தலைவி கூற்று
(தலைவன் பிரிந்திருந்த காலத்தில், “அவர் வருவர்; நீ வருந்தற்க”என்று தோழி கூறி ஆற்றுவிப்பத் தலைவி, “இளவேனிற் பருவத்தும்அவர் வாராமையின் தனித்திருக்கும் யான் எங்ஙனம் வருந்தாமல்இருப்பேன்;” என்று இரங்கிக் கூறியது.)
பாலை திணை -பாடலாசிரியர் கச்சிப்பேட்டு நன்னாகையார்
இனி பாடல்-
ஈங்கே வருவ ரினைய லவரென
அழாஅற்கோ வினியே நோய்நொந் துறைவி
மின்னின் றூவி யிருங்குயில் பொன்னின்
உரைதிகழ் கட்டளை கடுப்ப மாச்சினை
நறுந்தாது கொழுதும் பொழுதும்
வறுங்குரற் கூந்த றைவரு வேனே.
-கச்சிப்பேட்டு நன்னாகையார்.
உரை-
நோயால் வருந்திஉறையும் தோழி, தலைவர் இவ்விடத்தேமீண்டு வருவார், வருந்தற்க என்று நீசொல்வதனால், இப்பொழுது, நான்அழாமல் இருப்பேனோ? மின்னுகின்ற இனிய இறகுகளையுடைய, கரிய குயில், தன் மேனிபொன்னினது உரைத்த பொடி விளங்குகின்ற உரைகல்லைஒக்கும்படி, மாமரத்தின் கிளையினிடத்து, நறிய பூந்தாதைக் கோதுகின்றஇளவேனிற் காலத்திலும், அவர் வாராமையால் புனையப் பெறாமலுள்ள வறியகொத்தாகிய கூந்தலைத் தடவுவேன்.
(கருத்து) தலைவருடைய பிரிவைப் பொறுத்துக் கொண்டு யான்எங்ஙனம் வருந்தாமல் இருத்தல் இயலும்?
(வறுங்குரற் கூந்தல் : மகளிர் தம் காதலரைப் பிரிந்த காலத்தில்கூந்தலைப் புனைதல், மலரணிதல் முதலியவற்றைச் செய்யார்; தலைவர்மீண்ட காலத்துப் புனைந்து மகிழ்வர்;)
“
No comments:
Post a Comment