1971ல் மௌலி எழுத அரங்கேறிய நாடகம் "ஹரே ராமா ஹரே கிருஷ்ணா" .
மௌலியின் இரண்டாவது நாடகம், எந்த விதத்திலும் முதல் நாடகத்தைவிட நகைச்சுவையில் குறைவில்லை என நிரூபித்தது. 115 முறைகள் அரங்கேறியது.
உலகம் விரைவில் அழியப் போகிறது என்று ஒரு காலனியில் ஒரு கத்துக்குட்டி விஞ்ஞானி சொல்வான்.அந்த பயத்தில், அந்தக் காலனியில் இருக்கும் மனிதர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை நகைச்சுவை மழையாகத் தந்தது இந்நாடகம்
இந்நாடகத்தில் சேஷப்பா என்னும் சவடால் பாத்திரத்தில் ஏ ஆர் எஸ் நடித்திருப்பார்.அதில் வரும் நகைச்சுவை, ஒரு சாதாரண ரசிகனைத் திருப்திப் படுத்தியதில் ஆச்சரியமில்லை.ஆனால் அவை , நடிகர் திலகத்தையே விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவை.சிவாஜிக்கு மிகவும் பிடித்த அந்நாடக நகைச்சுவை இப்போது உங்களுக்காக
ஒரு பாகவதர் ஏ ஆர் எஸ்ஸிடம்(சேஷப்பா) கோவில் திருவிழாவில் பாடுவதற்கு சான்ஸ் கேட்பார்.
இல்லை நாங்க ரிகார்ட் வைக்கப்போறோம் என்பார் சேஷப்பா
பாகவதர், "ரிகார்ட் வைக்கிற இடத்தில், என்னை வைக்கக் கூடாதா"என பாகவதர் கேட்பார்
"சீச்சீ அந்த இடத்தில் உன்னை வைச்சா ஊசி கிழிச்சிடும்" என்பார் சேஷப்பா
இப்படி நகைச்சுவை தோரணங்களால் நாடகம் சக்கைப் போடு போட்டது.
மௌலி யூஏஏவிற்கு எழுதிய இரண்டாவது நாடகமும் மாபெரும் வெற்றியைப் பெற்று தந்தது.
No comments:
Post a Comment