Sunday, December 14, 2008

ஊடகங்கள் பொறுப்புணர்ந்து செயல்படட்டும்

.
நான்காவது தூண் என சொல்லப்படுபவை ஊடகங்கள்.

மக்களுக்கு அவை சமுதாயத்தில் நடக்கும் செய்திகளை தெரிவிக்க வேண்டிய, பெரும் பொறுப்பில் உள்ளன.ஆனால்...சமீப காலங்களில் ...அவை வெளியிடும் செய்திகள்...சில அரசியல் கட்சிகளுக்கு ஜால்ரா அடிப்பவையாகவும்,ஜாதி வெறியை தூண்டுபவையாகவும்,அரசு சார்புடையதாகவுமே இருந்து வருகின்றன.

சமீபத்தில் சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த கலவரத்தை..மீண்டும்...மீண்டும் காட்டி..குறிப்பாக ஒரு பிரிவை சார்ந்த மாணவன் மயங்கி விழுந்தும், அடிபடுவதையும்..வேறோரு பிரிவு மாணவன் கையில் கத்தியுடன் திரிந்ததையும்.. காட்டிக் கொண்டிருந்தனர்.இவை மறைமுகமாக சம்பந்தப்பட்ட பிரிவினரிடையே..வன்முறை எண்ணத்தை தூண்டி விடுவதைப் போலவே இருந்தன.

தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு..ஒவ்வொரு செய்தியையும்...நுணுக்கமாக ஆராய்ந்து..சரியான செய்திகளை மிகைப்படுத்தாமல்..வன்முறை தூண்டிவிடும் செய்திகளை சற்றுக் குறைத்தும்..மக்களிடம் சென்றடைய செய்ய வேண்டியது கடமை.

மும்பைகுண்டு வெடிப்பில்..CNN போன்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் முழு நேரமும் இடைவிடாது ஒளி/ஒலி பரப்பிக்கொண்டிருந்தார்கள்.அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ஓட்டு எண்ணிக்கையைக்கூட இப்படி இடைவிடாமல் cover செய்திருக்கமாட்டார்கள்.சம்பந்த பட்ட ....சம்பந்தப்படாதவர்களிடம்...சம்பவ இடத்தில் .இளம் பெண் நிருபர்கள் பேட்டி எடுப்பதை காட்டிக்கொண்டிருந்தார்கள்.

குண்டு வெடிக்கும் சமயம் ..மக்களோடு மக்களாய் காவல்துறையை சேர்ந்த ஒருவர் படுத்துக்கொண்டதை வட்டம் போட்டு காட்டி ..அவர் செய்யக்கூடாததை செய்ததுபோல் மாற்றி மாற்றி காட்டினர்.தவிர..நமது காவல் துறையும் சில நிர்வாக ரகசியங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நிகழ்ச்சிகளும் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது.

நடுநிலை என்ற தன்மையே ஊடகங்களில் காணப்படுவதில்லை.இலங்கை பிரச்சனையை இவை எவ்வளவுதூரம் மக்களிடம் சென்றடைய செய்தன.அவதிப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதால் ஒரு சமயம் இவர்கள் சரியாக செயல் படவில்லையோ என்றே எண்ணத் தோன்றுகிறது..

கடைசியாக -

சினிமாவுக்கு தணிக்கைக்குழு உண்டு.

நாடகங்களுக்கு script க்கு போலீஸ் கமிஷனர் அனுமதி தேவை.

ஆனால் இந்த ஊடகங்களுக்கோ எந்த தணிக்கை முறையும் இல்லை.

இனி கலவரம் நடைபெறும் சமயத்தில் ..நேரிடை நிகழ்ச்சிகள் காட்டப்படக்கூடாது.அப்போது எடுக்கப்பட்ட காட்சிகளை தணிக்கை செய்தபின்னர் காட்டலாம் என்ற சட்டம் இயற்றலாம்.

இல்லை...இப்படிப்பட்ட நிலை நீடித்தால் ..

ஊடகங்களால்... மககளிடையே வன்முறையும் சாதி வேறுபாடுகளும்,அரசியல் காழ்ப்புணர்ச்சிகளும் அதிகரிக்குமே தவிர .. குறையாது.

ஊடகங்கள் அவர்களின் பொறுப்புணர்ந்து செயல்படட்டும்.

16 comments:

rapp said...

me the first:):):)

rapp said...

:(:(:(

கோவி.கண்ணன் said...

//நான்காவது தூண் என சொல்லப்படுபவை ஊடகங்கள்.//

ஊடகங்கள் நான்காவது தூண் என்று சொல்வதை ஊடகங்கள் தான் மக்களிடம் பரப்பிவிட்டன. மக்கள் யாரும் அப்படி ஒரு பெயரை ஊடகங்களுக்கு கிடையாது.

அனைத்து ஊடகங்களுமே வியாபார நோக்கிற்காக நடக்கிறது. அவர்கள் எந்த கட்சி சார்பாக வளர்க்கப்படுகிறார்களோ அந்த கட்சிக்காக எழுதுவார்கள். வெறும் கட்சி பத்திரிக்கையாக தெரிந்துவிடாமல் இருக்க, "பெண் கற்பழித்துக் கொலை, ஓட ஓட வெட்டிக் கொன்றனர், குற்றாலம் அருகே யானைகள் புகுந்து விளைச்சல் பயிர்களை நாசம் செய்தன" போன்ற செய்திகளை போடுவர்.

இந்தியாவில் நான்காவது தூணிற்கு இலக்கணமாக அந்த பத்திருக்கையும் இல்லை.

தேவன் மாயம் said...

அனைத்து ஊடகங்களுமே வியாபார நோக்கிற்காக நடக்கிறது.

மிகசரியாகச்சொன்னீர்கள்!
நட்சத்திரப்பதிவாளராக தேர்வு
பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!!!
தேவா...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சினிமாவுக்கு தணிக்கைக்குழு உண்டு.

நாடகங்களுக்கு script க்கு போலீஸ் கமிஷனர் அனுமதி தேவை.
சார். செய்தியும் நாடகமும் ஒன்று என்று கூறுகிறீர்களா.........

SUREஷ்(பழனியிலிருந்து) said...

.நேரிடை நிகழ்ச்சிகள் காட்டப்படக்கூடாது.//அப்ப கிரிக்கட்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

// rapp said...
me the first:):):)///

வருகைக்கு நன்றி ராப்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///கோவி.கண்ணன் said...
இந்தியாவில் நான்காவது தூணிற்கு இலக்கணமாக அந்த பத்திருக்கையும் இல்லை///

உண்மைதான் கோவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

///thevanmayam said...
அனைத்து ஊடகங்களுமே வியாபார நோக்கிற்காக நடக்கிறது.

மிகசரியாகச்சொன்னீர்கள்!
நட்சத்திரப்பதிவாளராக தேர்வு
பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!!!
தேவா//


வருகைக்கு நன்றி தேவா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் said...
சார். செய்தியும் நாடகமும் ஒன்று என்று கூறுகிறீர்களா
வன்முறையைப் பரப்புவது..செய்தியாய் இருந்தாலும் சரி,நாடகமாய் இருந்தாலும் சரி..இல்லை வேறு எந்த பெயராய் இருந்தாலும் சரி ஒன்றுதான்...கண்டிக்கப்பட வேண்டும் அவை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

///SUREஷ் said...
.நேரிடை நிகழ்ச்சிகள் காட்டப்படக்கூடாது.//அப்ப கிரிக்கட்.//

????!!!!!:-))))

குடுகுடுப்பை said...

உங்கள் பேராசை நனவாகட்டும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி குடுகுடுப்பை

Venkat said...

Hello,

I completely agree with you on this one.

Electronic media was shamelessly standing outside Taj and providing live coverage of events. If these guys are claiming to be patriotic – they should not have provided ads at that time – they are all vying for ad revenue by telecasting breaking news – one after another.
I wish one of the hand grenades were hurled by commandos at the media standing outside and later they can say – it happened by mistake… who asked them to stand there and provide news? This govt does not have any guts to take on anybody – so far it has not done or told anything to the media.
Just before the 26/11 incident – can we rewind and see what was happening in India? All the media channels – were running behind that Malegaon incident as if no other terrorist activity happened in India before. This excessive compulsive importance from the media also makes the govt focus on that. And in turn, media covered only that one investigation.
In my opinion, all terrorists are bad and need to be condemned and provided nothing other than capital punishment. In fact I would even say that – when police arrests someone who is planning for a large terror incident – he/she should be punished for having committed the crime and not just planning for it.
Now the media cleverly detracts the issue saying - all politicians are waste - tell me one thing - first media need to question the ruling party. Did they do that? They are talking of all politicians. First it should be ruling and then the opposition. I am not supporting BJP or anyone else – but BJP will not be like Cong (I) – Cong (I) does not know what to do and bungling on one thing or the other.
God Save India.
Thanks
Venkataraghavan R

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Venkat

மதிபாலா said...

நடுநிலை என்ற தன்மையே ஊடகங்களில் காணப்படுவதில்லை.இலங்கை பிரச்சனையை இவை எவ்வளவுதூரம் மக்களிடம் சென்றடைய செய்தன.அவதிப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதால் ஒரு சமயம் இவர்கள் சரியாக செயல் படவில்லையோ என்றே எண்ணத் தோன்றுகிறது..//

உண்மைதான் , தமிழர்கள் என்பதாலேயே புறக்கணிக்கின்றனவா ஊடகங்கள் என்பதில் சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியாது.


சமீபத்தில் நடந்த போலியோ நிகழ்வும் அத்தகையதாகவே இருக்கிறது.