Sunday, December 7, 2008

20 கோடி டாலர் நோட்டு

உணவு பற்றாக்குறை,விலைவாசி உயர்வு,அரசியலில் குழப்பம் என அதிக பிரச்னைகளைக் கொண்டது அந்த நாடு.

இந்நாட்டில் அனைவரும் லட்சாதிபதிகள் ,கோடீஸ்வரர்கள் தான்.எல்லோரிடமும் லட்சம், கோடி டாலர் நோட்டுக்கள் இருக்கும்.

இங்கு 1 லட்சம் டாலர்,1கோடி டாலர்,10கோடி டாலர் நோட்டுக்களை அரசு அச்சடித்துள்ளது.ஒரு லட்சம் டாலரின் மதிப்பு 45 ரூபாய்.ஒரு ரொட்டி விலை 2 லட்சம் டாலர்.

நாளுக்கு நாள் இந்நாட்டின் டாலர் மதிப்பு குறைந்து வருவதால்..20 கோடி டாலர் நோட்டை வெளியிட அரசு முடிவெடுத்து இருக்கிறதாம்.இந்நாட்டின் 20 கோடி டாலரின் இந்நிய ரூபாய் மதிப்பு 91206 தான்.

அந்த நாடு ஜிம்பாப்வே.

இந்நாட்டு நிதி அமைச்சருக்கு பணவீக்கம் என்றால் என்ன என்று தெரியுமா?

5 comments:

மங்களூர் சிவா said...

கூடிய சீக்கிரம் எல்லாரும் கோடீஸ்வரர் ஆகப்போறோம்னு சொல்லுங்க!!

:))))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

// மங்களூர் சிவா said...
கூடிய சீக்கிரம் எல்லாரும் கோடீஸ்வரர் ஆகப்போறோம்னு சொல்லுங்க!!

:))))))))//


உங்க பின்னூட்டம் பார்த்ததும் ஒரு ஜோக்

அதோ போறாரே அவர் ஒரு லட்சாதிபதி
அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சா
கோடீஸ்வரனா இருந்தப்போவே ஆயிடுச்சு

மங்களூர் சிவா said...

இன்னைக்கு லட்சத்துக்கு மதிப்பில்லாம ஆகிடுச்சே.

சென்னைல வீடு வாங்கணும்னா 40லட்சம், 50 லட்சமாமே!?!?

T.V.ராதாகிருஷ்ணன் said...

///மங்களூர் சிவா said...
இன்னைக்கு லட்சத்துக்கு மதிப்பில்லாம ஆகிடுச்சே.

சென்னைல வீடு வாங்கணும்னா 40லட்சம், 50 லட்சமாமே!?!?///


700 சதுர அடி அடுக்ககம் இந்த விலையாகிறது இப்பவெல்லாம்

ஆதவன் said...

வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

http://www.thamizhstudio.com/

Add a Gadget - ல் இதை பயன்படுத்துக

வழி --> Add a Gadget --> select HTML/JavaScript

Title : தமிழ் ஸ்டுடியோ.காம்

Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>