Wednesday, December 3, 2008

தமிழா உன் நெற்றி தயாராகட்டும்..

முல்லை பெரியாறுஅணை சம்பந்தமாக நாடாளுமன்ற நிலைக்குழுவினர் சாம்பசிவ ராவ் தலைமையில் அணையை பார்வையிட்டார்கள்.10 நிமிடங்கள் பார்வையிட்டு விட்டு..'அணை பலவீனமாக உள்ளது,உடைந்தால் 5 மாவட்டங்கள் அழிந்துவிடும், ஆகவே புது அணை கட்டவேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளனர்.

ஆனால், உச்ச நீதி மன்றத்தில் இது தொடர்பான வழக்கில்'அணை பலமாக இருப்பதாக' நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.இத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்தனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று கேரளா ஒத்துழைப்புத் தர வேண்டும்.

10 நிமிடங்களே பார்வையிட்டுவிட்டு அணை பலவீனமாக இருக்கிறது என்ற கருத்தை ஏற்கமுடியாது என்றும்,இக்குழுவின் அறிக்கைக்கு தமிழக அரசு மத்ய அரசிடம் தன் ஆட்சேபத்தை தெரிவிக்கும் என்றும் பொதுப்பணித்துறை அமைச்சரும்,சட்ட அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

4 comments:

மணிகண்டன் said...

ஹோக்கேனக்கள், காவேரி பிரச்சனைகளில் தமிழ்நாடு பழி வாங்க பட்டுவருகிறது. அதே போன்று, முல்லை பெரியாறு பிரச்சனையை என்னால் பார்க்கமுடியவில்லை. புதிய அனை அமைக்க மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் ஆகலாம்.

எனக்கு இந்த பிரச்சனையில் புரிதலில் உள்ள குறைபாடாகவும் இருக்கலாம்.

கரிகாலன் said...

நாடாளுமன்ற குழுவினர் தள்ளாடிக்கொண்டு போயிருப்பார்கள். அதனால் அணை ஆடுவதாக அவர்களுக்கு தெரிந்துள்ளது.

அயிட்டம் பார்ப்பதற்கு மப்புல போகலாம். அணையை பார்ப்பதற்கு மப்பு இல்லாம போகனும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மணி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கரிகாலன்