Monday, December 8, 2008

திருவள்ளுவனின் அருமை தெரியாதவனே.....

நீதியை மனிதர்களுக்கு போதிக்கும் இந்நூல்..படிப்பவர்களை மேன்மைப்படுத்தும் தன்மையை உடையது.

133 அதிகாரங்கள், 1330 குறட்பாக்கள்..133 அடி உயரத்தில் குமரி முனையில் நின்றுக்கொண்டு இந்தியாவை கண்காணித்துக் கொண்டிருக்கிறான் வள்ளுவன்.இந்நூல் சங்ககாலத்திற்கு பிந்தைய நூலாக இருந்தாலும்..எந்நாளிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வந்திருக்கிறது.

சென்ற நூற்றாண்டில் இந்நூல் ஒரு இலக்கியமாக திகழ திராவிட இயக்கத்தினர் தான் காரணம்.பின்னரே..இது தமிழகத்தின் முதன்மை நூலானது எனலாம்.

தமிழ்ப்பாட புத்தகங்களில் ஆரம்ப பள்ளி முதல்...உயர் கல்விவரை திருக்குறள் இடம் பெற்றுவருகிறது.தமிழக பேருந்துகளில் குறள் இடம் பெற ஆரம்பித்ததுமே..குறள் பற்றி தெரியாதவர் வாய்களிலும் குறள் ஒலிக்கத் தொடங்கியது எனலாம்.

தமிழில் இருந்து உலக மொழிகளில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட நூலுக்கான பெருமை இதையே சேரும்.

அண்டை மாநிலம்..வள்ளுவன் சிலை வைக்க சம்மதிக்காவிட்டால்..வள்ளுவனுக்கு இழுக்கு இல்லை...இழப்பு இல்லை..

நஷ்டம் அம்மாநிலத்தவர்க்கே...

விட்டுத்த்ள்ளுவோம்..

கலைஞருக்கு ஒரு வேண்டுகோள்...

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க ஆவண செய்யுங்கள்.

12 comments:

குடுகுடுப்பை said...

அதுக்கு கூட இது தேசிய நூல் ஆக்குனா சோறு கெடக்குமான்னு எதிர்ப்பு தெரிவிப்பாங்க நம்மூர்ல.

நசரேயன் said...

தமிழ் ஈழம்,காவிரி,முல்லை பெரியாறு முடிஞ்ச பிறகு

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி குடுகுடுப்பை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி நசரேயன்

கோவி.கண்ணன் said...

எனக்கென்னவோ திருவள்ளுவர் சிலையை பெங்களூரில் பொது இடத்தில் வைக்க உடன்பாடு இல்லை, தமிழர்களுக்கு எதிராக கலவரங்கள் நடக்கும் போதெல்லாம் சேதப்படுத்து ஆனந்தப்பட்டு நம்மை சீண்டுவார்கள், தேவையா இது ?

அப்படி திருவள்ளுவர் சிலை வேண்டும் என்று பெங்களூர் தமிழர்கள் விரும்பினால் தமிழ்சங்க கட்டிட நிதி திரட்டி பெரிய அளவில் கட்டி அந்த வளாகத்தினுள், அல்லது தமிழக அரசின் விருந்தினர் மாளிகை வளாகத்தினுள் வைத்தால் பாதுகாப்பாக இருக்கும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நானும் அதைத்தான் சொல்கிறேன் கோவி..தில்லியிலும் தமிழ்ச் சங்க வளாகத்தில் தான் இருக்கிறது.அதுபோல செய்து விடலாம்..அதைவிட்டு விட்டு இவர்களிடம் ஏன் தொங்க வேண்டும்?

ஆதவன் said...

வணக்கம்

நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/
Add a Gadget - ல் இதை பயன்படுத்துக
வழி --> Add a Gadget --> select HTML/JavaScript
Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

மணிகண்டன் said...

பெங்களூர் தமிழ் சங்க கட்டிடத்தில் திருவள்ளுவர் சிலை இப்போது இல்லையா ?

மணிகண்டன் said...

அதே போன்று கர்நாடக மக்களை தாங்கள் கேலி செய்வதை கண்டிக்கிறேன் ! அங்கேயும் இந்த பிரச்சனை அரசியல் ஆக்கபட்டதே இவ்வளவு கலவரங்களுக்கு காரணம். வெளி மாநிலத்தவர் வாழ்வதற்கு எளிதான மாநிலம் கர்நாடகம் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

///மணிகண்டன் said...
பெங்களூர் தமிழ் சங்க கட்டிடத்தில் திருவள்ளுவர் சிலை இப்போது இல்லையா ?///


தமிழ்ச்சங்க வளாகத்துக்குள் சிலை வைக்க எதிர்ப்பு வரப்போவதில்லை.எதிர்ப்பே பொது இடத்தில் வைப்பதற்குத்தானே

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
அதே போன்று கர்நாடக மக்களை தாங்கள் கேலி செய்வதை கண்டிக்கிறேன் !//

ஒட்டு மொத்த கர்நாடகா மக்களை சொல்லவில்லை.கன்னட வெறியர்களைத்தான் சொன்னேன் மணி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
வெளி மாநிலத்தவர் வாழ்வதற்கு எளிதான மாநிலம் கர்நாடகம் !//

unmai