Saturday, December 20, 2008

தமிழர் தலைவர் அண்ணா....

பல குடித்தனங்கள் நிறைந்த வீட்டில் படிப்பதற்கேற்ற சூழ்நிலை இல்லாத நிலையில் அண்ணா படித்தார்.கல்லூரியில் இன்டர் வகுப்பு முடிந்து..வறுமை காரணமாக படிப்பை நிறுத்த முடிவு செய்தார்.

அப்போது... பச்சையப்பன் கல்லூரி முதல்வர், அண்ணாவை அழைத்து..'முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள நீ படிப்பை தொடர வேண்டும்' என்று கூறி..அவரை பி.ஏ.,(Hons) சேரச் சொன்னார்.அந்த மூன்றாண்டுக்கான முழு புத்தகச் செலவையும் அவரே ஏற்றார்.

படிக்கும் போதே ராணி அம்மையாரை, சம்பிரதாயப்படி மணந்தார்.பின்னரே சுமமரியாதை இயக்கத் தளபதி ஆனார் எனலாம்.

படிப்பு முடிந்ததும், காஞ்சீபுரம் நகராட்சியில் எழுத்தர் வேலை.பின் ஆசிரியர் வேலை..என சில காலம் இருந்தார்.

எப்படியேனும்..அண்ணாவை தன்னிடம் சேர்த்துக் கொள்ள நினைத்த பெரியார்..'விடுதலை'யில் பணியாற்றக் கூப்பிட்டார்.விடுதலையில் அண்ணா,பரதன்,வீரன்,சௌமியன் என்ற புனைப்பெயர்களில் கட்டுரைகள் எழுதினார்.அவை பல இளைஞர்களை அவரிடம் வசீகரித்தன.

சந்திரமோகன்,நீதிதேவன் மயக்கம்,சந்திரோதயம்,ஓர் இரவு,காதல் ஜோதி,வேலைக்காரி போன்ற பல நாடகங்களை எழுதி நடித்தார்.

இடையில் எம்.ஏ.,படித்தார்.ஒரு இயக்கத்தை சேர்ந்தவர் மேக்கப் போட்டு நடிப்பதைக் கண்டதும்தான்..கலைஞர்கள் பற்றி..மக்களிடையே ஏற்பட்டிருந்த எண்ணங்கள் மாறின எனலாம்.

1949 ஜூன்...முக்கிய மாதம்..பெரியார் மணியம்மையை மணக்க..அண்ணா போன்றோர்..வெளியே வந்து..புதிய கழகம் ஆரம்பிப்பது என தீர்மானித்தனர்.

17-9-49 அன்று திராவிட முன்னேற்ற கழகம் விதைக்கப்பட்டது.

நாம் திராவிட கழகத்துடன் மோதுவதோ..சாடுவதோ கூடாது.இரண்டு கழகங்களும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்றார் அண்ணா.

அண்ணாவின்..அரசியல் முக்கியத்துவம்..அவரது எழுத்துலகத்தை முடக்கி விட்டது எனலாம்.அவரது பேச்சும்...எழுத்தும் தான் தமிழ் நெஞ்சங்களில் அவருக்கு நீங்கா இடத்தை அமைத்துக் கொடுத்தது.

அண்ணாவின் 'ஓர் இரவு' நாடகத்தைப் பார்த்த கல்கி அவரை 'தமிழ் நாடக உலகின் பெர்னாட்ஷா' என்றார்.

எதையும்..தாங்கும் இதயம்..

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு!

ஆகிய வாசகங்கள் அண்ணா தந்த மறக்கமுடியாத வாசகங்கள்.

8 comments:

காரூரன் said...

அண்ணா பெருமை தமிழ் பேசும் உலகம் எல்லாம் பரவியிருக்கின்றது. தமிழ் நாட்டில் உள்ள கட்சிகளும் அண்ணா புகழ்பாடித் தான் அவர்கள் அரசியல். நட்சத்திர வாழ்த்துக்கள் ஐயா!

சதுக்க பூதம் said...

அண்ணா ஆட்சி செய்த 2 ஆண்டுகளில் அவர் செய்த சாதனைகளை பட்டியலிட்டால் நன்றாக இருக்கும்.இந்த தலைமுறையினருக்கும் அந்த செய்தி சென்றடையும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றிசதுக்க பூதம் .கூடிய விரைவில் தனி பதிவு போட்டுவிடுகிறேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///காரூரன் said...
அண்ணா பெருமை தமிழ் பேசும் உலகம் எல்லாம் பரவியிருக்கின்றது. தமிழ் நாட்டில் உள்ள கட்சிகளும் அண்ணா புகழ்பாடித் தான் அவர்கள் அரசியல். நட்சத்திர வாழ்த்துக்கள் ஐயா!//


வருகைக்கும்..வாழ்த்த்க்கும் நன்றி
காரூரன்

VIKNESHWARAN ADAKKALAM said...

எளிமையாக எழுதி அளித்திருக்கிறீர்கள் ஐயா...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி VIKNESHWARAN

SP.VR. SUBBIAH said...

/////எதையும்..தாங்கும் இதயம்..
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
ஆகிய வாசகங்கள் அண்ணா தந்த மறக்கமுடியாத வாசகங்கள்///

இதுவும் அண்ணா தந்த வாசகம்தான்:
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு!

T.V.ராதாகிருஷ்ணன் said...

SP.VR. SUBBIAH said...
/////எதையும்..தாங்கும் இதயம்..
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
ஆகிய வாசகங்கள் அண்ணா தந்த மறக்கமுடியாத வாசகங்கள்///

இதுவும் அண்ணா தந்த வாசகம்தான்:
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு!




பதிவிடும்போது அவ்வாசகங்கள் நினைவில் இல்லை.

இப்போது பதிவில் இணைத்து விட்டேன்.

வருகைக்கும்...கருத்துக்கும் நன்றி ஐயா