தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்ததை மேகத்தின்ஒலியாலும் மயிலின் மகிழ்ச்சியாலும் அறிந்த தலைவி தோழிக்குத் தன்ஆற்றாமைக் காரணத்தை அறிவித்தது.)
முல்லை திணை - பாடலாசிரியர் கோவதத்தன்
இனி பாடல்-
என்னெனப் படுங்கொ றோழி மின்னுபு
வானேர் பிரங்கு மொன்றோ வதனெதிர்
கான மஞ்ஞை கடிய வேங்கும்
ஏதில கலந்த விரண்டற்கென்
பேதை நெஞ்சம் பெருமலக் குறுமே.
.
-கோவதத்தன்
மேகம் எழுந்து, ஒலிக்கின்ற செயல்ஒன்றுதானா எனக்குத் துன்பந் தருவது? அந்தமேகம் ஒலித்ததற்கு எதிரே, காட்டிலுள்ள மயில்கள், விரைவனவாகி ஆரவாரிக்கும்;இவ்வாறு அயன்மையையுடையனவாகிக் கலந்த இரண்டு பொருளாலும், எனது பேதைமையை யுடைய நெஞ்சம், பெரிய கலக்கத்தை அடையும்; இந்நெஞ்சினது நிலை எத்தகையதென்று சொல்லப்படும்?
(கருத்து) கார்ப்பருவம் வந்தமையின் என் மனம் கலங்குகின்றது.
(கார்காலம் வந்துவிட்டதை மேகத்தின் முழக்கம் உணர்த்தியது;அதனெதிர் அகவிய மயிலின் ஆரவாரம் பின்னும் அதனை வலியுறுத்தியது; இது காமத்தை மிகுவிப்பது;)
No comments:
Post a Comment