Friday, April 13, 2018

ஒய்ஜிபியும் யூஏஏவும் - 14

  (ரகசியம் பரம ரகசியம் நாடகத்தில் ஏ ஆர் எஸ்., மகேந்திரன்)



1972ல் மௌலி எழுதிய பத்மவியூகம் என்ற நாடகம் அரங்கேறியது.திரில்லர் நாடகம்.120 முறை மேடையேறியது

1974ல் மௌலி மீண்டும் .நாடகம் குருக்ஷேத்திரம்.இந்நாடகம் பற்றிய் விவாதத்தில் திருமதி ஒய்ஜிபியும் கலந்து கொண்டது சிறப்பு.
இச்சமயத்தில் பதிவு செய்யப்பட வேண்டிய இன்னமும் ஒரு செய்தி,ராஜம்மா, யுஏஏவின் அனைத்து நாடகங்களையும் விமரிசிப்பார்.அவரைப் பற்றி  ஒய்ஜிபி விளையாட்டாகக் கூறுவார், " என் சிறந்த நண்பர் ராஜம்மா, சிறந்த விமரிசன எதிரியும் ராஜம்மா" என்று. 

இந்நாடகத்திற்குப் பிறகு மௌலி யுஏஏவிலிருந்து விலகி தனிக்குழுவை ஆரம்பித்தார்.

வெங்கட் என்னும் இளைஞர் ,மகேந்திரனிடம் ஒரு கதையைச் சொல்ல, அவருக்கும் அது பிடித்துப்போக வெங்கட்டை ஒய்ஜிபியிடம் அழைத்துச் சென்றார்.

அந்த இளைஞர் சொன்ன நாடகமே "ரகசியம் பரம ரகசியம்"

தி மவுஸ் டிராப் என்ற நாடகம் லண்டனின் 66 ஆண்டுகளுக்குமேல் தொடர்ந்து நடைபெற்று வந்ததாம்.கிட்டத்தட்ட இந்நாடகத்தையும் அப்படிச் சொல்லலாம்.தொடர்ந்து இந்நாடகம் நடைபெறாவிடினும் இன்றும் நடைபெற்று வருகிறது.44 ஆண்டுகளாக..மக்களால் ரசிக்கப் படுகிறது.

மகேந்திரனிடம், ஒய்ஜிபி இயக்குநர் பொறுப்பை அளித்து மகிழ்ந்த நாடகம் இது.இந்நாடகத்தில்ம் மர்ஃபி என்ற பாதிரியார் வேடத்தில் ஏ ஆர் எஸ் நடித்தார்.பின்னர் அதே கதாபாத்திரத்தை ரவி ராகவேந்திரர் செய்தார்.இப்போது பாலாஜி என்ற நடிகர் செய்து வருகிறார்.24 வயதில் மகேந்திரன் எற்ற பாத்திரத்தை 68வயதிலும் மகேந்திரனே நடித்து வருவது சிறப்பாகும்

சோகமான பாத்திரமேற்று பார்ப்பவர் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் மகேந்திரன், குணசித்திர வேடத்திலும், தன்னால் பிரகாசிக்க முடியும் என நிரூபித்த நாடகம்.
ஒரு நல்ல நகைச்சுவை நடிகனாலேயே, குணசித்திர வேடத்திலும் சோபிக்கமுடியும் என்பது உண்மை என நிரூபித்தவர் மகேந்திரன்

இந்நாடகம் பற்றி இவ்வளவு சொல்லிவிட்டு இதில் வரும் சாகாவரம் பெற்ற இரு நகைச்சுவை வசனங்களைக் கூறாவிடில் பதிவு முற்று பெறாது.

             (கதாசிரியர் வெங்கட்)

சுப்புணி, அப்பளத்தை..அபளம்..என்பார்.அப்பளத்தை அபப்டிச் சொல்லக் கூடாது அப்பளம்னு அழுத்திச் சொல்லணும்..எங்கே சொல்லு..என்றதும்..அழுத்திச் சொன்னா அபளம் நொறுங்கிடுமே என்பார்

அடுத்து, ஊதுவத்தி  ஸ்டாண்டை முழுங்கிட்டான் என்று சொன்னதும் அதிர்ச்சியில் மற்றவர் இருக்க "எங்க வீட்ல வாழைப்பழம்தான் ஊதுவத்தி ஸ்டாண்ட் எனக் கூறும் இடம்

இந்நாடலம் 1000 முறையைக் கடந்து இன்னமும் மேடையில் வெற்றிநடை போடுகிறது

No comments: