இப்போதெல்லாம் வாரத்திற்கு நான்கும் அதற்கும் மேலாகவும் படங்கள் வெளியாகின்றன.குறைந்த பட்ஜெட் படங்களே இவை.வேண்டுமான அளவிற்கு இவற்றுக்குத் தியேட்டர்கள் கிடைப்பதில்லை.இப்படி சமீபத்தில் வெளிவந்த ஒரு படம் திரையிட சில காட்சிகளே..ஒரு வாரத்திற்குக் கிடைத்தது.படமும் சுமாரான படம்.ஒழுங்காகத் தியேட்டரில் வந்திருந்தால் கண்டிப்பாக டீசண்ட் கலெக்க்ஷன் கிடைத்திருக்கும்.
முன்பு, தொடர்ந்து ஆங்கிலத் திரைப்படங்களே வெளியான திரையரங்குகளில், வருடத்திற்கு மூன்று மாதங்களாவது தமிழ்த் திரைப்படம் போடவேண்டும் என அரசு அறிவித்தது.(இப்போது அது நடைமுறையில் இல்லை.அதற்கான அவசியமும் இல்லை.ஏனெனில் பல மல்டிபிள் காம்பெளெஃக்ஸ் வந்துவிட்டது.)
அதுபோல இப்போது...ஒரு பெரிய நடிகர்/பட்ஜெட் படம் வந்தால் 600, 700 காட்சிகள்( ஒரே நாளில் திரையிடப்பட்டு, வசூலும் ஆகி தயாரிப்பாளர்களை நஷ்டத்திலிருந்து காப்பாற்றியும் விடுகிறது.அதுபோல சிறுபட்ஜெட் படத் தயாரிப்பாளர்களும் காக்கப்பட வேண்டும்.அதற்காக தயாரிப்பாளர்கள் சங்கம் திரையரங்கு உரிமையாளர்களுடன் பேசி, வாரம் குறைந்தது 50 முதல் 100 காட்சிகளாவது குறைந்த பட்ஜெட் படங்களை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைக்க வேண்டும்.அப்போதுதான், குறைந்த , தரமான பட்ஜெட் படங்கள் வெற்றிபெற முடியும்.
தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை வாக்களித்துத் தேர்ந்தெடுப்பதில் இந்தத் தயாரிப்பாளர்கள் பங்கும் உண்டு என்பதை மறக்காமல் இவர்களுக்கு ஆவண செய்து..இவர்கள் தயாரிப்பாளர்களாக நீடிக்க சங்கம் உதவ வேண்டும்..
செய்வார்களா?
2 comments:
உண்மைதான்! நல்ல வேண்டுகோள்!
செய்வார்களா !?
செய்யமாட்டோம். அப்புறம் பெருந்தலைகளுக்கு என்ன மரியாதை?
Post a Comment