Friday, December 19, 2008

படித்ததும்...கேட்டதும்... (20-12-08)

1.நான் பட்டினி கிடந்தேன்..நான் நோயாளியாக இருந்தேன்..அந்த சமயத்தில்தான் என்னை நீங்கள் அழைத்துக்கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று கூறும் ஒவ்வொருத்தரின் தேவைகளையும்
பூர்த்தி செய்து,அவர்களுடைய பசியை ஆற்றுவதிலேயே..நான் கடவுளுக்கு சேவை செய்வதாக உணர்கிறேன். - அன்னை தெரசா

2.குழந்தைகள் நாம் சொல்லிக் கற்பது குறைவு,,நாம் செய்வதைப் பார்த்துக் கற்பதுதான் மிகுதி..அதனால் நாம் நல்லவனாக நடந்து வழி காட்ட வேண்டும்.

3.ஜேசுதாஸின் வாழ்நாள் கனவு சமீபத்தில் நிறைவேறி உள்ளது,கிறிஸ்துவராக இருந்தாலும்..குருவாயூரப்பனின் தீவிர பக்தனான அவருக்கு சமீபத்தில்தான் கோயிலுக்குள் செல்ல முறையான அனுமதி அளித்திருக்கிறதாம் ஆலய நிர்வாகம்.

4.இந்தியாவில் அமுல்படுத்தப்பட்ட பசுமை புரட்சிதான் இதுவரை மனிதனால் மேற்கொள்ளப்பட்ட சீரழிவுகளில் மிக மோசமானது.அந்த திட்டம் உடனடியாகப் பலனளிப்பது போல ஒரு தோற்றத்தை உண்டாக்கியிருந்தது.ஆனால் சமீபத்தில் பஞ்சாபில் அதன் மோசமான தொடர் விளைவுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.வருடம் முழுதும் அதிக தண்ணீர் தேவைப்படும் பயிர்களைப் பயிரிடப் பழகி விளை நிலங்களை பாழ் படுத்தி விட்டது இந்தியா...இப்படி வருத்தப்பட்டு இருப்பவர்,,இங்கிலாந்து இளவரசரும்..இயற்கை ஆர்வலருமான சார்லஸ்.

5.சுதந்திரம் கிடைத்த ஆறு மாதங்களில் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்.அடிமை இந்தியாவில் அவரை எதிரியாக நினைத்த பிரிட்டிஷார் கூட மதித்துப் பாதுகாத்த அவரை,சுதந்திர இந்தியாவில் நம்மால் பாதுகாக்க இயலவில்லை.

6.இந்திய ஒருமைப்பாடு என்பது ரவா லாடு போல.குஞ்சாலாடு போல..அல்லது மராத்திக்காரன் சொல்லும் பேசின் லாடு போல..பார்க்க உருண்டையாக,அழகாக..இளம் மஞ்சள் நிறமாக,முந்திரிப்பருப்பு,கிஸ்மிஸ் பதித்ததாக கவர்ச்சியாக இருக்கிறது.இது இனிப்பானது என்பதும் நமக்குத் தெரியும்..ஆனால், அழுந்த விரல்களால் தொட்டால் உதிர்ந்துப் போகும் பொல பொலவென்று மாவாக - தீதும்..நன்றும் (நாஞ்சில் நாடன்)

2 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//இப்படி வருத்தப்பட்டு இருப்பவர்,,இங்கிலாந்து இளவரசரும்..இயற்கை ஆர்வலருமான சார்லஸ்//

வயித்தெரிச்சல்...


இதே வார்த்தைகளை சக்கரம் கண்டுபிடித்த நிகழ்ச்சிக்கும் உபயோகப் படுத்தலாம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

////SUREஷ் said...
//இப்படி வருத்தப்பட்டு இருப்பவர்,,இங்கிலாந்து இளவரசரும்..இயற்கை ஆர்வலருமான சார்லஸ்//

வயித்தெரிச்சல்...


இதே வார்த்தைகளை சக்கரம் கண்டுபிடித்த நிகழ்ச்சிக்கும் உபயோகப் படுத்தலாம்////
:-))))????!!!!