Monday, February 14, 2011

கேபிள் பதிவும்..அதனுடனான என் பதிவும்..




கேபிள் சங்கரின் இந்தப் பதிவிற்கு தொடர் பதிவாகக் கூட இதைக் கொள்ளலாம்..
எனது 'பாரத ரத்னா' என்ற நாடகத்தில்..ஆசிரியர் ஒருவர் தன் மாணவன் இழைத்த தவறைக் கண்டிக்கப் போக ஆசிரியர் கைது செய்யப்படுகிறார்.குற்றவாளிக் கூண்டில் நிற்கும் ஆசிரியர் கூறும் செய்தி இதுதான்.இந்நாடம் சிறந்த நாடகத்திற்கான விருது பெற்றதுடன்..இந் நாடகத்திற்கு இலக்கியச் சிந்தனை விருதும் எனக்குக் கிடத்தது.இந் நாடகம் வானதி பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டது.

இனி நாடகக் காட்சி.

நீதிபதி- ராமசந்திரன் நீங்க ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?


ஆசிரியர் ராமசந்திரன்- நீதிபதி அவர்களே! நான் குற்றமற்றவன்..இவ்வளவு வருஷம் என் ஆசிரியர் வாழ்க்கையில் இல்லாத களங்கம் இப்போ ஏற்பட்டிருக்கு..அதித் துடைக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன்..யுவர் ஆனர்..இந்த வழக்கிற்கு சம்பந்தமில்லாத சில பொது விஷயங்களைக் கூற எனக்கு அனுமதி அளிக்க வேண்டுகிறேன்


நீதிபதி- நீங்க சொல்ல வேண்டிய விஷயத்தை சுருக்கமாகச் சொல்லலாம்


ராம- அந்த நாட்களிலெல்லாம்..குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது..பெற்றோர்கள் எங்களிடம் நல்லா பாடம் சொல்லிக் கொடுத்து..இவங்களை நல்ல குடிமகனா உருவாக்குங்க..ஏதாவது தப்பு பண்ணினா நல்லா தண்டியுங்க..அடியாத மாடு படியாது..இரண்டு போட்டாதான் உருப்புடுவான்னு சொல்லுவாங்க.பெற்றோர்களும் வீட்டில் குழந்தைகள் தப்பு பண்ணினா கண்டிப்பாங்க..மாணவன் நல்லா படிக்கலேன்னா பெற்றோரும் சரி ..ஆசிரியரும் சரி..இரண்டு அடி கொடுத்துத்தான் அவனை மாத்த முயற்சிப்பாங்க.இதுக்கு முக்கிய காரணம்..ஒவ்வொருவர் வீட்டிலேயும் நாலு இல்ல அஞ்சு குழந்தைகள் இருந்ததுதான்.எல்லாக் குழந்தைகள் மீதும் தனிப்பட்ட அக்கறையை பெற்றோரால் காட்ட முடியாது..அதனால அந்தப் பொறுப்பை ஆசிரியர் மேல சுமத்தினாங்க...இதுக்காகவே அப்ப எல்லாம் 'மாரல் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' கிளாஸ் இருந்தது.ஆனால் இன்னிக்கு எல்லாமே தலை கீழ்..எல்லாருக்கும் ஓரிரு குழந்தைகள்..பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு உழைக்கும் பெற்றோர்..குழந்தைகளை கவனிக்க அவங்களுக்கு நேரமில்லை.அந்தக் குற்ற உணர்ச்சியை மறக்க..அளவிற்கு அதிகமாக குழந்தைக்குச் செல்லம் கொடுக்க ஆரம்பிச்சாங்க..

தியாகம், சேவை,மனிதாபிமானம்,தன்னம்பிக்கை, தைரியம் ஆகிய நல்ல குணங்களை சொல்லித்தர பெற்றோருக்கு நேரமில்லை..அதனாலேயே குழந்தைகளுக்கும்..ஒழுக்கத்தையும், நல்ல குணத்தையும் போதிக்கும் ஆசிரியர்களிடம் மனம் லயிப்பதில்லை.இன்னிக்கு உலகம் முழுதும்..துப்பாக்கிச் சூடும்,கொலைகளும்,உள்நாட்டு புரட்சியும், தீவிரவாதிகளின் பயமுறுத்தலும்னு பரவியிருக்கு.

சட்டத்தைத் தன்னோட சட்டைப் பைக்குள்ளே மறைச்சுண்டு கொள்ளை அடிக்கும் சில அரசியல்வாதிகள்..போதை மருந்துக்கு அடிமையாகிவிட்ட இளம் தளிர்கள்..

இலைமறைவு காய்மறைவாக இருக்க வேண்டிய செக்ஸ் களியாட்டங்களை வெளிப்படையாக சித்தரிக்கும் திரைப்படங்கள்..இணையதள களியாட்ட இருப்பிடங்கள்..

இப்படிப்பட்ட மிக மோசமான நிலைமைக்குக் காரணம் ..வளரும் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்காததுதான்.

நான் பெற்றோரைக் கேட்டுக் கொள்வதெல்லாம்..தவறு செய்யும் குழந்தைகளை மென்மையாகவாவது தண்டியுங்கள் என்பதுதான்.குழந்தைகள் தவறு செய்தால்..அதைத் திருத்த முயலும் ஆசிரியர்கள் மீதே குற்றம் சுமத்தாதீர்கள்.நான் என் மகனை ரோஜாப் பூ போல வளர்க்கிறேன்னு சொல்லிட்டு..அவன் எதிர்காலத்தை அதிலுள்ள முள்ளைப் போல ஆக்காதீங்க.அவனை அடிக்காதீங்கன்னு குழந்தைக்கு துணை போகாதீர்கள்.

எந்த ஆசிரியனும்..காழ்ப்புணர்ச்சியால் குழந்தைகளை தண்டிக்க மாட்டாங்க..பாலியலைப் பற்றி அவனுக்கு போதிக்கத்தான் தெரியுமே தவிர..பாலியல் குற்றத்தைச் செய்ய மாட்டான்.நாட்டில் ஒரு சிறந்த குடிமகனாக தன் மாணவன் உருவாக வேண்டும் என்றுதான் ஆசிரியன் நினைப்பான்.இந்த விஷயத்தில் மாணவர்..பெற்றோர் இருவருக்கும் கவுன்ஸிலிங் தேவை.

யுவர் ஆனர்..நான் படித்த இன்னுமொரு சிறுகதை ஒன்றைக் கூறி முடித்துக் கொள்கிறேன்..

தன் மகன் செய்யும் தவறுகளை எல்லாம், பெரிதாக்காமல்..அவனை செல்லம் கொடுத்து வளர்த்து வந்தனர் அவனது பெற்றோர்..அவனை ஆசிரியர் கண்டிக்கும் போதெல்லாம் தடுத்தனர்.அந்த மகன் சிறி சிறு குற்றங்களைச் செய்யத் தொடங்கினான்.ஒருநாள் ஒரு கொலையச் செய்துவிட்டான்.நீதிமன்றம் அவனுக்குத் தூக்குத்தண்டனை விதித்தது.தூக்கிலிடும்போது தன் கடைசி ஆசையா தன் பெற்றோர்களைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டான்.அதுக்கு அனுமதி கிடைச்சது.தன் பெற்றோரைப் பார்த்ததும் அவன்..'அப்பா..அம்மா..இருபது வருஷத்துக்கு முன்னால..வாத்தியார் என்னை கண்டிச்ச போதெல்லாம்..நீங்க தடுக்காம இருந்திருந்தா..இன்னிக்கு உங்க மகன் சாகிறதைத் தடுத்திருக்கலாம் இல்லையா' ன்னான்.

யுவர் ஆனர்..என்னோட மன ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்க அனுமதி அளித்தற்கு நன்றி.தவறு செஞ்சிருந்தா அதற்குரிய தண்டனையை யாராயிருந்தாலும் அனுபவித்துத்தான் தீரணும்.நான் தவறு செஞ்சதா..இந்த நீதி மன்றம் நினைச்சா அதற்குரிய தண்டனையை ஏற்க நான் தயாரா இருக்கேன்..

10 comments:

goma said...

இந்த விஷயத்தில் மாணவர்..பெற்றோர் இருவருக்கும் கவுன்ஸிலிங் தேவை.

முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம்

எல் கே said...

குட் . எல்லாம் ஒரு பக்கமாதான் பாக்கறாங்க.

sathishsangkavi.blogspot.com said...

:))

சக்தி கல்வி மையம் said...

நிச்சயமாக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி எல் கே

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சங்கவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி sakthistudycentre-கருன்

புருனோ Bruno said...

:) :)


அவசியமான நேரத்தில் அவசியமான இடுகை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Dr