Wednesday, December 17, 2008

அரசியல்வாதி வீட்டில் நுழைந்த பாம்பு...(நகைச்சுவை)

நம்ம அரசியல்வாதிகள் வீட்டுக்குள்ள ஒரு பாம்பு புகுந்துடுது.அவரவர் அறிக்கை எப்படி இருக்கும்...

கலைஞர்- இப்படி எல்லாம் நடந்தா நான் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வேன்னு ஜெயலலிதாவே பாம்பை அனுப்பி இருப்பாரோ என்னவோ...

ஜெயலலிதா-கருணாநிதிக்கு இனி வரும் தேர்தர்ல்ல வெற்றி கிடைக்குமான்னு தேர்தல் பயம் வந்து விட்டது..அதுதான் இப்படி புலம்பறார்.மத்தியில் இவர் சொல்வதை கேட்கும் ஆட்சியும்,மாநிலத்தில் இவரின் மைனாரிட்டி ஆட்சியும் தானே நடக்கிறது.அவர்களிடம் சொல்லி..தமிழ் நாட்டில் பாம்பே இல்லாமல் செய்திருக்கலாம்.ஏன் செய்யவில்லை என்றால்..என்னை ஒழிக்க அவர் பாம்பை நம்பி இருக்கார்.ஆனால்..நான் பாம்பை அனுப்பினேன் என்ற அவர் மீது வழக்கு போடுவேன்.ஜெயகுமார் தலைமையில் பாம்பு பண்ணைமுன் நாளை அ.தி.மு.க.போராட்டம் நடத்தும்.

தங்கபாலு-இந்த பாம்பு என் வீட்டுக்குள் எப்படி வந்தது?சாமியார் மடமா இது? ஆனால் எங்கள் தலைவர் சோனியா பாம்பு பற்றி எந்த முடிவெடுத்தாலும்..கட்டுப்படுவேன்.

இ.கம்யூனிஸ்ட்-வயலில்..தவளைகளை ஒழிக்க வேண்டிய பாம்புகளை நகரத்தில் என் வீட்டில் விட்டு விவசாயிகள் வயிற்றில் அடிப்பதை பொறுக்க மாட்டோம்.மார்க்ஸிஸ்ட் உடன் பேசி தர்ணா தேதி அறிவிக்கப்படும்.

மார்க்சிஸ்ட்-போராட்டம் என்றால்..இரண்டு கம்யூனிஸ்ட்களும் ஒன்று படுவோம்.பாம்பு அவர்கள்..வீட்டில் இருந்தாலும்..எங்கள் விட்டில் இருந்தாலும் தர்ணா ஒன்றுதான்.

ராமதாஸ்-கருணாநிதி அவர்கள்..என் வீட்டில் பாம்பு நுழைந்ததை..முறைப்படி மத்திய அரசிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.தேவையானால்..அனைத்துகட்சி தலைவரையும் அவர் தில்லி அழைத்துச் செல்லலாம்.பா.ம.க.அக்கூட்டத்தில் கலந்துக் கொள்ளும்.

வைகோ-அம்மையார் விரும்பினால்..அந்த பாம்பை நான் பிடித்து..என் வீட்டிற்குள் விட்டுவிடத் தயார்.

விஜய்காந்த்-தமிழ்நாட்டில் 113208 பாம்புகள் இருக்கின்றன.இதில் 42323 நல்ல பாம்பு,21000 மலைப்பாம்பு,12034 சாரைப்பாம்பு,4300கட்டுவிரியன்,8304 தண்ணீர் பாம்பு..மீதி உள்ளவை சில்லரைப் பாம்புகள்.என்னை அழிக்க ஒரு பாம்பை வீட்டிற்குள் விட்டு நான் அழிவேன் என கனவு காண்கிறார்கள்.மொத்த பாம்புகளையும் கோண்டு வந்து விட்டாலும் இந்த விஜய்காந்தை ஒன்றும் செய்ய முடியாது.

பத்திரிகை நிருபர்களுக்கு கலைஞர் பேட்டி;
சரடு நிருபர்; ஜெ தான் பாம்பை உங்கள் வீட்டில் விட்டார் என நீங்கள் சொன்னதால்..உங்கள் மீது வழக்குத் தொடரப் போவதாக ஜெ கூறியுள்ளாரே

கலைஞர்; என்னை ராஜிநாமா செய்யச் சொன்னதால்..கிண்டலுக்கு அப்படிச் சொன்னேன்.வழக்கை சந்திக்க நான் தயார்..அம்மையார் நீதிமன்றம் வரத் தயாரா?

நிருபர்;ராமதாஸ்..மத்திய அரசிடம் அவர் வீட்டு பாம்பு சமாசாரத்தை நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிறாரே

கலைஞர்- இவ்வளவு நேரம்..இது மத்திய அரசுக்கு தெரிந்திருக்கும்.அப்படி இல்லை எனில்..அவர் மகன் ஒரு மத்திய அமைச்சர் ஆயிற்றே..அவரே சொல்லலாமே...

எல்லார் வீட்டிலும் நுழைந்தது ஒரே பாம்பு..இவர்களின் அரசியலைப்பார்த்து..நம்மைவிட இவர்கள் நச்சுத்தன்மை உடையவர்கள் என பயந்து ஓடி ஒளிந்தது.

22 comments:

நசரேயன் said...

பொல்லாத பாம்பு

SP.VR. SUBBIAH said...

////விஜய்காந்த்-தமிழ்நாட்டில் 113208 பாம்புகள் இருக்கின்றன.இதில் 42323 நல்ல பாம்பு,21000 மலைப்பாம்பு,12034 சாரைப்பாம்பு,4300கட்டுவிரியன்,8304 தண்ணீர் பாம்பு..மீதி உள்ளவை சில்லரைப் பாம்புகள்.என்னை அழிக்க ஒரு பாம்பை வீட்டிற்குள் விட்டு நான் அழிவேன் என கனவு காண்கிறார்கள்.மொத்த பாம்புகளையும் கோண்டு வந்து விட்டாலும் இந்த விஜய்காந்தை ஒன்றும் செய்ய முடியாது./////

இதுதான் சார் அசத்தலா இருக்கு!

T.V.ராதாகிருஷ்ணன் said...

///SP.VR. SUBBIAH said...
இதுதான் சார் அசத்தலா இருக்கு!///

வருகைக்கு நன்றி சுப்பையா சார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்

சி தயாளன் said...

:-)

பாவம் அந்தப் பாம்பு

கோவி.கண்ணன் said...

எல்லோரும் கரடி விடுவாங்க, நீங்க மாறுபட்டு பாம்பு விட்டு இருக்கிங்க.

இதுவும் நல்லாதான் இருக்கு !

அத்திரி said...

//கருணாநிதி அவர்கள்..என் வீட்டில் பாம்பு நுழைந்ததை..முறைப்படி மத்திய அரசிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.தேவையானால்..அனைத்துகட்சி தலைவரையும் அவர் தில்லி அழைத்துச் செல்லலாம்.பா.ம.க.அக்கூட்டத்தில் கலந்துக் கொள்ளும்//


ராமதாசு அய்யா காமெடிதான் டாப்பு

Dr. சாரதி said...

//வைகோ-அம்மையார் விரும்பினால்..அந்த பாம்பை நான் பிடித்து..என் வீட்டிற்குள் விட்டுவிடத் தயார்//

ஹா...ஹா...ஹா..

வால்பையன் said...

அருமையான அரசியல் நகைச்சுவை

அமுதா said...

:-))

T.V.ராதாகிருஷ்ணன் said...

///'டொன்' லீ said...
:-)

பாவம் அந்தப் பாம்பு///


வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// கோவி.கண்ணன் said...
எல்லோரும் கரடி விடுவாங்க, நீங்க மாறுபட்டு பாம்பு விட்டு இருக்கிங்க.

இதுவும் நல்லாதான் இருக்கு///

எல்லோரும் கரடி விடுவாங்க இதுவும் நல்லாதான் இருக்கு
:-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

///அத்திரி said...
ராமதாசு அய்யா காமெடிதான் டாப்பு//

வருகைக்கு நன்றி அத்திரி

T.V.ராதாகிருஷ்ணன் said...

///Dr. சாரதி said...
//வைகோ-அம்மையார் விரும்பினால்..அந்த பாம்பை நான் பிடித்து..என் வீட்டிற்குள் விட்டுவிடத் தயார்//

ஹா...ஹா...ஹா..////

வருகைக்கு நன்றி Dr. சாரதி

T.V.ராதாகிருஷ்ணன் said...

// வால்பையன் said...
அருமையான அரசியல் நகைச்சுவை//

வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அமுதா said...
:-))//


வருகைக்கு நன்றி அமுதா

Anonymous said...

விஜயகாந்த் ஜோக் சூப்பர்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

///வடகரை வேலன் said...
விஜயகாந்த் ஜோக் சூப்பர்.///

வருகைக்கு நன்றி வேலன்

குடுகுடுப்பை said...

தங்கபாலு-இந்த பாம்பு என் வீட்டுக்குள் எப்படி வந்தது?சாமியார் மடமா இது? ஆனால் எங்கள் தலைவர் சோனியா பாம்பு பற்றி எந்த முடிவெடுத்தாலும்..கட்டுப்படுவேன்.//

ஹஹாஆஆஆ

பாம்பு இத்தாலியா இருந்தா இவரு அதுக்கு ஆடிருப்பாரு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//குடுகுடுப்பை said...
தங்கபாலு-இந்த பாம்பு என் வீட்டுக்குள் எப்படி வந்தது?சாமியார் மடமா இது? ஆனால் எங்கள் தலைவர் சோனியா பாம்பு பற்றி எந்த முடிவெடுத்தாலும்..கட்டுப்படுவேன்.//

ஹஹாஆஆஆ

பாம்பு இத்தாலியா இருந்தா இவரு அதுக்கு ஆடிருப்பாரு//

:-))))

மங்களூர் சிவா said...

மைனாரிடி திமுக அரசின் ..... ...... ................





இப்பிடி இல்ல இருக்கணும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///மங்களூர் சிவா said...
மைனாரிடி திமுக அரசின் ..... ...... ................





இப்பிடி இல்ல இருக்கணும்//


வருகைக்கு நன்றி சிவா..