துரைக்கப்பட்டு 2007-இல்தான் அவருக்குப் பத்மஸ்ரீ விருது தரப்பட்டது என்பதுதானே உண்மை?
கவிஞர் வாலியால் தன்னைத் தாங்கிப் பிடித்த, மரியாதைக்குரிய பத்திரிகையாளர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளவர்களே கூடத் தங்களை ஆசிரியர் சாவியுடன் ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சாவி சாரின் உயரமும், பங்களிப்பும் எங்கே, இவர்கள் எங்கே?
வெகுஜனப் பத்திரிகைக்கு ஜெயகாந்தனை அழைத்து வந்தவர், கவியரசு கண்ணதாசனை தினமணி கதிரில் "அர்த்தமுள்ள இந்து மதம்' எழுத வைத்து அவருக்குப் புதியதொரு பரிமாணத்தைக் கொடுத்தவர்; நாடகம், சினிமா என்று மட்டுமே இருந்த "சோ' சாரை "மை டியர் பிரம்மதேவா' நாடகத் தொடரை எழுத வைத்துப் பத்திரிகைப் பிரவேசம் செய்யப் பிள்ளையார் சுழி இட்டவர், நாங்கள் சாவி சாரின் மோதிரக் கையால் குட்டுப்பட்டவர்கள் என்று எழுத்தாளர்கள் சுஜாதா, புஷ்பா தங்கதுரை, சிவசங்கரி, பாலகுமாரன், சுப்ரமண்ய ராஜு, மாலன் என்று ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் பட்டாளத்தால் மதிக்கப்பட்டவர் எங்கள் ஆசிரியரான சாவி சார்!
சொல்லப்போனால் சாவி சாருடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் சாவி பத்திரிகையிலிருந்து விலகியவன்தான் நான். அதனால் அவர் எனது ஆசிரியர் இல்லாமலாகி விடுவாரா, இல்லை, அவரது குறைகள் அவரது நிறைகளை இல்லை என்றாக்கிவிடுமா?
திரு.வி.க.வுக்கும், கல்கிக்கும் பிறகு பத்திரிகை உலகில் ஒரு ஜாம்பவானாக வளைய வந்த ஆசிரியர் சாவியை இப்படித் தரக்குறைவாகச் சித்திரிக்கவும், தனது சொந்த மனமாச்சரியங்களையும், காழ்ப்புணர்ச்சியையும் தீர்த்துக்கொள்ள, கட்டுரைத் தொடர் எழுத முற்பட்டிருப்பதையும் பார்க்கும்போது நமது மதிப்பிலிருந்தும் மரியாதையிலிருந்தும் கவிஞர் வாலி சடசடவென்று சரிந்துவிடுகிறாரே...
சாவி சார் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நண்பராக இருந்தவர்தான். எம்.ஜி.ஆரைக் கடுமையாக விமர்சித்தவரும்தான். ஆனால், கடைசிவரை கருணாநிதியின் நண்பராகவே தொடர்ந்தவர். கவிஞர் வாலியைப்போல முதல்வர் பதவியில் கருணாநிதி இருக்கும்வரை அவரை "ஏ.எம் தொடங்கிப் பி.எம் வரை இமைமூடாப் பணி செய்யும் சி.எம்' என்று பாடிப் புகழ்ந்துவிட்டு, ஆட்சி மாறிய அடுத்த கணமே, முதல்வர் ஜெயலலிதாவை "ரங்கநாயகி' என்று வர்ணித்துத் துதிக்கும் சந்தர்ப்பவாதம் அவருக்கு இருந்ததில்லை.
சாவி சார் கோபக்காரர்தான். அவருக்கும் குற்றம் குறை உண்டுதான். ஆனால் அவர் ஒரு தலைசிறந்த பத்திரிகையாசிரியர் என்பதில் சந்தேகமே இருக்க முடியாது. அவரது பாசறையில் தயாரான என்னைப் போன்றவர்களால், இறந்துவிட்ட அவரை வசைபாடுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது.
எழுபதுகளில் ஒரு நாள். மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தில் சங்கர ஜயந்தியை முன்னிட்டுக் கவிஞர் வாலியின் தலைமையில் ஒரு கவியரங்கம் நடந்தது. அன்று கவியரசு கண்ணதாசன் உள்ளிட்டோர் அந்தக் கவியரங்கத்தை முதல் வரிசையில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தனர். கவிஞர் வாலியின் கவியரங்கம் என்று சொன்னால் கால்கடுக்க நின்றாவது அதைக்கேட்டு ரசிப்பதுடன், எழுதி எடுத்து மனனம் செய்யும் அளவுக்கு நான் அவரிடம் பித்துக் கொண்டிருந்தவன்.
கவிஞர் வாலி தனது கவியரங்கக் கவிதையைத் தொடங்கினார்.
 "சாக்கடையில் விழுந்தாலும்
 சந்தனத்தில் விழுந்தாலும்
 எதுவுமே -
 ஒட்டிக் கொள்ளாமல்
 உள்ளது உள்ளபடியே
 எழுந்து வருகிறது -
 என்னுடைய நிழல்.
 நிழலுக்கு இருக்கும் - இந்த
 நிட்காமிய ஞானம் - என்
 உடலுக்கும் வாய்க்குமாயின்-
ஆதிசங்கரரைப் போல்
அடியேனுக்கும் -
கள்ளும் ஒன்று;
 காய்ச்சிய ஈயமும் ஒன்று!'
இது எனக்கு மனப்பாடம். நான் விசனிப்பதெல்லாம் அகவை எண்பது கடந்தும் கவிஞர் வாலிக்கு அந்த நிட்காமிய ஞானம் ஏன் வாய்க்கவில்லை என்பதுதான். இத்தனை காவியங்களைப் படித்தும், படைத்தும் கூட மறைந்தவர்களைப் பற்றிய அவதூறுகளைப் பதிவு செய்யக்கூடாது என்கிற நனி நாகரிகம் அவருக்குத் தெரியவில்லையே?
இந்த வாரம் வாசகர்களிடம் நான் படித்ததைப் பகிர்ந்து கொள்ளாமல் எனது நெஞ்சக் குமுறலைப் பகிர்ந்து கொள்வதன் காரணம், கவிஞர் வாலி போலல்லாமல், அவர் இருக்கும்போதே அவரைப் பற்றிய எனது ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட வேண்டும் என்கிற எண்ணமும், சாவி சார் பற்றிய தவறான பதிவுக்கு அவரால் தயாரான பத்திரிகையாளன் என்கிற முறையில் பதிலளித்தாக வேண்டும் என்கிற குரு பக்தியும்தான் காரணம்.
கவிஞர் வாலி தன்னைப் பற்றித் தானே ஒரு கவியரங்கத்தில் எழுதிய கவிதை இது. நான் மிகவும் ரசிக்கும் கவிஞர் வாலியின் வரிகளில் இதுவும் ஒன்று -

மெட்டுக்குள் கருத்தரித்து
மெல்லவே இடுப்பு நோகத்
துட்டுக்குத் தகுந்தவாறு
முட்டையிடும் பெட்டைக் கோழி!

(நன்றி தினமணி)




Saturday, July 28, 2012

சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றால் என்ன...




இப்போதெல்லாம் பரவலாக பல அரசியல்வாதிகள் சொல்வது..'சட்டம் தன் கடமையைச் செய்யும்' ..

அப்படியென்றால் என்ன...

சட்டம் தவறு செய்பவரை முதலில் கைது செய்யும்..

கைது செய்யப்பட்டவர்..ஜாமினில் வெளிவருவார்..

வழக்கு நடைபெறும் ..பல ஆண்டுகள்..சில நூறு வாய்தாக்களுடன்..

சம்பந்தப்பட்டவர் குற்றவாளி என தண்டனை வழங்கப்பட்டு...அவர் மேல் முறையீடு செய்ய சில மாதங்களையும் கொடுக்கும்..

மேல் கோர்ட்டில் குற்றவாளியாய் கீழ் கோர்ட்டில் அறிவிக்கப்பட்டவர்..மேல் முறியீடு செய்வார்..வழக்கு நடக்கும்..

இதில் சாதகமாய் தீர்ப்பு இல்லையெனில்..பெஞ்ச், உயர்நீதிமன்றம், உச்ச நீதி மன்றம் என வழக்கு தொடரும்  ஆண்டு கணக்காய்..

இதனிடையில் சம்பந்தப்பட்டவர் அமரர் ஆகியிருப்பார்..அல்லது காவல்துறை சந்தேகத்திற்கு இடமின்றி குற்றத்தை நிரூபிக்கவில்லை என வழக்கு தள்ளுபடி செய்யப்படும்..

சட்டம் தன் கடமையைச் செய்த திருப்தியில் அனைவரும் இருப்பர்..


Friday, July 27, 2012

தமிழ்ப்படத்தைப் பார்த்து ஹாலிவுட் படம்...




கமல்ஹாசனின் வித்தியாசமான நடிப்பில் வெளியான ஆளவந்தான் படத்திற்கு ஹாலிவுட்டிலிருந்து சத்தம் போடாமல் ஒரு அரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. தன்னை அப்போது கடுமையாக விமர்சித்த விமர்சகர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பதில் இது என்று கமல்ஹாசன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
2001ம் ஆண்டு வெளியான ஆக்ஷன் திரில்லர் படம்தான் ஆளவந்தான். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான படம். ஆனால் படம் முழுக்க கமல்ஹாசனின் உத்திகள், யோசனைகள், முயற்சிகளே தலை தூக்கியிருந்தன. கமல்ஹாசன் வில்லன் மற்றும் கதாநாயகன் வேடத்தில் நடித்திருந்தார். அதிலும் வில்லனாக நடிக்க அவர் தனது உடம்பை மிகப் பெரிய அளவில் எடை கூட்டியிருந்தார். இந்த எடை கூட்டல் முயற்சிகள் அவரது உடல் நலனில் பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூட அப்போது பேசப்பட்டது.
ரவீனா டாண்டன், மனீஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்திற்கு சங்கர் ஈசான் லாய் இசையமைத்திருந்தனர். பின்னணி இசையை மகேஷ் மகாதேவன் கவனித்திருந்தார்.
இப்படத்தின் கதை கமல்ஹாசனுடையது. 1984ம் ஆண்டு அவர் எழுதிய தாயம் கதையை அடிப்படையாக வைத்துத்தான் இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருந்தார் கமல்ஹாசன்.
இப்படத்தில் வில்லனாக வரும் கமல்ஹாசனின் சண்டைக் காட்சிகள் வித்தியாசமான முறையில் அதாவது கிராபிக்ஸில் எடுக்கப்பட்டிருந்தன. அது அப்போது பலராலும் பாராட்டப்பட்டது. அதேசமயம், இப்படம் பல விமர்சனங்களையும் கூட சந்தித்தது. ஆனால் அதுகுறித்து அப்போதும் சரி, பிறகும் சரி கமல்ஹாசன் அலட்டிக் கொள்ளவே இல்லை.
இந்த நிலையில் ஆளவந்தான் படத்திற்கு ஹாலிவுட்டிலிருந்து ஒரு அரிய ஊக்கம் கிடைத்துள்ளது. அதாவது இப்படத்தில் வில்லனின் சண்டைக் காட்சிகள் வடிவமைப்பை பார்த்து அசந்து போன ஹாலிவுட் டைரக்டர் குவென்டைன் டரன்டினோ தனது கில் பில் (Kill bill) திரைப்பட வரிசையில் காட்சிகளை அமைத்தாராம்.
இந்தத் திரைப்படம் 2003ம் ஆண்டு உருவானதாகும். ஆனால் படம் நீளமாக இருந்ததால் அதை இரண்டு பகுதிகளாகப் பிரித்து முதல் பதிப்பை 2003லும், இரண்டாம் பாகத்தை 2004ம் ஆண்டிலும் வெளியிட்டார் குவென்டைன். தனது 3வது பாகத்தை 2014ல் வெளியிடவுள்ளார்
ஆளவந்தான் படத்தில் இடம் பெற்ற அந்த வித்தியாசமான கிராபிக்ஸில் அமைந்த சண்டைக் காட்சிகள் புதிய முயற்சி என்று புகழாரம் சூட்டிய அவர் அதே பாணியில் தனது படத்திலும் காட்சிகளை அமைத்துள்ளாராம். இதற்காக ஆளவந்தான் படத்தையும், கமல்ஹாசனையும் அவர் பாராட்டியுள்ளாராம்.
சமீபத்தில் மும்பை வந்திருந்த அவர் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பை சந்தித்துப் பேசியபோது இதுகுறித்துக் கூறினாராம் குவன்டைன்.
குவன்டைன் ஹாலிவுட்டில், பல்ப் பிக்ஷன், இன்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ், ரிசர்வாயர் டாக்ஸ் உள்ளிட்டப் படங்களை இயக்கியுள்ளார்.
ஒரு தமிழ்ப் படத்தைப் பார்த்து ஹாலிவுட்டில் காட்சி அமைக்கப்பட்டிருப்பது குறித்து கமல்ஹாசன் கூறுகையில், ஆளவந்தான் வந்தபோது அதற்கு பல விமர்சனங்கள், சலசலப்புகள். விநோதமாக பார்த்தனர், பேசினர். எனது சுய மேதமையை வெளிப்படுத்த முயற்சித்துள்ளதாக விமர்சித்தனர். ஆனால் இப்போது திறமையான ஒரு ஹாலிவுட் டைரக்டரே இந்த உத்திக்கு அங்கீகாரம் அளித்துள்ளதால், இனி மேலாவது விமர்சகர்கள் என்னுடைய படங்களில் நான் மேற்கொண்ட முயற்சிகளை சரிவர புரி்ந்து கொள்வார்கள் என கருதுகிறேன் என்று கூறினார்.
ஆளவந்தானால் தான் மிகப் பெரிய நஷ்டத்தை சந்தித்து விட்டதாக பின்னர் இப்படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி தாணு புலம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

(தகவல்-தட்ஸ்தமிழ்)


Thursday, July 26, 2012

உயர்நீதிமன்றம் தானாகவே முன் வந்து எடுத்துக்கொண்ட வழக்கு...





 ஓட்டை விழுந்த பள்ளிப் பேருந்துக்கு யார் எப்சி கொடுத்தது, எப்படிக் கொடுக்கப்பட்டது என்று சென்னை உயர்நீதிமன்றம் கோபத்துடன் கேட்டுள்ளது. ஜியோன் பள்ளி மாணவி ஸ்ருதி பஸ் ஓட்டை வழியாக விழுந்த பலியான சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. நாளை வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்றும் அது அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சென்னை தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 2வது வகுப்பு படித்து வந்த சேலையூர் ஜியோன் பள்ளி மாணவி ஸ்ருதி பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்தாள். இதில் பேருந்தின் சக்கரம் தலையில் ஏறி மிகக் கொடுமையான முறையில் உயிரிழந்தாள்.

இந்த சம்பவம் மக்களிடையே கடும் கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலையே சம்பந்தப்பட்ட பள்ளிப் பேருந்தை மக்கள் தீவைத்துக் கொளுத்தி விட்டனர்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இன்று வழக்காக எடுத்துக் கொண்டது. இன்று காலை நீதிமன்றம் கூடியதும் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தார்.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் நேரில் ஆஜரானார். அவர் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, 20 நாட்களுக்கு முன்புதான் அந்தப் பேருந்துக்கு ஆர்டிஓ அலுவலகத்தில் எப்சி கொடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இப்படிப்பட்ட பெரிய ஓட்டை உள்ள பேருந்துக்கு எப்படி எப்சி அளித்தார்கள். யார் இதைக் கொடுத்தது. இதற்குப் பொறுப்பான அத்தனை ஆர்டிஓ அலுவலக அதிகாரிகளும் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்று உத்தரவிட்டு நாளைக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் யார் மீதும் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் கமுக்கமாக உள்ளனர் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் உயர்நீதிமன்றமே இதை தானாக முன்வந்து விசாரிக்க ஆரம்பித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Monday, July 23, 2012

பாக்கியராஜ் பதில்...




பாக்யா பத்திரிகை ஜூலை 27 ஆம் நாள் இதழில் கேள்வி பதில் பகுதியில் பாக்கிராஜின் இந்த பதில் எனக்கு பிடித்திருந்தது.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு உபயோகமான சொல்... இது கேள்வி..அதற்கான அவர் பதில்..

'விழித்திரு' ஏன் இதற்கு முக்க்யத்துவம் என்பது கீழே உள்ள விஷயத்தை படிச்சா புரியும்..

கிரேக்க நாட்டுச் சிற்பி ஒருவர், மனிதனிடம் வந்து போகும்  'சந்தர்ப்பம்' பற்றி வித்தியாசமாக படம் பிடித்துக் காட்டுகிறார். அதுதான் சந்தர்ப்பம் என்னும் சிலை.அந்த சிலைக்கு இரண்டு சிறக்கைகள் இருக்கும் முன்னந்தலையில் கூந்தலும், பின்னந்தலை வழுக்கையுமாக இருக்கும்.

'உனக்கு இறக்கை எதற்கு?'

நான் மக்களிடம் பறந்து செல்வதற்காக'

;முன்னந்தலையில் கூந்தல் எதற்கு?'

'மக்கள் என்னைப் பற்றி கெட்டியாக பிடித்துக் கொள்வதற்காக!'

'ஏன் பெருவிரலில் நிற்கிறாய்?'

"சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தாதோரிடமிருந்து கண நேரத்தில் பறந்தோடி விடுவதற்காக!'

'பின்னந்தலை ஏன் வழுக்கையாக இருக்கிறது?'

"சந்தர்ப்பத்தை தவற விட்டவர்கள் என்னை மீண்டும் பற்றிப் பிடித்துக் கொள்ளாதிருப்பதற்காக"

சிற்பியின் கற்பனை எவ்வளவு அற்புதமானது பாருங்க..இது மூலமா நல்லதோர் பாடத்தை உலகுக்கு உணர்த்துகிறார்.ஒருமுறை சந்தர்ப்பம் நழுவி விட்டால், அதே சந்தர்ப்பம் மீண்டும் வரவே செய்யாது என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?


Friday, July 20, 2012

ஜாமீனுக்கே 100 கோடி லஞ்சமா..? அம்மாடி..





ஹைதராபா‌த்தில் சட்டவிரோத சுரங்கத் தொழில் தொடர்பாக கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்தனன் ரெட்டி, தனக்கு ஜாமீன் வழங்குவதற்காக நீதிபதிக்கு ரூ.100 கோடி லஞ்சம் தர முன்வந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்க லஞ்சம் வாங்கியது தொடர்பாக சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி பட்டாபிராமராவ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் மற்றொரு விசாரணை நீதிமன்றத்தின் நீதிபதியான லட்சுமி நரசிம்ம ராவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதன் பின், அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ளார்.

ஊழல் தடுப்புப் பிரிவு போலீசா‌ர் நடத்திய விசாரணையில், ஜனார்தன ரெட்டியின் உறவினரான தசரதராமி ரெட்டி, சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதிக்கு லஞ்சம் தருவதற்கு ஏற்பாடு செய்யும்படியும், ஜாமீன் வழங்க ஒப்புக்கொண்டால் ரூ.100 கோடி தருவதற்கு தயாராக உள்ளதாகத் தன்னிடம் கூறியதாக லட்சுமி நரசிம்ம ராவ் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.


Thursday, July 19, 2012

தமிழ்மண முன்னணி பதிவுகள்..




கடந்த இரு ஆண்டுகளாக முன்னணி பதிவுகள் என தமிழ்மணம் ரேங்க் பட்டியல் வெளியிடுகிறது.

இதில் முதல் 10 ரேங்கிற்குள் வரவேண்டும் என்பதே பல பதிவர்கள் விருப்பமாய் உள்ளது.

அதற்காகவே தினம் பதிவு போடுபவர்கள், கவர்ச்சிகர தலைப்பு வைப்பவர்கள் என பதிவர்கள் பலவகை உண்டு. நம் வலைப்பூவிற்கு படிக்க விரும்புபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதே இதற்கான காரணமாய் உள்ளது.

இந்நிலையில் , இவ்வாண்டு முடிய இன்னும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில்,  பல பதிவர்கள் முழு மூச்சுடன் பதிவிட ஆரம்பித்துள்ளார்கள்.இதில் சில மூத்த பதிவர்களும் உண்டு.

இதைத்தவிர்த்து..சிலர் சில விருதுகளை எதிர்பார்த்தும் பதிவுகள் இட்டு வருகின்றனர்.

அவரவர் திறமை பளிச்சிடவும், எண்ணங்கள் நிறைவேறவும் வாழ்த்துகள்.

Wednesday, July 18, 2012

தமிழ்மொழி..தமிழன் பற்றி தமிழச்சி.




தமிழ்மொழி பற்றி கூகுள் பிளஸ்ஸில் தமிழச்சியின் பகிர்வு எனக்குப் பிடித்திருந்தது..அதை உங்களுக்கு பகிர்கிறேன்..


Tuesday, July 17, 2012

ஜனாதிபதி தேர்தல்: மம்தா அறிவிப்பு



 குடியரசுத் தலைவர் தேர்தலில் பல திருப்பங்களை ஏற்படுத்தி வந்த மமதா பானர்ஜி தமது இறுதி முடிவில் அதிரடியாக ஒரு பல்டி அடித்திருக்கிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை திரிணாமுல் காங்கிரஸ் ஆதரிக்கும் என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் பற்றி பின்னர் அறிவிப்பதாகவும் மமதா கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் தமது கட்சியினருடனான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மமதா கூறியதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல்கலாமைத்தான் நிறுத்த விரும்பினேன்.ஆனால் இதர கட்சிகளின் ஆதரவு அதற்கு கிடைக்கவில்லை. தேர்தலில் வாக்களிக்காமல் இருந்தாலும் திரிணாமுல் காங்கிரஸின் வாக்குகள் வீணாகிவிடும்.

பிரணாப் முகர்ஜியை ஆதரிக்குமாறு பிரதமர் மன்மோகன்சிங்கும் கேட்டுக் கொண்டார்.பிரணாப்புக்கு வாக்களிக்க விருப்பம் இல்லை. இருப்பினும் மக்களின் விருப்பத்துக்காக பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கிறோம். மேலும் கூட்டணி நெருக்கடியால் இந்த முடிவை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது என்றார் அவர்.

முன்னதாக குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் பிரணாப் முகர்ஜியை வேறுவழியில்லாமல் ஆதரிப்பதாக மமதா கூறியுள்ளார். அதே நேரத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக எந்த முடிவையும் அவர் அறிவிக்கவில்லை. அது தொடர்பாக பின்னர் அறிவிப்பதாகவும் மமதா கூறியுள்ளார்.

மமதாவின் இந்த அறிவிப்புக்கு பிரணாப் முகர்ஜி நன்றி தெரிவித்துள்ளார்.


Sunday, July 15, 2012

ஜனாதிபதி தேர்தலும்..திருமங்கலம் ஃபார்முலாவும்...




பல ஆண்டுகளாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை வாங்கும் வழக்கத்தை அனைத்து கட்சிகளும் செய்து வந்தாலும், திருமங்கலம் இடைத் தேர்தலுக்குப் பிறகே, அப்படிப்பட்ட செயலில் வெல்லும் கட்சி திருமங்கலம் ஃபார்முலாவில் வென்றதாக ஊடகங்கள் சொல்லின.

கிட்டத்தட்ட அதே நிலை இன்றைய ஜனாதிபதி தேர்தலில் நடை பெற உள்ளது.

என்ன ..ஒரு வித்தியாசம்...தேர்தல்களில் மக்களின் வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்டன..

ஆனால் இத்தேர்தலில் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் வாங்கப்படுகிறார்கள்..அக்கட்சியின் மூலம்...அதாவது அக்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி என கோடிக்கணக்கில் வழங்கப் படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் பீகாரில் நிதிஷ்குமார் ஆதரிப்பதால் சிறப்பு நிதி வழங்கப்பட்டது.உத்தரபிரதேசத்திற்கும், முலாயம் சிங் ஆதரவு கிடைத்துள்ளதால் நிதி வழங்கப்பட உள்ளது.

மம்தா ஆதரவு கிடைக்குமேயாயின்..மேற்கு வங்கத்திற்கும் அவர் கேட்கும் நிதி வழங்க மைய அரசு தயாராய் இருக்கும்.

சாதாரண வாக்காளர் ஓட்டு போட சில ஆயிரம்...

மாநில அரசு ஆதரிக்க பல கோடி.

வாழ்க இந்திய ஜனநாயகம்.


(செய்தி - உத்தரப்பிரதேசத்திற்கு கிட்டத்தட்ட 450 பில்லியன் ரூபாய்க்கான ஃபைனான்சியல் பேக்கேஜ் தர மைய அரசு ஒப்புக் கொண்டுள்ளதாம்.இது ஜனாதிபதி தேர்தலில் மைய அரசை ஆதரித்ததற்காகவும், எதிர்காலத்தில் காங்கிரஸ் அரசுக்கு ஏதேனும் சிக்கல் வந்தால் காக்கவும்தானாம்)

Friday, July 13, 2012

இதயமில்லா ரயில்வே ஊழியர்..




 The General Manager                                                                      12.07.2012
Southern Railway
Chennai 600 003.


Sir,

Sub: Heartless Railway Employee – Punishable Action Requested.

Marina an employee at the Saidapet Railway Station behaves recklessly with a Differently Abled ticket buyer. The visually impaired    Mr.  Dharmaraj   was asked to go back and come in the queue every time he reached the window to buy his ticket. This was done in spite of   Mr.  Dharmaraj strictly following the queue pattern. When, another visually impaired person and our association vice president Mr.  Elumalai questioned it she answered callously saying that she will not issue any ticket come what may. All along she was issuing season rickets.

Another employee Prabhu joined hands with Marina to say that the ticket will not be issued to Mr.  Dharmaraj until he goes back to the tail end of the queue. This went on 11/07/2012 from 3pm to 4 52 pm and finally Mr.  Dharmaraj got his ticket.

All this took place in broad daylight with many men and women standing there. No body bothered to intervene, which shows the utter indifference pervading among humanity. A visually impaired person takes the complaint to the Station Master. Another Railway employee seated in the office admits to know of the rude behavior of Marina, but the Station Master does not express anything and seems to have taken no action against the rude Marina

The Differently Abled cannot be taken for granted and their self respect cannot be insulted in such a mean way. We request you to take immediate action has to be taken against Marina and Prabu.

If strict punishable action is not taken against them, a protest by disabled citizens will be organized in front of Southern Railway head office.

Thank you Sir.

Yours truly,

S. Namburajan-94442 95994
State Secretary.
Copy to: The DRM, Chennai Divisaion.



--
S. NAMBURAJAN
State Secretary, Tamilnadu Assn for the Rights of
All Types of Differently Abled & Caregivers - TARATDAC
New No.69, VGP Road, West Saidapet, Chennai 600 015.
# 044-23713161   Fax: 044-23715491    94442-95994

(இந்த செய்தி எனக்கு மெயிலில் வந்தது.விமல்வித்யா என்பவர் அனுப்பியிருந்தார்.அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.)




Thursday, July 12, 2012

'டைம்' பத்திரிக்கைக்குப் பதில் 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழை கிழித்த தமிழக காங்கிரஸார்!



 நம்ம பிரதமரைப் போய் செயல்திறன் இல்லாதவர் என்று கூறி விட்டதே டைம் பத்திரிக்கை என்று கொதித்தெழுந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸார், டைம் பத்திரிகைக்குப் பதில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழைக் கிழித்துப் போராட்டம் நடத்தி அனைவர் முன்பும் பெரும் கேலிப் பொருளாகியுள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்தது டைம் பத்திரிக்கை. இந்தியாவைச் சேர்ந்தது டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை. இந்த இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் இளைஞர் காங்கிரஸார் நடத்திய போராட்டத்தால் அவர்களைப் பார்த்து அனைவரும் சிரிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.
தமிழக இளைஞர் காங்கிரஸார் நேற்று சென்னை அமெரிக்க துணைத் தூதரகம் முன்பு திரண்டனர். அப்போது கைகளில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்களை வைத்திருந்தனர். இந்தப் போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க வந்த பத்திரிக்கையாளர்கள், இது என்ன டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையை கையில் வைத்துள்ளீர்கள் என்று காங்கிரஸாரிடம் கேட்டபோது, இந்தப் பத்திரிக்கைதானே நமது பிரதமரை செயல் திறன் இல்லாதவர் என்று கூறியது என்று கோபமாக கேட்டனர்.
அதற்குப் பத்திரிக்கையாளர்கள் அட ஏங்க நீங்க வேற, இது வேற பத்திரிக்கை, அது வேறு பத்திரிக்கை, இரண்டும் வேறு வேறு நிறுவனம் என்று விளக்கினர். ஆனால் அதை கேட்க மறுத்த காங்கிரஸார் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர். கைகளில் இருந்த டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையை தாறுமாறாக கிழித்தும், காலில் போட்டு மிதித்தும் தங்களது எதிர்ப்பைக் காட்டி கோஷம் போட்டனர்.
ஆனால் நடந்த தவறை உணர்ந்து கொகண்ட மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ராம்குமார் இதுகுறித்து விளக்குகையில், சில தொண்டர்கள் தவறுதலாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்களை கொண்டு வந்து விட்டனர். போராட்டத்திற்கு வரும் அவசரத்தில் இந்தத் தவறு நடந்து விட்டது. இருப்பினும் பெரும்பாலானவர்கள் கையில் டைம் பத்திரிகைதான் இருந்தது என்று கூறி சமாளித்தார்.
போராட்டம் குறித்து விளக்கிய மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ், நாங்கள் எந்த மீ்டியாவுக்கும் எதிரானவர்கள் இல்லை. அமெரிக்க தூதரக அதிகாரிகளை சந்திக்கவே நாங்கள் திட்டமிட்டு வந்தோம். டைம் பத்திரிக்கை இந்தியத் தலைவர்களை தாக்கி எழுதுவதையே பிழைப்பாக கொண்டுள்ளது. முன்பு வாஜ்பாயை விமர்சித்து கடுமையாக எழுதியது. தற்போது பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சித்துள்ளது. இது கண்டனத்துக்குரியது என்றார் அவர்.

நன்றி தட்ஸ்தமிழ்


Monday, July 9, 2012

எப்படி இருந்த பிரணாப்...! இப்போது இப்படி..




பழம்பெரும் எழுத்தாளர், பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார், எழுதியுள்ள பியான்ட் தி லைன்ஸ் என்ற சுயசரிதையில் மெளன்ட்பேட்டன் முதல் மன்மோகன் சிங் வரை பல தலைவர்கள் குறித்த பல அரிய தகவல்களை தொகுத்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி குறித்து நய்யார் குறிப்பிட்டுள்ள ஒரு சுவாரஸ்யமான தகவல்..
அப்போது நான் ஸ்டேட்ஸ்மென் பத்திரிக்கையில் ரெசிடென்ட் எடிட்டராக இருந்தேன். எனக்கு பிரணாப் முகர்ஜியிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தனது வீட்டுக்கு வர வேண்டும் என்றும் தன்னுடன் டீ சாப்பிட வேண்டும் என்றும் அவர் அழைத்தார். அப்போது அவர் எந்த அரசுப் பதவியிலும் இல்லை.
நான், எனது மனைவியுடன் பிரணாப் வீட்டுக்குச் சென்றேன். அவரது வீட்டுக்குள் போனபோது ஹாலில் எந்தவிதமான பர்னிச்சரையும் பார்க்க முடியவில்லை. உட்காரக் கூட போதுமான சேர்கள் இல்லை, ரொம்ப ரொம்ப குறைவான சேர்களே இருந்தன. வீட்டில் வேலைக்காரர்கள் கூட யாரும் இல்லை. வீடு முழுக்க எளிமை நிரம்பி வழிந்தது. நான், எனது மனைவி மற்றும் பிரணாப் ஆகிய மூவரும் தரையில்தான் அமர்ந்தோம். பேசிக் கொண்டே டீ சாப்பிட்டோம்.

பிரணாப் முகர்ஜியின் மனைவி ஒரு டான்ஸர். ஆனால் அங்கீகாரம் கிடைக்காமல் போராடிக் கொண்டிருந்தார். பிரணாப் என்னிடம் பேசுகையில், தனது மனைவிக்கு ஒரு நல்ல விளம்பரத்தைத் தேடித் தருமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். அப்போதுதான் தெரிந்தது, ஏன் என்னை அவர் கூப்பிட்டார் என்று.
சில வருடங்கள் ஓடின. 'மிசா' முடிந்திருந்த நேரம். இப்போது மீண்டும் பிரணாப் முகர்ஜியை சந்தித்தேன். அதே பிரணாப் முகர்ஜிதான், ஆனால் வீடுதான் மாறிப் போயிருந்தது. வீடு நிறைய ஸ்டைலான பர்னிச்சர்கள் நிரம்பி வழிந்தன. விலை உயர்ந்த தரை விரிப்புகள் பளபளவென தரைகளை அலங்கரித்தன. எங்கு பார்த்தாலும் ஆடம்பரம் கொட்டிக் கிடந்தது. அப்போது பிரணாப் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்தார்....!!

(நன்றி தட்ஸ்தமிழ்)


Sunday, July 8, 2012

உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் 0





 உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 10 மாநகராட்சி மேயர் பதவிகளை பாரதிய ஜனதா கைப்பற்றியது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடைபெறும் உத்தரப்பிரதேசத்தில் 12 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 10 மாநகராட்சி மேயர் பதவிகளை அள்ளிச் சென்றது. லக்னோ, மீரட், கான்பூர், ஆக்ரா, வாரணாசி, ஜான்சி, கோரக்பூர், அலிகார், மொரதாபாத், காஜியாபாத் ஆகியவை பாஜக வசமாயின.

மற்ற 2 இடங்களில் அலகாபாத் மாநகராட்சி மேயர் பதவியை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் அபிலாஷா குப்தா கைப்பற்றி உள்ளார். இவர் மாநில முன்னாள் அமைச்சர் நந்த் கோபால் குப்தாவின் மனைவி ஆவார். பரேலி மேயர் பதவியை ஆளும் சமாஜ்வாடி கட்சி ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் ஐ.எஸ். டோமர் கைப்பற்றி உள்ளார்.

சில மாதங்களுக்கு முன் நடந்த பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில், இப்போது மாநகராட்சி மேயர் தேர்தலில் அக்கட்சி ஆதரவு பெற்ற வேட்பாளர் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.


பிரபல பதிவரின் தந்தையார் அமரர் ஆனார்




பிரபல பதிவரும், எழுத்தாளருமான ஷைலஜா அவர்களின் தந்தையும். முதுபெரும் எழுத்தாளருமான ஏ.எஸ்.ராகவன் காலமானார்

 எழுத்தாளர் ஏ.எஸ்.ராகவன் சென்னையில் இன்று மதியம் அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 85.
1960 - 70 களில் ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள், அமுதசுரபி உள்ளிட்ட அனைத்து பத்திரிகைகளிலும் சிறுகதைகள், தொடர்கதைகள், குறுந்தொடர்கள் எழுதியவர். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் புலமை பெற்ற இவர், எழுத்தாளராக மட்டுமல்லாமல் ஓர் சமூக ஆர்வலராகவும் விளங்கியவர். இவர் சென்னை நங்கநல்லூரில் வசித்துவந்தார்.
மறைந்த ஏ.எஸ்.ராகவன், எழுத்தாளர்கள் ஷைலஜா, ராஜரிஜி ஆகியோரின் தந்தை. எழுத்தாளர் இந்திராசௌந்தர்ராஜனின் பெரியப்பாவுமாவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.
ஷைலஜா, ராஜரிஷி ஆகியோருக்கு இப்பிரிவை தாங்கும் திறனை அளிக்க இயற்கையை வேண்டுகிறோம்.



Friday, July 6, 2012

தாம்பரத்திலிருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடத்தில் பயிற்சி:




தமிழ்நாடு முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால் தாம்பரம் விமானப் படை தளத்தில் பயிற்சி பெற்று வந்த 9 சிங்கள வீரர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு இந்தியாவின் வேறு ஒரு இடத்தில் பயிற்சி வழங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
சார்க் நாடுகளின் விமானப் படை வீரர்களுக்கு தொழில்நுட்பட பயிற்சி சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப் படை தளத்தில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த பயிற்சி தொடங்கியது. இதில் சிங்கள வீரர்கள் 9 பேரும் இடம்பெற்றிருந்தனர். இதற்கு தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தாம்பரம் விமானப் படை தளத்தை முற்றுகையிட்டு மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி போராட்டமும் நடத்தின. மத்திய அமைச்சர் வாசனும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தாம்பரம் விமானப் படை தளத்தில் பயிற்சி பெற்ற 9 சிங்கள வீரர்களையும் வெளியேற்றவும் அவர்களுக்கு வேறு ஒரு இடத்தில் பயிற்சி வழங்கவும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது.

டிஸ்கி- பெங்களூருவில் பயிற்சிக்கு மாற்றப்பட்டனர் அவர்கள். மத்திய அமைச்சர் வாசன் எதிர்ப்பு, கலைஞர் ஆட்சேபம்...ம்..ஹீம்.. என்ன பிரயோசனம்...எருமை மாட்டின் மீது பெய்யும் மழை..என எருமையைக் கேவலப்படுத்த நான் தயாரில்லை.



Monday, July 2, 2012

தர்மம் - குறும்படம்




கலைஞர் டீவியில் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் ஒலி/ஒளீ பரப்பான குறுந்தொடர்.

இதன் கரு, படமாக்கியவிதம் அனைத்தும் சிறப்பு.இதை நீங்களும் காண வேண்டும் என்பதால் இந்த பதிவு


பிரணாப் வேட்புமனுவை ஏற்பதில் சிக்கல்





 குடியரசுத் தலைவர் தேர்தலில் புதிய திருப்பமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியின் மனுவை ஏற்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வேட்பு மனு பரிசீலனை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் முடிந்து இன்று வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது பிரணாப் முகர்ஜியை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக, பிஜூ ஜனதாதளம் மற்றும் பாஜக ஆதரவு வேட்பாளரான சங்மா திடீரென ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.
அதாவது மத்திய அரசின் இந்திய புள்ளியியல் நிறுவனத்துக்கு (Indian Statistical Institute) தலைவராக இன்னமும் பிரணாப் முகர்ஜிதான் பதவி வகித்து வருகிறார். குடியரசுத் தலைவர் தேர்தல் விதிமுறைகளின்படிப் பார்த்தால் பிரணாப் முகர்ஜியின் வேட்புமனு செல்லாது என்று ஒரு போடு போட்டார். இதைக் கேட்ட தேர்தல் அதிகாரியான மாநிலங்களவைச் செயலர் ஒரு கணம் ஷாக்கிப் போனார். வேறுவழியின்றி பிரணாப்பிடம் விளக்கம் கேட்கிறோம் என்று கூறி வேட்பு மனு பரிசீலனையை நாளைக்கு ஒத்திவைத்துவிட்டனர்.
சுப்பிரமணியசாமி அதிரடி
இதனிடையே டிவிட்டரில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி, "பிரணாப் முகர்ஜியின் வேட்புமனு நிராகரிக்கப்படும்? வேட்புமனு பரிசீலனை திடீரென நாளைக்கு ஒத்திவைப்பு...ரகசியமாக பல்வேறு அரசுப் பொறுப்புகளை வகித்து வருகிறார்" என்று தட்டிவிட்டிருக்கிறார்.
ஒருவேளை சங்மாவுக்கு போட்டுக் கொடுத்ததே சுப்பிரமணியசாமியாகவும் இருக்கலாம். அதே நேரத்தில் எப்படியும் தேர்தலில் அதிசயம் நிகழ்ந்து வெற்றி பெறுவேன் என்று சங்மா கூறிவந்தார். பிரணாப் முகர்ஜியின் வேட்புமனு நிராகரிக்கப்படும் நிலையில் சங்மாவின் ஆருடம் பலித்துவிடும்! நாட்டின் அரசியலில் பெரும்பரபரப்பும் ஏற்பட்டுவிடும்!

(நன்றி - தட்ஸ்தமிழ்)