Saturday, April 14, 2018

ஒய்ஜிபியும் யூஏஏ வும் - 15



(பரீட்சைக்கு நேரமாச்சு நாடகத்தில் ஒஜிபி ஏற்ற நரசிம்மாச்சாரி வேடத்தில் வெள்ளித்திரையில் சிவாஜி)

தேடினேன் வந்தது இது 1976ல் அரங்கேறிய நாடகம்.ஒய்ஜிஎம் மற்றும் வெங்கட் கூட்டணியில் வந்த நாடகம் .நூறுகாட்சிகள் நடந்தது

அடுத்து விசு  இவர்களுக்காக எழுதிய நாடகம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு.125 முறைகளுக்கு மேல் மேடையேறியது

அடுத்து ஒய்ஜிஎம்-வெங்கட் கூட்டணி மீண்டும்.நாடகம்- பரீட்சைக்கு நேரமாச்சு

"BLOCKBUSTER"

பரீட்சைக்கு நேரமாச்சு.இருநூறு முறைக்கு மேல் மேடையேறிய நாடகம்..இன்றும் ஒய்ஜிஎம் இந்நாடகத்திப் போட்டு வருகிறார்.இந்தியாவில் மட்டுமின்றி யூஎஸ்., மலேஷியா, சிங்கப்பூர் என உலகநாடுகள் அனைத்திலும் வெற்றிகண்ட நாடகம்

நரசிம்மாச்சாரி வேடத்தைல் ஒய்ஜிபி நடிக்க அவரது மகன் வரதுகுட்டியாகவும், பின் ஆனந்த் என்ற கதாபாத்திரத்தில் ஒய்ஜிஎம் கொடிகட்டி பறந்தனர்.

குறிஞ்சிமலர் மலர் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பூக்கும்.யுஏஏவின் குறிஞ்சிமலர் இந்நாடகம் என்றால் மிகையில்லை

இந்நாடகத்தை முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் திரையிலும் ரசித்தனர் மக்கள்.ஒய்ஜிபி ஏற்ற பாத்திரத்தை சிவாஜி ஏற்றார்.மகனாக ஒய்ஜிஎம் நடித்தார் .

ஏற்கனவே கண்ணன் வந்தான் நாடகத்தில்  ஒய்ஜிபி ஏற்ற பாரிஸ்டர் ரஜினி காந்த் பாத்திரத்தை திரையில் சிவாஜி ஏற்றார்.மீண்டும் பரிட்சைக்கு நேரமாச்சு நாடகத்தில் ஒய்ஜிபி ஏற்ற பாத்திரத்தை நடிகர் திலகம் எற்றார்.இதைவிட ஒரு கலைஞனுக்கு பேறு என்ன வேண்டும்.ஒய்ஜிபிக்கு அப்பேறு கிடத்தது.

இந்நாடகத்தை சமீபத்தில் மீண்டும் ஒய்ஜிஎம் மேடையேற்றினார்.
இம்முறை நரசிம்மாச்சாரி வேடத்தை மகேந்திரன் ஏற்க, மகேந்திரன் ஏற்ற வேடத்தை பாலாஜி எற்றார்
தன் மகன் இறந்ததற்குக் காரணம் ஆனந்த் என்று தெரியவரும் போது அது ஜோக்குத்தான் என எண்ணி சிவாஜி படத்தில் காட்டும் முகப்பாவனை சிவாஜி ரசிகர்களின் கை த்தட்ட்ல்களை ப் பெற்றது.மேடையிலும், அதே போன்று அவரைக் காபி அடிககமால், அதேநேரம் அந்நடிப்பிற்கு சற்றும் குறைவில்லாமல் மகேந்திரன் நடித்தார்.அப்பப்பா..என்ன ஒரு நடிப்பு..
மீண்டும்"நகைச்சுவை நடிகனால் மட்டுமே குணச்சித்திர வேடத்தில் பிரகாசிக்க முடியும் என்பதை மீண்டும் நிரூபித்தார் மகேந்திரன்

ஜாதி, ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து மனித நேயத்தை வலியுறுத்தியது இந்நாட்கம்.

இந்நாடகம், சமீபத்தில் மேடையேறியபோது, அதைப் பார்த்த முக்தா ஸ்ரீனிவாசன் மகிழ்ந்து, இதை மீண்டும் திரைப்படமாக எடுக்கலாமா? என்று வினவ, மகேந்திரனும் சம்மதித்தார்.ஆனால், அதற்குள் இயற்கை அவரை அழைத்துக் கொண்டு விட்டது

No comments: