Friday, December 12, 2008

ஐஸ்வர்யாராய்க்கே அடுத்த இடம்தான் நமீதாவின் இந்திய சாதனை!

நடிகர் சங்கம் ஒரு விழாவே எடுக்கலாம் பின் வரும் செய்திக்காக! கூகுல் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகர், நடிகைகள் லிஸ்டில் மூன்றாவது இடத்திலிருக்கிறார் நமீதா.
இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள ஒரே தென்னிந்திய நடிகை இவர் மட்டும்தான்! இவருக்கு பிறகுதான் இருக்கிறாராம் ஐஸ்வர்யாராயே! கூகுள் சர்ச் என்ஜின் பற்றி இணையதள வாசகர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. எந்த புகைப்படம் தேவை என்றாலும், இந்த சர்ச் என்ஜினுக்கு போய் தேடி டவுன்லோடு செய்து கொள்ளலாம். அப்படி நமீதாவை தேடியவர்களின் எண்ணிக்கை 2008 ம் வருடத்தில் மட்டும் சுமார் 3 கோடி பேர்களாம். முதலிடத்தில் கேத்ரீனா கைப், இரண்டாமிடத்தில் சல்மான் கான், மூன்றாவது இடத்தில் நமீதா!

“இந்த பெருமைக்கு காரணம் என்னுடைய ரசிகர்கள்தான். அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துக்களும்” என்கிறார் நமீதா. அப்படியே இந்த மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டிருக்கும் கூகுள் நிறுவனத்திற்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார் நமீ!

நன்றி .தட்ஸ் தமிழ்

4 comments:

கோவி.கண்ணன் said...

//
“இந்த பெருமைக்கு காரணம் என்னுடைய ரசிகர்கள்தான். அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துக்களும்” என்கிறார் நமீதா. அப்படியே இந்த மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டிருக்கும் கூகுள் நிறுவனத்திற்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார் நமீ!
//

நமீதாயணத்தை பதிவுலகம் அறிந்து கொண்டு பயனுறச் செய்த உங்களுக்கும் வாழ்த்துக்கள் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஒரு இந்தியரின் சாதனை...அதுவும் தமிழ்த் திரை உலகில் உள்ளவர் சாதனை..அதை பாராட்டாமல் இருக்க முடியுமா? கோவி...

குடுகுடுப்பை said...

அப்படி தேடி சில பேரு நமீதா பேட்டின்னு வ.மு நம்ம பதிவையும் படிச்சாங்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

///குடுகுடுப்பை said...
அப்படி தேடி சில பேரு நமீதா பேட்டின்னு வ.மு நம்ம பதிவையும் படிச்சாங்க///


நமீதாவின் சாதனையில் தங்களீன் அணில் பங்கையும் பாராட்டுகிறேன்