முன்னர் இருந்தது போல இல்லாமல் அவனது வேலை வெகுவாகக் குறைந்திருந்தது.
இதேநிலை நீடிக்குமெயானால், ஒரு கட்டத்தில் வேலையை விட்டே அனுப்பிவிட்டாலும் அனுப்பி விடுவார்களோ என்ற பயம் ஏற்பட்டது. தனக்கு மட்டுமின்றி, தன்னைச் சேர்ந்தவர்களும் இதனால் பாதிக்கப்படுவரே என வருந்தினான்.
ஒருவேளை..தனக்கேத் தெரியாமல் தன் வேலையை அவுட் சோர்சிங் முறையில் வெளியே கொடுத்து விடுகிறார்களோ என்ற சந்தேகமும் இருந்தது.
எப்படியாவது தனது வேலையைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்தவன், தனது மேலதிகாரியைக் காணச் சென்றான்.அவரைப் பார்த்து..
"பூவுலகில் கொரோனா உயிரை எடுக்கும் வேலையை செய்து கொண்டிருப்பதால், தனக்கு வேலை பளு குறைந்துள்ளது.என்னை நம்பியுள்ள வர்களும் தங்களுக்கு வேலை போய்விடுமோ எனக் கவலைப்படுகின்றனர்.நீங்கள்தான் தலையிட்டு கொரோனாவிடமிருந்து எங்களது வேலையை மீட்டுத் தர வேண்டும்" என கிங்கரர்களுடன் வந்திருந்த யமன் விஷ்ணுவிடம் வேண்டினான்.
No comments:
Post a Comment