Wednesday, January 23, 2013

புத்தகக் கண்காட்சியும்...பிரபல எழுத்தாளர்களும்..




புத்தகங்கள் படிக்கும் வழக்கம் மக்களிடையே குறைந்துவிட்டது என்னும் புலம்பல் அடிக்கடிக் கேட்டுக் கொண்டிருந்தாலும்..புத்தகக் கண்காட்சிக்கு வருகின்ற கூட்டம் சற்றும் குறைவதில்லை.தவிர்த்து..கண்காட்சி காலத்தில் வெளியிடப் படும் புத்தகங்களின் எண்ணிக்கையும் வருடா வருடம் அதிகரித்து வருகிறது.

எழுத்துகள்..குறிப்பாக பல பிரபல எழுத்தாளர்களின் எழுத்துகள், நம்மை எப்படி கட்டிப் போட்டு விடுகின்றன.பல பிரபல எழுத்தாளர்கள் அமரர் ஆன நிலையிலும் சரி, எழுதுவதை நிறுத்திக் கொண்டுவிட்ட போதும் சரி..நம்மால் அவர்கள் எழுத்தை மறக்கமுடிவதில்லை.

உதாரணத்திற்கு..கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கல்கியின் நாவல்கள். அதிலும் குறிப்பாக பொன்னியின் செல்வன்..எத்தனை முறை வார இதழில் வந்திருந்தும்..பல பதிப்பகங்கள் புத்தகமாக அதிக விலையிலும் சரி, மலிவு பதிப்பாகவும் சரி வெளியிட்டிருந்த போதும்..கண்காட்சிகளில் முக்கியமாக பலரால் வாங்கப்பட்டுக் கொண்டே இருக்கும் புத்தகமாகும்.

கவியரசு கண்ணதாசனின் தித்திக்கும் பாடல்கள், எழுத்துக்களிடையே..மாபெரும் சரித்திரம் படைத்துக் கொண்டு இருப்பது 'அர்த்தமுள்ள இந்து மதம்' .மக்கள் அள்ளிக்குவிக்கும் புத்தகங்களில் ஒன்று.

சாண்டில்யனின், கன்னி மாடமும், கடல்புறாவும் இன்னமும் வேகமாக பறந்து கொண்டிருக்கின்றன.

தேவனின் கதைகள்..இன்னமும் உம்மணாமூஞ்சிகளை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.

சுஜாதாவின் எழுத்துகள்..மக்களை வசீகரித்துக் கொண்டிருக்கின்றன இன்னமும்.

தி ஜா ரா வின் மரப்பசு, நளபாகம்,மோகமுள் மீதான மோகம் தீரவில்லை வாசகர்களுக்கு.

சுந்தர ராமசாமியின் புளியமரத்தை மக்கள் இன்னமும் விரும்புகின்றனர்.

பாரதிக்கும், வள்ளுவனுக்கும் என்றுமே இங்கு இடம் உண்டு.

சரி..இன்றுள்ள எழுத்தாளர்கள் புத்தகங்கள் எப்படி..

ஜெயகாந்தனின் புத்தகங்கள் இன்னமும் விலை மதிப்பில்லாதவையாக விருப்பப்படுகின்றன.

சிவசங்கரி, அனுராதா ரமணன், ரமணி சந்திரன், லட்சுமி ஆகியோர்  நாவல்கள் ஆர்ப்பாட்டமில்லாமல் மக்கள் வீடுகளில் குவிக்கப்படுகின்றன.

வண்ணதாசன், எஸ்.ரா., நாஞ்சில் நாடன் இப்படி அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாசகர் ஆதரவு உண்டு.

கண்காட்சியில்..வெளியே ஒரு நடிகரைக் கண்டால் மயங்கும் அளவுக்கு தங்கள் விருப்ப எழுத்தாளரைக் கண்டால் மக்கள் மகிழ்கின்றனர்.

ஐயா ..பாரதி நீ இருந்திருந்தால் இன்று என்ன கூறியிருப்பாய்..

பேதை சொன்ன 'மெல்ல தமிழ் இனிச் சாகும்' என்ற வார்த்தைகளுக்கு பதிலாக..'எட்டுத் திக்கிலிருந்தும் மக்கள் கூடி கண்காட்சிக்கு வந்து தங்கள் அறிவு,இலக்கியத் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளுமட்டும் தமிழ் சாகாது 'என உரைத்திருப்பாய்..

தமிழுக்கு..கடைசித் தமிழன் உள்ளவரை மறைவு இல்லை.

Tuesday, January 22, 2013

வாய் விட்டு சிரிங்க...




1) அந்த டாக்டர் வியாதியை மெல்ல மெல்லத் தான் குணப்படுத்துவார்னு எப்படி சொல்ற
தூக்கம் வரலேன்னு போனேன்..முதல்ல கொட்டாவி வர மருந்து தரேன்னு கொடுத்திருக்கார்

2)தலைவர் தன் சின்ன வீட்டை ஏன் தன் வீட்டு மாடியிலேயே குடியேற்றிருக்கார்
யாரோ அவர்கிட்ட 'keep it up ' ன்னு சொன்னாங்களாம்

3)என்னோட சமூகக் கதையைப் படிச்சுட்டு மர்மக்கதைன்னு சொல்றீங்களே
திரும்பத் திரும்பப் படிச்சும் என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியாமல் மர்மமாய் இருக்கே

4)எங்கப்பா சபாநாயகரா இருக்கறது தப்பாப் போச்சு
ஏன்
என் கல்யாணத் தேதியை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வச்சிட்டார்

5)நம்ம ஃப்ளாட்டும் அடுத்த ஃப்ளாட்டும் பக்கத்திலே பக்கத்திலே இருக்கறதாலே ஒரே problem
ஏன் அப்படி சொல்ற
அவங்க டிவி சேனலை மாத்தினா..நம்ம டிவிலேயும் சேனல் மாறுதே

6)டாக்டர் என் கணவருக்கு தூக்கத்தில நடக்கற வியாதி இருக்கு
அதுக்குப் போய் ஏன் இவ்வளவு கவலைப் படறீங்க
மத்தியானம் ஒரு மணிக்கு ஆஃபீஸ்ல இருந்து வீட்டுக்கு நடந்து வந்துடறார்


கணப்பொழுது ...

                                       
கணநேரத்தில்
நிகழ்ந்து விடுகிறது

*** *** ****

நடக்கையில்
கணப்பொழுது தன்
கனத்தை யோசித்தான்
கணப்பொழுது
கனம் நிறைந்ததாயிற்று நினைவு
கணத்தில் தலைசுற்ற
கனவான் விழுந்தான்
கணப்பொழுதில் 108 வர
கனவோ என எண்ணினான்
கணப்பொழுது தாமதித்திருந்தால்
கனத்திருப்பான் உடல்
மருத்துவமனையில்
கணப்பொழுதில் முதலுதவி

*** **** ****
கணப்பொழுது தவறு
எங்காவது
யாருக்காவது நடக்கிறது
என்றான் கிங்கரன்
காலனிடம்

Monday, January 21, 2013

விஸ்வரூபம்..




"பாலு..இங்கே வைச்சுட்டுப் போன ஆயிரம் ரூபாய் எங்கே? நீ எடுத்தியா?..இல்லையா..? சொல்லுடா...வாயில என்ன கொழுக்கட்டையா?..பதில் சொல்லேண்டா"

கல்லுளிமங்கன் போல பாலு நின்றுக்கொண்டிருந்தான்..சிவராமனின் பொறுமை மெல்ல விடை பெற்று கொண்டிருந்தது.

"பளார்" என பாலுவின் கன்னத்தில் அறை ஒன்று விழுந்தது.

பாலு..அப்பவும் ..வாயைத் திறக்காமல் ..அடி விழுந்த கன்னத்தைத் தடவிக் கொண்டிருந்தான்.

'இதோ பார்..உனக்கு அஞ்சு நிமிஷம் டயம் தரேன்..குற்றத்தை ஒத்துக்க..இல்ல..என்ன செய்வேன்னு எனக்கேத் தெரியாது..' என்றவாறு சிவராமன் கல்லாவில் வந்து அமர்ந்தார்.

ஹோட்டல் ராஜன்....உரிமையாளர் சிவராமன்..

நகரின் மையப் பகுதியில் இருந்தது.காலை நேரத்திலேயே கூட்டம் களை கட்டிவிடும்.அங்கு கிளீனராக வேலை செய்ய சிவராமனால் அழைத்து வரப்பட்டவன் தான் பாலு.

சிவராமனின் சொந்த ஊரான தஞ்சை மாவட்டத்திலிருந்த பூங்குளம் கிராமத்தில் தான் பாலுவின் தாயார் சிவராமனின் வீட்டில் வேலை செய்து வந்தார்.

பாலுவிற்கு அப்பா கிடையாது.அவர் ஒரு பெயிண்டராக நன்கு சம்பாதித்துக் கொண்டிருந்தார்.ஆனால்..எப்படியோ குடி பழக்கத்திற்கு ஆளாகி குடல் கெட்டு இறந்த போது குடும்பத்தை பரம ஏழையாகி விட்டு இருந்தார்.

நல்லவேளை..பாலு அவர்களுக்கு ஒரே மகன்.பாலுவின் தாய் சிவராமன் வீடு உள்பட சில வீடுகளில் வேலை செய்தவாறே பாலுவை படிக்க வைத்தாள்.

பாலு , பார்க்க சுமாராகத்தான் இருப்பான்.எப்போதும் தலை தரையைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கும்.கருமையான நிறம்.சற்றே முன்னுக்கு வந்திருந்த பற்கள்.உடைகள் அழுக்காக இல்லாவிட்டாலும் தோய்த்து பழுப்பேறி கசங்கலாக இருக்கும்.அவற்றில் ஒட்டுப் போட்ட கிழிசல்கள் வேறு..சற்றும் அடங்காமல் வளர்ந்து காடாக இருக்கும் தலைமுடி..கண்களில் எப்போதும் ஒரு ஏக்கம்.தாழ்வு மனப்பான்மையால் யாரிடமும் பேச மாட்டான்.

உடன் படிக்கும் மாணவர்களுக்கும்..பாலுவைக் கண்டுவிட்டால் இளக்காரம்..அவனை சீண்டுவார்கள்.

வகுப்பில் ஏதேனும் காணாமல் போனாலும், ஆசிரியருக்கு சந்தேகம் முதலில் அவன் மீதுதான் வரும்.

அப்படித்தான்..ஒரு நாள்..பாஸ்கர் என்னும் பணக்கார மாணவன் ஒருவனின் பையிலிருந்த ஐம்பது ரூபாய் பணத்தைக் காணவில்லை.

அந்த பையன் ஆசிரியரிடம் முறையிட்டதுடன் அல்லாமல், தனக்கு பாலுவின் மீதுதான் சந்தேகம் என்றான்..

ஆசிரியரும் ...பாலுவைக் கூப்பிட்டு விசாரித்தார்.அவன் மௌனமாக இருக்கவே..கையை நீட்டச் சொல்லி தன் கையிலிருந்த பிரம்பால்..'சுளீர்' என இரண்டு அடி அடித்தார்.

அப்படியும் பாலு வாயைத் திறக்கவில்லை.அவனை வகுப்பின் வெளீயே முட்டி போடச் சொல்லி விட்டார் ஆசிரியர்.

பாஸ்கரன், அடுத்த வகுப்பிற்கான சரித்திரப் புத்தகத்தை எடுத்து புரட்டுகையில், ஐம்பது ரூபாயை அதில் வைத்திருந்ததைப் பார்த்தான்..

ஆசிரியரிடம், 'சார்..பணம் கிடைச்சுடுத்து.நான் புத்தகத்திற்கு உள்ளே வைத்திருக்கிறேன்' என்றான்.

ஆசிரியரும் அவனிடம் பவ்யமாக, 'பாஸ்கர்..நாம அநாவசியமா ஒருத்தர் மேல பழியைப் போடக் கூடாது' என்று சொல்லிவிட்டு..குற்ற உணர்ச்சியுடன் பாலுவை வகுப்பிற்குள் வரச் சொன்னார்.

தாழ்வு மனப்பான்மையில் தவிக்கும் பாலுவுடன் சற்று நெருங்கிப் பழகி அந்த மனப்பான்மையைத் தவிர்க்க வேண்டும் என அந்த ஆசிரியருக்குத் தெரியவில்லை.

தவிர்த்து..அவரும் அவனை சந்தேகக் கண்ணோடுதானே பார்த்தார்..காரணம்..

அவனது வறுமை....

இடைவேளையின் போது, பாஸ்கர் பாலுவிடம், 'நீ எடுக்கவில்லைன்னு வாத்தியார் கிட்ட சொல்லியிருக்கலாமே..ஏன் வாயைத் திறக்காம அடி வாங்கின..?' என்றான்.

'வாத்தியார் கிட்ட நீ..என் மேல சந்தேகம்னு சொன்ன..அப்போ நான் எடுக்கலைன்னு சொன்னா வாத்தியார் நம்புவாரா? உடனே உன்னைக் கேட்பார்..நீ என்ன சொன்னாலும் உன்னைத்தான் நம்புவார்.எனக்கு இன்னும் இரண்டு அடி அதிகம் கிடைத்திருக்கும்' என்றான்.

அன்று பள்ளியில் நடந்ததை அம்மாவிடம் வந்து சொன்னான் பாலு.பின்னர், 'அம்மா..இனிமே நான் ஸ்கூலுக்குப் போக மாட்டேன்.எது காணும்னாலும் என் மேலதான் சந்தேகப் படறாங்க' என்றான்.

அம்மாவும், தன் மகனை படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாது என எண்ணி, பாலுவை அழைத்துக் கொண்டு சிவராமனின் வீட்டிற்குச் சென்றாள்.

சிவராமனின் தந்தை ராஜன், 'விமலா..நீ கவலைப் படாதே..இவன் படிச்சது போதும்.என்னோட பையன் சென்னையில பெரிய ஹோட்டல் ஒன்னு வைச்சிருக்கான்.அதுல இவனுக்கு கிளீனர் வேலை போட்டுத் தரச் சொல்றேன்.இவனுக்கான சாப்பாடும் இலவசமாகக் கிடைக்கும்.வருஷத்திற்கு நாலு ஜோடி டிரஸ் கிடைக்கும்.துணி செலவும் மிச்சம்.மாசம் ஏதாவது சம்பளம் போட்டு..அதை அப்படியே உனக்கு அனுப்பச் சொல்றேன்' என்றார்.

விமலாவின் வறுமையும் அதற்கு 'சரி' என சொல்ல வைத்துவிட்டது.

$$$$$    $$$$$$      $$$$$    %%%%

அன்று கல்லாவில் ஒரு வாடிக்கையாளர் கொடுத்த ஆயிரம் ரூபாயை மேசை மீது வைத்து விட்டு, அவரது பில் பணத்திற்கான பணம் போக , மீதியை கல்லாவிலிருந்து எடுத்துக் கொடுத்த சிவராமன் ,ஆயிரம் ரூபாயை நோட்டை எடுத்து சட்டைப் பைக்குள் வைக்க நினைக்கையில்..

சர்வர் ஒருவன் கொண்டுவைத்த காஃபியில் ஈ ஒன்று விழுந்து விட்டது என ஒரு வாடிக்கையாளர் சப்தமிட..அவரிடம் ஓடினார் சிவராமன்.

அவரை ஒரு மாதிரி சமாதானப் படுத்திவிட்டு , அவருக்கு வேறு ஒரு காஃபி கொடுக்கச் சொல்லிவிட்டு கல்லாவிற்கு வந்தவர்..மேசையில் வைத்திருந்த பணத்தைக் காணாமல் தேடினார்.

ஆனால்..அருகில் கையில் கிளீனிங் வாளியுடன், மறு கையில் அழுக்குத் துணியுடன் 'திரு..திரு' என விழித்துக் கொண்டிருந்த பாலுவின் மீது அவர் பார்வைச் சென்றது.

@@@@    @@@@@      @@@@@    @@@@@@

சிவராமன் கொடுத்திருந்த நேரம் கழிந்தும், கண்களில் கண்ணீர் முட்ட..கன்னத்தைத் தடவியவாறு..வாயைத் திறக்காமல் நின்றிருந்த பாலுவை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார் சிவராமன்.

இரவு பத்து மணி..

கடையை மூடிவிட்டு..பணி புரிபவர்கள் ..அவரவர் பாதை நோக்கிச் செல்லும் போது..வாயிலில் ஓரமாக நின்றுக் கொண்டிருந்த பாலுவை, காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாது பசியால் வாடி வதங்கியிருந்த அந்த இளம் பிஞ்சை யாரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

கடைசியாக வெளியே வந்த சர்வர் மணி பாலுவைப் பார்த்துவிட்டு குற்ற உணர்ச்சியுடன்..'சாரிடா..பாலு..பணத்தை நான் எடுத்தேங்கிறதை முதலாளியிடம் நீ சொல்லியிருக்க்லாமே' என்றான்.

அதற்கு பாலு,' மணி..நீ அந்த பணத்தை எடுத்ததை நான் பார்த்தேன்.நீ உங்க அம்மாவிற்கு மருந்து வாங்க அவசரமா பணம் வேணும்னு கார்த்தால சொல்லிக்கிட்டு இருந்ததைக் கேட்டேன்.நீ தான் பணத்தை எடுத்தேன்னு நான் சொல்லியிருந்தா..முதலாளி உன்னிடமிருந்து பணத்தைப் பிடுங்கிக் கொண்டு வெளியே அனுப்பி இருப்பார்.அதனால உங்கம்மாவிற்கு உன்னால மருந்து வாங்க முடியாது.அவங்களும் கஷ்டப்படுவாங்க.வேலை செய்ய முடியாத உங்கம்மா..வேலை இல்லாத நீ..என்ன செய்வீங்க? எனக்கோ..வேலையில்லேன்னாலும்..என் அம்மா..ஏதாவது வீட்டு வேலை செஞ்சு சாப்பாடு போடுவாங்க.' என்றான்.

பாலுவின் விஸ்வரூபத்தைப் பார்த்த மணிக்கு "ஓ' வென அவனை கட்டி அழ வேண்டும் போல இருந்தது.

அன்றைய கணக்கை சரிபார்த்து கல்லாவை பூட்டிக் கொண்டிருந்த சிவராமன் காதுகளில் பாலு சொன்னவை அனைத்தும் கேட்டது.

தீர விசாரிக்காமல் பாவம் ஒரு சிறு பையனை தண்டித்து விட்டோமே..அவனுக்குத்தான் எவ்வளவு உயர்ந்த உள்ளம்..என்று எண்ணியபடியே தலை நிமிர்ந்தவருக்கு, எதிரே மாட்டிவைத்திருந்த படத்தில் "ஓம்" என்ற பிரவண மந்திரத்தின் பொருளை தந்தைக்கு உணர்த்திய பாலமுருகன் சிரித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.


Saturday, January 19, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா....(ஒரு குறிப்பு)




பாக்கியராஜின் இன்று போய் நாளை வா படத்தின் காபி தான் கண்ணா லட்டு தின்ன ஆசையா? என்ற சர்ச்சை இருப்பதும்..விவகாரம் நீதிமன்றம் வரை சென்றிருப்பதும் நாம் அறிவோம்.

அப்படம் காபி என்றாலும்..நம் சட்டம் சில விஷயங்களில் சொல்லுவதை வைத்துப் பார்த்தால்..இப்படம் காபி யடிப்பதின் கீழ் வருமா எனத் தெரியவில்லை.

ஆனால் இரண்டு படத்தைப் பார்த்தவர்களுக்கு..இந்த காபி விவகாரம் உண்மையா..பொய்யா..எனத் தெரியும்..

சரி, விஷயத்திற்கு வருவோம்..

இன்று போய் நாளை வா படத்தை ரசித்ததில் 50 சதவிகிதம் கூட லட்டுவை ரசிக்கமுடியவில்லை.அதற்கான காரணம் பாக்கியராஜ் அவர்களின் திரைக்கதை அமைப்பு.

'லட்டு..' மக்களிடையே நன்கு ரீச் ஆகியுள்ளதே..எனக் கேட்பீர்களானால்..

அந்த பெருமை கண்டிப்பாக பாக்கியராஜின் கதைக்காகத்தான் எனலாம்.தவிர்த்து..பொங்கலுக்கு வந்த மிகப்பெரிய படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்பதும் காரணமாகக் கொள்ளலாம்.ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்னும் கதைதான்.

நகைச்சுவை படங்கள் என்றால்..'காதலிக்க நேரமில்லை' 'அடுத்த வீட்டுப் பெண்' 'காசேதான் கடவுளடா' தரத்திற்கு படம் இருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பவர்களுக்கு..இப்படம் ஏமாற்றமே.

மற்றபடி..பெருமைப் பட்டுக் கொள்ளத் தக்க வகையில்..எந்த நடிகரும் இப்படத்தில் எதுவும் சாதித்துவிடவில்லை.

ரகு தாத்தாவை சின்னஞ் சிறிய பறவையால் என்ன செய்ய முடியும்?!

ஜஸ்ட்..பாஸ் மார்க்கில்தான் இப்படம் தேர்வாகுகிறது.

Friday, January 18, 2013

தமிழுக்கு அமுதென்று பெயர் -10




கவிஞர்கள், கலைஞர்கள் இயற்கையைக் கடவுளாகக் கண்டனர்.அன்பின் முதிர்வாம் காதல் கண்டனர்..மாந்தர் வாழ்வில் உள்ள தீமைகள் இன்றிப் புள்ளினங்கள் நடத்தும் நலவாழ்வு கண்டனர்.

அத்துடன் நில்லாது,இத்தகையக் காட்சிகளை செந்தமிழ் நடையில்..பாட்டோவியமாகத் தீட்டிக் காட்டுகின்றார் கவமணி தேசிக விநாயகம் பிள்ளை.

அவருக்கு பசுவின் செயல்கள் பெரு வியப்பை ஏற்படுத்துகின்றனவாம்.சுவையற்ற புல்லைத் தின்கிறது பசு.அதனைச் சுவை மிக்க வெண்ணிற பாலாக்கி தருவதற்கு..அது என்ன செய்கிறது..

அத்துடன் மட்டுமின்றி..கன்று ஈனும் பசு..ஈன்றதும்..அக்கன்று மூச்சு ..பேச்சின்றிச் சோர்ந்து கிடக்கிறது.தனது அன்புக் கன்றை உச்சி மோந்து நாவால் நக்குகிறது தாய்ப்பசு.அவ்வளவுதான்..

ஆயின் என்ன விந்தை? உடனே உயிர் பெற்று எழுந்து துள்ளுகின்றது கன்று..தாய்ப்பசுவின் நாவில் உள்ள உயிரெழுப்பும் மாயம் என்ன? இதையெல்லாம் பசுவைப் பார்த்து கேட்பது போல கேட்கிறார்.

பச்சைப் புல்லைத் தின்று வெள்ளைப் பால்தரநீ என்ன
பக்குவஞ்செய் வாயதனைப் பகருவையோ பசுவே..
உச்சியுடன் நக்கி யீன்ற உடன் உனது கன்றை
உயிர் எழுப்பும் மாயம் ஏதோ உரைத்திடுவாய் பசுவே..
(மலரும் மாலையும்)

அடுத்து கிளியிடம் வருகிறார்.அக்கிளியின் மொழியில் எவ்வளவு இனிமை.அவ் இனிமை உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றதாம்.அது தனது மொழியுடன் எவ்வாறு பண்ணின் இனிமையைக் கலந்து பக்குவம் செய்தது.யாரும் அதற்கு இனிமையை பயிற்றவும் இல்லை.நாள் தோறும் உண்ணும் கனிகளின் இனிமையைத் தன் மொழியில் கலந்து குழைத்துக் கூட்டி அம்மொழியை பன்மொழி ஆக்கிகின்றதே..உண்ணும் கனியின் நாச்சுவையைக் கேட்கும் மொழியின் பாச்சுவையாக்கி அளித்து உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது.இதற்கு கிளி செய்யும் பக்குவம் என்ன..அதையேக் கேட்கிறார் கவிமணி..

உண்ணும் கனியிலெழும் - சுவையினை
உள்ளம் களிகோ ளவே
பண்ணிற் கலந்திட நீ - தெரிந்து செய்
பக்குவம் ஏதடியோ
(மலரும் மாலையும்)


Wednesday, January 16, 2013

Chappa Kurishu (மலையாளத் திரைப்படம்)



இதற்கான அர்த்தம்..Head or Tails (பூவா தலையா)

இந்தத் திரைப்படம் புதிய படமல்ல.ஆனாலும் இப்படத்தை சமீபத்தில்தான் நான் பார்க்க நேர்ந்தது.அருமையான திரைக்கதை.'ஹெட் ஃபோன்' என்னும் கொரிய திரைப்படக்கதை என்று சொல்லப்பட்டாலும்..அதை சிறந்த இந்தியத் திரைப்படம் ஆக்கியுள்ளார்கள்.அதற்கு நன்றி.
கதை இதுதான்..
அர்ஜுன் கட்டுமானத்துறையில் ஈடுபட்டுள்ள தொழில் அதிபர்.அவரது உதவியாளர் சோனியா. தவிர்த்து அர்ஜுனுக்கும், அவளுக்கும் தனிப்பட்டமுறையில் தொடர்பும் உள்ளது.

அன்சாரி என்னும் இளைஞன் கொச்சினில் உள்ள ஸ்லம் ஒன்றில் வாழும் ஏழைத் தொழிலாளி.ஒரு சூப்பர் மார்க்கெட்டில், கழிவறை,தரை சுத்தம் செய்யும் தொழிலில் உள்ளான்.

இந்நிலையில் ஒருநாள் அர்ஜூன், சோனியாவுடன் உறவுகொள்ளும் காட்சியை தனது மொபைலில் அவள் அறியாமல் எடுக்கிறான்.அர்ஜூனுக்கு அவனது பெற்றோர் பெண் பார்த்து..நிச்சயிக்கின்றனர்.விவரம் அறிந்த சோனியா, அர்ஜூனை ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்துக் கேட்கிறாள்.அப்போது அவர்களுக்குள் ஏற்படும் சர்ச்சையில், அர்ஜூனின் மொபைல் தொலைந்து விடுகிறது.

அம்மொபைல் அன்சாரிக்குக் கிடைக்கிறது.முதலில் சபலப்பட்டாலும், அவனது கடைத்தோழி சொல்ல  அந்த ஃபோனை அர்ஜுனுக்கு திரும்பத்தர அன்சாரி முடிவெடுக்கிறான்.அப்போது ஃபோனில் சார்ஜ் தீர, அன்சாரி ஒரு கடை.யில் சார்ஜ் .ஆனால் அக்கடைக்காரனோ, சோனியா, அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சியைத்  திருடி, யூ டியூபில் ஏற்றிவிடுகிறான்.

சோனியா நிலை என்ன?
அர்ஜூன் திருமணம் ஆனதா?
அன்சாரி மொபைலை என்ன செய்தான்?

இதையெல்லாம் படம் பார்த்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

ஆனால்...ஒவ்வொரு நிமிடமும்..அருமையான திரில் இருக்கிறது.

ஃபாஹத் ஃபாஸில். வினீத் ஸ்ரீனிவாசன், ரம்யா நம்பீசன் ஆகியோர் நடித்துள்ளனர்.சமீர் தாஷீர் இயக்கம்.

மொபைலில் விளையாடும்  ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்.


Tuesday, January 15, 2013

அலெக்ஸ் பாண்டியன் (விமரிசனம்)




நீண்ட நாட்களுக்குப் பிறகு , ஒரு அருமையான திரப்படத்தைப் பார்த்த திருப்தி இப்படத்தைப் பார்க்கையில் ஏற்பட்டது.

சமீப காலமாக..மிகுந்த பொருட்செலவில் தயாராகும் படங்கள், வசூலில் வெற்றி பெற்றாலும், தோல்வி படங்களாக அமைந்தது குறித்து வருத்தப்படும் நேரத்தில் இப்படம் ஆறுதல் அளிக்கிறது.

புதிய கதைக்களம்..

கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் ஆகியோர் அசத்தலான நடிப்பு..படத்தின் வெற்றிக்கு துணை செய்கிறது.

லாஜிக்கைப் பற்றிக் கவலைப்படாமல் கண்டபடி எடுக்கப்படும் படங்களுக்கு இப்படம் ஒரு மாறுதல்.

குறிப்பாக..சண்டைக் காட்சிகள் மிகவும் நம்புமாறு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சகுனி தந்த ஏமாற்றத்தை 'பருத்தி வீரன்" ஈடு செய்துவிட்டார்.

இப்படியெல்லாம் விமரிசனம் எழுத ஆசைதான்...

ஆனால்..ஆசை நிராசையாகப் போய்விட்டதே!

Monday, January 14, 2013

வாழ்வில் வெற்றிபெற...




ஒரு மனிதனின் வெற்றி..அவன் படித்த படிப்பினால் மட்டும் அமைவதில்லை.ஓரளவு பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
கதையாய் இருந்தாலும்..சாவித்திரியின் சாதூர்யம் தான் அவளது கணவனது வாழ்வை காப்பாற்றியது.
பலமுறை அரசரின் மரணதண்டனையிலிருந்து தெனாலிராமனின் வாக்கு சாதூர்யம் காப்பாற்றியிருக்கிறது.
பீர்பாலின் சாதூர்ய பேச்சு கதைகளையும் நாம் அறிவோம்.ஹேமனாத பாகவதரை மதுரையிலிருந்து துரத்தி அடித்தது சிவனின்(?)சாதூர்யம்.
நம் ஊர்களில்..குப்பை பொருள்களையும்..சாதூர்யமாகப் பேசி நம் தலையில் கட்டிவிடும் விற்பனை பிரதிநிதிகளை நாம் அறிவோம்.
நம்மை பற்றி நம் பெற்றோர்கள் கவலைப்படும்போது சொல்லக்கூடிய வார்த்தை'கொஞ்சம் கூட சாமர்த்தியம் போறாது இவனுக்கு" என்பதுதான்.

இப்போது ஒரு சிறு கதை.

ஒரு கம்பனியில் செகரட்டரி வேலைக்கு பலர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தனர்.அவர்களிடம் கேட்கப்பட்ட ஒரே கேள்வி'பத்தடி ஆழம்..பத்தடி அகலம்கொண்ட குழியில் நீ வீழ்ந்து விட்டால் எப்ப்டி வெளியே வருவாய்?'என்பதுதான்.
கத்திக் கூப்படு போடுவேன் என்றான் ஒருவன்..
தத்தி தத்தி ஏறிடுவேன் என்றான் ஒருவன்.இவர்கள் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை.
கடைசியில் ஒருவன் கேட்டான்
'தாழ்ந்த மரக்கிளை ஏதாவது குழிக்கருகில் இருந்ததா?'.
'இல்லை'என்றனர் தேர்வுக் குழுவினர்.
'நான் விழுந்தது..பகலிலா..அல்லது இரவிலா'
'ஏதற்குக் கேட்கிறாய்?'-தேர்வுக்குழுவினர்.
இவன் சொன்னான்'பகலில் குழியில் விழ நான் குருடன் இல்லை..அஜாக்கிரதையானவனும் அல்ல.அடுத்தவர் மரத்திலிருந்து திருட்டுப் பழம் பறித்துத் தின்னும் மோசமானவனும் இல்லை.அதனால் கிளை முறிந்து குழியில் விழ வாய்ப்பில்லை.'
அவன் பதில் திருப்தி ஏற்படுத்தியது குழுவினர்க்கு.
அவனது வாக்கு சாதூர்யம் வேலை வாங்கிக் கொடுத்தது.

சாதுர்யப் பேச்சு காரிய சாதனையைக் கொடுக்கும்

Sunday, January 13, 2013

அம்மாவும்..பொங்கலும்..நானும்..




அம்மா...

அவளைப்பற்றி..எண்ணினாலே ..மனம் இனிக்கிறது..கண்களில் கொப்பளிக்கிறது கண்ணீர்.

ஒவ்வொருவரும் மண்ணில் ஜனிக்க காரணமாய் இருப்பது தாய்க்குலம். ஆண்டவன்..தனிப்பட்டு ஒவ்வொருவரையும் கவனிக்க முடியாது என்பதால்..அம்மாக்களை படைத்தான்..என்பது சரியென்றே சொல்லலாம்.

என் அம்மா....

அவளைப் பற்றி..எதைச் சொல்வது..எதை விடுப்பது.

எங்கள் மீது பாச மழை பொழிந்தவள்.என் தமிழ் ஆர்வத்திற்கு உரமிட்டவள். அவள் வேலைக்குப் போனதில்லை.ஆனால் முழு நேரமும்..தன் குழந்தைகள் மீது பாசமழை பொழிவதே அவள் வேலையாய் இருந்தது.குடும்ப நிர்வாகம் முழுதும் அவள் கைகளில்.கல்கியின் எழுத்துக்களை எனக்கு அறிமுகப்படுத்தியவள்..ஜெயகாந்தனின் எழுத்துக்களுக்கு அர்த்தம் சொன்னவள்.புதுமைப்பித்தன்,தி.ஜானகிராமன்.லா.சா.ரா.,சுந்தர ராமசாமி ஆகியவர்கள் அவளால் தான் எனக்குத் தெரியும்.

தனக்கு இல்லை என்றாலும்...இல்லை என வருவோர்க்கு வாரி வழங்கியவள்.அவளுக்கு கடவுள் பக்தி அதிகம்.,அதனால் தானோ என்னவோ..மண்ணுலக வாழ்வு அவளுக்கு அதிக நாட்கள் இல்லை.

1979ம் ஆண்டு.,வீட்டில் டி.வி., வாங்கிய நேரம்.,போகி முடிந்து..அடுத்த நாள் பொங்கலுக்கு தூர்தர்ஷனில் சிறப்புத் திரைப்படம் பார்க்க வேண்டும் என்றவள்...இரவு 12 மணி அளவில் என்னை எழுப்பினாள்.என் தோள்களில் சாய்ந்து..'உடம்பு ஏதோ செய்கிறது' என்றாள்.என் தம்பி மருத்துவரை அழைத்துவர சென்றான்.(அப்பொழுது வீட்டில் தொலை பேசி வசதி கிடையாது).ஆனால் அவர் வருவதற்குமுன்..என் தோள்களில் சாய்ந்த படியே உயிரை விட்டாள்.அவள் மறைந்த போது அவள் வயது 52 தான்.அவள் டி.வி.யில் பார்க்க நினைத்தபடம் 'பல்லாண்டு வாழ்க.'

ஆகவே..ஒவ்வொரு பொங்கலும்..என்னால்..முழு மகிழ்ச்சியுடன் கொண்டாட முடிவதில்லை.

ஆண்டுகள் பல கடந்தும்..இப் பதிவை எழுதும்போது..கண்களில் கண்ணீர்த்திரை..எழுத்துக்களை மறைக்கிறது.

(அம்மாவை..அவள்..என்று எழுதக் காரணம்..ஆத்திகர்கள் அம்மனை..அவள் என்று சொல்வதில்லையா?..அதுபோலத்தான்)

Saturday, January 12, 2013

எனக்கு பொங்கல் பிடிக்கும்..



பச்சரிசி,பாசிப்பருப்பு சரியான விகிதத்தில் கலந்து உப்பிட்டு,நெய்யில் முந்திரி,மிளகு, சீரகம் வறுத்துப் போட்ட பொங்கல் எனக்குப் பிடிக்கும் என்பதால் இத் தலைப்பிடவில்லை.

எனக்குப் பிடித்தப் பண்டிகை 'பொங்கல்' என்பதால் இடுகைக்கு இப்பெயர்.

நம் பண்டிகைகள் பல..கடவுள்கள் அவதரித்த தினமென்றும்,அரக்கர்களை அழித்த தினம் என்றும்..இதிகாசம், புராணங்களை மேற்கொள்காட்டி..கொண்டாடப்படுபவை.இவற்றில் மெய்யைக் காட்டிலும்..கற்பனைகளே அதிகம்.

சிலமிகைப்படுத்திச் சொல்லப்படுபவை. (அதனால் என்ன..நடிப்பு, அரசியல் எல்லாவற்றிலும் ஒரு இந்தியனுக்கு மிகைப்படுத்துதலே பிடித்திருக்கிறது..என்பது வேறு விஷயம்)

சரி..தலைப்புக்கு வருகிறேன்..

பொங்கல்..முதலில் தமிழ்ப் பெயர்..அதனால் பிடிக்கும்.

தமிழர் திருநாள் என்பதால் பிடிக்கும்

சாதி, மத பேதமின்றி அனைத்து தமிழ் மக்களும் கொண்டாடும் பண்டிகை என்பதால் பிடிக்கும்.

இயற்கை நாம் உயிர் வாழ..நெல்,கரும்பு,பருப்பு.இஞ்சி,மஞ்சள் என ஏராளமாய் படைத்துள்ளது.இது பஞ்சபூதங்கள் என்னும் இயற்கையின் அன்பளிப்பு மனிதர்களுக்கு.அந்த இயற்கையை வழிபடும் நாள் இது என்பதால் பிடிக்கும்

இயற்கைதான் கடவுள் என தெள்ளத் தெளிவாய் விளக்கும் பண்டிகை என்பதால் பிடிக்கும்

இயற்கையின் படைப்பான வயலில் ..நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி..மண்ணிலே நெல் முத்தை விளைவிக்கும் அந்த உழைப்பாளி உழவரின் திருநாள் என்பதால் பிடிக்கும்.

சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்

உழந்தும் உழவே தலை

(பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது.எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது)

இந்நாளில் விவசாயியின் வாழ்வு செழிக்க பிரார்த்திப்போம்..

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்

Friday, January 11, 2013

உங்களின் குணம் மாற வேண்டுமா?




மனோபாவம்....
இதை மாற்றிக் கொண்டால்..நம் குணங்களும் மாறும்.ஒருவரின் மனோபாவம்.. மற்றவர்களை குறை சொல்வதில்தான் ஆரம்பிக்கிறது.நாளாக..ஆக..எதிலும் எல்லாவற்றிலும் குறை காண்பது என்ற வழக்கம் ஏற்பட்டு விடுகிறது.

பின் அதுவே..நாம் செய்யும் செயல்களைத் தூண்டுகிறது.இவற்றிலிருந்து ஒருவனால் மீண்டு வரமுடியுமா? கண்டிப்பாக முடியும்...

வெற்றியும்...தோல்வியும்..பயமும்..தைர்யமும்..சோகமும்..இன்பமும்..நாம் நம் மனதை எப்படி பழக்கப்படுத்திக் கொள்கிறோமோ..அப்படியே அமையும்.எதிலும் சந்தோஷம்,துணிவு,வெற்றி காண மனதை மாற்றிக்கொள்ளுங்கள்.

ஒரு காரியத்தில்..வெற்றி அடைய வேண்டும் என்பவர்கள்..எதிலும் நல்லதையே பார்க்கிறார்கள்.எந்த காரியத்தையும் முடிக்க முடியும் என எண்ணுகிறார்கள்.இவர்கள் சிறிய..சிறிய காரியங்களாக எடுத்து..அதில் சாதனை புரிந்து..வெற்றி மனோபாவத்தை வலிமைப்படுத்துகிறார்கள்.

வெற்றியடைபவர்கள்..கருங்கல்லை..கருங்கல்லாய் பார்ப்பதில்லை.ஒரு சிற்பமாக பார்ப்பார்கள்.

வெற்றிகாண விரும்புபவர்கள்..வாய்ப்பை எதிர் நோக்கிக்கொண்டிருப்பர்.

ஆரம்ப தோல்வி கண்டு மனதளர்ச்சி வேண்டாம்.தோல்வி இல்லா மனிதன் இல்லை.தோல்வி ஒரு பாடம்..தோல்வி ஒரு அனுபவம்.அடுத்த முறை வெல்வேன் என தோல்வியடைவோர் எண்ண வேண்டும்.

உங்கள் மனோபாவம்தான் வெற்றிக்கான பாதை.நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.அதை பழக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.எதிலும் வெற்றி..எதிலும் வாய்ப்பு..எக்கஷ்டம்
வந்தாலும் மீளுதல்..இதுவே நம் அணுகுமுறையாக இருக்க வேண்டும்.

இந்த மனோபாவம் என்னும் தோழன்தான் உங்களுடன்..உங்கள் மனம் இயங்கும் வரை..உணர்ச்சி துடிப்புகள் அடங்கும் வரை..இருக்கப் போகிறவன்.

அவன்தான் உங்கள் தோழன்.

அவன்தான் உங்கள் உயிர் காக்கும் தோழன்.


Thursday, January 10, 2013

7500 திரையரங்கு நிறைந்த காட்சிகளை கமல் இழந்தார்..


7500 திரையரங்கு நிறைந்த காட்சிகளை கமல் இழந்தார்..
விஸ்வரூபம் திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏன்? என ஒரு சமயம் கேள்வி கேட்ட போது..

'இப்படம் 3000 திரையரங்குகளில் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதுவே வெளியாக தாமதம்' என்றார்.

பின்..ஒரு மாதிரி..சென்ற ஆண்டு பல படங்களுக்கு வழிவிட்டு..வெளியாகும் தேதி தள்ளீப் போனது.இந்நிலையில்..சென்ற டிசம்பர் மாதம் ஆரம்பத்தில் ஒருநாள்..ஜனவரி 11ஆம் நாள் படம் வெளியாகும் என விளம்பரப் படுத்தப் பட்டது.

50 கோடி பட்ஜெட் போட்டு..95 கோடிகள் வரை செலவானதாக சொல்லப்பட்ட இந்த படம்..ஜனவரி11 ஆம் நாள் சொன்னபடி திரையரங்குகளில் வந்திருந்தால்..வசூலில் கொடிகட்டி பறந்திருக்க வாய்ப்பு உண்டு.

சமயத்தில்..நமக்கு நேரம் சரியில்லையெனில்...நம் வாயாலேயே நாம் கெடுவோம்..

படத்தின் தரம் பற்றி சந்தேகம் வந்ததாலோ என்னவோ...10 ஆம் தேதியே டி.டி.எச்,சில் ஒரு காட்சி வெளியிடப்படும் என்றார் கமல்.இதனால்..30 கோடி அதற்காக முதலிலேயே பணம் கிடைத்துவிடும் என்றெல்லாம் பேசப்பட்டது.

வந்தது வினாசகாலம்..

திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு.சற்றும் அசராமல் இருந்த கமல்..சற்று பின் வாங்கினார்..

காரணம்..எதிர்ப்பார்த்த அளவு திரையரங்குகள் கிடைக்கவில்லை.மிஞ்சி, மிஞ்சி போனால்..300 திரயரங்குகளே கிடைக்கும் என்னும் நிலை/

இப்போது..ஏதோ சமரசம் ஏற்பட்டு, பட வெளியீடு 25ஆம் நாள் அன அறிவித்துள்ளார்.டி.டி.எச்.சில் எப்போது எனெத் தெரியாது..பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.(எதிர்பார்த்த அளவு 1000 ரூபாய் கொடுக்க மக்கள் தயாராக இல்லை என்றும் கேள்வி)
கிடைத்த 300 திரங்குகளில் வெளிவந்திருந்தாலும்..ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் என..விடுமுறை நாட்கள் ஐந்து நாட்களிலும் அரங்கு நிறையும்.ஆக 7500 அரங்கு நிறைந்த காட்சிகளை பட வெளியீடு தள்ளிப் போனதால் கமல் இழந்தார்.

ஒரு கலைஞன்..நடிப்பத் தவிர..வேறு துறைகளிலும் தலையிட்டால் ,..அதற்கு இப்படி ஒரு தடையா..

கமல் விஸ்வரூபம் எடுக்கவில்லையென்றாலும் பரவாயில்லை..பிரச்னைகளிலிருந்து விடுபடட்டும்.

Wednesday, January 9, 2013

புத்தகக் கண்காட்சி..




சென்னை புத்தகக் கண்காட்சியில் எங்களது கீழ்கண்ட புத்தகங்கள் வானதி பதிப்பகம் ஸ்டாலில் கிடைக்கிறது..

1)சிறுவர் உலகம்  பாகம் -1- சிறுவர் நீதிக் கதைகள் (by Kanchna Radhakrishnan)

2)வாய் விட்டு சிரிங்க..(ஜோக்ஸ்)  (by Kanchana Radhakrishnan)

3)பாரத ரத்னா.(நாடகம்) இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றது

4)பத்மவியூகம் - நாடகம்

5)மனசேதான் கடவுளடா (நகைச்சுவை நாடகம்)

காதலாவது..கத்திரிக்காயாவது ..(சிறுகதை)


தன் காதலை தியாகம் செய்துவிட வேண்டியதுதான்...என்ன செய்வது...இப்ப எல்லாருக்கும் சுயநலம்தான் முக்கியம்.அவரவர்களின் குறி அவரவர்கள் எதிர்காலம்தான்.

இரவு முழுதும்...தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்த போது..ஒரு எண்ணம் பளீச்சிட்டது.

இதுவரைக்கும்...நேரிடையாக 'ஐ லவ் யூ' என்று சொல்லியிருந்தால் தானே பிரச்னை.

என்னைப்பொறுத்தவரை லைஃப் பார்ட்னர்..அழகாக இருக்க வேண்டும்.கை நிறைய சம்பாதிக்க வேண்டும்.நல்ல குணம் வேண்டும்.இதையெல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் காதலிக்க ஆரம்பித்தேன்.பின்ன இப்ப என்ன பிரச்னை என்கிறீர்களா?

திடீரென நேற்று அப்பா..ஒரு குண்டை..தூக்கிப் போட்டுட்டார்..தனது தூரத்து உறவில் ஒரு வரன் இருப்பதாகவும்...அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இஞ்சினீயராய் இருப்பதாகவும்..ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் சம்பளம் என்றும்.

அதைக்கேட்டதும்தான்...எனக்குள் குழப்பம்.அப்பா மேலும் சொன்னார் ..வசதியான இடம்...மாமியார் பிடுங்கல் இல்லை..திருமணம் முடிந்ததும் ஸ்பௌஸ் விசாவில் நானும் அமெரிக்கா போய் விடலாமாம்.
அவர்கள் கல்யாணத்தை உடனே முடிக்க வேண்டும் என்கிறார்களாம்.அப்பாவும் சரி என்று சொல்லிவிட்டாராம்.

என் விருப்பத்தைக் கேட்டால்தானே...கேட்டிருந்தாலும்...வேண்டாம் என்றா..சொல்லப்போகிறேன்.

ஆனால் என்காதல்...

விஷயத்தை ஒளிக்காமல் சொல்லிவிட்டால் போகிறது.புனிதா ..உண்மையில் என்னைக் காதலிப்பதாக இருந்தால்..புரிந்துக் கொள்வாள்.ஒரு வங்கியில் வேலை செய்யும் அவளைவிட..அமெரிக்காவில் வேலை செய்யும் கீதா உயர்ந்த வரன் என்று.தன் காதலன் வாழ்வில் கண் கலங்காமல் இருந்தால் போதும் என நினைப்பவள் அவள்.

Tuesday, January 8, 2013

வாய் விட்டு சிரிங்க..




உனக்குப் பிடிக்குமேன்னு சோளப்பொரி வாங்கிவந்தேன்..
எனக்கு அது பிடிக்காது...பாப்கார்ன் தான் பிடிக்கும்

2.உனக்கும்..உன் மனைவிக்கும் சண்டையா? கடைசியா என்ன ஆச்சு
நான் பிறந்த வீட்டுக்கு வந்துட்டேன்

3.(இரண்டு பெண்கள் பேசிக்கொள்கிறார்கள்) ஒருத்தி- என்னைவிட நீ கொடுத்து வைத்தவ..நாலு பிள்ளங்க..நாலு மருமகளோட சண்டை போடலாம்.ஆனா எனக்கு ஒரே பிள்ளை..ஒருத்தியோட மட்டும்தான் சண்டை போட்டுக்கிட்டு இருக்க முடியும்.

4.இயக்குநர்- (கதாசிரியரிடம்)தொப்புள்ல பம்பரம் விட்டாச்சு..ஆம்லெட் போட்டாச்சு..நீ வேற ஐடியா கொடுய்யா
கதாசிரியர்- கதாநாயகியை நாய் கடிச்சுடுது.. டாக்டர் 14 ஊசி போடணும்னு சொல்லிடறார்..அப்படின்னு எழுதறேன்..14 முறை தொப்புளை குளோசப்ல காட்டிடலாம்.

5.அந்த கிளினிக்ல என்ன கூட்டம்
ஆடி தள்ளுபடியாம்..ஒரு ஆபரேஷன் செஞ்சுக்கிட்டா ஒரு ஆபரேஷன் இனாமாம்

6.அந்த தயாரிப்பாளர் வீட்டு வாசல்ல ஒரே கிழவிகள் கூட்டமா இருக்கே...என்ன விஷயம்
அவர் எடுக்கப்போற படத்துக்கு 18 வயசு புதுமுகம் தேவைன்னு விளம்பரம் கொடுத்தாராம்..தவறி 81ன்னு பிரசுரமாயிடுச்சாம்.


Sunday, January 6, 2013

2012ல் நான் பார்த்த சிறந்த மலையாளப் படங்கள்...




1) உஸ்தாத் ஹோட்டல் - அன்வர் ரஷீத் இயக்கத்தில் மம்முட்டியின் மகன் சல்மான் கதாநாயகனாக நடித்த படம்.புதிய கதைக்களம்.
  திலகனின் அருமையான நடிப்பு.

2)ஆகாசத்திண்டே நிறம்- டாக்டர் பிஜு இயக்கத்தில் நெடுமுடி வேணு,இந்திரஜித்,அமலா பால் நடித்திருந்தனர்.அந்தமானில் முழுதும் படமாக்கப்பட்டது.ராதாகிருஷ்ணனில் ஒளிப்பதிவில் குளுமையான இயற்கைக் காட்சிகள்..மனதைக் கொள்ளைக் கொண்டன.

3)ஸ்பிரிட் - மோகன் லால், திலகன் நடித்தது.குடியின் கேட்டை சொன்ன படம்.பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்

4)தட்டாதின் மரயாது - இளம் ரசிகர்களுக்கான ரொமாண்டிக் படம்.வினீத் ஸ்ரீனிவாசன் எழுதி, இயக்கியுள்ளார்.ஈஷா தல்வார் கொள்ளை அழகு.இப்படமும் ஹிட்

5)தப்பனா- மம்மூட்டி நடித்த மசாலா படம்.பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்

6)ரன் பேபி ரன்- இப்படம் பார்க்கும் போது ஜீவா நடித்த கோ ஞாபகம் வருகிறது.காமிரா மேனாக மோஹன்லால், அறிவிப்பாளராக அமலா பால்.வழக்கமான அரசியல்வாதி, சேனல் ரேட்டிங்க்..என்ற கதை.நல்ல வசூல் படங்களில் இதுவும் ஒன்று.

7)டயமண்ட் நெக்லேஸ் -லால் ஜோஸ் இயக்கம்.ஃபாஹத் ஃபாஸில் (ஃபாசில் மகன்). நல்ல கதயம்சம்.பார்க்க வேண்டிய படம்.துபாயிலேயே  எடுக்கப்பட்ட படம்.

8)ஃப்ரைடே- நெடுமுடி வேணு, ஃபாஹத் ஃபாசில் நடிப்பு.பல வித்தியாசமான பாத்திரங்கள்.கடைசியில் படகு மழையில் மாட்டிக்கொண்டு..பயணம் செய்வோர் தப்பிக்கும் காட்சியை அருமையாக எடுத்துள்ளார்கள்.கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

9)22 ஃபீமேல் கோட்டேயம் - ஆஷிக் அபு இயக்கம். ஃபாஹத் ஃபாஸீல்,ரீமாகல்லிங்கல், பிரதாப் போத்தன்  நடிப்பு.கதை, இயக்கம், நடிப்பு,ஒளிப்பதிவு என அனைத்துமே கலக்கல்.ஒவ்வொன்றும் ஒரு ரகம்.

மொத்தத்தில் மேற்சொன்னவை 2012ல் வந்த என்னைக் கவர்ந்தவை.

சந்தர்ப்பம் கிடைத்தால் இப் படங்களைப் பாருங்கள்.


கலைஞரும்..ஸ்டாலினும்..




எனக்கு அடுத்தது ஸ்டாலின் தான் என் கலைஞர் கோடி காட்டிவிட்டாராம்..

இதற்கு..ஊடகங்கள், மற்ற கட்சியினர் என்ன அட்டகாசம் செய்து வருகின்றனர்.

ஸ்டாலினைத் தவிர்த்து..அடுத்து வேறு யார் உள்ளனர்.அப்படியே யாரேனும்..தென்பட்டாலும்..அவர்களுக்கும் ஸ்டாலினுக்குமான இடைவெளி எவ்வளவு.

அவசரக்கால நிலையில்..சிறை சென்றவர் ஸ்டாலின்.1967 முதல் கட்சிப் போராட்டங்களில் கலந்து கொண்டவர்.மேயராக சென்னையில் ஆற்றிய பணியை மறக்க முடியுமா?..எம்.எல்.ஏ,வாகவும், துணை முதல்வராகவும், கட்சியின் பொருளாளராகவும்...எல்லாவற்றிற்கும் மேல் கழகத்தின் கடைசித் தொண்டன்வரை இனிமையாக பேசுபவராகவும் உள்ளவர் அவர்..கலைஞரின் மகனாக அவர் பிறந்தது தப்பா..?

ஆம்..அது தப்பாய் இருந்ததால் தான் இவர் இவ்வளவு ஆண்டுகள்..அத்தலைவனின் கீழ் பணியாற்ற வேண்டியிருந்தது.

ஒரு தொண்டனுக்கு..தன் கட்சியின் தலைவன் இப்படித்தானே இருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பான்.

இதுவெல்லாம் போகட்டும்..

நீங்கள் அக்கட்சியைச் சேர்ந்தவனல்ல..

அக்கட்சி யாரைத் தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு என்ன?

அடுத்தவன் வீட்டிற்குள் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள்?

ஸ்டாலின்..அழகிரி ..சர்ச்சைகள் எல்லாம்..அக்கட்சியின் தலைவலி..

அந்தத் தலைவலிகயைப் போக்கும் மருந்து அவர்களுக்குத் தெரியும்.

உங்கள் அரைகுறை வைத்தியம் அவர்களுக்கு வேண்டாம்.


Saturday, January 5, 2013

சிவாஜி ஒரு சகாப்தம் - 7




1960 ல் வெளியான படங்கள்
இரும்புத்திரை
குறவஞ்சி
தெய்வப்பிறவி
ராஜபக்தி
படிக்காதமேதை
பாவை விளக்கு
பெற்றமனம்
விடிவெள்ளி

சென்ற ஆண்டு கட்டபொம்மன்,பாகப்பிரிவினை..வெள்ளிவிழாவை தொடர்ந்து.ஹேட்ரிக்காக இரும்புத்திரை வெள்ளிவிழா படம்.வைஜெயந்திமாலா கதாநாயகி. ஜெமினி தயாரிப்பு.

தெய்வப்பிறவி..கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கதை வசனம்..சிவாஜி,பத்மினி..கமால் பிரதர்ஸ் உடன் ஏ.வி.எம்.,கூட்டு தயாரிப்பு.சிவாஜி,பத்மினி,எஸ்.எஸ்.ஆர்., நடித்த படம்.அருமையான பாடல்கள்.,

படிக்காத மேதை..சிவாஜி., சௌகார்..நடித்தது..சிவாஜியின் அற்புத படைப்பு.அனைத்து பாடல்களும் அருமை.

விடிவெள்ளி..ஸ்ரீதர் இயக்கத்தில் முதல் சிவாஜி நடித்த படம்.சரோஜா தேவி கதாநாயகி. ஏ.எம்.ராஜா வின் 'கொடுத்துபார் உண்மை அன்பை' என்ற அருமையான பாடல்.

தெய்வப்பிறவி,படிக்காதமேதை,விடிவெள்ளி மூன்றும் 100 நாட்கள் படம்.

குறவஞ்சி,ராஜபக்தி,பாவைவிளக்கு,பெற்றமனம் ஆகியவை தோல்வி படங்களாக அமைந்தன.

பாவைவிளக்கு...அகிலன் எழுதிய நாவல்..இப்படத்தில்..நடிகர்கள் முதலில் அவர்களாகவே வருவார்கள்...அதாவது சிவாஜி சிவாஜியாகவே..பின் நாவலை படிக்கையில் அந்தந்த கதா பாத்திரமாகவே மாறுவர். சிதம்பரம் ஜெயராமனின்..'வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி ' பாடல் இடம் பெற்ற படம்.

பெற்றமனம்..மு.வ.,வின் எழுத்தில் வந்த படம்.

அடுத்த பதிவில் 1961 படங்கள்.


Friday, January 4, 2013

தமிழுக்கு அமுதென்று பெயர் - 9





தமிழில் 'எ' கரம்.'ஒ' கரம் உயிரெழுத்துக்களின் மேலும், உயிர்மெய் எழுத்துக்களின் மீதும் குறில் ஓசைக்குப் புள்ளி வைத்துக் கொண்டிருந்தார்கள்.அவைகளின் நெடில் ஓசைக்கு புள்ளி வைக்காமல் விட்டார்கள்.

உதாரணமாக..கெ,பெ,செ இவைகள் மீது புள்ளி வைத்தால் குற்றெழுத்துக்கள்

கெ,பெ,செ எனப் புள்ளி வைக்காமல் எழுதினால் நெட்டெழுத்துக்கள்..என உச்சரிக்கப் பட்டன.

தொல்காப்பியக் காலத்திலிருந்து வழங்கி வந்த இந்த முறையை 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரமாமுனிவர் மாற்றி அமைத்தார்.

நெட்டெழுத்துக் கொம்பை மேலே சுழித்தெழுதும் வழக்கத்தை உண்டாக்கினார்..(கே,பே,சே)

இந்த அருமையான சீர்திருத்தம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது.

இந்த வீரமாமுனிவர் தான் தேம்பாவணி எழுதியவர்..தவிர்த்து, இன்று வரை பிரபலமாயுள்ள பரமார்த்தகுரு கதைகளை எழுதியவர் ஆவார்.

அதுபோல..தேவையில்லாத கொம்பை நீக்கியவர் தந்தை பெரியார் ஆவார்..

னை, லை,ணை ஆகியவை முன்னர் கொம்பு முளைத்து எழுதப்பட்டவை. அவற்றை மாற்றி..மற்ற எழுத்துகள் போல (கை,சை) எழுத்தில் கொண்டுவந்தார்.


Wednesday, January 2, 2013

8 - சிறுகதை




தனக்கு இதுபோன்றதொரு நிலைமை வரும் என தர்மலிங்கம்..அந்த நிமிடம் வரை நினைக்கவில்லை.

அந்த ஊரில் இருந்த ஒரு பள்ளியில் எட்டாவது வகுப்பு ஆசிரியர் அவர்.கிட்டத்தட்ட இருபத்தைந்து வருட அனுபவம்.

அவரிடம் படித்த மாணவர்கள் பலர்..இன்று பல துறைகளில் பெரும் புள்ளிகளாக இருக்கின்றனர்.ஆனால் அந்த தர்மலிங்கம் என்ற ஏணியோ எட்டாம் வகுப்பிலேயே நிரந்தரமாக இருக்கிறது.

கண்டிப்புக்குப் பெயர் போனவர் அவர்.அவரைக் கண்டால் அத்தனை மாணவர்களுக்கும் பயம்.அவர் வகுப்பிற்கு படிக்காமலேயோ..வீட்டுப்பாடங்களைச் செய்யாமலோ எந்த மாணவனும் வரமுடியாது.அப்படி வந்தால்..அந்த மாணவனின் அரைக்கைச் சட்டையை சற்றே தூக்கி 'எட்டு' போடுவது போல..ஒரு கிள்ளு..கிள்ளி விடுவார்.உயிரே போய்விடும்.

அந்த மாணவன் வீட்டில் போய் சொன்னாலும்..அவனைப் பெற்றோரும் தங்கள் பிள்ளைக்கு ஆதரவாகப் பேசமாட்டார்கள்.'நீ என்ன தப்பு செஞ்சியோ..வாத்தியார்கிட்டே அடி வாங்கிக் கிட்டு வந்து நிக்கறே..அடியாத மாடு படியாது..நல்லா அடி வாங்கு..' என்று கூறிவிடுவார்கள்.

ம்..அதெல்லாம்..அந்தக்காலம்.

இப்ப..கொஞ்சம் கோபமாக பேசினாலும்..கண்டனத்திற்கு ஆளாக நேரிடும்.

தர்மலிங்கத்திற்கு ..அன்று போதாத காலம் போலிருக்கிறது.அவர் வகுப்பில் படிக்கும் விக்ரம் என்னும் மாணவன்..முதல் நாளன்று கொடுத்திருந்த வீட்டுப் பாடங்களை ஒழுங்காக செய்யவில்லை.

அந்த மாணவனை கொஞ்ச நாட்களாகவே கவனித்துக் கொண்டுதான் வருகிறார்.அவன் நடவடிக்கை சரியில்லை.அவனை இப்போது திருத்த முயற்சிக்கவில்லை என்றால் அவனது எதிர்காலமே கேள்விக் குறி ஆகிவிடும் என அவரது உள்மனம் சொல்ல..அவனுக்கு எட்டு போட்டு விட்டார்.மாணவனும் மயங்கி விழுந்து விட்டான்.

பள்ளியே..அல்லோலகலப்பட்டது.ஒவ்வொருத்தர் ஒவ்வொன்று சொன்னார்கள்.அவனை அருகாமையில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்கள்.மாணவனின் பெற்றோருக்கும்..காவல் துறையினருக்கும் விவரம் தெரிவிக்கப்பட்டது.

என்ன செய்வது..என்று அறியாது..தர்மலிங்கம் தானே சரணடையும் நோக்கத்தில் காவல் நிலயத்திற்கு சென்றார்.அங்கு காவல்துறை அதிகாரி இல்லாததால்..இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தார்.

சிறிது நேரத்தில் அதிகாரி வர..எழுந்து நின்று தர்மலிங்கம் பள்ளியில் நடந்தவற்றை அவரிடம் கூறினார்.

பொறுமையாக...எல்லாவற்றினையும் கேட்டுக் கொண்டிருந்த அதிகாரி..தன் அரைக்கை சட்டையின் கைகளை சற்றே உயர்த்தி..அந்த கருமை நிற வடுவைக் காண்பித்தார்.

இந்த வடுவைப் பார்த்தீங்களா..இது எனக்கு நீங்க போட்ட எட்டு...என்னைத் தெரிகிறதா உங்களுக்கு..நான்தான் அருணாசலம்..உங்க பழைய மாணவன்.ஒருநாள்..நான்..பக்கத்து பையன் பையிலிருந்து பணத்தைத் திருடிட்டேன்.அதைத் தெரிஞ்சுக்கிட்ட நீங்க கொடுத்த பரிசு 'டேய்..அருணாசலம்..இனிமே நீஒரு தப்பும் செய்யக்கூடாது.ஏதாவது செஞ்சா..அந்த நேரம் இந்த காயம் எப்படி ஏற்பட்டதுங்கற எண்ணம் உனக்கு வரணும்..இந்த காயத்தால ஏற்படப் போகும் வடு..உன்னை ஒரு நேர்மையானவனாக மாற்றும்' என்று சொன்னீங்க...அன்னிக்கு நீங்க எனக்கு இந்த தண்டனை கொடுக்கலைன்னா..நான் இன்னிக்கு இப்படி ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியாய் மாறியிருப்பேனான்னு தெரியாது.

'நீ...நீ.. நீங்க..அருணாசலமா ..இப்படி..ரொம்ப மகிழ்ச்சி...ரொம்ப ..ரொம்ப..மகிழ்ச்சி' தர்மலிங்கத்தின் கண்களில் கண்ணீர்...ஆனந்தக் கண்ணீர்.

'ஐயா..அன்னிக்கு நான் நடந்துகிட்ட மாதிரி..ஒரு மாணவன் தப்பா நடந்துகிட்டு இருக்கான்..நீங்களும் அன்னிக்கு ..எனக்கு கொடுத்த அதே தண்டனையைக் கொடுத்திருக்கீங்க.அவன் பயத்திலே மயங்கி விழுந்துட்டான்.இது பெரிய தவறா எனக்குத் தெரியலை..உங்க மேல எதாவது புகார் வந்தா..நான் பார்த்துக்கறேன்..நீங்க போங்க...கான்ஸ்டபிள்..சாரை..நம்ம ஜீப்ல கொண்டுபோய் வீட்டில விட்டுட்டு வா' என்றார்.

தர்மலிங்கம்..இரு கைகளையும் கூப்பி விடை பெற்றார்..'இன்று..இந்த ஆசிரியரின் தண்டனையைப்பெற்ற மாணவன் நாளைக்கு நிச்சயம் என்னைப்போல நேர்மையானவனாக வருவான்.ஏனெனில் அந்த மாணவன் என் ரத்தம்' என்று எண்ணியவாறே..வேறு யாரும் பார்க்காதபடி..தன் கண்களைத் துடைத்துக் கொண்டார் அருணாச்சலம்.


Tuesday, January 1, 2013

வைகைப் புயல் வடிவேலு...




தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களாக கொடி கட்டி பறந்தவர்கள் பலர்.

தலையானவராக கருதப்படுபவர்..கலைவாணர் அவர்கள்.

எம்.ஆர்.ராதா, பாலையா ஆகியோர் நகைச்சுவையோடு, குணசித்திர நடிப்பிலும் நம்மை கவர்ந்தவர்கள்.

பின்னர், தங்கவேலு, ஏ.கருணாநிதி, நாகேஷ்,தேங்காய் ஸ்ரீனிவாசன், சுருளிராஜன்,கவுண்ட மணி, செந்தில்,விவேக் ஆகியோர் முதன்மை காமடியனாகத் திகழ்ந்தனர்.

மேற்குறிப்பிட்ட அனைவரின் நகைச்சுவை நடிப்பை ரசிகர்கள் மிகவும் ரசித்தனர்.

ஆனால்...சிறுவர்கள்கூட..ஏன்..குழந்தைகள் கூட விரும்பும் நகைச்சுவை நடிகனாக திகழ்ந்தவர் வடிவேலு மட்டுமே..இதை..நான் உறுதியாக கூறமுடியும்.

நரசிம்ம ராவ் போன்றோரையும் சிரிக்க வைக்கும் நடிப்பு...

ஆணி புடுங்குதல்
வடை போச்சே
கைப்புள்ளே
நாய் சேகர்
என்னவச்சு காமெடி பண்ணலியே
நல்லா கிளப்பறாங்கய்யா பீதியை
அவ்வ்வ்வ்வ்வ்வ்
(இப்பதிவு எழுதும் போது உடன் ஞாபகம் வந்தவை இவை.இவர் நடித்த பாத்திரங்கள் பற்றி அவ்வப்போது பதிவிடுகிறேன்)

இப்படி அவர் நம்மிடையே..அன்றாட நடவடிக்கைகளில் அவ்வசனங்களை நம்மை பேச வைத்தார்.

ஆனால்..தனிப்பட்ட நடிகர் ஒருவரை வீழ்த்துவதாக எண்ணிக்கொண்டு..அரசியல் மேடைகளில் இவர் பேசப்போக..திரை வாய்ப்புகளை இழந்தார்.இடைக்காலத்தில் இவர் இடத்தை நிரப்ப வந்தவர்களால்..நம்மை புன்முறுவல் மட்டுமே செய்ய முடிந்த்து.

வடிவேலுவின் இடம் இன்றுவரை வெற்றிடமாகவே உள்ளது.

இந்நிலையில்..மீண்டும் 23ம் புலிகேசி இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார் இவர்.

விட்ட இடத்தை இந்த கலைஞன் இந்த ஆண்டாவது பிடிக்க வேண்டும்.

கலைஞனுக்கு அரசியல் தேவையா இல்லையா என்பது கேள்வியில்லை.

அரசியலையும் மிறி அவன் பொதுவானவனாகவே கருதப்பட வேண்டும்.

அவர் மறு பிரவேசத்தையும்...திறமையையும் வரவேற்க தமிழ் ரசிகர்கள் தயாராகவே உள்ளனர்.

வடிவேலு..இந்த ஆண்டு உங்கள் ஆண்டாக இருக்க வாழ்த்துகள்.


2012 ம் 2013ம்




         


இருட்டு

கும்மிருட்டு

இருளுக்கு முடிவில்லையா?

உண்டென்று நம்புவோம்

விரைவில்

ஒளி பிறந்திடும்.



டிஸ்கி - அனைவருக்கு புத்தாண்டு வாழ்த்துகள்

டிஸ்கி-2 இது 2012 புத்தாண்டில் போட்ட பதிவு.இன்றைக்கும் சரியாய் உள்ளது அல்லவா?

Sunday, December 30, 2012

தமிழுக்கு அமுதென்று பெயர் - 8



தமிழ் இலக்கியங்களில் தலைவிக்கு கொடுக்கப்படும் இடத்திற்கு சற்றும் குறையாத இடத்தை அவள் தோழிக்கும் கொடுப்பர்.இதில் அன்று முதல் இன்று வரை படைப்பாளிகள் யாரும் விதி விலக்கல்ல.

அம்பிகாபதி நூறு பாடல்கள் பாடுகிறானா என அமராவதி தவறாக கணக்கெடுத்ததில் அவள் தோழியின் பங்கும் உண்டு.

தலைவனைப் பிரிந்து பசலை நோயில் வாடும் தலைவி..அதனை தோழியிடம் உரைத்ததுண்டு.

அதேபோல்..தமிழ்த்திரையிலும் தோழிகள் நடமாட்டம் உண்டு.கதாநாயகியின் தோழி..ரகசியத்தை சுமந்து சென்று கதாநாயகனின் தோழனிடம் கொண்டு சேர்ப்பதும்..அவன்..நாயகனிடம் கொண்டு சேர்ப்பதும் வாடிக்கை.நாயகர்கள் சந்திக்கும் போது இடையில்..இவர்கள் ஒன்று சேர்ந்து நம்மை மகிழ்விக்க நகைச்சுவை என்ற பெயரில் காமெடி செய்வதுண்டு.

திரைக்கவிஞர்களும் தங்கள் கவிதையில் தோழிகளை அழைத்ததுண்டு..

துரியோதனன் மனைவி பானுமதி..'என் உயிர்த் தோழி..'என்று மன்னன் பற்றி பாடுவதை கர்ணனில் பார்த்ததுண்டு.

அந்த நாட்களில்..'வாராயென் தோழி' பாடல் ஒலிக்காத கல்யாணங்களே இல்லை எனலாம்.

அதேபோல்..முதல் இரவன்று..கதாநாயகியை பால் சொம்புடன்..அறைக்குள்ளே தள்ளாத தோழியர் இல்லை..'தோழியர் கதை சொல்லித் தரவில்லையா" என்றும் பாடல் உண்டு.

தூது சொல்ல ஒரு தோழியில்லை என வருத்தப்பட்ட தலைவியும்..கவியின் வரியில் உண்டு.

அப்படிப்பட்ட தோழி ஒருத்தியிடம் தலைவன் சென்று செங்காந்தள் பூக்களை கொடுத்து..தலைவி மிது தனக்கான குறையைத் தெரிவிக்க..அதை எற்க மறுத்த தோழி..அப்படிப்பட்ட மலர்கள் இங்கே குறிஞ்சி மலையில் உண்டு என்கிறாள்..தலைவன்..தலைவிக்கு இடையே உள்ள ஊடலால் ஒரு சமயம் அப்படி சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது.இப்போது அந்த பாடல்

குறிஞ்சி- தோழிக்கூற்று

செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே

- திருப்புத்தேளார்

போர்க்களம் குருதியால் சிவக்கும்படி.. பகைவர்களைக் கொன்று ஒழித்த நேரான/வளைவுகளற்ற அம்பினையும், குருதி படிந்த சிவந்த தந்தங்களையுடைய யானையையும்..இடையில் உழலும் வாளையும் கொண்ட முருகனுடைய மலையில் செக்கச் சிவந்த காந்தள் மலர்கள் கொத்துக் கொத்தாய் பூத்து உள்ளன.

இதில் தலைவியின் நாடான குறிஞ்சியின்..வீரர்களின் வீரத்தையும்..குறிஞ்சிக் கடவுள் முருகனையும்..யானைகளையும்..மலர்களையும் சொல்வதால் செழிப்பான நாடு இது என தோழி கூறுவதாகக் கொள்ளலாம்.


Saturday, December 29, 2012

தமிழ் பேசுபவர்கள் இந்தியர்கள் இல்லையாம்



(தினமணி விவாத மேடையில் இப்பகுதி பிடித்திருந்ததால்..உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்)
(நன்றி - தினமணி)

கூகுள் பல்வேறு சேவைகளை இணையத்தில் அளித்து வருகிறது. அதில், மொழிபெயர்ப்பு சேவையும் ஒன்று. பெரும்பாலானவர்களும் வார்த்தைகளுக்கான தேடலாக கூகுள் மொழிபெயர்ப்பு சேவையை பயன்படுத்தி வருகின்றனர். பல நேரங்களில் வாக்கியங்களாகக் கொடுத்தால் பொருள் வேறுபாடு வந்துவிடுகிறது என்பது பரவலான கருத்து. தமிழ் மட்டும் அல்லாமல் மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் இந்த மொழிபெயர்ப்பு சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இவற்றில் தமிழ் மொழிபெயர்ப்புப் பகுதி சிறப்பாக இயங்குவதாக பயனாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இருப்பினும், கூகுள் மொழிபெயர்ப்பில் சில சிக்கல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது...

எடுத்துக்காட்டாக,

tamil speaking peoples are indians என்று கொடுத்தால், "தமிழ் பேசும் மக்கள் இந்தியர்கள் அல்ல” என்று மொழிபெயர்க்கிறது. இது நேர்மாறான பொருள் கொண்டது என்பதால், இது இயல்பானதா என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர் பயனாளர்கள்.

ஏற்கெனவே "don't see idiots movie" என்பதை விஜய் படம் பார்க்க வேண்டாம் என்று மொழிபெயர்த்தது கூகுள். அது இன்னமும் சரி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சூழலில், கூகுள் மொழி பெயர்ப்பைப் பயன்படுத்துவதற்கென்று சில வழிமுறைகள் உள்ளதாகக் கூறுகின்றனர் அதன் நுணுக்கங்களை அறிந்தவர்கள். குறிப்பாக, நம் இந்தக் கருத்துக்கு தினமணி ஃபேஸ்புக் வாசகர்கள் சில பின்னூட்டங்களை இட்டுள்ளனர்.

அவற்றில் ஓரிரு கருத்துகள்:

1. மயில்ராஜ் சுப்ரமணியன்: (Mylraj Subramanian)

Tamil speaking peoples are Indians -  தமிழ் பேசும் மக்கள் இந்தியர்கள்

(when I type this, I get the right translation.. Please use the Capital I when you type Indians... is it not a mistake to type Indian as indian?)

(also: don't see idiot's movie - instead of : don't see idiots movie)

2. நவீன் கிரிஷ்: (Naveen Kris)

Tamil speaking peoples are Indians என்று கொடுத்துப் பாருங்கள் சரியாக வரும். அதாவது tamil-ku capital T-yum indians-ku capital I-yum கொடுத்தால் சரியாக இருக்கும் இல்லையேல் அது தவறு என்பதையே "அல்ல" என்று கூறுகிறது Google.



Friday, December 28, 2012

சிவாஜி ஒரு சகாப்தம் - 6



1959ல் வந்த சிவாஜியின் படங்கள்

தங்கப்பதுமை
நான் சொல்லும் ரகசியம்
வீரபாண்டிய கட்டபொம்மன்
மரகதம்
அவள்யார்
பாகப்பிரிவினை

சிவாஜியுடன் பத்மினி கதாநாயகியாய் நடித்த படம் தங்கப்பதுமை.ஜி.ராமனாதன் இசையில் பல பிரபலமான பாடல்கள் இடம் பெற்ற படம்.

நான் சொல்லும் ரகசியம்...இப்படத்தைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை..தோல்வி படம்.

வீரபாண்டிய கட்ட பொம்மன்- சிவாஜி நாடக மன்றத்தால் முதலில் நாடகமாக நடிக்கப்பெற்று பின் படமானது. வெள்ளிவிழா படம்.ஜெய்ப்பூர் அரண்மனையில் முதன்முதலாய் படமாக்கப்பட்ட திரைப்படம்.முதல் டெக்னிக் கலர் படம்.லண்டனில் கலர் பிரதிகள் எடுக்கப்பட்ட படம்.முதன் முதலாக 26 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஓடிய படம்.1960...கெய்ரோவில் ந்டைப்பெற்ற ஆசிய-ஆப்பிரிக்க திரைப்பட விழாவில்..சிறந்த திரைப்படம், சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்ற படம்.

மரகதம்...மீண்டும் சிவாஜி, பத்மினி..100 நாட்கள் ஓடிய படம்.கருங்குயில் குன்றத்துக் கொலை என்ற மர்ம நாவலை தழுவி எடுத்த படம்.வீணை மேதை எஸ்.பாலசந்தர் உடன் நடித்துள்ளார்.

அவள்யார்? சிவாஜி, பண்டரிபாய்...சிறந்த கதை அம்சம் கொண்ட இப்படம்..எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை.

பாகப்பிரிவினை...இப்படத்தை பார்க்காத முந்தைய தலைமுறையினர் இருக்கமாட்டார்கள்.சிவாஜி,சரோஜாதேவி,எம்.ஆர்.ராதா என பல பிரபலங்கள் நடித்த படம்.'தங்கத்திலே' ஏன் பிறந்தாய், போன்ற அருமையான பாடல்கள்.வெள்ளிவிழா கண்ட படம்.

இந்த வருடம் 6 படங்கள் வந்தாலும்...வியாபார ரிதியாக ஒன்றிரெண்டு தோல்வியுற்றாலும்...எல்லாம் நல்ல படங்கள் என்றே சொல்லலாம்.

அடுத்த வாரம் 1960 படங்கள்.

தவறு செய்பவரா நீங்கள்...உங்களுக்கான பதிவு..




மனிதனாய் பிறந்த நாம் தவறுகள் செய்வது சகஜம்.ஆனால் செய்தது தவறு என்று உணர்ந்ததுமே..அதை ஒப்புக்கொள்ள தயாராய் இருக்க வேண்டும்.அதை நாம் செய்கிறோமா?

வளர..வளர ..நம் உடல் அளவிலும்...மனதளவிலும் இறுகி விடுகிறோம்.நமக்கென ஒரு அடையாளம் வேண்டும் என எதிர்ப்பார்க்கிறோம்.அதனால் நம்மால் நேர்மையாக இருக்க முடிவதில்லை.தவறிழைத்து விட்டோம் என்று தெரிந்ததுமே...தவறிழைத்த நபரிடம்...'மன்னித்து விடு..தெரியாமல் நடந்து விட்டது..' என்று பணிந்து சொல்வதில் குறைந்து விட மாட்டோம்.

ஆனால்..நாம் அப்படி செய்வதில்லை...என்ன செய்கிறோம்...நாம் செய்த தவறை நியாயப் படுத்துகிறோம்..

நண்பர்கள்,உடன் வேலை செய்பவர்கள்,நம்மிடம் பணிபுரிபவர்கள்,முன் பின் தெரியாதவர்கள் என பாகுபாடு பார்க்காமல் செய்த தவறை ஒப்புக் கொள்ளுங்கள்.உங்கள் மனம் நிம்மதி அடையும்.நம்மைப் பற்றி நன்மதிப்புக் கூடும்.

சில சமயங்களில்..தவறு என அறியாது..சில வார்த்தைகளாலும், செயல்களாலும்..அடுத்தவரை காயப்படுத்தி விடுகிறோம்..அவர்கள் அதை சுட்டிக்காட்டினாலும் ஒப்புக்கொள்ளமாட்டோம்.

வாழைப்பழத்தோல் வழுக்கி..ஒருவர் கீழே விழுந்தால்...நம் மனதில் உள்ல கயமைத்தனம் நம்மை முதலில் சிரிக்க வைத்து விடுகிறது.பின்னர்தான்..மனித நேயம் விழித்துக்கொண்டு..அவருக்கு உதவி செய்ய விரைய சொல்கிறது.

நான்..ஒரு சமயம்...ஒரு பதிவரின் பதிவுக்கு...நகைச்சுவை என எண்ணி...ஒரு பின்னூட்டம் இட்டேன்.எனக்கு நகைச்சுவையாக இருந்தது...அவருக்கு வேதனையாக இருந்தது..என்பதை..அவர் பின்னுட்ட பதிலில் பார்த்தேன்.உடனே மின் அஞ்சலில்..அவரிடம் வருத்தம் தெரிவித்தேன்..ஆனால்..அவர் இதுநாள் வரை அதை புரிந்துக்கொண்டாரா என தெரியவில்லை.ஆனால்..என் மனம் நிம்மதி அடைந்தது.

ஒன்றை புரிந்துக்கொள்வோம்...செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால்..நம் மனம் பக்குவப்பட்டுள்ளது என்பதற்கான அடையாளம்.நாம் தோற்றுப்போனதற்கான அடையாளம் இல்லை.

தவறை ஒப்புக்கொள்வதன் மூலம்..எதிரிகளையும் ..நண்பர்கள் ஆக்கிக்கொள்ளலாம்.


Thursday, December 27, 2012

வாய் விட்டு சிரிங்க...


1.இங்க கணபதி ஸ்ரீனிவாச கோபால சுப்ரமணியன் வீடு எது?
பேரை இப்படி மொட்டையா சொன்னா..எப்படி..அவர் இனிஷியல் என்ன?

2.நான் காலையிலே ஆஃபீஸுக்கு லேட்டாப் போனா அதை சரிகட்ட சாயங்காலம் சீக்கிரம் போயிடுவேன்

3.உன் மனைவி இடது கை பழக்கம் உள்ளவரா?
எப்படி கண்டுபிடிச்சே
உன் வலது கன்னம் வீங்கியிருக்கே

4.நம்மோட தலைவர் சிறுகக் கட்டி பெருக வாழ்பவர்
அப்படியா
சின்னவீடு ஒன்னையும் வைச்சுண்டு..பெரிய வீட்டோட வாழ்ந்து கிட்டு இருக்கார்.

5.நிருபர்-(நடிகையிடம்) இன்றைய இளைஞர்களின் கனவுக்கன்னி நீங்கதான்
நடிகை-அந்த இளைஞர்கள் விலாசத்தையெல்லாம் சொல்லுங்க..அவங்க கனவில வர நேரத்துக்கான என் கால்ஷீட் பணத்தை வாங்க சௌகரியமா இருக்கும்.

6.எனக்கு நகைச்சுவை உணர்ச்சியே இல்லை என்கிறார்கள் என் நண்பர்கள்
ஏன் அப்படி
எங்க முதலாளி சொல்ற எல்லா ஜோக்குகளையும் நான் ரசிக்கிறேனாம்

7.அந்த பேச்சாளருக்கு ஒரு கூட்டத்தில் பேச 10000 ரூபாயா?
ஆமாம்..ஆனா.. அவர் கூட்டத்திற்கு 2000 பேரை கூட்டிகிட்டு வந்துடுவாராம்.






Tuesday, December 25, 2012

2012ல் வெளியான ..எனக்குப் பிடித்த படங்கள்.. - 2




கலகலப்பு-

சி.சுந்தரின் படம்..பெயருக்கு ஏற்றார் போல கலகலப்பான படம்.தவிர்த்து இப்படம் எனக்குப் பிடிக்கக் காரணம் நண்பர் கேபிள் ஷங்கரின் பங்கும் இதில் இருந்ததால்.

ராட்டினம்-

படத்தின் முடிவில் சமூகத்திற்குத் தேவையான கருத்தை நாசுக்காக சொன்ன விதம்.புதுமுக நடிகர்களின் நடிப்பு.கிராமத்து காட்சிகள்.

தடையறத் தாக்க..-

அருண் விஜய்யின் வித்தியாசமான நடிப்பு.கதை அமைப்பு இவையே இப்படம் பிடிக்கக் காரணம்

நான் ஈ

இப்படம் வெற்றிக்கு,, முழுக்க முழுக்க அருமையான கம்யூட்டர் கிராஃபிக்ஸ் தான் காரணம்.மேலும் பங்கு பெற்ற அனைவரும் அருமையாய் செய்திருந்தனர்.குழந்தைகளையும் கவர்ந்தது ஈ.

மதுபானக் கடை-

பெரும் வெற்றி பெற்றிருக்க வேண்டிய படம்.இயக்குநர் இன்னும் சற்று திரைக்கதையமைப்பிலும்..இயக்கத்திலும் கவனம் செலுத்தியிருந்தால்.தைரியமான படைப்பாய் இருந்ததால் என்னைக் கவர்ந்தது

அட்டகத்தி...

பெரும் எதிர்ப்பார்ப்பின்றி போனதால் அட போட வைத்தது

சுந்திர பாண்டியன்

யதார்த்த நடிப்பு.கதையமைப்பு.கிராம வாசனை...சசிகுமாரின் திறன் இப்படம் பிடிக்கக் காரணம்

சாட்டை

சொல்ல வந்த விஷயத்தால் பிடித்தது.அருமையாய் சொல்லப்பட்டிருந்தாலும்..இன்றைய ஆசிரியர்கள் நிலை கம்பி மீது கழைக்கூத்தாடி நடப்பது போலத்தான்.10 வருடம் முன் வந்திருந்தால் வெற்றியடைந்திருக்கும்.சமுத்திரக்கனி நடிப்பு கிளாஸ்..

பீட்சா..

குறும்பட இயக்குநர் தன்னால் திறம்பட திரைப்படமும் தரமுடியும் என்பதை நிரூபித்த படம்.ஒன்றும் இல்லாமலேயே..படம் பார்ப்பவர்களை திகில் காட்சிகளில் இருக்கையின் நுனியில் அமர வைத்தது.விஜய் சேதுபதியின் நடிப்பு.

நீர்ப்பறவை-

இன்னும் சற்று ஆழத்துக்கு கதையில் போயிருந்தால் விலாங்கு மீனே கிடைத்திருக்கும்.தென் மேற்கு பருவக்காற்று சற்று லேசாகவே வீசியது.இருந்தாலும் கதைக்களன், இயக்குநரின் குறிக்கோள் இவையே இப்படம் என்னைக் கவரக் காரணம்

கும்கி..

தமிழ்த்திரைப்படங்களின் முற்றிலும் மாறுபட்ட கதைக்களன்.விக்ரம் பிரபுவின் நடிப்பு.குளுகுளு காட்சிகள்.கிராஃபிக்சில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.

ந.கொ.ப.க.,

என்னை முழுதும் கவர்ந்த படம்.விஜய்சேதுபதி தன் மூன்று நண்பர்களுடன்..மக்களை கல கல என சிரிக்க வைத்த படம்.

ஏமாற்றிய படங்கள்..

முகமூடி,தாண்டவம்,மாற்றான், போடா போடி, நீதானே பொன் வசந்தம், அம்மாவின் கை பேசி

எஸ்..நீங்கள் எதிர்ப்பார்த்த படம்..

விஜய்யின்..துப்பாக்கி மாபெரும் வெற்றிக்கனியை அவருக்கு ஈட்டி தந்தது.பொழுதுபோக்கு, கதையம்சம், காமெடி, நடிப்பு என அனைத்தும் சம அளவில் கலந்து..என்னை மட்டுமின்றி..அனைவருக்கும் பிடித்ததாய் அமைந்த படம்.

மொத்தத்தில்..

இவ்வருடம்..பெரும் பொருட்செலவில் தயாரித்த படங்கள் (துப்பாக்கி நீங்கலாக ) தோல்வியடைந்தன. வசூலில் தோல்வியில்லை என்ற வாதம் சரியாய் இராது.

குறைந்த பட்ஜெட் படங்கள் பல நல்ல படங்களாய் அமைந்தன.

கிராமத்து மணத்துடன் வந்த படங்கள் சிறப்பாகவே இருந்தன.

புத்தாண்டில் படங்கள் சிறப்புற அமைய வாழ்த்துகள்.

2012ல் வெளியான ..எனக்குப் பிடித்த படங்கள்.. - 1




2012ல் நான் பார்த்ததில் எனக்குப் பிடித்த படங்களும்...மாற்று கதைக்களங்களைக் கொண்ட படங்களும்..

நண்பன்-
விஜய், ஜீவா, மாதவன் நடிக்க ஷங்கர் தயாரிப்பு இயக்கத்தில் வந்த நண்பன்.இது ஹிந்தியில் அமீர்கானின் 3 இடியட்ஸ் படத்தை தழுவியிருந்தாலும்..தமிழுக்காக சில மாற்றங்களுடன்..ஒவ்வொரு ரசிகனும் விரும்பும் வகையில் இருந்தது.பல இடங்களில் லாஜிக் இடித்தாலும்.

அம்புலி 3 டி-

தமிழில் வந்த 3டி படம்..இன்னும் முயன்றிருந்தால் இப்படம் ஒரு வெற்றி படமாக ஆகியிருக்கும்.இருப்பினும்...வசூல் பரவாயில்லை ரகம்.

காதலில் சொதப்புவது எப்படி

ஒரு குறும்படத்தை..திரைப்படமும் ஆக்கி..வெற்றிபடமும் ஆக்கியுள்ளனர்.அனைத்து பிரிவினரும் ரசித்த படம்

அரவான்..

வசந்தபாலன் இம்முறையும் ஒரு வித்தியாசக் கதைக்களனில் இப்படத்தை அளித்துள்ளார்.ஆதியின் நடிப்பு அருமை.இன்னும் நன்றாக ஒடியிருக்க வேண்டிய படம்.

கழுகு..

இப்படம் உண்மையிலேயே..என்னை வியக்க வைத்தது.அருமையான படம்.பெற்ற வெற்றி போதாது.இது போன்ற படங்கள் தமிழில் நன்கு ஓட வேண்டும்.

ஒரு கல் ஒரு கண்ணாடி

இப்படம் பற்றி என்ன சொல்ல..ராஜேஷ் இயக்கத்தில்..உதயநிதி, சந்தானம் கூட்டணியில் வந்து மாபெரும் வெற்றி பெற்ற படம்.மன நிறைவைத் தந்த படம்.

வழக்கு எண் 18/9

பாலாஜி சக்திவேல் இயக்கம்.புது முகங்கள்.அருமையான படம்..இவ்வருடப் படங்களில் என்னை மிகவும் பாதித்த,ரசிக்க வைத்த படம்.

ஏமாற்றிய சில படங்கள்..

3, சகுனி,பில்லா 2

 அடுத்த பதிவில்..பிடித்த மேலும் படங்களும்..ஏமாற்றிய படங்களும்.


Monday, December 24, 2012

மௌன ராகம்

                         


சம்மதத்திற்கும்

தர்க்கம் தவிர்க்கவும்

மௌனமே

மௌனமாய் அமர்கிறது


2) பெயரோ ஸ்ரீமதி

இன்னமும் அவள்

செல்வி


3)கர்ப்பிணிப் பெண்

மெதுவாக நடக்கிறாள்

வெண்மேகத்தின் வேகத்தை விட

சூல் கொண்ட

கார்மேகம் வேகம் குறைவுதானே!


4)என் இதயம் உன்னிடம்

என்றவளைக் காணவில்லை

இதயம் இல்லாதவள்

யாரையேனும் கண்டால்

தெரிவியுங்கள்

திரும்ப அனுப்பிவிடுகிறேன்


5)கடிகாரம்

நாட்காட்டி - இவை

காலம் காட்டினாலும்

காலனை நினைப்பதில்லை

கல் நெஞ்சர்கள்


Sunday, December 23, 2012

மூன்று பட விமரிசனங்கள் ஓரிரு வரிகளில்..




நான் பார்க்கும் படங்களில்..மற்றவர்களுக்கு பிடித்தும்..எனக்குப் பிடிக்காத படங்களை நான் விமரிசப்பதில்லை.அதே நேரம் சில படங்கள் எனக்கு பிடித்திருந்தால்..எவ்வளவு நாட்கள் கழித்து அப்படத்தைப் பார்த்திருந்தாலும்..நான் விமரிசிக்கத் தயங்கியதில்லை.

இப்பதிவில் நான் பார்த்த மூன்று படங்கள் பற்றிய சிறு விமரிசனம்.

ந.கொ.ப,கா..- தமிழ்திரைப்படம் இடைவிடாது சிரித்துப் பார்த்து நாளாகிவிட்டதே என்ற ஏக்கத்தை தீர்த்த படம்.ஆனாலும்..ஒருவருக்கு ஏற்படும் குறைபாட்டை வைத்து சிரிக்கிறோம்.உண்மையிலேயே இப்படிப்பட்ட மெமரி லாஸ் உள்ள நோயாளிகள் இல்லத்தில் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று நினைத்தால் நமக்கு சிரிப்பு வராது.ஆனாலும் நகைச்சுவை என்று இதை சீரியஸாக எடுக்காவிடின் படம் அருமை.படத்தின் நீளத்தை 40 நிமிடங்கள் குறைத்திருந்தால்...இன்னும் விறுவிறுப்பாய் இருந்திருக்கும்.
எனி வே...இப்படக் குழுவினருக்கு பாராட்டுகள்.விஜய் சேதுபதிக்கு ஸ்பெஷல் பாராட்டு..(சுந்தர பாண்டியன், பீட்ஸா, ந.கொ.ப.கா...கலக்குங்க..

கும்கி- மைனாவிற்கு பின் பிரபு சாலமனிடம் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பை ஏமாற்றவில்லை இயக்குநர்.விக்ரம் பிரபு நன்கு நடித்துள்ளார்.புதிய கதைக்களன்..ஒளிப்பதிவு தரம்.ஒரே குறை...கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் நிறைவைத் தரவில்லை.தம்பி ராமய்யா அனுபவமிக்க நடிப்பு ரசிக்க வைக்கிறது.ஒன்றின் தோல்வி..மற்றதன் வெற்றி..என்று சொல்வர்.அப்படி ஒன்று நடந்து..இப்படத்திற்கு கிடைப்பதற்கு மேல் கிடைத்துள்ளது அதிர்ஷ்டமே..

நீதானே....= மீண்டும் ஏமாற்றிவிட்டார்..சில நேரங்களில் இயக்குநர்கள் மக்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திவிடுகிறார்கள்.அதனால் மக்கள் அதிகம் எதிர்ப்பார்க்க..அதில் சிறிது குறைந்தாலும் படம் வீழ்ந்து விடுகிறது.அந்த வகையில் இதுவும் ஒன்று.

இதைத் தவிர்த்து..அம்மாவின் கை பேசி, போடா போடி...

எப்படி இவர்களுக்கு இப்படியெல்லாம் படமெடுக்கும் தைரியம் வருகிறது.


Saturday, December 22, 2012

வீட்டிலெக்குள்ள வழி (veettilekkulla vazhi)- மலையாளப் பட விமரிசனம்.


(the way to home)

ஆகாயத்தின் நிறம் என்னும் மலையாளப் படம் பற்றிய என் பதிவைப் படித்து விட்டு அன்பு நண்பர் வடகரை வேலன் என்னைஇந்தப் படத்தையும் பார்க்கச் சொல்லியிருந்தார்.இப்படிப்பட்ட அருமையான படத்தைப் பார்க்கச் சொன்ன அவருக்கு நன்றி.இனி படம் பற்றி..

டாக்டர் பிஜூ இயக்கத்தில் வந்துள்ள படம் இது

ஒரு டாக்டர் தன் மனைவியையும், ஐந்து வயது மகனையும்..தில்லியில் வெடிகுண்டு விபத்து ஒன்றில்(தீவிரவாதி தாரிக்கால்) உயிரிழப்பதைப் பார்க்கிறார்.
பின் ஒருநால்..சிறைக்கைதிகளுக்கான மருத்துவமனை ஒன்றில் உயிருக்குப் போராடும் மனித குண்டு பெண்ணை சந்திக்கிறார்.அப்பெண்ணை அவர் முயன்றும் காப்பாற்ற இயலவில்லை.அப்பெண் இறக்கிறாள்.

இறப்பதற்கு முன் தன் ஐந்து வயது மகனை அவனது தந்தையிடம் சேர்க்கச் சொல்லி அவனிடம் வேண்டுகிறாள்.அப்பையனின் தந்தை தீவிரவாதிகளின் தலைவன்.
கேரளாவிலிருந்து, பையனை அழைத்துக் கொண்டு..பல மாநிலங்கள்..பல இடர்களைச் சந்தித்து அழைத்துச் செல்கிறார் மருத்துவர்.

அப்பையனை அவர் தந்தையிடம் ஒப்படைத்தாரா...அந்தக் காரியத்தை அவர் ஏன் ஏற்றுக் கொண்டார் என்பதை அருமையாக சொல்கிறது படம்.

இப்படம்..லடாக்,காஷ்மீர்,ஜய்சல்மார்,ஜோத்பூர்,தில்லி, கேரளா என பல இடங்களில் படமெடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவராக பிருத்விராஜ் அருமையாக நடித்துள்ளார்.உயின் மதிப்பு...நீங்கள் இழக்கும் போதும்..ஒன்றை திரும்பப் பெறும்போதும்தான் தெரியும்..என்ற வசனம் அருமை.

அதுவே அப்பணியை அவரை ஏற்றுக் கொள்ளச்சொன்னது.

இனி இப்படம் கலந்துக் கொண்ட விழாக்களும், பெற்ற விருதுகளும்..

The film was screened at 28 international film festivals including:
12th Mumbai Film Festival (Mumbai, India; 2010) as the opening film in the Indian Frames section.
34th Cairo International Film Festival (Egypt; 2010) in the Out of Competition section.
15th International Film Festival of Kerala (Trivandrum, India; 2010)
3rd Jaipur International Film Festival (Jaipur, India; 2011)
5th Chennai International Film Festival (Chennai, India; 2011)
10th Imagine India International Film Festival (Madrid, Spain; 2011) in competition section.
11th New York Indian Film Festival (New York, USA; 2011) in competition section
Zanzibar International Film Festival (Zanzibar, Tanzania; 2011)
London Indian Film Festival (London, UK; 2011)
Bollywood and Beyond Film Festival (Germany; 2011)
38th Telluride Film Festival (Telluride, USA; 2011)
New Generation Film Festival (Frankfurt, Germany; 2011)
Third Eye Asian Film Festival (Mumbai, India; 2011)
Seattle Film Festival (Seattle, USA; 2011)
[edit]Accolades

Award Ceremony Category Recipients and nominees Outcome
Imagine India Film Festival[4][5] 10th Imagine India Film Festival
(2011; Spain)
Best Film Veettilekkulla Vazhi Won
Best Director Dr. Biju Won
Best Music Director Ramesh Narayan Won
International Film Festival of Kerala[6] 15th International Film Festival of Kerala
(2010; India)
NETPAC Award for Best Malayalam Film Veettilekkulla Vazhi Won
Kerala State Film Awards[7] Kerala State Film Awards
(2011; India)
Best Cinematography M. J. Radhakrishnan Won
Best Processing Lab Won
National Film Awards[8] 58th National Film Awards
(2011; India)
Best Feature Film in Malayalam Veettilekkulla Vazhi Won
Zanzibar International Film Festival[9][10] 14th Zanzibar International Film Festival
(2011; Tanzania)
Signis Award (Commendation) Dr. Biju Won
Industry Award for Best Cinematography M. J. Radhakrishnan Won



(விருது தகவல்கள் -விக்கிபீடியா)


Friday, December 21, 2012

தமிழுக்கு அமுதென்று பெயர் - 7





நாம் உயிர்வாழ உணவு முக்கியம்.ஆனால் அதை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அளவு அதைவிட மிகவும் முக்கியம்.

நம் வயிற்றின் அளவை நான்கு பாகங்களாக பிரித்தால்..அதில் இரண்டு பாக அளவில்தான் திட உணவு சாப்பிட வேண்டும்.ஒரு பாகம் தண்ணீர் அருந்த வேண்டும்.ஒரு பாகத்தை சும்மா விட்டு விட வேண்டும்.அப்போதுதான் உண்ட உணவு சரியாக செரிக்கும்.அரை வயிறு உண்பவன் ஆரோக்கியமானவன் என்ற சொலவடையே உண்டு.

சாப்பிடுகையில்..வேறு எந்த விஷயங்களையும் பற்றி சிந்திக்காமல்..யாருடனும் பேசாமல் சாப்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.அலுவலக தலைவலிகளைப் பற்றி வீட்டில் சிந்திக்க வேண்டாம்.

ஒவ்வொருவரின் செரிமான சக்தியும் வித்தியாசப் படும்.சிலருக்கு சுறுசுறுப்பாக இருக்கும்.சிலரின் குடல் சோம்பேறித்தனமாக அமையும்.அதற்கேற்றாற் போல சாப்பாட்டின் அளவை அமைத்துக் கொள்ள வேண்டும்.

சாப்பாட்டு விஷயத்தில் நாக்கை நம்பாமல் மூளையை மட்டுமே நம்ப வேண்டும்.அதாவது..நாக்குக்கு ருசி தெரியும்.'இது சுவையாக இருக்கிறது..இன்னும் கொஞ்சம் போட்டுக் கொள்ளலாம்' என்று அது கேட்டுக் கொண்டே இருக்கும்.ஆனால் மூளையோ, 'அளவுக்கு மிஞ்சி சாப்பிடாதே..' என்று எச்சரிக்கும்.

நல்ல உணவுப் பழக்கத்திற்கு பழகிக் கொள்ளுவோம்.அறுசுவைகளும் சமமாக கலந்து உணவைச் சாப்பிட வேண்டும்.

குண்டாக இருப்பவர்கள் இளைக்க வேண்டும் என்றால் தடாலடியாக உணவுப் பழக்க முறையை மாற்றக் கூடாது.கொஞ்சம் கொஞ்சமாக சாதத்தைக் குறைத்து..பழங்களைக் கூட்ட வேண்டும்.

உடற்பயிற்சி, சரியான உணவுமுறை,முறையான தூக்கம், மனநிலை மாற்றங்கள் இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் செய்வதன் மூலம் உடல்நிலையை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்பதை உணருங்கள்.

ஆமாம்..இது என்ன அவ்வளவு முக்கியமான பதிவா..என்கிறீர்களா?

வள்ளுவரே இன்பத்துப் பாலில்

உணவிலும் உண்ட தறலினிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது

என்கிறார்.அதாவது தலைவன் தலைவியுடனான உடலுறவைக் காட்டிலும் ஊடல் கொள்வதில் ஒரு சுகம் உள்ளதாம்..அது எப்படிப்பட்ட சுகம் எனில்..உணவு அருந்துவதை விட அருந்திய உணவு செரிமானம் ஆகும் சுகம் போலவாம்.


Thursday, December 20, 2012

குஜராத் தேர்தலில் மோடி படு தோல்வி...




குஜராத் மாநிலத்திற்கு நடந்த சட்டசபைத் தேர்தலில் ..முதல்வர் மோடி தலைமையில் ஆன பாஜக படு தோல்வியடைந்துள்ளது.

2007 ஆம் ஆண்டு தேர்தலில் 182 இடங்கள் கொண்ட சட்டசபைக்கான தொகுதிகளில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி 117 இடங்களைப் பெற்று வெற்றி வாகை சூடியது.எதிர்த்து போட்டியிட்ட பிரதான கட்சியான காங்கிரஸ் 59 இடங்களில் வெற்றி பெற்றது.

ஆனால் நடந்து முடிந்த சமீபத்திய தேர்தலில் பாஜக அலை வீசுவதாகக் கருத்துக் கணிப்புகள் கூறினாலும்..பாஜக படுதோல்வியடைந்துள்ளது.அக்கட்சி 115 இடங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.அதாவது கடந்த தேர்தலைவிட இரு இடங்கள் அதற்குக் குறைவாகவே கிடைத்துள்ளது. இது அம்மாநிலத்தில் பாஜகவின் வீழ்ச்சியையும்..மோடியின் தலைமையை மக்கள் புறக்கணிக்கப்பட்டதையே குறிக்கிறது.

அதே நேரத்தில் சென்ற முறை 59 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் இம்முறை 61 தொகுதிகளில் வென்று அம்மாநிலத்தில் மாபெரும் வளர்ச்சி பெற்றுள்ளது.

இவ்வீழ்ச்சிக்கு தன் ஆட்சியில் நடந்த தவறுகளே காரணம் என்றும்..அதனால் 6 கோடி மக்களிடம் தான் மன்னிப்புக் கேட்பதாகவும் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டிஸ்கி - இப்பதிவு ஒரு காங்கிரஸ்காரர் பார்வையில்..(நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளவும்.)


சிவாஜி ஒரு சகாப்தம் - 5




1958 ஆம் ஆண்டு வெளியான படங்கள்


உத்தமபுத்திரன்
பதிபக்தி
சம்பூர்ண ராமாயணம்
பொம்மைக்கல்யாணம்
அன்னையின் ஆணை
சாரங்கதாரா
சபாஷ் மீனா
காத்தவராயன்
பொம்மல பெள்ளி (தெலுங்கு)

உத்தமபுத்திரன் தான் இரட்டை வேடங்கள் தாங்கி சிவாஜி நடித்த முதல் படம். ஸ்ரீதர் கதை,வசனம்.நம்பியார் வில்லனாக அருமையாக நடித்திருப்பார்.யாரடி நீ மோகினி மறக்க முடியா பாடல்.படம் வெற்றி

பதிபக்தி...பீம்சிங், சிவாஜியின் முதல் கூட்டணி படம்.சாவித்திரி,ஜெமினி,ராஜம் நடித்தது.சிவாஜியின் ஜோடி எம்.என்.ராஜம்..பல அருமையான பாடல்கள்..படம் வெற்றி

சம்பூர்ணராமாயணம்..சிவாஜி நாயகன் இல்லை..என்.டி.ஆர்., ராமராகவும்,சிவாஜி பரதனாகவும் நடித்தனர்.படத்தைப் பார்த்த ராஜாஜி பரதனையேக் கண்டேன்..என சிவாஜியின் நடிப்பைப் புகழ்ந்தார்.

பொம்மைக்கல்யாணம்..ஜமுனாவுடன் நடித்தார்...படம்..தோல்வி

அன்னையின் ஆணை..வில்லனிக் ஹீரோ..சாவித்திரி நாயகி..படம் வெற்றி..அன்னையைப்போல் ஒரு தெய்வமில்லை அருமையான பாடல் அமைந்த படம்.

சாரங்கதாரா...சிவாஜியின் 50 ஆவது படம்..6 வருடங்களில் 50 படம்..பானுமதி நாயகி..படம் எதிர்ப்பார்த்த வெற்றி அடையவில்லை.

சபாஷ் மீனா...மாலினி கதானாயகி..படம் வெற்றி..சித்திரம் பேசுதடி..போன்ற அருமையான பட பாடல்கள் இடம் பெற்ற படம்

காத்தவராயன்...சிவாஜியின் பட எண்ணிக்கையில் ஒன்று அதிகம்...அவ்வளவுதான்

இதைத்தவிர பொம்மல பெள்ளி என்ற தெலுங்கு படமும் வந்தது.

அடுத்த பதிவு 1959 படங்கள்.

அன்னையின் ஆணை - சாம்ராட் அசோகன் நாடகம் இடம் பெற்ற படம்

சாரங்கதாரா - வசந்த முல்லை போலே வந்து என்ற புகழ்பெற்ற பாடல் இடம் பெற்ற படம்

Wednesday, December 19, 2012

தமிழுக்கு அமுதென்று பெயர் - 7


ஒரு முறை கம்பனால் அவமானம் அடைந்த சோழ மன்னன்..பதிலுக்கு அவரை அவமானப்படுத்த காத்திருந்தார்.தன் எண்ணத்தை பொன்னி என்ற விலைமகளிடம் சொன்னார்.உடன் அவள் 'கம்பர் கையால்..அவர் எனக்கு அடிமை என எழுதி வாங்கி விடுகிறேன்' என்றாள்.

பின் தன் வேலைக்காரியை கம்பனிடம் அனுப்பி...உடன் அழைத்து வரும்படிக் கூறினாள்.கம்பரும்...என்னவோ..ஏதோ..என அங்கு சென்றாள்.

அவரை அன்புடன் வரவேற்றவள்..அவரை கட்டித் தழுவினாள். கம்பர் 'பெண்ணே..நீ அரசர்க்குரியவவள்..என்னை அணைப்பது குற்றம்" என்றார்.ஆனால் பொன்னி அதை செவிசாய்க்கவில்லை. 'இதைத் தவிர வேறு நீ எதைச் சொன்னாலும் கேட்கிறேன்' என்றார்.

அவ்வாறாயின்..தாசி பொன்னிக்கு கம்பன் அடிமை..என எழுதித் தாருங்கள்..என்றாள்.

கம்பனும்..அப்படியே எழுதிக் கொடுத்துவிட்டு வீடு சென்றார்.

பொன்னி அந்த ஓலையை மன்னரிடம்..தர..மன்னன் மகிழ்ந்தான்.

மறுநாள் கம்பனிடம் அவ்வோலையைக் காட்டி..இது நீர் எழுதியது தானே..என்றான் மன்னன்.

ஆமாம் என்றார் கம்பர்.

உடன் மன்னன் ஒரு பணியாளிடம் அதைக்கொடுத்து உரக்க படிக்கச் சொன்னான். பணியாளும் 'தாசி பொன்னிக்கு கம்பன் அடிமை' என உரக்கப் படித்தான்.இதைப்பார்த்து கம்பன் அவமானத்தால் கூனிக் குறுகுவார் என எதிர்ப்பார்த்த மன்னன் ஏமாற்றம் அடைந்தான்.

'கம்பரே..நீர் தாசி பொன்னிக்கு அடிமையா?' என்றான் மன்னன்.

ஆமாம்..அதில் என்ன ஐயம்...-கம்பர்.

"பார் புகழும் புலவன் நீர்..கேவலம்..ஒரு தாசிக்கு அடிமை என எழுதிக்கொடுத்துள்ளீர்களே' என ஏளனமாக மன்னன் வினவ..கம்பனோ...

'நான் ஏன் வெட்கப்பட வேண்டும்...அதற்காக பெருமை அல்லவா பட வேண்டும்...அதன் உண்மைப் பொருள் அறிவீரா?' என்றார்.

மன்னா! தா-தாயாகிய , சி- அழகிய. பொன்னிக்கு-திருமகளுக்கு ...அதாவது தாயாகிய அழகிய திருமகளுக்குக் கம்பனாகிய நான் அடிமை..என்று விளக்கம் தந்தார்.

கம்பனை..அவமானப் படுத்த நினைத்த மன்னன் தலை கவிழ்ந்தான்.


Tuesday, December 18, 2012

வாய் விட்டு சிரிங்க..

1.ரேப் ன்னு ஒரு படம் எடுத்தாரே அந்த தயாரிப்பாளரை ஏன் அரெஸ்ட் பண்ணிட்டாங்க?
படத்திலே நடிச்ச ஹீரோயினை ரேப் பண்ணிட்டாராம்..

2.call taxi ல call girl ஐ கூட்டிட்டுப் போனியே என்னாச்சு..
police பார்த்துட்டு காலை உடைச்ச்ட்டாங்க

3.அந்த ஜோக் எழுத்தாளரோட ஒரு ஜோக் இதுவரைக்கும் 500 முறைக்கு மேல் பிரசுரமாயிருக்கு
அது என்ன ஜோக்
கல்யாண வீட்ல செருப்பு திருடின ஜோக் தான்

4.அந்த பெண் சாமியாரை சுற்றி ஏன் இவ்வளவு கூட்டம்?
அவர் எல்லோரையும் கட்டிப்பிடிச்சு ஆசிர்வாதம் பண்றாராம்.

5.அதோ போறாரே அவர் யார் தெரியுமா?
யார்
நடிகை நளினாவோட சின்ன வீடாம்.

6.அந்த எம்.பி. தொகுதி பக்கம் போகலேன்னு யாரும் குறை சொல்லமுடியாது
ஏன்?
அவர் ராஜ்யசபா எம்.பி.ஆயிற்றே!

Monday, December 17, 2012

ஆகாசத்தின்டே நிறம் (மலையாளம்)- விமரிசனம்..


பல்வேறு நாடுகளிலிருந்து ஆஸ்கார் விருதுக்காக தேர்ந்தெடுக்கப் பட்ட 282 படங்களில் , நெடுமுடி வேணு,இந்திரஜித் நடித்த..'ஆகாசத்திண்டே நிறம்' (ஆகாயத்தின் நிறம்) படமும் ஒன்று..

முழுக்க முழுக்க அந்தமான்..நிகோபார் தீவுகளில் எடுக்கப்பட்டுள்ள இப்பட..காட்சிகள் மனதைக் கொள்ளை கொள்கின்றன.பக்கத்தில் இவ்வளவு அழகான...இயற்கை கொஞ்சும் இடத்தை வைத்துக் கொண்டு..நாம் ஏன் படபிடிப்புக்கு வெளிநாடு செல்கிறோம்??!! எம்.ஜே.ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு அற்புதம். வாழ்த்துகள் ஒளிப்பதிவாளருக்கு.

படத்தின் கதை என்று பார்த்தால்..ஒரே வரியில் சொல்லிவிடலாம்..

மனித வாழ்வில் இயற்கை எப்படி பின்னிக் கிடக்கிறது என்பதுதான்.

வயாதான நெடுமுடி வேணு..தான் இருக்குமிடத்திலிருந்து படகில் சென்று..தன் தயாரிப்பான கைவினைப் பொருட்களை விற்று..படகில் திரும்புகையில்..அப்பணத்தை கொள்ளையடிக்க இந்திரஜித் படகில் ஏறுகிறார்.அவரை தான் இருக்குமிடத்திற்கு அழைத்து வருகிறார் வேணு.அங்கு அவருடன் 7 வயது சிறுவன், வாய் பேசமுடியா அமலா பால், ஒரு திக்குவாய் உதவியாளர் வசித்து வருகின்றனர்.அருகாமையில்..வயதான..வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருப்போரை தன் பாராமரிப்பில்..சிற்சில வேலைகள் செய்யவித்து..மகிழ்வுடன் வைத்திருக்கிறார் வேணு,

இவற்றையெல்லாம் பார்த்த இந்திரஜித்..தானும் மனம் மாறுகிறான்.சொந்த உழைப்பில்தான் வாழ வேண்டும் என்பதை உணர்த்துகிறார்.

வயதானவர்களை பரிசோதிக்க அவ்வப்போது வரும் மருத்துவராக சிறிய கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் வருகிறார்.அமலா பால் அவர்களுக்கும் சிறிய பாத்திரமே.

இனி இப்படங்கள் பெற்றுள்ள விருதுகள்..கலந்துக் கொண்டுள்ள திரை விழாக்கள்.

கேரள மாநில அரசு விருது..
8 ஆவது யூரோசிய சர்வதேச திரைப்பட விருது
தெற்காசிய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
15 ஆவது ஹாங்காங் திரைப்பட விழாவில் கோல்டன் குளோப் விருதுக்கு தேர்வாகியுள்ளது.
தவிர்த்து..மலையாளத் திரையுலகில் ஆஸ்காருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் மலையாளப் படம் இது.

தயாரிப்பு - அனில்குமாr
கதை, இயக்கம்- டாக்டர் பிஜு
ஒளிப்பதிவு- எம்.ஜே.ராதாகிருஷ்ணன்
இசை- ரவீந்திர ஜெயின்
படத்தொகுப்பு- மனோஜ் கன்னோத்

திரைப்படக் குழுவினர்  அனைவருக்கும் வாழ்த்துகள்.














.

Saturday, December 15, 2012

அமெரிக்கா சுவர்க்கமும் இல்லை..இந்தியா நரகமும் இல்லை..




அமெரிக்காவில், கனக்டிகட் என்னும் மாநிலத்தில் நியூடவ்ன் என்னும் ஊரில்  27 பேர் பலியாகியுள்ளனர்.. ஒரு 20 வயதுப் பையனால்.. துப்பாக்கியுடன் ஒரு பள்ளிக்குச் சென்ற அவன் அம்மாவையும் (அவர் ஒரு ஆசிரியை), மற்றும் அந்தப்பள்ளியில் இருந்த சிறுவர் சிறுமியர் (மாணவ மாணவியரை) 20 பேர் மற்றும் 8 பேர் (சக ஆசிரியை போன்றவர்களை) சுட்டு கொன்று இருக்கிறான்!

இது செய்தி...

இறந்தவர்களில் 6முதல் 10 வயதுவரை உள்ள குழந்தைகள் 20 பேர்..

கடந்த சில தினங்களுக்கு முன்தான்..அமெரிக்காவில் ஒரு மாலில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

பள்ளி துப்பாக்கிச் சூட்டில் சுட்டவன் 20 வயதே நிரம்பியவன்.ஏன் இப்படி..இங்குதான் அப்படி நடக்கிறதா...அதற்கான காரணம் என்ன...

துப்பாக்கி வைத்திருப்பவர் எண்ணிக்கை இங்கு அதிகம்...லைசன்ஸ் பெற்றுள்ளவர் அதிகம் என்றெல்லாம் சொல்வது..விவாதத்திற்கு வேண்டுமானால் சரியாய் இருக்கும்..

ஆனால்..உண்மையான காரணம்..மனநிலைதான் என்றே தோன்றுகிறது.

குழந்தைகளை..6 வயதிலேயே..பெற்றோர்கள் தங்களிடமிருந்து பிரிக்கின்றனர்.அந்தக் குழந்தைக்கு தனி படுக்கையறை..அவன் அந்த வயதிலேயே..பெற்றோர்களின் பாசத்தைக் கொஞ்சம்..கொஞ்சமாய் இழந்து விடுகிறான்.இது முக்கியமாக அவன் மனதில்..ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது.நாளாவட்டத்தில்..அவன் ஒரு வெறுமையை உணர்கிறான்.மேலும்..பள்ளி படிப்பை முடித்து..அதாவது..15 வயதிற்கு மேல்..அவன்..தனித்துவப் படுத்தப்படுகிறான்.

சுருங்கச் சொன்னால்...6 வயதிற்கு மேல்..பெற்றோர் கவனிப்பு, அன்பு, பாசம் இதெல்லாம் அவனுக்கு முழுதுமாய்க் கிடைப்பதில்லை.இதுதான் முக்கியக் காரணமாய் நான் நினைக்கிறேன்.

ஆனால்...நம் நாட்டில்..பெற்றோர்கள்..குழந்தைகள் திருமணமாகும் வரை..பாசத்தைக் கொட்டி வளர்க்கின்றனர்.(இப்போது மெல்ல மெல்ல..அமெரிக்கக் கலாச்சாரம் நம்மிடமும் பெருகி வருவது..வேதனையைத்தான் தருகிறது)

அமெரிக்கா சுவர்க்கப் பூமியாய் தெரிந்தாலும்..உண்மையில் சொர்க்க பூமி நம் நாடுதான்.இதை அமெரிக்க வாழ் இந்தியர்கள் புரிந்துக் கொண்டுவருகிறார்கள்
.
மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள்..

அமெரிக்க வாழ் இந்தியனின் மன மாற்றங்கள் ..சிறிது..சிறிதாக ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது..குறைந்தது..அவர்கள் குழந்தைகம் எதிர்கால நன்மைக்காக.



Friday, December 14, 2012

சிவாஜி ஒரு சகாப்தம் -4



1957ல் வந்த சிவாஜியின் படங்கள்.

மக்களைப் பெற்ற மகராசி...பானுமதி ஜோடி. மருதகாசியின் தேனினும் இனிய பாடல்களுடன்...கிராமத்து விவசாயியாக சிவாஜி வாழ்ந்த படம். மாபெரும் வெற்றி.(மணப்பாற மாடு கட்டி, போறவளே போறவளே போன்ற பாடல்கள்)

வணங்காமுடி..சிவாஜி, சாவித்ரி, தங்கவேலு..நடித்தது.அருமையான கதை அமைப்பு, அளவான நடிப்பு, ஆரவாரமில்லா அருமையான பாடல்கள். (ஓங்காரமாய் விளங்கும் நாதம்...இன்றூம் ஓங்காரமாய் நம்
காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது)

புதையல்...சிவாஜி பத்மினி நடித்த வெற்றி படம். விண்ணோடும் முகிலோடும் என்ற பாடல் இடம்பெற்ற படம்.

மணமகன் தேவை...பானுமதியின் சொந்தபடம்...தோல்வி அடைந்த படம்.

தங்கமலை ரகசியம். சிவாஜி பாதி படத்திற்கு மேல் ..பேசத்தெரியாத...டார்ஜானாக நடித்த படம். கவி சுரதாவின் 'அமுதே பொழியும் நிலவே' ஒலிக்காத இடமே இல்லை அந்த நாட்களில்.ஜமுனா கதாநாயகி.

ராணிலலிதாங்கி, பாக்கியவதி தோல்வி படங்கள்.

அம்பிகாபதி...மீண்டும் சிவாஜி, பானுமதி...வெற்றி படம். மாசிலா நிலவே..பாடல் மறக்கமுடியாதது.இப்படம் தயாரிப்பில் இருந்த போது கலைவாணர் மரணம் அடைந்தார்.அவர் இதில் ஏற்று நடித்த பாத்திரமும்..இறந்து விட்டதாக காட்டப்பட்டது.

தவிர பராசக்தி..தெலுங்கு மொழி படமும் வெளியானது.

1958 படங்கள் அடுத்த பதிவில்.

Thursday, December 13, 2012

வாய் விட்டு சிரிங்க...





அதிகாரி- நேற்று வலது கைல கட்டுப்போட்டு லீவ் கேட்ட..இன்னிக்கு இடது கைல கட்டு போட்டுண்டு இருக்கே?
அலுவலர்- ஆஃபீஸிற்கு கிளம்பற அவசரத்தில..நேற்று எந்த கைல கட்டுப்போட்டேன்னு மறந்து போச்சு சார்..

2.கதை,வசனம்,டைரக்ஷன்,பாடல்,ஹீரோ பாத்திரம் என எல்லாப் பொறுப்பையும் நானே ஏத்துக்கிட்டு..ஒரு படம் பண்ண ஆசை..யாராவது தயாரிப்பாளர் கிடைப்பாங்களா?
அவ்வளவு ஈஸியா ஒரு ஏமாளி கிடைக்க மாட்டாங்களே!

3.அந்த கோவில்ல ஒரு உண்டியல்ல ஏன் லஞ்சம்னு போட்டிருக்கு
தங்களுக்கு எந்த காரியத்தையாவது சாதித்துதர வேண்டிகிட்டு..அதுக்கு பக்தர்கள் போட்ட லஞ்ச உண்டியல் அது.

4.டாக்டர்- நீங்க அதிகம் குடிச்சதால..குடல் புண்ணாயிடுச்சு..இந்த மருந்தை தினம் மூணு வேளை சாபிடுங்க
நோயாளி-ராவா சாப்பிடணுமா இல்ல தண்ணீ கலந்தா டாக்டர்

5. கொடுத்த கடனை மூணு தரம் கேட்டும்...திரும்ப கொடுக்க மாட்டேன்னு சொல்றீங்களே
நான் அஞ்சுதரம் கேட்டப்பிறகு தானே கடன் கொடுத்தீங்க

6.என்னோட அதிகாரி..அவர் துணிகளை நான் துவைச்சுத் தர முடியுமான்னு கேட்கிறார்
ஏன் அப்படி கேட்கிறார்
நான் நல்லா சோப் போடறேனாம்.


Wednesday, December 12, 2012

தமிழுக்கு அமுதென்று பெயர் - 6




யானையின் பலம் எதிலே
தும்பிக்கையிலே
மனிதனோட பலம் எதிலே
நம்பிக்கையிலே

இப்படி ஒரு சினிமா பாடல் உண்டு.மனிதனுக்கு நம்பிக்கை மிகவும் அவசியம்..அப்போதுதான் அவனால் வாழ்வில் முன்னேற முடியும்.எந்த காரியத்தையும் செய்ய என்னால் முடியும் என்ற எண்ணம் வேண்டும்.ஒரு சின்னக் கதை

இரண்டு தவளைகள்..ஒரு பெரிய அடுக்கில் இருந்த பாலில் விழுந்து விட்டன.பால் என்று தெரிந்ததும் தன்னால் பிழைக்கமுடியாது என்று நம்பியது ஒரு தவளை.இது அவ நம்பிக்கை கொண்ட தவளை.
பாலில் அடிப்பாகம் சென்று அங்கேயே செத்து மடிந்தது.

ஆனால் அடுத்த தவளையோ நம்பிக்கை உள்ளது.

பால் என்று தெரிந்தும் கால்களைப் போட்டு இங்கும் அங்கும் அடித்தது.உதைத்தது.நீச்சல் போட்டது.உந்தி உந்தி கலக்கியது.பால் கலங்க ஆரம்பித்து ஆடை படர்ந்தது.மேலும் மேலும் நீந்தியது.சிறிது சிறிதாகத் திரண்ட வெண்ணெய் பாலில் மிதந்தது.

நம்பிக்கை இழக்கா தவளை வெண்ணெய் மீது அமர்ந்துக் கொண்டது.வெளியே தாவி பாய்ந்து தப்ப சிறிது ஓய்வு கிடைத்தது.

பால் பாத்திரத்தை விட்டு தாவி குதித்து ஓடியது..இது நம்பிக்கை.

பாலின் அடியில் சென்றது செத்து மடிந்தது அவநம்பிக்கை.

நம்மை ஒரு துன்பம் சூழும் போது துவண்டுவிடாமல்..அதிலிருந்து வெளிவரும் நம்பிக்கை இருந்தால் வாழ்வில் நமக்கு வெற்றியே கிடைக்கும்.

இதையே வள்ளுவர்..

இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
கிடும்பை படாஅ தவர்

என்கிறார்..

துன்பம் சூழும் போது துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்


Tuesday, December 11, 2012

ரஜினிக்கு இன்ப அதிர்ச்சி! சிவாஜி 3D, எப்படி? - ஏவி.எம். சரவணன்




ரஜினிகாந்த் பல்லக்கிலிருந்து இறங்கி நின்று ஸ்ரேயாவைப் பார்த்து "உன் கால் கொலுசொலிகள் போதுமடி, பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி' என்று பாடியபடி திரையில் தன் தொடையைத் தட்டும்போது பறந்து வரும் தூசி நம் கண்களில் விழுந்து விடுமோ என்று நாம் கண்களை ஒரு வினாடி மூடிக் கொள்கிறோம்; ஸ்ரேயா நீச்சல் குளத்தில் மகிழ்ச்சியாக நீந்தும்போது தெறிக்கும் தண்ணீர் நம் மீது பட்டுவிட்டதோ என்று நாம் நம் உடையை தொட்டுப பார்த்துக் கொள்கிறோம்; தீ தீ என்று ரஜினி பாடும்போது அவர் கையிலிருக்கும் துப்பாக்கி பறந்து நம் அருகில் வந்து நின்று ஒருவனை சுட்டுவிட்டு திரும்பவும் ரஜினியின் கையில் போய் சேருகிறது; ஒரு காட்சியில் ரஜினி சுண்டி விடும் நாணயம் நம்மை நோக்கி வேகமாக வர நாம் நம் முகத்தில் அது மோதிவிடாமலிருக்க தலையை குனிந்து கொள்கிறோம்.

÷இந்த அனுபவமெல்லாம் 3D தொழில்நுட்பத்தில் மாற்றம் செய்யப்பட்ட ஏவி.எம்மின் "சிவாஜி' படத்தின் சில காட்சிகளைப் பார்த்தபோது நமக்கு ஏற்பட்டவைதான். ஏற்கெனவே பார்த்த படம்தான்; பார்த்த காட்சிகள்தான். ஆனாலும் படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் 3D நிகழ்த்தியிருக்கும் மாயாஜாலம் பிரமிக்க வைக்கிறது. இது 3Dயாக மாற்றம் செய்யப்பட்ட படம் என்பதை நம்ப முடியவில்லை. 3Dயாகவே எடுக்கப்பட்ட படம் என்கிற எண்ணம்தான் உண்டாகிறது. எப்படி நிகழ்ந்தது இந்த மேஜிக்?

÷""உண்மையை சொல்ல வேண்டுமானால் இந்த "சிவாஜி' படத்தை 3Dயாக மாற்றலாம் என்கிற ஐடியா முதலில் தோன்றியது எங்களுக்கு அல்ல. பிரசாத் ஸ்டுடியோ அதிபர் சாய் பிரசாத்துக்குத்தான்'' என்று "சிவாஜி' முப்பரிமாணதன் காரணத்தை விளக்கினார் படத்தின் தயாரிப்பாளரான ஏவி.எம். சரவணன்.

÷அவருடைய தாத்தா எல்.வி. பிரசாத் காலத்திலிருந்தே அவர்கள் குடும்பத்திற்கும் ஏவிஎம்முக்கும் ஒரு நெருக்கமான உறவு உண்டு. அவர்கள் ஸ்டுடியோவில் இருக்கும் இஎப்எக்ஸ் என்கிற தொழில்நுட்பப் பிரிவு படங்களில் கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்குவதற்கு மிகவும் புகழ்பெற்றது. பொதுவாக படங்களில் ஒரு சில காட்சிகளிலோ அல்லது பாடல் காட்சியிலோ இத்தகைய கிராபிக்ஸ் தொழில்நுட்பம் இடம்பெறும்.

÷இப்படி அவர்கள் உருவாக்குகிற கிராபிக்ஸ் காட்சிகள் அகில இந்திய அளவில் பெரிய பாராட்டைப் பெற்றிருந்தாலும் ஒரு முழு படத்தையும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்ற வேண்டும் என்கிற ஆசை அவர்களுக்கு இருந்தது. அதற்கு ஏற்ற படமாக சிவாஜி இருப்பதால் அப்படத்தை 3Dயில் மாற்றலாம் என்கிற யோசனையை சாய் பிரசாத் எங்களிடம் தெரிவித்தார். எங்களுக்கும் அது நல்ல யோசனையாகப் படவே உடனே சம்மதம் தெரிவித்தோம்.

÷"சிவாஜி' படம் மூன்று மணி பத்து நிமிடம் ஓடக் கூடியது. அதை இரண்டு மணி நேரமாகக் குறைத்தால் நன்றாக இருக்கும் என்று சாய் பிரசாத் கூறினார். ஆனால் நாங்கள் எவ்வளவோ குறைத்தும் எங்களால் நாற்பது நிமிடத்திற்கு மேல் குறைக்க முடியவில்லை. எனவே இப்போது சிவாஜி 3D படத்தின் நேரம் 2 மணி 32 நிமிடம்.

÷"சிவாஜி' படம் வெளிவந்து இந்த ஆண்டு ஜூன் 15 ஆம் தேதியோடு ஐந்து ஆண்டுகள் முடிவடைகிறது. எனவே அப்படம் ரீலிஸானபோது விநியோகஸ்தர்களுக்கு கொடுக்கப்பட்ட 5 வருட உரிமை முடிவடைந்து உரிமை மீண்டும் எங்களுக்கே வருகிறது. அதனை கணக்கிட்டு 3D வேலைகளுக்கு எட்டு மாதம் ஆகலாம் என எண்ணி கடந்த ஆண்டு நவம்பரில் 3D தொழில்நுட்ப பணிகளை பிரசாத்தில் தொடங்கினார்கள்.

÷நானூறு தொழில்நுட்பக் கலைஞர்கள் இரவு பகலாக வேலை செய்தும் 3D பணிகள் முடிவடைய ஒரு வருடம் ஆகிவிட்டது. அதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது இது மற்ற 3D படங்கள் போல் அல்ல. புதிதாக அறிமுகமாகியிருக்கும் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் இப்படம் தயாரானது. இரண்டாவது இப்படி முழு படமும் ஒவ்வொரு பிரேமும் 3Dயில் நவீன தொழில்நுட்பத்துடன் உருவாவது இந்தியாவிலேயே இது முதல்முறை. எனவே இந்த தொழில்நுட்பம் பிடிபடுவதற்கே சில மாதங்கள் ஆயிற்று.

÷முதலில் இரண்டு பாடல் காட்சிகளையும் மற்றும் சில காட்சிகளையும் மட்டும் 3D தொழில்நுட்பத்தில் மாற்றி எங்களுக்குக் காட்டினார்கள். அதைப் பார்த்த நாங்கள் அசந்துவிட்டோம் என்பதுதான் உண்மை. உடனே ரஜினிக்கு போன் செய்து இந்த விஷயத்தைக் கூறினேன். அவருக்கு சிவாஜி படம் 3Dல் மாற்றப்படுகிற விஷயமே அப்போதுதான் தெரியும். இந்த டெக்னாலஜி முழு படத்திற்கும் பயன்படுத்தப்படுவது இது முதல்முறை என்பதால் நாங்கள் யாரிடமும் இதுபற்றி முன்கூட்டியே கூறவில்லை.

÷ரஜினி வந்தார். ஆர்வமாக படத்தைப் பார்த்தார். படம் ஓடிக்கொண்டிருக்கும்போது ஒரு ரசிகரைப் போல் உற்சாகமாக சிரித்து ரசித்துப் பார்த்தார். படம் பார்த்து முடித்ததும் வியந்து பாராட்டினார். எப்படி எப்படி என்று எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

÷ரஜினியிடம் "கோச்சடையான் படம் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடைந்துவிடுமா' என்று நான் கேட்டேன். அவர் "இல்லை அந்தப் பட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன' என்று கூறினார். "அப்படியானால் உங்கள் பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி சிவாஜி 3D ரிலீஸ்' என்று நான் கூறினேன். அவர் அதைக் கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். "சூப்பர்' என்னோட ரசிகர்களுக்கு இந்தப் படம் ரொம்ப பிடிக்கும், ரொம்ப நன்றி' என்று ரொம்ப மகிழ்ச்சியாக சொன்னார்.

÷படத்தின் டைரக்டர் ஷங்கர் இந்த 3D மாற்றத்தைப் பார்த்துவிட்டு, "நான் 3Dல் மாற்றப்பட்ட பல ஹாலிவுட் படங்களை பார்த்திருக்கிறேன். அதையெல்லாம் விட சூப்பர் குவாலிட்டி இந்தப் படத்தில்தான்' அப்படின்னு சொன்னார்.

÷படத்தோட கேமராமேன் கே.வி. ஆனந்த் "நாற்பது நிமிடப் படம் குறைஞ்சதே தெரியல. அதே விறுவிறுப்பு அதே கலகலப்பு... மறுபடியும் பாக்கணும்போல இருக்கு' அப்படின்னார்.

÷கவிஞர் வைரமுத்து படத்தைப் பாத்துட்டு "இந்தப் படம் ரஜினியை ரசிகர்களுக்கு அருகில் கொண்டு செல்லும்' அப்படின்னு பாராட்டினார்.

÷இந்தப் படத்தோட ஒலியமைப்புல "டால்பி அட்மோஸ்'ங்கற புது தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கு.

÷சென்னை சத்யம் தியேட்டர் வளாகத்துல இருக்கிற செரின் தியேட்டர்ல இந்தப் படத்துக்காகவே புதிதாக 20 லட்ச ரூபாய் செலவுல "அட்மோஸ் சவுண்ட் சிஸ்டம்' பொருத்தியிருக்காங்க.

இந்த "டால்பி அட்மோஸ் சவுண்ட் சிஸ்டம்' உலகத்திலேயே நூறு தியேட்டர்களில்தான் இருக்கு. அதில இந்தியாவில இருக்கற ஒரே தியேட்டர் செரின். இந்த சவுண்ட் சிஸ்டத்தில படம் பாக்கறது ஒரு புது அனுபவமா இருக்கும்.

ரசிகர்களைப் போலவே நாங்களும் ஆர்வமாகக் காத்துக் கொண்டிருக்கிறோம்,  12.12.12க்காக.

ஏவி.எம். சரவணனின் முகத்தில் இன்னொரு மாபெரும் சாதனை படைத்து முடித்திருக்கும் பெருமிதம்!

(நன்றி-தினமணி)

Monday, December 10, 2012

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடும்..கலைஞரும்




கலைஞர் ஒரு அறிக்கையில் சொல்லியுள்ளது..
கேள்வி: சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டினை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று தமிழக முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்த போதிலும், 'வால்மார்ட்' நிறுவனம் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டினை தமிழகத்தில் கொண்டு வருவதற்கான முயற்சியினை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறதே?.

பதில்: வானகரத்தில் 'வால்மார்ட்' நிறுவனத்தின் சார்பில் 7 ஏக்கர் பரப்பளவில் வணிக வளாகமும், அண்ணா நகரில் மாக்கெட்டிங் அலுவலகமும் தொடங்கி அதற்கான பணிகள் நடைபெறுவதாக தகவல்கள் வருகின்றன. மளிகை கடைக்காரர்களை அணுகி குறைந்த விலையில் உங்களுக்கு பொருட்களை விநியோகிக்கிறோம் என்று கூறி, அவர்களை உறுப்பினர்களாக ஆக்குவதற்கான முயற்சியில் தீவிரமாக அந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறதாம்.

இந்த செய்திகள் உண்மையாக இருக்குமேயானால் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடுகள் நுழைந்துவிடக்கூடும். சம்பந்தப்பட்டவர்களின் இந்த நிறுவனத்தின் நடவடிக்கைகள் பற்றி விசாரித்தபோது, நாங்கள் சில்லறை வர்த்தகம் செய்யவில்லை, கடைகளுக்கு மொத்தமாக பொருட்களை வழங்கப் போகிறோம் என்று கூறுகிறார்களாம். எனவே தமிழக அரசு இந்த செய்தி உண்மையா என்பதை அறிந்து உடனடியாக அதன் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

டிஸ்கி-
மகன்-அப்பா...குழந்தையையும் கிள்ளி விட்டு..தொட்டிலையும் ஆட்டுவது என்று ஏன் சொல்கிறார்கள்?
அப்பா-ஏதேனும் ஒன்றிற்கு ஆதரவாகவும்...அடுத்த நிமிடமே மறுப்பாகவும் பேசுவதற்கு என்ன சொல்வது...தெரியுமா?
மகன்-தெரியாது
அப்பா-சில விஷயங்கள் தெரியாமல் இருப்பதே நல்லது..
மகன்-நீ என்ன சொல்றேன்னும் புரியல
அப்பா-உனக்குமட்டுமா புரியலை..புரியாது மாதிரி நடிபவங்களுக்குக் கூட புரியலை


Sunday, December 9, 2012

பட்டையை கிளப்பப்போகும் விஸ்வரூபம்


தசாவதாரக் கமலின் விஸ்வரூபம்

கமலின் விஸ்வரூபம் படம் ஜனவரி 11ஆம் நாள் வெளியாகிறது.பொங்கலை ஒட்டி முக்கிய நடிகர்கள் படங்கள் சிலவும் வெளியாவதால்...தியேட்டர் பிரச்னைகள் கண்டிப்பாக ஏற்படும்.எதிர்ப்பார்த்த தியேட்டர்கள், காட்சிகள் ஆகியவை குறையக் கூடும்.
தவிர்த்து...இப்போதெல்லாம்..எவ்வளவு முடியுமோ..அவ்வளவு காட்சிகளை படம் வெளியாகி..விமரிசனங்கள் வருவதற்குள்..நடத்தி வசூலைப் பெறுவதே நோக்கமாகி உள்ளது.

இந்நிலையில்..தியேட்டர் எண்ணிக்கை..பொங்கல் வெளியீடு படங்களுக்கு குறையும்.தவிர்த்து.100 கோடிகளுக்கு மேல் செலவு செய்து எடுக்கப்படும் படங்கள்.. ஒருவேளை சரியாய் இல்லையெனில்..தயாரிப்பாளர்..விநியோகஸ்தர்கள் நஷ்டம் அடையக்கூடும்.

அதற்கு என்ன வழி..என எண்ணியே கமல்..தன் படம் வெளியாகும் முதல் நாள் ஒரு காட்சியை டிடிஎச் சில் ஒளிபரப்ப ஏற்பாடுசெய்துள்ளார்.இதற்காக 50 கோடிகள் விலை பேசியுள்ளதாகத் தகவல்.(ஒரு இணைப்பிற்கு 1000 ரூபாய் என்பது வேறு விஷயம்..)

இப்போது..படம் வெளியாவதற்கு முன்னதாகவே தயாரிப்பாளர்..செலவில் கணிசமான தொகை கிடைத்து விடுகிறது.

இப்போது..இப்படம்...பொங்கல் விடுமுறை காலத்தில்...அதாவது..வெளியான நாளிலிருந்து 15ஆம் நாள் வரை..அதாவது ஐந்து நாட்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக நடைபெறும்.அப்போது..மீண்டும் கணிசமான வசூல் கிடைக்கும்.மேலும்..வெளிநாடுகளில் வசூல்...இவையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால்..படம் ஹிட் ஆகாவிடினும்..தயாரிப்பாளர் நஷ்டத்திலிருந்து தப்பிவிடுவார்.

இதுபோல..இனி வரும் நாட்களிலும்..லோ பட்ஜெட் படங்களும்..வெளியிடும் முன் சேனல்களுக்கு விற்கப்படலாம்

இது எல்லாப் படங்களுக்கும்..அதன் அதன் செலவிற்கேற்ப வசூல் ஆகும் நிலையை உருவாக்கும்.

கமலின் இந்த முடிவு..கண்டிப்பாக வரவேற்க வேண்டிய ஒன்று..

திரையரங்க உரிமையாளர்களிடமிருந்து இதற்கு எதிர்ப்புகள் வரலாம்..ஆனால் காலப் போக்கில்..எல்லா படங்களுக்கும் இனி திரையரங்குகள் கிடைக்கும் நிலை வரும்.மேலும் திரையரங்கில் படம் பார்ப்பவர்கள் அரங்கிற்குத் தான் வருவர்.

துப்பாக்கி படம் .திருட்டு டிவிடியில் வந்தும் ..திரையரங்கிற்கு மக்கள் வரவில்லையா..

மாற்றான்..வெளியானதுமே..விமரிசனங்கள் வந்தும்..முதல் சில நாட்கள் வசூலில் பட்டையைக் கிளப்பவில்லையா..

ஆகவே..இப்படி யாகுமோ...அப்படியாகுமோ என மைதாசாக எண்ணாமல்..கமலின் இந்த முடிவு...திரையுலகை அடுத்த ஒரு புது பாதைக்கு அழித்து செல்லும் என நம்புவோமாக.

Friday, December 7, 2012

உங்களுக்குத் தெரியுமா?





1.பணத்தால் வாங்க முடியாதவை இவை

1.புத்தகத்தை வாங்கலாம்...அறிவை வாங்கமுடியாது
2.உணவை வாங்கலாம்..பசியை வாங்கமுடியாது
3.பகட்டை வாங்கலாம்...பண்பாட்டை வாங்கமுடியாது
4.படுக்கையை வாங்கலாம்..உறக்கத்தை வாங்கமுடியாது
5.கேளிக்கைகளை வாங்கலாம்...மகிழ்ச்சியை வாங்கமுடியாது
6.ஆயுதங்களை வாங்கலாம்...வீரத்தை வாங்கமுடியாது
7.வேலைக்காரர்களை வாங்கலாம்...சேவை மனப்பான்மையை வாங்கமுடியாது
8.அமைதியான சூழலை வாங்கலாம்...ஆனால் மனச்சாந்தியை வாங்கமுடியாது


2.உலகத்திலேயே அருமையானவர்கள்

1.தன்னுடைய சரக்கின் கெடுதியைக் கூறும் வியாபாரி
2.புகழை விரும்பாத கொடையாளி
3.மாற்றைக் குறைத்துக் கூறாமல் பொன் வாங்கும் வாணிபன்
4.எவ்வித லஞ்சமும் வாங்காத ஊழியன்
5.தண்டனையை நியாயம் என ஒப்புக்கொள்ளும் குற்றவாளி.

3.காய்களைப் பார்க்கலாம், பழங்களைப் பார்க்கலாம்..ஆனால் அவற்றின் பூக்களைப் பார்க்க முடியாது.அப்படி பூக்கள் தோன்றாமல் பழங்கள் தோன்றும் மரங்கள்
1.அரசமரம்
2.அத்திமரம்
3.ஆலமரம்
ஆகவே தான் இம்மரங்கள் புனிதமானவையாக சொல்லப்படுகின்றன.


Wednesday, December 5, 2012

சிவாஜி ஒரு சகாப்தம் -3



 
1955ல் சிவாஜி நடித்து வெளிவந்த படங்கள்...

காவேரி,முதல்தேதி,உலகம் பலவிதம்,மங்கையர் திலகம்,கோடீஸ்வரன், கள்வனின் காதலி

மங்கையர் திலகம் ...தவிர மற்ற படங்கள் எதிர்ப்பார்த்த அளவு சோபிக்கவில்லை.

காவேரி படத்தில்..குதம்பை சித்தர் பாடலும்..சித்த சுவாதீனமுற்றவர் போல சிவாஜி நடிப்பும் புகழப்பட்டன.

முதல்தேதி...சிவாஜி, அஞ்சலிதேவி, என்.எஸ்.கே.,நடித்தபடம்..கதையம்சம் பாராட்டும்படி இருந்தாலும்...படத்தின் பெரும் பகுதி..கனவு என்று இருந்ததால்..படம் தோல்வி.

உலகம் பலவிதமும், கோடீஸ்வரனும்...சொல்ல ஒன்றும்..இல்லாமல்..வந்து போனது..அவ்வளவே..

கள்வனின் காதலி...கல்கியின் கதை..சிவாஜி, பானுமதி நடித்தது.. அவ்வளவுதான்.

மங்கையர்திலகம்...சிவாஜி,பத்மினி,சுப்பையா நடித்த படம்.'நீல வண்ண கண்ணா வாடா"பாடல் ஹிட்.படமும் ஹிட்.,சிவாஜியின் அண்ணியாக பத்மினி.

மொத்தத்தில்...இவ்வாண்டு சுமாரான..ஆண்டு அவருக்கு.

1956ல் வந்த படங்கள்-

நான் பெற்ற செல்வம்,நல்ல வீடு,நானே ராஜா,தெனாலிராமன்,பெண்ணின் பெருமை,ராஜா ராணி,அமரதீபம்,வாழ்விலே ஒரு நாள், ரங்கோன் ராதா.

நான் பெற்ற செல்வம்...ஜி.வரலட்சுமி ஜோடி.படம் வெற்றி...நான் பெற்ற...பாடல் ஹிட்.

நானே ராஜா படத்தில்..சாம்ராட் அசோகனாக சிவாஜி ஒரு காட்சியில் அட்டகாசமாக நடிப்பார்..படம் ஆனால் தோல்வி.

நல்ல வீடு, தெனாலிராமன் ஆகிய படங்களும் எதிர்ப்பார்த்த வெற்றிபெறவில்லை.

பெண்ணின் பெருமை..சாவித்ரி,ஜெமினி உடன் நடித்திருப்பர்.படம் வெற்றி.சிவாஜி வில்லன் போன்ற பாத்திரம்..இந்த மூன்று நடிகர்கள் பின்னாட்களில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தனர்.

அமரதீபம்..ஸ்ரீதர் கதை..வசனம்..சாவித்திரி ஜோடி..பத்மினியும் படத்தில் உண்டு.படம் வெற்றி.ஏ.எம்.ராஜாவின்...தேன் உண்ணும் வண்டு போன்ற பல ஹிட் சாங்க்ஸ் உண்டு இப்படத்தில்.

வாழ்விலே ஒரு நாள்.ஜி.வரலட்சுமி...படம் தோல்வி.

ரங்கோன் ராதா ..அண்ணாவின் கதை..உடன் பானுமதி..எஸ்.எஸ்,ஆர்., கலைஞரின் பாடல்கள்..(பொது நலம்)., படம் வெற்றி.

இனி 1957 படங்கள் அடுத்த வாரம்.

மேலும் நண்பர் ஜோ தரும் அதிகத் தகவல்கள்

வருடம் - 1954 & 1955

1. முதன் முதலாக தமிழில் ஒரே நடிகரின் இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானது நடிகர் திலகத்திற்கு தான்.

படங்கள் - அந்த நாள் & கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.

வெளியான நாள் - 13.04.1954.

2. முதன் முதலாக மதுரையில் ஒரே படம் இரண்டு தியேட்டரில் திரையிடப்பட்டது நடிகர் திலகத்தின் படம் தான்.

படம் - கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.

திரையிடப்பட்ட அரங்குகள் - தங்கம் & நியூசினிமா.

3. அதே நாளில் அந்த நாள் படமும் மதுரை - ஸ்ரீமீனாக்ஷி திரையரங்கில் வெளியானது. ஆக முதன் முதலாக மதுரையில் ஒரே நடிகரின் படங்கள் மூன்று திரை அரங்குகளில் வெளியானதும் நடிகர் திலகத்திற்கு தான்

4. முதன் முதலாக ஒரு நடிகர் நடித்த இரண்டு படங்கள் ஒரு வருடத்தில் ஒரே நாளில் வெளியிட்ட சாதனை மட்டுமல்லாது அதே வருடத்தில் மீண்டும் ஒரு முறை ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியானதும் நடிகர் திலகம் மட்டுமே செய்த சாதனைகளாகும். அவை பின்வருமாறு

படங்கள் - அந்த நாள் & கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.

வெளியான நாள் - 13.04.1954.

படங்கள் - கூண்டுக்கிளி & தூக்கு தூக்கி.

வெளியான நாள் - 26.08.1954

5. முதன் முதலாக சென்னையில் 6 திரையரங்குகளில் வெளியான தமிழ் படம் - எதிர்பாராதது.

6. முதன் முதலாக சென்னையில் 5 திரையரங்குகளில் 80 நாட்களை கடந்து ஓடிய தமிழ் படம் - எதிர்பாராதது.

அரங்குகள் - சித்ரா,காமதேனு, பிராட்வே, மகாலக்ஷ்மி, பாரத்.

7. முதன் முதலாக ஒரே வருடத்தில் ஒரு தமிழ் பட கதாநாயகன் நடித்த அதிகமான படங்கள் வெளியானது இந்த வருடத்தில் தான். நடிகர் திலகம் நடித்த 10 படங்கள், 1954-ல் வெளியானது.

8. இதில் மூன்று படங்கள் 100 நாட்களை கடந்தன.

மனோகரா

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி -

[சென்னை - காசினோ, சேலம் - நியூ சினிமா, திருச்சி -பிரபாத்.]

எதிர்பாராதது

9. முதன் முதலாக பந்துலுவும் நடிகர் திலகமும் ஒரு முழு நீள படத்திற்கு இணைந்தது இந்த படத்தில் தான். படம் - முதல் தேதி.

10. முதன் முதலாக படம் முழுவதும் கனவு காட்சியாகவே திரைக்கதை அமைக்கப்பட்ட படம் - முதல் தேதி.

11. முதன் முதலாக தமிழ் திரை உலகில் நடிக்க வந்த மூன்றே வருடங்களில் 25 படங்கள் அதுவும் நாயகனாகவே நடித்தவர் நமது நடிகர் திலகம் மட்டும் தான். [1952 -1955]
March 6, 2009 12:53:00 AM PST
 ஜோ / Joe said...
வருடம் - 1956

1.இரண்டு வருடங்களுக்கு முன் நடந்தது போல் மீண்டும் ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியானது இந்த வருடத்தில் தான்.

படங்கள் - நான் பெற்ற செல்வம் & நல்ல வீடு

வெளியான நாள் - 14.01.1956

2. முதன் முதலாக 43 நாட்கள் வித்யாசத்தில் ஒரு கதாநாயகனின் 6 படங்கள் வெளியானது நடிகர் திலகத்திற்கு தான். அவை

நான் பெற்ற செல்வம் - 14.01.1956

நல்ல வீடு - 14.01.1956

நானே ராஜா - 25.01.1956

தெனாலி ராமன் - 03.02.1956

பெண்ணின் பெருமை - 17.02.1956

ராஜா ராணி - 25.02.1956

3. எதிர்பாராதது படத்தை தொடர்ந்து சென்னையில் 6 திரையரங்குகளில் வெளியான படம் நானே ராஜா.

4. நடிகர் திலகத்தின் காரக்டர் நெகட்டிவாக இருந்தாலும் பொது மக்கள் ஏற்று கொண்டதால் தமிழகத்தில் 5 திரையரங்குகளில் 100 நாட்களை கடந்தது பெண்ணின் பெருமை. அவை

சென்னை - காசினோ, பிராட்வே, மகாலெட்சுமி.

சேலம் - நியூ சினிமா

திருச்சி - ஜுபிடர்

5. சேரன் செங்குட்டுவன் ஓரங்க நாடகத்தில் கலைஞரின் 16 பக்க வசனத்தை ஒரே டேக்-ல் நடிகர் திலகம் பேசி நடித்த படம் ராஜா ராணி.

6. முதன் முதலாக சிவாஜி பிலிம்ஸ் விநியோகித்த தமிழ் படம் - அமர தீபம்.

7. முதன் முதலாக ஒரு தமிழ் படம் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளாக (continous 100 House full shows) ஓடிய சாதனையை நிகழ்த்தியதும் நடிகர் திலகத்தின் படம் தான்.

படம் - அமர தீபம்

அரங்கு - காசினோ

8. முதன் முதலாக தன்னை விட வயதான ஒருவருக்கு தந்தையாக நடிகர் திலகம் நடித்த படம் - வாழ்விலே ஒரு நாள்.

9. முதன் முதலாக அண்ணா கதை எழுத, கலைஞர் திரைக்கதை வசனம் தீட்ட, நடிகர் திலகம் நடித்த படம் ரங்கோன் ராதா

தமிழுக்கு அமுதென்று பெயர் - 5




இன்றைய பதிவில் காளமேகப் புலவரின் மற்றொரு சிலேடைப் பாட்டைப் பார்க்கலாம்.

பாம்பையும், வழைப்பழத்தையும் சிலேடையாகக் கையாண்டப் பாடல்..

நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்
வெஞ்சினத்தில் பற்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த்
தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்பாகும் வாழைப் பழம்

 பாம்பைப் பொறுத்தவரை நஞ்சு இருக்கிறது.
தோல் இருக்கிறது. காலத்திற்குக் காலம் தன்தோலை உரிக்கும் வழக்கம்
இருக்கிறது. சிவனின் முடியிலே அமர்ந்திருக்கிறது கோபத்திலே அதன்
பற்கள் பட்டுவிட்டால் யாரும் உயிர் தப்பமுடியாது.

அதேபோல, வாழைப்பழம்,
நஞ்சிருக்கும் (நன்கு கனிந்து நைந்து இருக்கும். )எ
அதற்கு வெளித் தோல் இருக்கிறது. உண்பதென்றால் அந்தத் தோலை உரிக்கவேண்டும்.
சிவனின் முடிக்கு அபிஷேகம் செய்யப்படும் பழங்களில்
ஒன்றாக இருக்கிறது. (-வெஞ்சினத்தில் -
 துணைஉணவாக இருக்கும்போது என்று பொருள்படும்).
துணையுணவாக உட்கொள்ளும்போது நமது பற்கள் பட்டுவிட்டால் மீளாது,
வயிற்றினுள்ளே சென்றுவிடும். ஆகவே வாழைப்பழமு; பாம்புக்கு நிகராகின்றது
என்பது பாடலின் கருத்தாகின்றது.

அடுத்த பதிவில் மற்றொரு பாடலுடன் சந்திப்போம்.