Monday, April 16, 2018

ஒய்ஜிபியும் யூஏஏவும் - 17


அத்தியாயம் - 17

யார் தருவார் இந்த அரியாசனம் என்ற நாடகம் மகேந்திரன் எழுத 1979ல் அரங்கேறி 90 முறைகளுக்கு மேல் மேடையேறியது
1980 முதல் நான்குஆண்டுகள் வியட்நாம் வீடு சுந்தரம் எழுதிய நான்கு நாடகங்கள் அரங்கேறின.
1980ல் "அர்த்தமுள்ள மௌனங்கள்" (100 காட்சிகள்)
1981ல் "ரூபாய்க்கு மூணு கொலை" (120 காட்சிகள்)
1982ல்"புலி ஆடு புல்லுக்கட்டு" (110 காட்சிகள்)
1985ல் "லஞ்சாபகேசன்" (100 காட்சிகள்)

1986ல் ஒய்ஜிஎம் எழுதிய "பாவம் பரத்வாஜ்" நாடகம் 80 முறை மேடையேற்றம்
1987ல் மகேந்திரன், வெங்கட் கூட்டணி யின் "பாட்டி அண்ட் தி நாட்டி பாய்ஸ்" நாடகம் அரங்கேறி 100 முறைகளுக்கு மேல் மேடையேறியது

1988ல் வியட்நாம் வீடு சுந்தரம் எழுதிய "ரொம்ப படிச்சுட்டேன் சார்" நாடகம் 100 முறை.

திரில்லர், நகைச்சுவை, சமுதாயச் சீர் கேடுகள் என பலதரப்பட்ட நாடகங்கள் அரங்கேற்றம் ஆயின.மக்கள் யூஏஏ எந்த நாடகத்தை அரங்கேற்றம் செய்தாலும், அவை தரமானதாய் இருக்கும் என அளித்த ஆ தரவால்தான் , இக்குழுவினரின் நாடகங்கள் 100 காட்சிகளை எளிதாக கடந்தன என்றால் மிகையில்லை 

அடுத்து வந்த நாடகம் மாபெரும் வெற்றி நாட்கமாக அமைந்ததுடன், பலரும் பாராட்டும் வகையில் அமைந்தது.

"இது நியாயமா சார்"

நாடகம் பாராட்டும் வகையில் அமைந்தது நியாயமா சார் எனக் கேட்கவில்லை.படத்தின் தலைப்பு இது.அது பற்றி அடுத்த அத்தியாயத்தில் விரிவாக. 

கொஞ்சி விளையாடும் தமிழ்

இதர உதர உவமை

ஒரே பாடலில் உவமேயத்தை உவமானமாகவும், உவமானத்தை உவமேயமாகவும் தொடர்ச்சியாகக் கூறுவது இதர உதர உவமை ஆகும்.
அதாவது, முதலில் உவமானமும்,உவமேயமுமாகச் சொல்லுதல்.இவ்வாறு சொல்வதன் நோக்கம், இப்பொருளுக்கு ஒப்புமையாகக் கூடிய மூன்றாவது பொருள் எதுவும் இல்லையென குறிப்பது ஆகும்
இதர விதுரம் என்ற தொடருக்கு ஒன்றிற்கொன்று எனப் பொருள்

களிக்கும் கயல்போலும் நும்கண்: நும்கண்போல்
களிக்கும் கயலும்: கனிவாய்த் தளிர்க்கொடியீர்:
தாமரைப்போல் மலரும் நும்முகம்:நும்முகம்போல்
தாமரையும் செவ்வி தரும்

தளிரோடு கூடிய கொடி போன்ற நங்கையீர்"கயல் மீன்களைப் போல நும் கண்கள் களிக்கின்றன.நும் கண்களைப் போலக் கயல் மீன்களும் களிக்கின்றன.தாமரைப்போல நும் முகம் மலர்ந்துள்ளது.நும் முகம் போல தாமரையும் மலர்ந்து அழகு தருகின்றது

Saturday, April 14, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ்

சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய ஐந்திணை ஐம்பது என்னும் நூலிலே காதலின் தியாகத்தினை ஒரு அழகான பாடல் மூலம் மாறன் பொறையனார் எடுத்துக் காட்டியுள்ளார்


"சுனைவாய்ச் சிறுநீரை எயிதாதென்(று) எண்ணியப்
பிணைமான் இனிதுண்ண வேண்டிக்  கலைமான் தன்
கள்ளத்தின் உச்சும் சுரமென்பார் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி"

சுனையில் சிறிதளவே நீர் உள்ளது.ஒரு மானே அருந்தும் அளவுள்ளது.ஆண்மான் குடிக்காது விட்டால் பெண்மான் குடிக்காது.எனவே ஆண்மான் சுனைநீரில் குடிப்பது போல வாயை வைத்துப் பாவனை செய்து பெண்மானை குடிக்கச் செய்கிறது.காதலிலே, விட்டுக் கொடுப்புகள்,தியாகங்கள்,அன்புப் பரிமாற்றங்கள் அளவுக்கதிகமாகப் பேணப்படுகின்றன 

ஒய்ஜிபியும் யூஏஏ வும் - 15



(பரீட்சைக்கு நேரமாச்சு நாடகத்தில் ஒஜிபி ஏற்ற நரசிம்மாச்சாரி வேடத்தில் வெள்ளித்திரையில் சிவாஜி)

தேடினேன் வந்தது இது 1976ல் அரங்கேறிய நாடகம்.ஒய்ஜிஎம் மற்றும் வெங்கட் கூட்டணியில் வந்த நாடகம் .நூறுகாட்சிகள் நடந்தது

அடுத்து விசு  இவர்களுக்காக எழுதிய நாடகம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு.125 முறைகளுக்கு மேல் மேடையேறியது

அடுத்து ஒய்ஜிஎம்-வெங்கட் கூட்டணி மீண்டும்.நாடகம்- பரீட்சைக்கு நேரமாச்சு

"BLOCKBUSTER"

பரீட்சைக்கு நேரமாச்சு.இருநூறு முறைக்கு மேல் மேடையேறிய நாடகம்..இன்றும் ஒய்ஜிஎம் இந்நாடகத்திப் போட்டு வருகிறார்.இந்தியாவில் மட்டுமின்றி யூஎஸ்., மலேஷியா, சிங்கப்பூர் என உலகநாடுகள் அனைத்திலும் வெற்றிகண்ட நாடகம்

நரசிம்மாச்சாரி வேடத்தைல் ஒய்ஜிபி நடிக்க அவரது மகன் வரதுகுட்டியாகவும், பின் ஆனந்த் என்ற கதாபாத்திரத்தில் ஒய்ஜிஎம் கொடிகட்டி பறந்தனர்.

குறிஞ்சிமலர் மலர் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பூக்கும்.யுஏஏவின் குறிஞ்சிமலர் இந்நாடகம் என்றால் மிகையில்லை

இந்நாடகத்தை முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் திரையிலும் ரசித்தனர் மக்கள்.ஒய்ஜிபி ஏற்ற பாத்திரத்தை சிவாஜி ஏற்றார்.மகனாக ஒய்ஜிஎம் நடித்தார் .

ஏற்கனவே கண்ணன் வந்தான் நாடகத்தில்  ஒய்ஜிபி ஏற்ற பாரிஸ்டர் ரஜினி காந்த் பாத்திரத்தை திரையில் சிவாஜி ஏற்றார்.மீண்டும் பரிட்சைக்கு நேரமாச்சு நாடகத்தில் ஒய்ஜிபி ஏற்ற பாத்திரத்தை நடிகர் திலகம் எற்றார்.இதைவிட ஒரு கலைஞனுக்கு பேறு என்ன வேண்டும்.ஒய்ஜிபிக்கு அப்பேறு கிடத்தது.

இந்நாடகத்தை சமீபத்தில் மீண்டும் ஒய்ஜிஎம் மேடையேற்றினார்.
இம்முறை நரசிம்மாச்சாரி வேடத்தை மகேந்திரன் ஏற்க, மகேந்திரன் ஏற்ற வேடத்தை பாலாஜி எற்றார்
தன் மகன் இறந்ததற்குக் காரணம் ஆனந்த் என்று தெரியவரும் போது அது ஜோக்குத்தான் என எண்ணி சிவாஜி படத்தில் காட்டும் முகப்பாவனை சிவாஜி ரசிகர்களின் கை த்தட்ட்ல்களை ப் பெற்றது.மேடையிலும், அதே போன்று அவரைக் காபி அடிககமால், அதேநேரம் அந்நடிப்பிற்கு சற்றும் குறைவில்லாமல் மகேந்திரன் நடித்தார்.அப்பப்பா..என்ன ஒரு நடிப்பு..
மீண்டும்"நகைச்சுவை நடிகனால் மட்டுமே குணச்சித்திர வேடத்தில் பிரகாசிக்க முடியும் என்பதை மீண்டும் நிரூபித்தார் மகேந்திரன்

ஜாதி, ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து மனித நேயத்தை வலியுறுத்தியது இந்நாட்கம்.

இந்நாடகம், சமீபத்தில் மேடையேறியபோது, அதைப் பார்த்த முக்தா ஸ்ரீனிவாசன் மகிழ்ந்து, இதை மீண்டும் திரைப்படமாக எடுக்கலாமா? என்று வினவ, மகேந்திரனும் சம்மதித்தார்.ஆனால், அதற்குள் இயற்கை அவரை அழைத்துக் கொண்டு விட்டது

Friday, April 13, 2018

ஒய்ஜிபியும் யூஏஏவும் - 14

  (ரகசியம் பரம ரகசியம் நாடகத்தில் ஏ ஆர் எஸ்., மகேந்திரன்)



1972ல் மௌலி எழுதிய பத்மவியூகம் என்ற நாடகம் அரங்கேறியது.திரில்லர் நாடகம்.120 முறை மேடையேறியது

1974ல் மௌலி மீண்டும் .நாடகம் குருக்ஷேத்திரம்.இந்நாடகம் பற்றிய் விவாதத்தில் திருமதி ஒய்ஜிபியும் கலந்து கொண்டது சிறப்பு.
இச்சமயத்தில் பதிவு செய்யப்பட வேண்டிய இன்னமும் ஒரு செய்தி,ராஜம்மா, யுஏஏவின் அனைத்து நாடகங்களையும் விமரிசிப்பார்.அவரைப் பற்றி  ஒய்ஜிபி விளையாட்டாகக் கூறுவார், " என் சிறந்த நண்பர் ராஜம்மா, சிறந்த விமரிசன எதிரியும் ராஜம்மா" என்று. 

இந்நாடகத்திற்குப் பிறகு மௌலி யுஏஏவிலிருந்து விலகி தனிக்குழுவை ஆரம்பித்தார்.

வெங்கட் என்னும் இளைஞர் ,மகேந்திரனிடம் ஒரு கதையைச் சொல்ல, அவருக்கும் அது பிடித்துப்போக வெங்கட்டை ஒய்ஜிபியிடம் அழைத்துச் சென்றார்.

அந்த இளைஞர் சொன்ன நாடகமே "ரகசியம் பரம ரகசியம்"

தி மவுஸ் டிராப் என்ற நாடகம் லண்டனின் 66 ஆண்டுகளுக்குமேல் தொடர்ந்து நடைபெற்று வந்ததாம்.கிட்டத்தட்ட இந்நாடகத்தையும் அப்படிச் சொல்லலாம்.தொடர்ந்து இந்நாடகம் நடைபெறாவிடினும் இன்றும் நடைபெற்று வருகிறது.44 ஆண்டுகளாக..மக்களால் ரசிக்கப் படுகிறது.

மகேந்திரனிடம், ஒய்ஜிபி இயக்குநர் பொறுப்பை அளித்து மகிழ்ந்த நாடகம் இது.இந்நாடகத்தில்ம் மர்ஃபி என்ற பாதிரியார் வேடத்தில் ஏ ஆர் எஸ் நடித்தார்.பின்னர் அதே கதாபாத்திரத்தை ரவி ராகவேந்திரர் செய்தார்.இப்போது பாலாஜி என்ற நடிகர் செய்து வருகிறார்.24 வயதில் மகேந்திரன் எற்ற பாத்திரத்தை 68வயதிலும் மகேந்திரனே நடித்து வருவது சிறப்பாகும்

சோகமான பாத்திரமேற்று பார்ப்பவர் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் மகேந்திரன், குணசித்திர வேடத்திலும், தன்னால் பிரகாசிக்க முடியும் என நிரூபித்த நாடகம்.
ஒரு நல்ல நகைச்சுவை நடிகனாலேயே, குணசித்திர வேடத்திலும் சோபிக்கமுடியும் என்பது உண்மை என நிரூபித்தவர் மகேந்திரன்

இந்நாடகம் பற்றி இவ்வளவு சொல்லிவிட்டு இதில் வரும் சாகாவரம் பெற்ற இரு நகைச்சுவை வசனங்களைக் கூறாவிடில் பதிவு முற்று பெறாது.

             (கதாசிரியர் வெங்கட்)

சுப்புணி, அப்பளத்தை..அபளம்..என்பார்.அப்பளத்தை அபப்டிச் சொல்லக் கூடாது அப்பளம்னு அழுத்திச் சொல்லணும்..எங்கே சொல்லு..என்றதும்..அழுத்திச் சொன்னா அபளம் நொறுங்கிடுமே என்பார்

அடுத்து, ஊதுவத்தி  ஸ்டாண்டை முழுங்கிட்டான் என்று சொன்னதும் அதிர்ச்சியில் மற்றவர் இருக்க "எங்க வீட்ல வாழைப்பழம்தான் ஊதுவத்தி ஸ்டாண்ட் எனக் கூறும் இடம்

இந்நாடலம் 1000 முறையைக் கடந்து இன்னமும் மேடையில் வெற்றிநடை போடுகிறது

Thursday, April 12, 2018

ஒய்ஜிபியும் யுஏஏவும் - 13

அத்தியாயம் - 13

                   (யூஏஏ குழுவினருடன் நடிகர் திலகம்)
1971ல் மௌலி எழுத அரங்கேறிய நாடகம் "ஹரே ராமா ஹரே கிருஷ்ணா" .
மௌலியின் இரண்டாவது நாடகம், எந்த விதத்திலும் முதல் நாடகத்தைவிட நகைச்சுவையில் குறைவில்லை என நிரூபித்தது. 115 முறைகள் அரங்கேறியது.
உலகம் விரைவில் அழியப் போகிறது என்று ஒரு காலனியில் ஒரு கத்துக்குட்டி விஞ்ஞானி சொல்வான்.அந்த பயத்தில், அந்தக் காலனியில் இருக்கும் மனிதர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை நகைச்சுவை மழையாகத் தந்தது இந்நாடகம்

இந்நாடகத்தில் சேஷப்பா என்னும் சவடால் பாத்திரத்தில் ஏ ஆர் எஸ் நடித்திருப்பார்.அதில் வரும் நகைச்சுவை, ஒரு சாதாரண ரசிகனைத் திருப்திப் படுத்தியதில் ஆச்சரியமில்லை.ஆனால் அவை , நடிகர் திலகத்தையே விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவை.சிவாஜிக்கு மிகவும் பிடித்த அந்நாடக நகைச்சுவை இப்போது உங்களுக்காக

ஒரு பாகவதர் ஏ ஆர் எஸ்ஸிடம்(சேஷப்பா) கோவில் திருவிழாவில் பாடுவதற்கு சான்ஸ் கேட்பார்.
இல்லை நாங்க ரிகார்ட் வைக்கப்போறோம் என்பார் சேஷப்பா
பாகவதர், "ரிகார்ட் வைக்கிற இடத்தில், என்னை வைக்கக் கூடாதா"என பாகவதர் கேட்பார்

"சீச்சீ அந்த இடத்தில் உன்னை வைச்சா ஊசி கிழிச்சிடும்" என்பார் சேஷப்பா

இப்படி நகைச்சுவை தோரணங்களால் நாடகம் சக்கைப் போடு போட்டது.

மௌலி யூஏஏவிற்கு எழுதிய இரண்டாவது நாடகமும் மாபெரும் வெற்றியைப்  பெற்று தந்தது.

ஒய்ஜிபியும் யுஏஏவும்- 12

 (Flight 172 நாடகத்தில் மௌலி)

1970...மற்றுமொரு வெற்றி ஆண்டாக இவர்களுக்கு அமைந்தது.
கண்ணன் வந்தான் நாடகம் மூலம் யுஏஏவிற்கு வந்த மௌலியின் திறமையைக் கண்டு  அறிந்தார் ஒய்ஜிபி.
முன்னதாக நண்பர்களுடன் சேர்ந்து ஓருரு நாடகங்கள் எழுதியிருந்த மௌலியிடம் யுஏஏவிற்காக ஒரு நாடகம் எழுதச் சொன்னார்.
மௌலியின் பேனா "FLIGHT 172" என்ற நகைச்சுவை நாடகத்தை எழுதித் தந்தது.
வயிறு வலிக்க சிரிப்பார்கள் என்று சொல்வதுண்டு.உண்மையில் இந்நாடகத்திப் பார்த்தவர்கள் அனைவருக்கும் சிரித்துச் சிரித்து வயிறுவலி வந்தது என்பது உண்மை.

  (கதாசிரியர் மௌலி)
மௌலியும், ஒய்ஜிஎம் மும் சேர்ந்து நாடக மேடையைக் கலக்கினர்.உடன் சேதுராமன் என்ற கலைஞரும் மக்களை நகைச்சுவை அருவியில் குளிப்பாட்டினர்
நாடக உலகின் லாரல்-ஹார்டி என மக்கள் போற்றினர்.மீண்டும், மீண்டும் நாடகத்தைப் பார்த்தனர்.
சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த காமெடி நாடகங்களில் இந்நாடகத்திற்கும் சிறப்பு இடமுண்டு.
170 முறைகளுக்கு மேல் இந்நாடகம் மேடை கண்டது .
மௌலி என்னும் வைரத்தை பட்டைத் தீட்டி பிரகாசிக்க வைத்தவர் ஒய்ஜிபி என்றால் மிகையில்லை.
மௌலியின் graph கலையுலகில் ஏறத்தொடங்கியது

Wednesday, April 11, 2018

ஒய்ஜிபியும் யூஏஏவும் - 11


(திருமதி ஒய்ஜிபி,மகேந்திரன், ஏ ஆர் எஸ்., ஜெயலலிதா)

1969ஆம் ஆண்டு கண்ணன் வந்தான் நாடகத்திற்கான மாபெரும் வெற்றிக்குப் பிறகு சுந்தரம் எழுத (வியட்நாம்வீடு நாடகத்திற்குப் பிறகே இவர் வியட்நாம் வீடு சுந்தரம் என அறியப்பட்டார்) "நலந்தானா" என்ற நாடகம் அரங்கேறியது

65 காட்சிகள் நடந்த இந்நாடகம் , ஒய் ஜி மகேந்திரனால் மறக்கமுடியாததாகும்.

அதற்கான காரணம் இரண்டு..

முதல் காரணம் - இநாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த யூஏஏவின் ஆஸ்தான நடிகரான ஏ ஆர் ஏஸ், அலுவலகப் பணி நிமித்தமாக அவ்வப்போது வேறு வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் நடித்த பாத்திரத்தில், அவர் இல்லாத காலகட்டத்தில் ஸ்ரீகாந்த நடித்து வந்தார்.நாடகத்தில், மகேந்திரனுக்கு, சுண்டு என்ற அரைகிறுக்கு வேடம்.அவ்வேடத்தில், சிறப்பாக அவர் நடிப்பதைக் கண்ட ஸ்ரீகாந்த்,அது பற்றி கலாகேந்திரா கோவிந்தராஜனிடம் சொன்னார்.அவர், இயக்குநர் திலகம் கே.பாலசந்தரிடம் கூற, நவக்கிரகம் திரைப்படத்தில் மகேந்திரனை வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தினார்இயக்குநர் கே பாலசந்தர்

               (வியட்நாம் வீடு சுந்தரம்)

இரண்டாம் காரணம்-


எம்.ஜி.ஆர். பாட்டை வைத்து “ஜோக்” “கலங்கரை விளக்கம்” படத்தில், “காற்று வாங்கப்போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்” என்று எம்.ஜி.ஆர். பாடுவது போல் ஒரு பாட்டு வரும்.  “நலந்தானா” நாடகத்தில் இதுபற்றி காமெடி வசனம் வரும்.
“நம்ம தமிழ் ஹீரோகிட்டே இதுதான் பிரச்சினை. ஒன்னை வாங்கிக்கிட்டு வரச்சொன்னா, வேறு எதையோ வாங்கிக்கிட்டு வருவாரு” என்று ஜோக்கடிப்பார் மகேந்திரன்.. இது ரொம்ப பாப்புலர்.
ஒரு நாள், எம்.ஜி.ஆர். அந்த நாடகத்தைப் பார்க்க வந்தார். குறிப்பிட்ட இந்த ஜோக்கை அன்று கூறலாமா அல்லது விட்டு விடலாமா என்று  மகேந்திரனுக்கும், ஏ.ஆர்.எஸ்.சுக்கும் வாக்குவாதம்.
“இந்த ஜோக் வேண்டாம். எம்.ஜி.ஆர். கோபப்படுவார்” என்று ஏ.ஆர்.எஸ். சொன்னார்.
“அந்த ஜோக் அவசியம் வேண்டும்” என்று சொல்லிவிட்டு, வழக்கம்போல் நாடகத்தில் பேசினார் மகேந்திரன். முன் வரிசையில் அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர். விழுந்து விழுந்து சிரித்தார். மேடையில் பேசும்போதும், அதைப் பாராட்டினார். `இந்த ஜோக்கை பேசலாமா, வேண்டாமா என்று கூட உங்களிடையே விவாதம் நடந்திருக்கலாம். மகேந்திரன் தைரியமாகப் பேசியதை பாராட்டுகிறேன். அது நல்ல நகைச்சுவை வசனம்” என்று கூறினார்
இந்நிகழ்ச்சி மகேந்திரனால் மறக்கமுடியாத ஒன்றாகும்.

ஒய்ஜிபியும் யூஏஏவும் - 10

அத்தியாயம் - 10

1966ல் அரங்கேறிய நாடகம் P V Y ராமன் எழுதிய "மாலதி ஒரு தொல்லை" .இந்நாடகம் 30முறை மேடை கண்டது.ஜெயலலிதாவும் நடித்திருந்தார்.
1967ல் ராமன் எழுதிய "சத்யமேவ ஜெயதே" 23

காட்சிகள்"அண்ணி"சேது எழுதிய "Fortnight in Kailash"  37 முறைகள் மேடை ஏறியது

இக்காலகட்டத்தில் ஒய் ஜி பி தனது குழுவில் புதியதாக இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க எண்ணினார்.

அம்பத்தூரைச் சேர்ந்த நான் ,மௌலி, விசு, ராஜாமணி, கணேஷ் ஆகியோர் அவ்வப்போது நாடகம் போட்டு வந்தோம் .அப்படி ஒருசமயம் மௌலி எழுதிய ""Bon voyage" என்ற நாடகத்தைக் காண ஏ ஆர் எஸ் வந்திருந்தார்.அதில் மௌலியின் நடிப்பைக் கண்டு அவர் ஒய்ஜிபியிடம் சொல்ல மௌலி  தன் நண்பர்களுடன் யூஏஏ வில் நடிக்க ஆரம்பித்தார்.

அச்சமயம் டன்லப் கம்பெனியில் வேலை செய்து வந்த சுந்தரம் என்பவர் எழுதிய "கண்ணன் வந்தான்" என்ற நாடகத்தை யூஏஏ அரங்கேற்றம் செய்தனர்.75 முறை இந்நாடகம் மேடையேறியது.குழுவின் புகழும் உச்சத்திற்குச் சென்றது.லட்சுமி மேடைக்கு அறிமுகமானார்.இந்நாடகத்தின் நகைச்சுவைக் காட்சிகளை மௌலி எழுதினார்
இந்நாடகத்தில் ஒய்ஜிபி பாரிஸ்டர் ரஜினிகாந்தாகவே வாழ்ந்தார்.கண்ணனாக ஏ ஆர் எஸ் நடித்தார்.இந்நாடகமே பின்னாளில் நடிகர் திலகம் நடிக்க வெற்றி ப்படமான "கௌரவம்" ஆக வெளி வந்தது.
ஒய்ஜிபி, ஏ ஆர் எஸ் ஏற்ற வேடங்களை திரையில் இரட்டை வேடங்களில் சிவாஜி செய்தார்.மேடையில் லட்சுமி இரு வேடங்களில் நடிக்க திரையில் உஷா நந்தினியும் ரமாபிரபாவும் செய்தனர் 

"I am an university.Men may come and men may go., but I go on for ever" என்ற வசனத்திற்கும்
நான் வெளியே போனா யானைகூட குறுக்கே வராது, இன்னிக்கு பூனை இல்ல குறுக்கே வரது "என்ற வசனத்திற்கும்,ஒய்ஜிபி உயிரைக் கொடுத்தார்.

ஆனால்,  அதே சுந்தரம் எழுதிய "வியட்நாம் வீடு" என்ற நாடகத்தை ஒய்ஜிபி நிராகரித்தார்.
என்? அவரால் அந்நாடகம் குறித்து சரியான புரிதல் இல்லாததாலா? என்றால்..அதற்கான பதில்,

"அதிக பிராமண பாஷை" அதில்.குறிப்பிட்ட இனத்தைக் குறிக்கும் வகையில் எந்த நாடகத்தையும் போட அவர் விரும்பவில்லை என்பதே உண்மை