Saturday, December 13, 2008

படித்ததும்...கேட்டதும்... 13-12-08

1. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் டாக்டர்களையும்,நர்ஸ்களையும் உருவாக்கும் நாடு இந்தியா.

2.குற்றங்களும் தவறுகளும் உருவாக..வேலையில்லாததும்,வறுமையும்தான் முதல் காரணமாய் இருக்க முடியும்.நோய் என்ன வென்று கண்டுபிடிச்சாத்தான் சரியான மருந்து கொடுக்க முடியும்.

3.பிறக்கும் போது நான் இந்துவாகப் பிறந்தது என் குற்றமில்லை..ஆனால் இறக்கும் போது ஒருக்காலும் ஒரு இந்துவாக இறக்க மாட்டேன் - அம்பேத்கர்

4.ஒரு உயிரினம் அழியாமல் தடுத்த பெருமை பெட்ரோலியத்திற்கு உண்டு.முன்னர் விளக்கு எரிக்க திமிங்கில எண்ணெய்யை பயன்படுத்தினர்..இதனால் திமிங்கிலம் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது..பெட்ரோலியத்தின் ஒரு அங்கமான மண்ணெண்ணெய் கண்டுபிடிக்க திமிங்கிலங்கள் தப்பின.

5.திருமங்கலத்தில் ம.தி.மு.க.,வின் தொகுதியை அ.தி.மு.க.விற்கு விட்டுக்கொடுத்தார்.வை.கோ., -செய்தி
(இந்த விட்டுக்கொடுப்பு முதல்லேயே இருந்திருந்தால் தி.மு.க. அணியிலேயே இருந்திருக்களாமே தன்மானம் காத்திருக்கலாமே-நாம்)

6.ஆனந்த விகடனில் சமீபத்தில் வந்த லக்கிலுக்கின் கவிதையில் சில வரிகள்

'கள்ளக் கவிதை'

காதல் கழுதை

முன்னே போனா

முட்டுது

பின்னே வந்தா

உதைக்குது.

7.ஆண்டுக்கு 1000 கோடிகளுக்கு மேல் வருமானம் இருந்தாலும்..திருப்பதி கோவில் அரசுக்கு வரிபாக்கி வைத்திருக்கிறது.

8.சமீபத்தில் மறந்த வி.பி.சிங் கிற்கு பாராளுமன்றத்தில் சிலை வைக்க தி.மு.க. முயற்சிகள் மேற்கொள்ளும் - கலைஞர்

No comments: