அத்தியாயம் - 10
1966ல் அரங்கேறிய நாடகம் P V Y ராமன் எழுதிய "மாலதி ஒரு தொல்லை" .இந்நாடகம் 30முறை மேடை கண்டது.ஜெயலலிதாவும் நடித்திருந்தார்.
1967ல் ராமன் எழுதிய "சத்யமேவ ஜெயதே" 23
காட்சிகள்"அண்ணி"சேது எழுதிய "Fortnight in Kailash" 37 முறைகள் மேடை ஏறியது
இக்காலகட்டத்தில் ஒய் ஜி பி தனது குழுவில் புதியதாக இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க எண்ணினார்.
அம்பத்தூரைச் சேர்ந்த நான் ,மௌலி, விசு, ராஜாமணி, கணேஷ் ஆகியோர் அவ்வப்போது நாடகம் போட்டு வந்தோம் .அப்படி ஒருசமயம் மௌலி எழுதிய ""Bon voyage" என்ற நாடகத்தைக் காண ஏ ஆர் எஸ் வந்திருந்தார்.அதில் மௌலியின் நடிப்பைக் கண்டு அவர் ஒய்ஜிபியிடம் சொல்ல மௌலி தன் நண்பர்களுடன் யூஏஏ வில் நடிக்க ஆரம்பித்தார்.
அச்சமயம் டன்லப் கம்பெனியில் வேலை செய்து வந்த சுந்தரம் என்பவர் எழுதிய "கண்ணன் வந்தான்" என்ற நாடகத்தை யூஏஏ அரங்கேற்றம் செய்தனர்.75 முறை இந்நாடகம் மேடையேறியது.குழுவின் புகழும் உச்சத்திற்குச் சென்றது.லட்சுமி மேடைக்கு அறிமுகமானார்.இந்நாடகத்தின் நகைச்சுவைக் காட்சிகளை மௌலி எழுதினார்
இந்நாடகத்தில் ஒய்ஜிபி பாரிஸ்டர் ரஜினிகாந்தாகவே வாழ்ந்தார்.கண்ணனாக ஏ ஆர் எஸ் நடித்தார்.இந்நாடகமே பின்னாளில் நடிகர் திலகம் நடிக்க வெற்றி ப்படமான "கௌரவம்" ஆக வெளி வந்தது.
ஒய்ஜிபி, ஏ ஆர் எஸ் ஏற்ற வேடங்களை திரையில் இரட்டை வேடங்களில் சிவாஜி செய்தார்.மேடையில் லட்சுமி இரு வேடங்களில் நடிக்க திரையில் உஷா நந்தினியும் ரமாபிரபாவும் செய்தனர்
"I am an university.Men may come and men may go., but I go on for ever" என்ற வசனத்திற்கும்
நான் வெளியே போனா யானைகூட குறுக்கே வராது, இன்னிக்கு பூனை இல்ல குறுக்கே வரது "என்ற வசனத்திற்கும்,ஒய்ஜிபி உயிரைக் கொடுத்தார்.
ஆனால், அதே சுந்தரம் எழுதிய "வியட்நாம் வீடு" என்ற நாடகத்தை ஒய்ஜிபி நிராகரித்தார்.
என்? அவரால் அந்நாடகம் குறித்து சரியான புரிதல் இல்லாததாலா? என்றால்..அதற்கான பதில்,
"அதிக பிராமண பாஷை" அதில்.குறிப்பிட்ட இனத்தைக் குறிக்கும் வகையில் எந்த நாடகத்தையும் போட அவர் விரும்பவில்லை என்பதே உண்மை
"அதிக பிராமண பாஷை" அதில்.குறிப்பிட்ட இனத்தைக் குறிக்கும் வகையில் எந்த நாடகத்தையும் போட அவர் விரும்பவில்லை என்பதே உண்மை
No comments:
Post a Comment